புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
prajai | ||||
சிவா | ||||
viyasan | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
கலாச்சாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறை என்று சுருக்கமாக சொல்லலாம் . தனித்த உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமய நம்பிக்கைகள் உள்ளிட்டவை வாழ்வியல் முறைக்குள் அடங்கும் . உலகெங்கிலும் உள்ள இனக்குழுக்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதவிதமான கலாச்சாரங்கள் உலகமயமாக்கலின் விளைவாக கரையத் தொடங்கி நெடுநாட்களாகி விட்டன . அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த கலாச்சார வாழ்வியல் முறை இன்று உலகமயமாக்கல் தடம் பதித்துள்ள எந்த இடத்திலும் இல்லை . நாகரிகத்தின் பெயரால் ,வளர்ச்சியின் பெயரால் பாரம்பரிய விழுமியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன . வளர்ச்சியின் வாடை படாத பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை மட்டும் மாறாமல் இருக்கிறது . காடுகளில் பயணம் செய்கிறோம் என்ற பெயரில் நகரத்து மக்கள் காடுகளில் நுழைவதால் அவர்களின் வாழ்வியல் முறையும் மாறி வருகிறது .
கலாச்சாரம் மாறி வருவதை ஒரு பிரச்சனையாக கருத முடியாது .பூமியின் சுழற்சியில் எல்லாமும் ஒரு நாள் மாறித் தான் ஆக வேண்டும் . மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எதுவும் இங்கே நிலை ( கொஞ்ச காலத்திற்காகவாவது ) பெற முடியாது . கலாச்சாரமும் இதற்கு விதிவிலக்கல்ல . உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமயநம்பிக்கைகள் என எல்லாமும் மாற்றத்தைச் சந்தித்தே வருகின்றன.
20 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணப்பட்ட எந்த உணவும் இன்று பரவலாக உண்ணப்படவில்லை. அப்படியே உண்ணப்பட்டாலும் பயன்படுத்தும் பொருட்கள் முதற்கொண்டு சமைக்கும் முறை, உண்ணும் முறை என அனைத்திலும் பலவிதமான மாற்றங்கள். நாம் வாழும் பகுதியில் என்ன விளைகிறதோ ,எந்தக் காலநிலையில் என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே உண்டு வாழ்ந்த சூழியலுக்கும் உடலுக்கும் உகந்த வாழ்வியல் முறை எங்கும் இல்லை. உடலைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வணிக விளம்பரங்களில் மயங்கி கண்டதையும் உண்கிறோம். அன்று ,என்ன சாப்பிடுகிறோம் என தெரிந்து உணவே மருந்து என்றெண்ணி உண்டோம் இன்று,நாம் சாப்பிடும் ஒரு வாய் உணவில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதைத் தெரியாமலே உண்கிறோம். உலகவணிகமயமாக்கத்தால் நம் உணவுக் கலாச்சாரத்தில் நிகழ்ந்த இத்தகைய மாற்றங்களையும்,பாதிப்புகளையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டது நம் கலாச்சாரம்.
நமது வாழிடங்களுக்கு அருகில் கிடைத்த பொருட்களை வைத்து வீடு கட்டி இயற்கையின் நண்பனாக வாழ்ந்த வாழ்வியல் முறை இன்று இல்லை. விதவிதமான கட்டம் கட்டமான எலிக்கூண்டுகளைக் காற்று புகாதவாறு கட்டிக்கொண்டு அதை வீடுகள் என்று சொல்கிறோம். செங்கல் , மணல்,ஜல்லி,கம்பி,கண்ணாடி,மரச்சாமான்கள் என வீடு கட்டப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இயற்கையின் அழிவிலிருந்து தான் பிறக்கிறது. முன்பு கட்டுமான பொருட்களை இயற்கையில் மிஞ்சியவையிலிருந்து எடுத்தோம்;எடுத்ததை மீண்டும் உருவாக்கினோம் .நமது வீடுகளின் கலாச்சாரக் கூறுகளாக இருந்த திண்ணையும் ,முற்றமும் இன்றைய வீடுகளில் இல்லை . இன்றைய சூழலில் வீடு குறித்த அதிக முக்கியத்துவமும்,அதிக கவனமும் தேவையற்றது என்றே நினைக்கிறேன். இநத மாற்றங்கள் குறித்து நம் கலாச்சாரம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
ஒரு நூற்றாண்டிற்கு முன்பிருந்த எழுத்து முறையும் ,பேச்சு வழக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு இல்லை. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் புதிப்பித்துக் கொண்டதாலேயே தமிழ் மொழி இன்று வரை இருக்கிறது. இந்த மாற்றம் குறித்தும் கலாச்சாரம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
ஒரே மாதிரியான சமயநம்பிக்கைகள் நம் கலாச்சாரத்தில் இல்லை. அன்றே குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐந்திணைகளுக்கும் ஐந்துவிதமான சமயநம்பிக்கைகள் இருந்துள்ளன. கால மாற்றத்தாலும் பல்வேறுவிதமான நாடுகளின் படையெடுப்புகளாலும் பல்வேறுவிதமான சமயநம்பிக்கைகள் இன்று பின்பற்றப்படுகின்றன. இதற்கும் நமது கலாச்சாரம் ஒன்றும் சொல்லவில்லை.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இன்றைய நிலை எதிலும் இருக்காது.கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளையும் ஆங்கிலேய ஆட்சி முறை வெகுவாக பாதித்தது. உடையும் பலவிதமான மாற்றங்களை அடைந்தது. தொழில் ரீதியாகவும் மதரீதியாகவும் தனித்த அடையாளத்துடன் அணியபட்ட உடைகள் மாற்றம் அடைந்து ஒரு பொதுவான முறையில் அணியப்படுவது நல்ல விசயம். ஆனால் அதிலும் சூழலுக்குப் பொருந்தாத இறுக்கமாண உடைகளையே பெரிதும் விரும்புகிறோம்.ஆண்களைப் பொருத்தவரை ஒரே வேட்டியை தாங்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கட்டியவர்கள் ,பட்டாப்பட்டி டவுசர் போட்டவர்கள் ,இன்று விதவிதமான பேண்ட்களையும் ,ஜாக்கியும் ,சார்ட்ஸும் அணிகிறார்கள். இதற்கும் கலாச்சாரம் மூச்சே விடவில்லை.
உணவு ,உடை,இருப்பிடம் ,சமயநம்பிக்கைகள் ,மொழி உள்ளிட்ட கலாச்சாரக் கூறுகளில் நிகழ்ந்த ,நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை நாம் தவறென்றே சொல்ல முடியாது. சில இழப்புகள் இருக்கலாம். 'அன்று இருந்தது ,இன்று இல்லை ' என்ற மனநிலை எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறது. ஒரு குற்ப்பிட்ட காலகட்டத்தில் எல்லாமுமே மாற்றத்தைச் சந்தித்தே தீருகின்றன. ஒரு தலைமுறை என மதிப்பிடப்படும் 33ஆண்டுகளில் அதிகபட்ச விசயங்கள்,பொருட்கள் மாற்றத்தைச் சந்திக்கின்றன. உலகவணிகமயமாக்கல் கால்பதித்த எந்த இடத்திலும் முன்பிருந்த தனித்த கலாச்சாரம் இன்றில்லை. பணம் ஒரே இடத்தில் குவிய அனுமதிக்கும் சுயநலமிக்க நுகர்வு கலாச்சாரம் தான் உலகமயமாக்கலின் சாதனை.
நிகழ்ந்த இவ்வளவு மாற்றங்களையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட நமது சமூகம் பெண்களின் உடை என்று வரும் போது மட்டும் பிந்தைய கலாச்சாரத்தை வலுக்கட்டயாக உள்ளே இழுப்பதன் பின்ணணியில் எவ்வளவு படித்திருந்தாலும் நாங்கள் ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகளே என்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் நிருபிக்கிறார்கள்.
ஆண்பிள்ளைகள் செய்யும் எவ்வளவு பெரிய தப்பையும் சிறிதும் தயக்கமே இல்லாமல் மூடி மறைக்கவே நமது பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதேசமயம் பெண்பிள்ளைகள் செய்யாத தப்பிற்கும் கேள்வி கேட்கப்படுகிறார்கள். பெண்கள் சம்பந்தபட்ட எல்லாக் குற்றங்களிலும் பெண்களையே குற்றவாளிகளாக்கி அழகு பார்ப்பது தான் கலாச்சாராமா ?
பொதுஇடத்தில் கண்ணியமாக உடை அணிய வேண்டியது ஆண்கள் மற்றும் பெண்களின் பொதுக்கடமை . இதைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .ஆனால் ,யாருக்கும் முக்கியமாக பெண்களுக்கு இந்த உடை தான் அணியவேண்டும் என்ற எந்தக்கட்டுபாடும் விதிக்க வேண்டியதில்லை. ஆண்கள் எந்த உடை அணிந்தாலும் எப்படி அணிந்தாலும் உடையே அணியாவிட்டாலும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதும் , ஆண்கள் ஆபாசமாக உடை அணிந்தால் பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி .அதே சமயம் ,பெண்கள் என்று வரும் போது மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் .
ஏன் பெண்களின் உடையை மட்டும் எதிர்க்கிறார்கள் ?
உணவில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் இன்றும் வீடுகளில் பெண்களே சமைக்கிறார்கள் , இருப்பிடம் மாறினாலும் பெண்களை இருப்பிடங்களை நிர்வகிக்கிறார்கள் , சமய நம்பிக்கைகள் மாறினாலும் பெண்கள் தான் முக்கிய பங்குவகிக்கிறார்கள் இவை அனைத்தும் பெண்கள் வேலைகள் என்று முத்திரையுடன் இன்றுவரை பெண்களாலேயே செய்யப்படுகிறது . ஆனால் ,பெண்கள் பொதுவெளியில் தங்களுக்குச் சரிசமமாக உடை அணிவதை மட்டும் ஆணாதிக்கச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
அன்று பெண்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த வரை உடை ஒரு பெரிய விசயமாக தெரியவில்லை. இன்று நிலமை அப்படியில்லை, பல்வேறு விதமான வேலைகளின் நிமித்தமாக பெண்கள் பொதுவெளியில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய இன்றைய சூழலில் அணிய சவுகரியமில்லாத உடைகளை அணியச்சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை . இது அடிப்படை உரிமை சார்ந்த விசயம் .நாகரிக சமூகத்தில் அவரவருக்கு பிடித்தமான உடைகளை அணிவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு .நாம் நாகரிக சமூகமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் வெறிக்க வெறிக்க பார்ப்பது தான் ஆண்களின் பொதுக்குணம். அப்படிப் பார்ப்பதன் பின்னாலும் ஒரு நெடிய வரலாறு இருக்கிறது . இப்போது அதுவல்ல பிரச்சனை . சரி , பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் ? எல்லாப் பெண்களையும் சேலை மட்டும் அணியச் சொல்லலாமா ? சேலை சவுகரியமான உடை என்று யாராவது ஒருவர் நிருபித்து விட முடியுமா ? முடியாது .
சேலையை எப்படி அணிந்தாலும் உடல் பகுதி வெளியே தெரியவே செய்யும் . யார் முதலில் இந்த உடையை கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. " அணிந்துகொண்டிருக்கும் நேரம் முழுவதும் கவனத்தைக் கோரும் ஓர் உடை, புடைவை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 'இடுப்பு தெரிகிறதா, உள்ளாடை வெளியே தெரிகிறதா?’ எனச் செய்யும் வேலைகளில் இருந்து கவனம் பிசகிக்கொண்டே இருக்கும். இயல்பாகக் குனியவோ, வேகமாக நடக்கவோ, விரைவாக மாடி ஏறவோ, வண்டி ஓட்டவோ, பேருந்தில் ஏறவோ எதுவும் முடியாது. செல்போன், பர்ஸ் என எதையும் வைத்துக்கொள்ள முடியாது. இறுக்கமான உள்ளாடைகள், அதற்கு மேல் இறுக்கமான பாவாடை, ஜாக்கெட், அதற்கு மேல் வெயிட்டான புடைவை... என நம் காலநிலைக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத இந்த உடையை முதலில் உடுத்தியது யார்? 45 டிகிரி வெயிலில் பேருந்திலும் சமையலறையிலும் சேலை கட்டிக் கொண்டிருப்பது... அனுபவித்தால்தான் தெரியும். " என்று சேலை அணிவதில் இருக்கும் அசவுரியங்களை பட்டியலிடுகிறார், பிரியா தம்பி .உண்மையிலேயே பெண்களுக்கு மிகவும் அவஸ்தையை தரும் ,நம் சூழலுக்கு பொருந்தாத உடை தான், சேலை.இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கலாச்சார உடை என்று சொல்லியே அவஸ்தையை தரும் சேலையை பெண்களை அணியவைக்கப் போகிறோமோ தெரியவில்லை . வேட்டி எல்லா இடங்களிலும் அணியச் சவுகரியமாக இல்லாததாலேயே ஆண்கள் வேறு உடைகளை அணிகிறார்கள் . ஆண்களின் இந்த உடைக் கலாச்சாரத்தை மீறும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது . எனக்கெல்லாம் அதிகாரம் இருந்தால் சேலை என்ற உடையையே முற்றிலுமாக தடை செய்து விடுவேன் . அடுத்த நூற்றாண்டில் இந்தியாவில் சேலை இருக்குமா என்பதே சந்தேகம் தான்.
சேலையை விட சுடிதார் , ஜீன்ஸ் போன்றவை சவுகரியமானதாகவும் ,தன்னம்பிக்கை தருவதாகவும் இருப்பதாலேயே பெண்கள் இன்று அவற்றை அதிகம் அணிய ஆரம்பித்து இருக்கிறார்கள் . லெக்கிங்ஸ் அணியும் போது மட்டும் பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும் . மற்ற உடைகளை விட லெக்கிங்ஸ் நிறைய பெண்களுக்கு பொருந்தாத உடையாகவே இருக்கிறது . இதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் . அதே சமயம், பெண்கள் லெக்கிங்ஸ் அணியவே கூடாது என்று கட்டளையிட முடியாது .
இயல்பாகவே எப்போதும் எந்த வயதிலும் பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுவதையும் , ஆண்கள் பெண்களால் ரசிக்கப்படுவதையும் பெரிதும் விரும்புகிறார்கள் . விதவிதமான ஆடைகளைத் தேடி அணிவதிலும் ,விதவிதமான அலங்காரங்களைச் செய்து கொள்வதற்குப் பின்பும் இந்த ரசிக்கப்படுதல் தான் இருக்கிறது . ஏன் ஒரு பெண் பெண்களால் ரசிக்கப்படுவதையும் , ஒரு ஆண் ஆண்களால் ரசிகப்படுவதையுமே விரும்புகிறார்கள் தானே . மற்றவர்களின் கவனத்தைக் கவர எந்த உடை அணிந்தாலும், ஏன் சேலையே அணிந்தாலும் மற்றவர்களைக் கவர தங்கள் உடல்பகுதி வெளியே தெரியும்படி உடையணியும் பெண்கள் இருக்கிறார்கள் .இவர்கள் மொத்த சதவீதத்தில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு . ஆண்களிலும் இப்படி நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் தானே .
ஆண்களின் மன வக்கிரம் உச்சத்தை அடையும்போது, அருகே பெண் என்ற உருவில் யார் இருந்தாலும், எந்த உடை அணிந்திருந்தாலும் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள் . இந்த மாதிரி உடை அணிந்ததால் தான் இந்த வன்முறை நிகழ்ந்தது என்று யாராலும் நிரூபிக்க முடியாது .
கலாச்சாரத்தில் நிகழும் தங்களுக்குத் தோதான மாற்றங்கள் குறித்தும் யாரும் கேள்வி கேட்கவில்லை . தனது அதிகாரத்தைத் தக்க வைக்க கலாச்சாரத்தைக் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் . ஜாதி , மதம் , பெண் அடிமை போன்ற கூறுகளைத் தக்கவைக்கவே கலாச்சாரத்தை மீண்டும் மீண்டும் கையிலெடுக்கிறார்கள் . ஆண்களே , பெண்களை நோக்கி எந்தக் கேள்வி கேட்பதற்கு முன்பும் உங்களைப் பார்த்து அதே கேள்வியை கேளுங்கள் . பிறகு பெண்களைப் பார்த்துக் கேளுங்கள் . சுதந்திர காற்றை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் பெண்கள் , அந்தச் சுதந்திரத்தை அதிகமாக அனுபவிக்கவே விரும்புவார்கள் . அதிலும் கூடுதல் வாய்ப்பு பெற்றுள்ள பெண்ணியவாதிகள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக் கொள்வார்கள் . இது இயல்பு தான் .
நண்பர்களே , கலாச்சாரக் காவலர்களே ,ஆணாதிக்கவாதிகளே பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும் துளியும் சம்பந்தமில்லை . ஈரான் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட 26 வயது ரேஹானே ஜபாரி (Reyhaneh Jabbari ) என்ன ஆபாசமான உடையா அணிந்திருந்தார் . உடலை முழுதுமாக மறைத்து தானே உடை அணிந்திருந்தார் , அப்புறம் எதற்கு அவரை வன்புணர்ச்சி செய்ய ஒருத்தன் முயன்றான் . அவனை சுய பாதுக்காப்பின் பொருட்டு கொன்றதற்காக ரேஹானேவை கொலைகாரி ஆக்கி தூக்கிலிட்டு கொன்று விட்டோம் . இனியும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு பெண்களையும், அவர்களின் உடைகளையும் காரணமாக்க கலாச்சாரத்த இழுத்தீங்கனா " போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் " என்று தான் சொல்ல வேண்டிவருகிறது .
வரலாறை வைத்துப் பார்க்கும்போது , ஆணாதிக்க தந்தைவழிச் சமூகத்தின் ( பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) கூறுகளாகவே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை குறிப்பிட முடிகிறது .அடுத்து வரும் பெண்ணாதிக்க தாய்வழிச் சமூகத்தில் ( ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) ஆண்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படலாம் . இன்றைய காலகட்டம் இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது .

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நான் நைட்டிக்கும் சுடிதாருக்கும் எதிரியில்லை ஆனால் அந்த நைட்டி மற்றும் சுடிதாரை அணியும் விதத்தில் மற்றும் அணியும் நேரம் , இடம் தெளிந்து அணிய வேண்டும்...
சுதந்திரம் ஆடையில் இல்லை ஆண்கள் மனத்தில் உள்ளது ....
ஏனென்றால் திருமணம் வரை எல்லா பெண்களும் சுதந்திரமாகவே உள்ளனர்...பிறகு...??????????

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1103630seltoday wrote:பத்து வருடம் கடந்த பிறகு இந்த விமந்தனியும்,சரண்யாவும் புடவை குறித்து என்ன சொல்வார்கள் ? புடவையைத் தொடர்ந்து அணிவார்களா ? நைட்டியையும் சுடிதாரையும் கடுமையாக எதிர்த்த பெண்கள் கூட இன்று நைட்டியையும் சுடிதாரையும் "நல்லாத் தானே இருக்கு" னு அணிய ஆரம்பித்து விட்டார்கள். அட எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக அணியுங்கள் தான் சொல்கிறோம்.
நீங்கள் சொல்ல வந்த கருத்தை மட்டுமே இங்கே பதியலாம், மற்றவர்கள் பத்து வருடம் கழித்து என்ன சொல்வார்கள் என்ற ஆராய்ச்சி எல்லாம் இங்கே தேவை இல்லாதது..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1103633seltoday wrote:ராஜா அவர்களே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இங்கே தான் அதிகமாக நடக்கிறது. தெய்வத்தை எதுக்குயா கற்பழிக்கிறீங்க. பள்ளிக்குழந்தைகளை கூட வன்முறைக்கு உட்படுத்தும் கீழ்த்தரமான சமூக அமைப்பில் தான் நாம் வாழ்கிறோம்.எவ்வளவு படித்தாலும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து எந்த பிரக்ஞையும் இல்லாமல் தான் இருக்கிறோம். பெண் சுதந்திரத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியே இருக்கிறது.
வன் கொடுமைகள் எல்லாம் உடுக்கும் உடையால் வந்ததல்ல, கீழ்த்தரமான ஒரு ஆணுக்கும், பெண்ணக்கும் பிறந்த அற்ப பிறவி ஒருவன் செய்யும் செயல் அது....
என் நாட்டில், பெண்களை போற்றி வணங்கும் செயலும் நடக்கிறது...
மேலும், பெண்களை தெய்வம் என்று சொன்னால், நீங்கள் அதற்கு தெய்வத்தை எதுக்குயா கற்பழிக்கிறீங்க. என்ற மரியாதை இல்லா பதிலை தருகிறீர்...
தற்போது உங்கள் வாதம்தான் என்ன, புடவை கட்டுவது தவறு என்பதா? அல்லது பெண்கள் எதுவும் அணியலாம் என்பதா??
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், அதில் என் அன்னை தமிழ் நாட்டில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது பெண்களே தங்களுக்கு இட்டுக்கொண்ட கலாச்சார வேலி...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
கலாசாரத்தை பற்றி கருத்து சொல்லும்போது மிக கவனமாக சொல்லவேண்டும், நீங்க பதிவிடும் கருத்து உங்களது சொந்த கருத்தா அல்லது எங்கிருந்தாவது காபி செய்து பகிர்ந்ததா என்று தெளிவாக சொல்லியிருக்கணும்.
நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்து , அது போல நீங்க சொல்வதும் உங்களது கருத்து என்றால்

இதிலிருந்தே தெரிகிறது கலாச்சாரம் குறித்த உங்களின் மனநிலை.seltoday wrote:ராஜா அவர்களே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இங்கே தான் அதிகமாக நடக்கிறது. தெய்வத்தை எதுக்குயா கற்பழிக்கிறீங்க. பள்ளிக்குழந்தைகளை கூட வன்முறைக்கு உட்படுத்தும் கீழ்த்தரமான சமூக அமைப்பில் தான் நாம் வாழ்கிறோம்.எவ்வளவு படித்தாலும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து எந்த பிரக்ஞையும் இல்லாமல் தான் இருக்கிறோம். பெண் சுதந்திரத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியே இருக்கிறது.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1103635M.Saranya wrote:நான் நைட்டிக்கும் சுடிதாருக்கும் எதிரியில்லை ஆனால் அந்த நைட்டி மற்றும் சுடிதாரை அணியும் விதத்தில் மற்றும் அணியும் நேரம் , இடம் தெளிந்து அணிய வேண்டும்...
சுதந்திரம் ஆடையில் இல்லை ஆண்கள் மனத்தில் உள்ளது ....
ஏனென்றால் திருமணம் வரை எல்லா பெண்களும் சுதந்திரமாகவே உள்ளனர்...பிறகு...??????????
பிறகு????? சுதந்திரமாகத்தான் உள்ளனர்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1103650ஆமாம் பெண்களாவது கல்யாணத்திற்கு பிறகும் சுதந்திரமாக உள்ளனர் , ஆனால் ஆண்கள் கல்யாணத்திற்கு பிறகு அடிமையா ஆகிவிடுகின்றனர்M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103635M.Saranya wrote:நான் நைட்டிக்கும் சுடிதாருக்கும் எதிரியில்லை ஆனால் அந்த நைட்டி மற்றும் சுடிதாரை அணியும் விதத்தில் மற்றும் அணியும் நேரம் , இடம் தெளிந்து அணிய வேண்டும்...
சுதந்திரம் ஆடையில் இல்லை ஆண்கள் மனத்தில் உள்ளது ....
ஏனென்றால் திருமணம் வரை எல்லா பெண்களும் சுதந்திரமாகவே உள்ளனர்...பிறகு...??????????
பிறகு????? சுதந்திரமாகத்தான் உள்ளனர்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1103653ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103650ஆமாம் பெண்களாவது கல்யாணத்திற்கு பிறகும் சுதந்திரமாக உள்ளனர் , ஆனால் ஆண்கள் கல்யாணத்திற்கு பிறகு அடிமையா ஆகிவிடுகின்றனர்M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103635M.Saranya wrote:நான் நைட்டிக்கும் சுடிதாருக்கும் எதிரியில்லை ஆனால் அந்த நைட்டி மற்றும் சுடிதாரை அணியும் விதத்தில் மற்றும் அணியும் நேரம் , இடம் தெளிந்து அணிய வேண்டும்...
சுதந்திரம் ஆடையில் இல்லை ஆண்கள் மனத்தில் உள்ளது ....
ஏனென்றால் திருமணம் வரை எல்லா பெண்களும் சுதந்திரமாகவே உள்ளனர்...பிறகு...??????????
பிறகு????? சுதந்திரமாகத்தான் உள்ளனர்
ஆகா, நம்ம தலையும் நம்மள போலவே பீல் பண்றாரே....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
seltoday wrote:பத்து வருடம் கடந்த பிறகு இந்த விமந்தனியும்,சரண்யாவும் புடவை குறித்து என்ன சொல்வார்கள் ? புடவையைத் தொடர்ந்து அணிவார்களா ? நைட்டியையும் சுடிதாரையும் கடுமையாக எதிர்த்த பெண்கள் கூட இன்று நைட்டியையும் சுடிதாரையும் "நல்லாத் தானே இருக்கு" னு அணிய ஆரம்பித்து விட்டார்கள். அட எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக அணியுங்கள் தான் சொல்கிறோம்.
அடக்கடவுளே...! விவாதம் திசைமாறுகிறதே. புடவையின்பால் இருந்த என் கருத்தைத்தானே சொன்னேன்..? அதுவுமில்லாமல் மற்ற உடைகளுக்கு நான் எதிரியும் அல்ல.
உடை அணிதல் அவரவர் விருப்பம். கண்ணியம் காக்கச்செய்யும் உடைகளை அணியச்சொல்வதில் தவறொன்றுமில்லை என்றே நினைக்கிறேன். இங்கு யாரும், யாரையும் இதைத்தான் அணியவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கவில்லையே.
இன்று, 40-45 வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகள் கூட லெக்கின்ஸ், ஜீன்ஸ், துப்பட்டா கூட இல்லாமல் ஸ்லீவ்லெஸ் டாப் என்று போட்டுக்கொண்டு சுற்றினால், எதிரில் வருபவர்கள் கண்களையா மூடிக்கொள்வார்கள்?
"எனக்கெல்லாம் அதிகாரம் இருந்தால் சேலை என்ற உடையையே முற்றிலுமாக தடை செய்து விடுவேன் . அடுத்த நூற்றாண்டில் இந்தியாவில் சேலை இருக்குமா என்பதே சந்தேகம் தான்." - அந்த அதிகாரம் எனக்கிருந்தால்.... 'திருமணமான பெண்கள் அனைவரும் புடவையை தவிர வேறு எந்த உடையையுமே அணியக்கூடாது' என்று சட்டமே போடுவேன்.
இன்னொரு விஷயம்; 10 வருடங்கள் கழித்தும் இதைத்தான் சொல்வேன்.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|