ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 ayyasamy ram

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வள்ளுவப்புரட்சி

View previous topic View next topic Go down

வள்ளுவப்புரட்சி

Post by CHENATHAMIZHAN on Wed Feb 04, 2015 9:36 am

வள்ளுவப் புரட்சி
-கு.காமராஜ் எம்.ஏ., எம்.ஏ., எம்.பில்(பி.எச்டி)
முனைவர் பட்ட ஆய்வாளர்., பாரதியார் பல்கலைக்கழகம்.

உலக இலக்கியங்களை உற்று நோக்கினால் அறிவியல், அரசியல், ஆன்மிகம், அறம், பகுத்தறிவு, பொருளாதாரம், பொதுஉடைமை போன்ற கருத்துக்களை எடுத்தியம்பும் வண்ணம் படைக்கப்பட்ட பல்வேறு நூல்களைக் காணமுடிகிறது. ஆனால், இத்தகைய நூல்களின் அத்தனை கருத்துக்களையும் மொத்தமாகக் கொண்டிருக்கும் ஒரு நூல் உண்டென்றால் அது திருக்குறள் மட்டும்தான்.
பல்லாயிரம் சொற்களால் படைக்கப்பட்டிருந்தாலும் கருத்து வளமற்ற இலக்கியம் எதற்கும் பயன்படாது. பல இலட்சம் சொற்களாலும் வழங்கமுடியாத கருத்து வளத்தினையும், கற்பனைத் திறத்தினையும் “12000” சொற்களால் படைக்கப்பட்ட திருக்குறளுள் காணமுடிகிறது. அதனால்தான், நாடு, மொழி, இனம், மதம் இவற்றையெல்லாம் கடந்தும் அனைவராலும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இலக்கியமும் அறச்சிந்தனைகளும்

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப”
என்னும் தொல்காப்பியர் கூற்று, பொய்யும், புரட்டும், ஏமாற்றும், துரோகமும் பண்டைக்காலம் தொட்டே மானிடச்சமூகத்தில் நிலைகொண்டிருந்ததனை மெய்ப்பிக்கின்றது. ஆகவேதான், இலக்கியத்தின் வாயிலாக அறக்கருத்துக்களைப் போதிக்கும்நிலை சங்ககாலம்தொட்டே தொடர ஆரம்பித்துவிட்டது எனலாம். பேராசைகளும், பெரும்போர்களும், இரக்கமின்மையும், ஈகைக்குறைவுகளும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மிகுதியாகிக் கொண்டிருந்ததால் இலக்கியத்தில் அறம் என்ற நிலைமாறி அறத்தையே இலக்கியமாகப்படைக்கும் நிலையும் உருவானது. பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் 11 நூல்கள் அறநூல்களாக அமைந்துள்ளமையை இதற்குச் சான்றாகக்கொள்ளலாம்.
அரசர்களைப் போற்றவும்., ஏழ்மையை விளக்கிப் பரிசில் பெறுவதற்காகவுமே இலக்கியம் என்னும் நிலையினை மாற்றி தமிழ் இலக்கியப்போக்கினை ஒரு புதுவழிக்கு அழைத்துச் சென்ற பெருமை அறநூல்களையே சாரும். அத்தகைய அறநூல்களுள் தனித்துவம் பெற்றுத்திகழ்வது திருக்குறள்.

நன்னெறிக்கோட்பாடு

அந்நியரின் படையெடுப்புகள், சமயங்களின் தோற்றங்கள், பிறமொழியாளர்களின் ஊடுருவல்கள் போன்றவற்றால் தமிழர்தம் பண்பாட்டிலும்., பழக்கவழக்கங்களிலும் மிகுந்த மாற்றங்கள் உருவாகியுள்ளதை வரலாற்றுச்சுவடுகள் எடுத்துக்காட்டுகின்றன. பெயரைவைத்தே இவர்கள் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வருமாறு தாம் இறந்தபிறகும் ஆய்வாளர்களுக்குத் தமது பெயர்களின் மூலம் இன அடையாளத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர் பண்டையத்தமிழர். ஆனால் தற்காலத்தவர், பெயர்களின் மூலம் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் தனித்துவம் மிக்க சிறப்புகள் கலப்புத்தன்மைக்கு மாறியதற்கும், சொந்தமண்ணிலேயே ஏதிலிகளாய் அடிமைப்படவேண்டியச் சூழலுக்குத் தள்ளப்படுவதற்கும் அந்நியர் வருகையும், அவர்களின் பண்பாட்டுத்தாக்கமுமே காரணம் எனலாம். நெடுஞ்செழியன் என்றும், இரும்பொறை என்றும் தமது பெயரிலேயே தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருந்த மன்னர்கள் அருகி பல்யாகச்சாலை முதுகுடுமிப் பெருவழுதிகளும், இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிகளும் பெருகி யாகங்களிலும் பூசை-புனசுகாரங்களிலும் மூழ்கினர். தன்னறிவோடு நல்லாட்சி செய்தோர் சமயவாதிகள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாகி., மாறுபட்டகருத்து கொண்டோரை கழுவிலேற்றிக் கொலைசெய்யும் அளவிற்கு சமயப்பித்தர்களாகவும் மாறினர். உயிர்ப்பலியாகங்களும், நெய்யூற்றிவளர்க்கும் நெருப்பு யாகங்களும் மிகுந்திருந்த காலக்கட்டத்தில் “ஆயிரம் யாகங்கள் வளர்த்து வழிபாடு நடத்துவதைவிடவும், உயிரைக் கொல்லாமையும் அதனை உண்ணாமையுமே சிறந்தது” என்று புரட்சிக்குரல் கொடுத்த வள்ளுவரின் கூற்றினை,
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று”
என்னும் குறள் தாங்கி நிற்கின்றது. ஆக அரசர்களுக்கும், சமயவாதிகளுக்கும் போற்றிப் பாடிக்கொண்டிருக்காமல் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிக் கோட்பாடுகளை அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றல் வள்ளுவரிடம் நிறைந்திருந்ததைக் காணமுடிகிறது.

புதிதாய் ஒலித்த குறளின் குரல்

பரத்தமைஒழுக்கத்தையும், கள்ளுண்டு களிப்பதையும், சூதாட்டத்தில் திளைப்பதையும் முக்கிய வாழ்வியல் கூறுகளாகச் செல்வாக்குமிக்கோர் கடைப்பிடித்து வந்தகாலத்தில்,

“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு”
என்று எதிர்ப்புக்குரல் கொடுத்தார் வள்ளுவர்.
ஊடல் என்னும் உரிப்பொருளை விளக்குவதற்குச் சங்கப்பாடல்களில் பெரும்பாலும் பரத்தமை ஒழுக்கம்தான் முன்னிறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொள்ளும்போது விலைமகளிரோடான தொடர்பு நாடெங்கிலும் மலிந்திருந்ததை அறியமுடிகிறது. அத்தகைய பரத்தமையை..
“பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று”
என்று குறளுக்கு முன்னர் எங்கணுமே காணமுடியாத உவமையைக் கையாண்டு கடுமையாய்க் கண்டிக்கிறார் வள்ளுவர்.
“பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பானது” என்னும் இவ்வள்ளுவக் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் அண்மைக்காலங்களில் இனப்படுகொலையில் ஈடுபட்ட ஈனர்கள் பிணமுயக்கத்திலும் ஈடுபட்டனர் என்னும் செய்திகள் அமைந்துள்ளன.
“மட்டுவாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பளுனி ......”
(புறம்-113)
என்று கையறுநிலையில் கூட புலால் உணவு அளித்ததை நினைவுகூர்ந்து பாரியின் புகழ்பாடினார் கபிலர். ஈசல் முதல் யானை வரையிலான உயிர்கள் கொல்லப்பட்டு உணவாகக் கொள்ளப்பட்ட நிலையில்,
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்”
என்று கொல்லாமைக்காகக் குரல் கொடுத்தவர் வள்ளுவர்.

பொய்மையும் வாய்மையே

தனது நாட்டை இழந்து, நாட்டுமக்களைப் பெரும் இன்னல்களுக்குள்ளாக்கி, மனைவி - மகனை விற்கவேண்டிய நிலைக்குவந்து, மகனின் இறப்பிற்கும் காரணமாகிய பின்பும் வாய்மை தவறவில்லை அரிச்சந்திரன் என்று பெருமையாகக் கூறுகிறது அரிச்சந்திர புராணம். தன்னைமட்டும் துன்பத்தில் ஆழ்த்தி வாய்மை தவறாதவன் என்று தனதுபெயரை நிலைநாட்டியிருந்தால் போற்றத்தக்கவன் எனலாம் அரிச்சந்திரனை. ஆனால், தனது நாட்டுமக்களையும்., மனைவி-மகனையும் பெரும் துன்பத்தில் தள்ளிய அரிச்சந்திரனின் செயலை எங்ஙனம் பாராட்டமுடியும்? வள்ளுவத்தின் துணையோடு உளவியல் நோக்கில் அணுகினால், வாய்மை தவறாதவன் என்று தான் பெயரெடுக்கத் தன்னையும் பிறரையும் பெரும்துயரில் ஆழ்த்தியவன் என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. பிறரின் துயரத்திற்குக் காரணம் ஆகிவிடும் எனில் அத்தகைய வாய்மையே தேவையில்லை என்கின்ற கருத்தினைக் கொண்டுள்ளது குறள். “எவருக்கும் எத்துயரும் ஏற்படாத வண்ணம் சொல்லக்கூடிய சொற்கள் அனைத்தையுமே வாய்மை சார்ந்தவையாகத்தான் கொள்ளவேண்டும்” எனும் கருத்தினை,
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”
என்றும், எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் கிடைக்கும் நன்மைக்காகப் பொய்பேசினால் அதுவும் வாய்மைக்கு ஒப்பானதுதான் என்பதனை,
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”
என்றும் குறிப்பிட்டுள்ள வள்ளுவர் வாய்மைக்கு ஒரு புதிய விளக்கம் அளித்தவராகவே தெரிகின்றார்.
உலகப்பொதுமறையான தமிழ்மறை

சமயங்களால் வேறுபட்டிருப்போரையும்., கருத்துக்களால் மாறுபட்டிருப்போரையும்., இனங்களால் பிரிக்கப்பட்டிருப்போரையும் ஒன்றிணைக்கும் வல்லமை வாய்ந்தது திருக்குறள். இதற்கு ஒரு சான்றாக, தைவான் நாட்டில் நடைபெற்ற 30-ஆவது உலகக்கவிஞர்கள் மாநாட்டில் சீனக்கவிஞர் யூசி அவர்கள் ஆற்றிய திருக்குறள் பற்றிய உரையினைக் குறிப்பிடலாம்.
“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் படைக்கப்பட்ட திருக்குறள் நூலை அப்துல்கலாம் அவர்கள் எனக்குப் பரிசாக வழங்கினார். அதனைப் படித்து உள்வாங்கியதோடு திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆங்கில உரைகளையும் படித்தேன். எத்துணை அருமையான கருத்துக்கள் அடங்கிய காலப்பெட்டகம் அது. அறம், பொருள், இன்பத்தைப் பற்றி வள்ளுவர் எழுதிய குறட்பாக்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் மாட்சிமையையும், அந்தச் சமூகத்தின் அறிவுத்திறனையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. உலகில் மாந்தரினம் எப்படி வாழவேண்டும் என்பதனை இக்காலத்திற்கு மட்டுமன்றி எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எடுத்துரைக்கும் வகையில் அதன் பாக்கள் அமைந்திருப்பதனைக் கண்டு வியந்தேன். திருக்குறளைப் படிக்க படிக்க, இந்தக் கருத்துப்பேழை எப்படியும் சீன மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிக் கொண்டேயிருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்து இருக்கிறேன். இந்த 30-ஆவது உலகக் கவிஞர்கள் மாநாட்டில் எனது நண்பர் அப்துல்கலாம் முன்னிலையில் உலகப்பொதுமறையான திருக்குறளைச் சீனமொழியில் வெளியிடுவதனைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.”
என்று சீனக்கவிஞர் யூசீ அவர்கள் உரையாற்றியதும் அங்குக் கூடியிருந்த அத்தனை உலகக் கவிஞர்களும், அறிஞர் பெருமக்களும் திருக்குறளின் மேன்மையினை அறிந்து வெகுவாகப் பாராட்டினர். “இந்த உலகக் கவிஞர்களின் ஒருமித்த பாராட்டு, திருவள்ளுவரால் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் கிடைத்த பாராட்டு” என்று மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் கலாம் அவர்கள் அகமகிழ்ந்து கூறினார்.
“நன்றென எப்பால வரும் இயைபவே
வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி”
என்னும் கல்லாடர் கூற்றுக்கும் சான்றாகின்றது அந்நிகழ்வு.

வையத்தின் துணை வள்ளுவமே
.
மானிடராய்ப் பிறந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிக்கோட்பாடுகளையும்., விலக்கவேண்டிய கொடுங்குணங்களையும் பல்வேறு சமயங்கள் எடுத்துரைத்தாலும் மனித மனங்களை அவற்றால் செம்மைப்படுத்த முடியவில்லை என்பதனைப் பெரும்போர்களும், இனப்படுகொலைகளும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. உலகம் வன்முறைகளால் இன்று புண்பட்டுக் கொண்டிருப்பதற்கும் சமயப்பூசல்களே அடிப்படைக்காரணமாக உள்ளன. அன்பெனும் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட சமயங்களே பலகோடி கல்லறைகளுக்கும் காரணமாகிப்போனது நல்லவைகள் திரிக்கப்பட்டு அல்லவைகள் புகுத்தப்பட்டதன் விளைவே எனலாம்.
“சைவரின் அன்பு நெறியினையும்., வைணவரின் சரணாகதிக்கோட்பாட்டினையும், புத்தரின் அகிம்சையையும், இயேசுவின் பொறையையும், நபிநாயகத்தின் சகோதரத்துவத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பது வள்ளுவம்” என்றார் தனிநாயகம் அடிகளார். எல்லா சமயங்களும் போதிக்கும் நன்னெறிகளோடு “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்னும் பகுத்தறிவு சிந்தனையையும் கொண்டிருக்கும் வள்ளுவம் வையகத்தோரால் கடைப்பிடிக்கப்படுமானால், ஆழிசூழ் உலகம் அன்பாலும் அறிவாலும் நிறையும் என்பதில் ஐயமில்லை.
--------------------------------------------------------
avatar
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: வள்ளுவப்புரட்சி

Post by krishnaamma on Wed Feb 04, 2015 10:41 am

நல்ல பகிர்வு தமிழன்   புன்னகை...............உங்கள் வரவு நல்வரவாகுக ! புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum