ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!

View previous topic View next topic Go down

12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!

Post by ayyasamy ram on Sat Nov 08, 2014 9:48 am

ஐந்தறிவு ஜீவராசிகளில் பரமசிவன் கழுத்தை
அலங்கரிக்கும் பாக்யம் பெற்றது நாகம். அதற்கு
பெருமை சேர்க்கும் விதமாக ஈசன், நாகேஸ்வரர்
என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் தலம்,
கொடுவாய்.
-
பலருக்கும் குலதெய்வமாக விளங்கி வரும் இத்தல
இறைவனின் பெருமைகளைச் சொல்லும் சம்பவங்கள்
பல உண்டு.
-
காஞ்சி மாநகரில் பிறவியிலேயே பார்வைத் திறனற்ற
ஒருவன், தனக்கு பார்வை அருளிட திருநாகேஸ்வரத்திலுள்ள
ஏகாம்பரநாதரை வேண்டினான். அவனது வழிபாட்டில்
மகிழ்ந்து மனமிரங்கிய இறைவன், அவனுக்கு ஒரு கண்ணில்
பார்வையை நல்கினார். பின் மற்றொரு கண் பார்வையை
கொங்கு நாட்டில் உள்ள கொடுவாயில் எழுந்தருளியுள்ள
நாகேஸ்வரரை வழிபட்டு பெறும்படி கூறினார்.
-
அவர் சொன்னபடி கொடுவாய் வந்த அவன், நாகேஸ்வர
சுவாமியை வழிபட்டு மறுகண்ணிலும் பார்வை பெற்றான்.
இதனால் கொடுவாய் ஆலயத்தையும் மற்றொரு
திருநாகேஸ்வரமாகவே எண்ணுகிறார்கள்.
-
12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். தினசரி மூன்று
கால பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி பௌர்ணமியன்று
அன்னாபிஷேக கோலத்தில் நாகேஸ்வரரை தரிசிப்பது
அடுத்த பிறவிக்கும் சேர்த்து புண்ணியத்தைச் சேர்க்கும்
என்பது ஐதிகம். சிவனுக்கு இஷ்டமான சிவராத்திரியும்
இங்கு மிக பிரசித்தம்.
-
ராகு தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், கண்பார்வை
பிரச்னைகள் நாகேஸ்வரரை வழிபட்டால் நீங்குமென்கிறார்கள்.
கண்புரையோடு போராடும் பெரியவர்கள், சிறுவயதிலேயே
கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற சிக்கலுடைய குழந்தைகள்
என்று பலரும் இங்கு வந்து ஈசனை கண்குளிர வணங்கி நற்பலன்
பெறுகிறார்கள்.
-
இறைவனுக்கு வலதுபுறம் கோவர்த்தனாம்பிகை எனும்
பெயருடன் வீற்றிருக்கிறாள் தேவி. ஆவுடை நாயகி என்ற
பெயரிலும் இவளை அழைக்கிறார்கள். ஈசனின் வலதுபுறம்
அமர்ந்திருப்பதால் கோவர்த்தனாம்பிககையை வணங்கினால்
சீக்கிரமே திருமணத்தடை விலகுகிறதாம்.
-
அம்மன் சன்னதி அருகே முப்பது வருடங்களுக்கு முன்
தோன்றிய நாகப் புற்று ஒன்று இருக்கிறது. செவ்வாய் மற்றும்
வெள்ளிக் கிழமைகளில் இந்தப் புற்றை வணங்கினாலும்
ராகு தோஷம் நிவர்த்தியாகுமாம்; குழந்தைப் பேறு கிட்டுமாம்.
அரிதாக சில சமயம் இந்தப் புற்றிலிருந்து நாகம் வெளிப்
படுவதைப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள், அடிக்கடி
இத்தலம் வரும் பக்தர்கள்.
-
தலவிருட்சம் வன்னிமரம். பிரம்மனே இங்கே வன்னிமரமாக
இருப்பதாக ஐதிகம். பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன்
அறியாவண்ணம் வன்னி மரம் ஒன்றில்தான் ஆயுதங்களை
மறைத்து வைத்தனர். காலை எட்டு மணியில் இருந்து ஒன்பது
மணிக்குள் இந்த வன்னி மரத்தை பன்னிரண்டு முறை சுற்றி
வந்தால் சனி தோஷம் நீங்குமென்பது நம்பிக்கை.
-
தாய்-தந்தையரான ஈசனும், தேவியும் சர்வ லட்சணத்துடன்
வீற்றிருந்து காட்சி புரிய, அவர்களுக்கு பின்னே அமர்ந்து ஆசி
வழங்குகிறார்கள் மகன்கள். ஆம், கோவர்த்தனாம்பிகை
சன்னதியின் பின்புறம் அமர்ந்திருக்கிறார் மோதக பிரியனான
ஆனைமுகன். இங்கே அவர் பெயர், மாப்பிள்ளை விநாயகர்.
ஈசன் சன்னதியின் பின்புறம் வள்ளி-தெய்வானையுடன்
வீற்றிருக்கிறான் மயில்வாகனனான முருகன்.
-
பிராகாரத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை தீபத்தை
ஏற்றிவைத்து வணங்கினால் ஏற்றமிகு வாழ்க்கை நிச்சயமாம்.
சனிபகவான், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரக நாயகர்கள்,
சூரியன், சந்திரன் போன்றோர் அருளும் இவ்வாலயத்தில்
அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோஷம்,
தேய்பிறை அஷ்டமி என்று முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள்
நடைபெறுகின்றன.
-
கொடுவாய் நாகேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு ஒருமுறையாவது
சென்று வருவதென்பது கயிலாயத்தின் கதவுகளை தொட்டு
வருவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது!
-
எங்கே இருக்கிறது:
திருப்பூரில் இருந்து தாராபுரம், பழநி செல்லும் வழியில் உள்ளது
கொடுவாய். பல்லடத்தில் இருந்து காங்கேயம் செல்லும்
பாதையிலும் செல்லலாம்.
-
தரிசன நேரம்: காலை 6.30 - 12.30: மாலை 4.30-7.
-
------------------------------------------------------------------------------------------------

- எஸ். ஷக்தி
நன்றி: தினமலர் & குமுதம் பக்தி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: 12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!

Post by krishnaamma on Sat Nov 08, 2014 11:01 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!

Post by T.N.Balasubramanian on Sat Nov 08, 2014 12:40 pm

நன்றி ராம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: 12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!

Post by M.Saranya on Sat Nov 08, 2014 4:54 pm

நல்ல பகிர்வு
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: 12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!

Post by சிவனாசான் on Sat Nov 08, 2014 6:56 pm

பயனுள்ள  பதிவு  ராம் அவர்களே நன்றி.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2729
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: 12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum