புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_m10 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கதைகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:01 am

First topic message reminder :

1 . சதாசிவ பிரமேந்திரர்

சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன். இளமை முதலே வீடு, வாசல், சொந்தம், பந்தம் என்ற பற்றில்லாமல் இருந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மொழியியல், கலைகள் மற்றும் தத்துவஞான வித்தகராகத் திகழ்ந்தார். அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம்.

பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே!

பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார்.

""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது.

""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். பல ஊர்களில் சுற்றித்திரிந்தார். ஒருநாள் ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில் காவிரி நதியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் வர, மணல் அதிகமாக அடித்து வரப்பட்டு அவரை மூடிவிட்டது. வெள்ளம் வற்றியதும், மணலைத் தோண்டிப் பார்த்தால், தலையில் மண்வெட்டி காயத்துடன் ரத்தம் வழிய அவர் தன் வழியில் சென்றார்.

ஒருமுறை இவர் குறுநிலமன்னன் ஒருவனது அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டார். நிர்வாணநிலையில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததால் கோபமடைந்த மன்னன், அவரது கையை வெட்டிவிட்டான். வெட்டுப்பட்டது கூட தெரியாமல் அவர் தன்போக்கில் நடந்தார். வியப்படைந்த மன்னன், அவரிடம் மன்னிப்பு கேட்ட போது தான் கை போனதே அவருக்கு தெரிய வந்தத. பிறகு வெட்டுப்பட்ட தன் கையுடன் நடந்து சென்ற போது, ஆச்சரியப்பட்ட மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டான். உணர்வு நிலைக்கு திரும்பிய பிரம்மேந்திரர், துண்டான கையை ஒட்ட வைத்துக் கொண்டார்.

இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 12:48 am

18: அவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே !

பக்தமீரா மிகப்பெரிய கிருஷ்ணபக்தை. அழகு அவளோடு ஒட்டிப் பிறந்தது. அவளை அவ்வூரிலுள்ள ஒரு இளைஞன் எப்படியாவது அடைந்து விட வேண்டுமெனத் துடித்தான். தனிமையில் இருந்த அவளிடம், ""நீ எனக்கு வேண்டும்,'' என வாய் கூசாமல் சொன்னான். சாதாரணப் பெண் என்றால் என்ன செய்திருப்பாள்? ஒன்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டியிருப்பாள் அல்லது அவனை உதைத்து அனுப்பியிருப்பாள். மீரா இந்த இரண்டையுமே செய்யவில்லை. கேட்டவனே அதிரும்படியாக, ""அவ்வளவு தானே! நாளை என்னை எடுத்துக்கொள்,'' என்றாள்.

""எங்கே, எப்போது வர வேண்டும்?'' அவன் அவசரமாய் கேட்டான். ""நாளை மாலையில் குளக்கரைக்கு வா,' 'என்று அவள் சொல்லவும் கிளம்பிவிட்டான். மறுநாள் மாலையில் குளக்கரைக்கு வந்தான். மீராவைச் சுற்றி பல பக்தர்கள் அமர்ந்திருக்க, அவள் கிருஷ்ணகானம் இசைத்துக் கொண்டிருந்தாள். பஜனை முடியும் வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த அவன், ""என்னை வரச்சொல்லிவிட்டு இப்படி செய்யலாமா?'' என்றான். ""உனக்கு தேவை இந்த உடல் தானே எடுத்துக் கொள்,'' என்றாள் அவள்.

""இத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! இங்கே எப்படி முடியும்?'' என்றவனிடம், ""சரி...இந்த சாதாரண மனித ஜென்மங்கள் பார்ப்பார்கள் என்பதற்கே வெட்கப்படுகிறாயே! எங்கும் நிறைந்திருக்கும் கண்ணன் நாம் ஒளிந்திருக்கும் இடத்திலும் இருந்து பார்ப்பானே! அப்போது உனக்கு வெட்கமாக இருக்காதா!'' என்றாள். வந்தவனுக்கு சுருக்கென்றது. தன் எண்ணத்தை கைவிட்டான். மனம் திருந்தியவனாய் திரும்பினான்.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 12:49 am

19- மாயம் செய்த மாயவன்

மகாபாரதத்தில் மிக அற்புதமாக தன் வீரத்தைக் காட்டினாலும், வெளியே தெரியாமல் போன ஒரு பாத்திரமே பர்பரிகன். இவன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன். தர்மராஜா பாரதப்போர் குறித்து மிகுந்த கவலை கொண்டிருந்தார். பீஷ்மரும், துரோணரும் குறிப்பிட்ட நாளில் பாண்டவர்களை அழித்தே தீருவதென சபதம் பூண்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டார். கர்ணனை நினைத்தாலும் கலக்கமாக இருக்கிறது. அவன் எந்த நேரமும் தன்னைக் கொன்று விடுவான் என்பதையும் அறிந்து, இதுபற்றிய தன் கவலையை கிருஷ்ணரிடம் வெளியிட்டார். அப்போது, அர்ஜுனன் வந்தான். ""அண்ணா! நீங்கள் இவ்வாறு பயம் கொள்வது முறையில்லை. பரமாத்மா கிருஷ்ணரே நம்முடன் இருக்கும் போது, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?'' என்றான். இப்படியாக பீமனும் தன் பிரலாபத்தை வெளியிட, பர்பரிகன் அங்கு வந்தான். அவன் யார் தெரியுமா? பீமனின் பேரன். பீமனின் மகனான கடோத்கஜன், மவுர்வி என்பவளைத் திருமணம் செய்திருந்தான். அவர்களது புதல்வனே இந்த பர்பரிகன். தன் பெரிய தாத்தா அர்ஜுனனனைப் பார்த்து அவன் சிரித்தான்.

""தாத்தா! நீங்கள் போருக்குப் போவது இருக்கட்டும், விஷயத்தை என்னிடம் விடுங்கள். நான் அம்பிகையின் அருள் பெற்றவன். என் முன்னே தோன்றிய சித்தாம்பிகை எனக்கு வில்லும், அம்பும் தந்திருக்கிறாள். அதில் இருந்து புறப்படும் அம்புகளுக்கு கிருபாச்சாரியாரும், அஸ்வத்தாமனும் மட்டுமே தப்புவார்கள். மற்றவர்கள் மாண்டு போவார்கள்,'' என்றான்.

""எங்கே அதை நிரூபித்துக் காட்டு,'' என அர்ஜுனன் சொல்ல, பர்பரிகனும் அம்பை எடுத்து அதில் சிவப்பு நிற சாம்பலை பூசினான். அதை வில்லில் பொருத்தி, மிக வேகமாக இழுத்துவிட்டான். அந்த சாம்பல் இரண்டு பக்க சேனைகளிலும் நின்றவர்களின் உயிர்நிலைகளில் பட்டது.

மிஞ்சியவர்கள் கிருஷ்ணர், பஞ்சபாண்டவர்கள், அஸ்வத்தாமன் மற்றும் கிருபாச்சாரியார் மட்டுமே.

உடனே கிருஷ்ணர் எழுந்தார். தன் சக்கரத்தை ஏவி பர்பரிகனைக் கொன்றுவிட்டார்.

இவ்வளவு பெரிய வீரனை அவர் ஏன் கொல்ல வேண்டும்? அதிலும் தங்கள் பக்கத்துக்கு உதவ இருந்த ஒரு மாபெரும் வீரனைக் கொல்லக் காரணம் என்ன?'' என மற்றவர்கள் நினைத்த வேளையில் சித்தாம்பிகை அங்குவந்தாள். அவள் அங்கிருந்தவர்களிடம், ""பர்பரிகனை பரமாத்மா கிருஷ்ணர் கொன்றதில் தவறில்லை. இவன் ஒரு காலத்தில், ஒரு யட்சனாக இருந்தான். அப்போது அவனது பெயர் சூரியவர்ச்சஸ். அசுரர்களின் அட்டகாசத்தால் பூமாதேவி சிரமப்பட்ட போது, இவன் ஒருவனே தனித்துச் சென்று ஒன்பது கோடி அசுரர்களைக் கொன்றான். அந்த வெற்றி மமதையில்,"" இனி, உலகைக் காப்பாற்ற தேவர்களே தேவையில்லை, நான் மட்டும் போதும்,'' என்றான். கோபமுற்ற பிரம்மா, ""நீ கிருஷ்ணரால் கொல்லப்படுவாய்,'' என்று சாபமிட்டார். அந்த சாபத்தின் பலனையே இப்போது அனுபவித்தான்.

எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், அவனுக்கு மமதை மட்டும் கூடாது என்பதை நிரூபிக்கவே இப்படி நிகழ்ந்தது,'' என்றாள். பின், கிருஷ்ணர் அவனது தலையை எடுத்து அமிர்தத்தில் நனைத்து உயிர்பெறச் செய்யக் கூறினார். ""நீ ராகுவைப் போல தலையுடன் மட்டும்ஒருமலையில்இருப்பாய். பாரத யுத்தத்தைப்பார்க்கும்பாக்கியம் பெறுவாய்,'' என்றார். யுத்தம் முடிந்ததும், தங்கள் வீரத்தைப் பற்றி பாண்டவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பர்பரிகனின் தலை பேசியது. ""யுத்தத்தில் நீங்கள் யாரும் போரிடவில்லை. பகவான் கிருஷ்ணரே அனைத்துக்கும் காரணமாக இருந்து வெற்றி பெறச் செய்தார்,''என்றான். அப்போது தேவர்கள் கிருஷ்ணருக்கு வானில் இருந்து மலர் மாரி பொழிந்து தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர்.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 12:50 am

20- நம்பிக்கையுடன் அவனைப் பாருங்கள்

ஒரு கோயிலில் உபன்யாசகர் ஒருவர் கண்ணனின் லீலைகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். கண்ணனும், அவன் அண்ணன் பலராமனும் பசுக்களை மேய்க்கச் செல்லும் போது, உயர்ந்த தங்க அணிகலன்களை அவர்களது அன்னை யசோதை அணிந்து அனுப்புவாள் என்றார். இதை ஒரு திருடனும் கூட்டத்தோடு நின்று கேட்டான். உபன்யாசகர் வர்ணித்ததைப் பார்த்தால், "அந்த அணிகலன்கள் லட்சக்கணக்கில் தேறும் போல் இருக்கிறதே' என எண்ணியவன், அவர்களை எப்படியாவது பிடித்து நகைகளைப் பறித்து விட வேண்டுமென திட்டம் போட்டாள்.

கூட்டம் முடிந்ததும், உபன்யாசகர் பின்னாலேயே நடந்து, அவரது வீட்டுக்கே வந்துவிட்டான். வீட்டுக்குள் புகுந்து, பாகவதரின் கழுத்தில் கத்தியை வைத்து, ""ஓய்! நீர் சொன்ன கண்ணன், பலராமனிடம் நகைகளை கொள்ளையடிக்கப் போகிறேன். அவர்கள் எந்தப் பக்கமாக பசுக்களை மேய்க்க வருவார்கள்?'' என்றான்.

""இவன் சரியான முட்டாளாக இருப்பான் போல் இருக்கிறதே!'' என்றெண்ணிய உபன்யாசகர், அவர்கள் கோகுலத்தில் உள்ள காட்டில் இருப்பார்கள், போய் பார், நிறைய கிடைக்கும்,''என்று சொல்லி தப்பி விட்டார்.

திருடனும் அங்கே போனான். கண்ணனைப் பிடித்து கழுத்தருகே கத்தியை வைத்தான். அவனைத் தொட்டானோ இல்லையோ! கெட்ட எண்ணங்கள் பறந்து விட்டன. உடனே திருந்திவிட்டான். கண்ணனும், பலராமனும் நகை களைக் கழற்றிக் கொடுத்தும் கூட வாங்க மறுத்துவிட்டான். பின், உபன்யாசகரிடம் ஓடிவந்தான். ""ஓய்! அவர்கள் தெய்வப்பிறவிகள்! தெரியாமல், அந்தப் பிள்ளைகள் கழுத்தில் கத்தியை வைத்து தப்பு செய்து விட்டேன். வாரும், உமக்கும் அவர்களைக் காட்டுகிறேன்,'' என்றான்.""போடா பைத்தியம்! கடவுளையாவது நீ பார்த்தாயாவது, பித்தனே! ஓடிப்போ!'' என்றார்.

திருடன் வற்புறுத்தவே வேறு வழியின்றி அவனுடன் போனார். திருடன் கண்ணனைப் பார்த்தான். உபன்யாசகருக்கு தெரியவில்லை.""கண்ணா! எனக்குத் தெரிவதைப் போல அவருக்கும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் இங்கு நடப்பதை நம்பமாட்டார்,'' என்றார். உபன்யாசகருக்கும் கண்ணன் காட்சி தந்தார்.

பார்த்தீர்களா! ஆன்மிகத்தைப் பேசினால் போதாது! எழுதினால் போதாது! முழுநம்பிக்கை இருந்தால் இறைவனின் அருள்பார்வை கிடைக்கும்.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 12:52 am

21- காசிக்குப்போயும் பாவம் தொலையலையே

காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.

காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். இவரைத் தெரிந்து கொள்வோமா!

குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.

""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.

ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.

தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.

ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 12:55 am

22- உதவி செய்தவரை உதாசீனம் செய்யலாமா ?

ஒரு மரத்தில் பல பறவைகள் பாதுகாப்பாகத் தங்கின. அது ஒரு பழமரம் என்பதால், வேண்டிய அளவு பழங்களைச் சாப்பிட்டு சந்தோஷமாக காலம் கழித்தன.

எந்த ஒரு பொருளுக்கும் உலகில் ஆயுள் நிர்ணயம் உண்டவா! சில நூறு வருடங்கள் பல தலைமுறை பறவைகள் அதில் வசித்தன.

ஒரு சமயம் மரம் பட்டுப்போனது. எல்லாப் பறவைகளும் அதில் இருந்து வேறு மரங்களைத் தேடிச் சென்று விட்டன. ஒரு கிளி மட்டும் அந்த மரத்தை விட்டு அகலவில்லை. உணவின்றியும், நிழலின்றியும், பாதுகாப்பின்றியும் சிரமப்பட்டாலும் கூட அவற்றைப் பொறுத்துக் கொண்டு அங்கேயே வசித்தது.

ஒரு சமயம், தேவர்களின் தலைவன் இந்திரன் அங்கு வந்தான். கிளியிடம், பச்சை மரங்கள் பல இருக்க பட்ட மரத்தில் தங்கியிருக்க காரணம் கேட்டான்.

""இந்திரரே! எனது மூதாதையர் இங்கு தான் வசித்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மரமே உணவும் அடைக்கலமும் தந்தது. அந்த நன்றியை எப்படி என்னால் மறக்க இயலும்! எங்களை வளர்த்த இந்த மரத்திற்கு இப்போது கஷ்டம் வந்ததும், அதை கைவிட்டுப் போனால் நன்றி மறந்தவன் ஆகமாட்டேனா?'' என்றது.

இந்திரன் மகிழ்ந்தான். அந்த கிளியிடம்,""உன் நல்ல மனதுக்கு வரம் தருகிறேன். கேள்,'' என்றான். ""இந்த மரம் மீண்டும் பசுமையுடன் திகழ வேண்டும். முன்பை விட செழித்து நிறைந்த கனிகளுடன் விளங்க வேண்டும்,'' என்றது கிளி.

இந்திரனும்அவ்வாறே செய்தான்.

பிறர் செய்த உதவியை ஏற்றவர்கள் அவர்களுக்கு கஷ்டம் வரும் போது, கைகொடுத்து காக்க வேண்டும் என்பது இந்தக் கதை சொல்லும் நீதி.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 12:58 am

23- அருகு இருந்தால் அருகில் வருவார்

ராஜா ஒருவன் தான் என்ற அகந்தையும், ஆணவமும் கொண்டவனாக இருந்தான். ஒரு சமயம் நாரதர் அவனைச் சந்திக்கச் சென்ற போது, அவரை வரவேற்காமல் அலட்சியம் செய்தான்.

நாரதர் அவனிடம், ""மன்னா! பகவான் திருவருளால் உன் நாடு செழிப்பதாக!'' என்று வாழ்த்தினார்.

அதைக் கேட்டு சிரித்த மன்னன், ""என்ன சொல்கிறீர் நாரதரே! பகவான் அருளால் என் நாடு செழிக்க வேண்டுமா? நான் நல்ல முறையில் நிர்வாகம் செய்கிறேன். என்னால் தான் எல்லாம் நடக்கிறது. இதில் பகவானுக்கு என்ன வேலை?'' என்று ஏளனமாகக் கேட்டான்.

அவனது பேச்சில் ஆணவம் இருந்ததைக் கண்ட நாரதர், அவனுக்கு புத்திமதி சொல்லிவிட்டு, கவுண்டின்ய மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு மகரிஷி நடத்திய விநாயகர் பூஜையில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பினார். வழியில் விநாயகரைக் கண்டார் நாரதர்.

அவரது முகக்குறிப்பை அறிந்த விநாயகர், ""நாரதரே! உம் முகத்தைப் பார்த்தால் என் உதவி தேவைப்படுவது போலத் தெரிகிறதே!'' என்றார்.நாரதர் அரண்மனையில் நடந்ததைச் சொன்னார். அவனுக்கு புத்தி புகட்ட விநாயகர் அந்தணனாக உருவெடுத்து, மன்னனின் அரண்மனைக்குச் சென்றார். தனக்கு மிகவும் பசிப்பதாகச் சொல்லி உணவு கேட்டார். மன்னன் அவரிடம், ""அந்தணனே! அன்ன சாலைக்குச் சென்று வயிறார சாப்பிட்டு விட்டுப் போ,'' என்றான்.

அங்கு அவருக்கு சமையற்காரர்கள் விதவிதமான உணவுகளைப் பரிமாறினர். அவை அனைத்தையும் ஒரு பிடிபிடித்தவர், ""உம்... இன்னும் என்ன இருக்கிறது? கொண்டு வாருங்கள்! எனக்கு இன்னும் பசி தீரவில்லை,'' என்றார். அவர்கள் சமைத்து வைத்திருந்த உணவு முழுவதையும் அவருக்கு பரிமாறினர். ஊஹும்... அவர் கொஞ்சமும் பசியாறியதாகத் தெரியவில்லை. மேலும் சமைக்க வைத்திருந்த அரிசி, தானியங்களையும், அங்கு தோட்டத்தில் விளைந்த காய், பழங்களையும் சாப்பிடக்கொடுத்தனர். அதை சாப்பிட்டும் அவரது பசி நீங்கவில்லை. மிரண்டு போன சமையற்காரர்கள், பயத்தில் ஓட்டம் பிடித்தனர். நடந்ததை அறிந்த மன்னன் அன்னம் பரிமாறும் இடத்திற்கு வந்தான். அவரிடம் அந்தணர், ""என்ன மகாராஜா, யானைப்பசிக்கு சோளப்பொரியா? நீ பரிமாறிய உணவு எனக்கு போதவில்லையே!'' என்றார்.

மன்னன் ஆத்திரத்தில்,""அந்தணனே, இங்கு மேலும் உனக்கு உணவு தர முடியாது. உன் பசி தீர்க்கும் இடம் பார்த்து நீ செல்லலாம்!'' என்று கத்தினான்.

""நல்லாட்சி நடக்கிறது. என் நிர்வாகத்தில் மக்களுக்கு ஒருகுறையும் இல்லை. என்னால் எல்லாம் முடியும் என்று வீண் தம்பட்டம் பேசுகிறாயே! உன்னால் என் பசியைக் கூட போக்கமுடியவில்லையே'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பியவர், தன் பக்தன் திரிசுரன் வீட்டிற்குச் சென்றார். அங்கு திரிசுரனும், அவன் மனைவி விரோசனையும் விநாயகர் பூஜையில் இருந்தனர். அவனது வீட்டு வாசலில் நின்றவர், "" ஐயா! எனக்குப் பசிக்கிறது. சிறிது உணவிருந்தால் போடுங்கள்!'' என்று யாசகம் கேட்டார். அவரிடம், ""ஐயா! தங்களுக்கு கொடுப்பதற்கு தற்போது எங்களிடம் ஏதுமில்லை. இனிமேல்தான் சமையல் செய்யப்போகிறேன்,'' என்றாள் விரோசனை.

ஆனால், திரிசுரனுக்கு வந்தவரை வெறும் கையாக அனுப்ப மனமில்லை. தன் கையில் விநாயகர் பூஜைக்காக வைத்திருந்த அருகம்புல்லை கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட அந்தணர், வாயில் போட்டுக் கொண்டார். அந்த கணமே அவரது வயிறு நிறைந்தது.இவ்வேளையில் அரண்மனைக்கு அந்தணனாக வந்தது யார் என அறிய, அவரைத்தேடி திரிசுரன் வீட்டிற்கு வந்தான் மன்னன். அங்கு இருவருக்கும் விநாயகர் சுயரூபம் காட்டினார்.

""திரிசுரனின் உண்மையான பக்திக்கு கட்டுப்பட்டு சாதாரண அருகம்புல் கூட விநாயகரின் பசியைப் போக்கிவிட்டதே! என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று ஆணவத்தால் அறிவை இழந்து விட்டேனே!'' என விநாயகரிடம் மன்னிப்பு கேட்டான் மன்னன்.

விநாயகர் திரிசுரனுக்கு லட்சுமி கடாட்சத்தையும், மன்னனுக்கு ஞானத்தையும் தந்து அருள் செய்தார்.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:06 am

24 - கற்றவர்களிடம் வாழும் கடவுள்

ஓரு ராஜா தன் மந்திரி பிரதானிகளை அழைத்தான். ""மந்திரி பிரதானிகளே! உடனடியாக நான் கடவுளைப் பார்த்தாக வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்.

கடவுள் இருக்குமிடத்தை யார் எனக்குத் தளிவாகச் சொல்லி, அவரைப் பார்க்க ஏற்பாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு லட்சம் பொற்காசு பரிசளிப்பேன்,'' என்றான்.

மந்திரிகள் விழித்தனர்.

"இவருக்கு என்னாயிற்று! திடீரென கடவுளைக் காட்டு,'' என்றால், எங்கே போவோம்' என்று தங்களுக்குள் முணுமுணுத்தனர்.

இதைப் பார்த்த ராஜா, ""உம்...என்ன முணுமுணுப்பு... உங்களுக்கு ஒரு மாதம் தான் தவணை. அதற்கு மேலும், காலத்தை நீட்டித்தால், உங்கள் உயிர் உங்களுக்கல்ல,'' என்று எச்சரிக்கை வேறு செய்தான்.

மந்திரிகள் பறையறிந்து நாடெங்கும் செய்தியைப் பரப்பினர்.

லட்சம் பொன்னுக்கு ஆசைப்பட்ட பலர், ""கடவுள் வைகுண்டத்தில் இருக்கிறார், கயிலாயத்தில் இருக்கிறார், சூரிய மண்டலத்தில் இருக்கிறார், வேதங்களில் மறைபொருளாக இருக்கிறார்,'' என்று வியாக்கியானம் செய்தார்களே தவிர, யாராலும் கடவுளைக் காட்ட முடியவில்லை.

மாதமும் கடந்து விட்டது. அன்று மந்திரிகளைத் தூக்கில் போட ராஜா ஏற்பாடு செய்து விட்டான்.

தானன் என்ற மந்திரியின் ஆறு வயது பெண் குழந்தை தன் தந்தைக்கு நேர இருந்த ஆபத்தை அறிந்தாள். நேராக அவைக்குச் சென்றாள்.

""ராஜா! கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டினால், லட்சம் பொன் தருவதாக அறிவித்திருந்தீர்கள் அல்லவா! இப்போது, நான் ஒன்று கேட்கிறேன்.


கடவுள் இல்லாத இடத்தைக் காட்டுங்கள். என் தந்தையார் இந்த அரசாங்கத்துக்கு இரண்டு லட்சம் பொற்காசுகளை அபராதமாகக் கட்டுவார்,'' என்றாள்.

ராஜா விழித்தான்.""மன்னர் மன்னா! கடவுள் எங்குமிருக்கிறார் என்ற உண்மையை உணருங்கள். அவர் "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்' என்கிறார் நம் அருணகிரிநாதர்.

ஆம்...கற்றறிந்த அறிஞர்களின் அறிவே கடவுள். இனியேனும், இதுபோன்ற அறிவிற்கெட்டாத போட்டிகளை நடத்தி அப்பாவிகளை கொல்ல முனையாதீர்கள்,'' என்றாள்.

ராஜா தலை குனிந்தான்.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:09 am

25 - அவனும் பொய் சொன்னான்

இந்த உலகிலேயே பொய் சொல்லாதவன் யார் என்றால் "அரிச்சந்திரன்' என்று குழந்தை கூட பதில் சொல்லும். ஆனால், அவனும் பொய் சொன்னான் என்கிறார் ஒரு முனிவரின் சீடர்.

இதென்ன புதுக்கதை என்பவர்கள் கதையைத் தொடருங்கள்!

விஸ்வாமித்திரர் ரொம்ப கோபக்காரர். கோபத்தாலேயே பலமுறை தன் தவசக்தியை இழந்திருக்கிறார்.

தாடகை என்ற அரக்கி, விஸ்வாமித்திரர் செய்த யாகத்துக்கு இடைஞ்சல் செய்ததால், அவளை வதம் செய்வதற்காக ராமபிரானை அழைக்க வந்தார். ராமனின் தந்தை தசரதர் மகனை அனுப்ப யோசித்தார்.

"அவனுக்குப் பதில் நான் வருகிறேனே, அவன் சின்னப் பையனாயிற்றே! அவ்வளவு பெரிய அரக்கியை அவனால் அழிக்க முடியாதே,'' என்றெல்லாம் பேசி இழுத்தடித்தார். விஸ்வாமித்திரருக்கு கோபம் வந்துவிட்டது.

அவரது கோபம் பற்றி விளக்க ஒரு வேடிக்கை கதை சொல்வார்கள்.

விஸ்வாமித்திரருக்கு நட்சத்திரேசன் என்ற சீடன் இருந்தான். அவனிடம் விஸ்வாமித்திரர், ""சீடனே! அரிச்சந்திரன் பொய்யே பேசமாட்டேன் என சத்தியம் செய்துள்ளான். அவனை எப்படியும் பொய் பேச வைப்பதென நான் சவால் விடுத்துள்ளேன். அவன் பொய் பேசுகிறானா இல்லையா என்பதை நீ கவனித்து எனக்கு அறிவிக்க வேண்டும்,'' என்று உத்தரவு போட்டார்.

சீடன் மிகவும் பவ்வியமாக, ""குருவே! அவன் தான் ஏற்கனவே பொய் சொல்லி விட்டானே,'' என்றதும் விஸ்வாமித்திரருக்கு அதிர்ச்சியும், ஆனந்தமும் ஏற்பட்டது. தன் சவாலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற நினைப்பில்,""எப்போதடா அவன் பொய் சொன்னான்?'' என ஆவலும் அவசரமும் கலந்து கேட்டார்.

""நீங்களும் நானும் அவனது அவைக்குச் சென்ற போது, தங்களை அவன் வரவேற்றானே! அப்போதே பொய் சொல்லிவிட்டானே,'' என்றான் சீடன்.விஸ்வாமித்திரர் கேள்விக்குறியுடன் அவனை நோக்கவே, ""சுவாமி! உங்களை அவன் வரவேற்கும் போது, தங்களைப் போன்ற "பரமசாது' எனது அவைக்கு எழுந்தருள நான் மிக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னானே...'' என்று சொல்லிவிட்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டான்.

பார்த்தீர்களா! சில முசுடுகளை தட்டி வைக்க இப்படித்தான் சமயத்தில் பேச வேண்டி இருக்கிறது! என்ன செய்வது!



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:12 am

26 - கல்வியைத் தானம் செய்யுங்கள்

இன்றைய தினம் படிப்பதற்கு, வங்கியில் போய் கடன் வாங்குமளவு நிலை சென்றுவிட்டது. கல்வியை வியாபாரமாக்கி கொள்ளையடிக்கின்றனர். ஆனால்,நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ராட்சதனாகப் பிறப்போம் என்கிறது சாஸ்திரம்.

யாதவப்பிரகாசர் என்ற குருவிடம் படித்தார் ராமானுஜர். தன்னை மிஞ்சிய சீடனாக இருந்ததால், ராமானுஜர் மீது அவருக்குப் பொறாமை.

இந்த சமயத்தில், காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னனின் மகளுக்கு பேய்பிடித்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளைக் குணமாக்க பல மந்திரவாதிகளை அழைத்துப் பார்த்தான் மன்னன். எதற்கும் அந்தப் பேய் கட்டுப் படவில்லை.

கடைசியாக, யாதவப்பிரகாசரை அழைத்தான். அவர், அந்தப்பெண் முன்னால் அமர்ந்து மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

அப்போது அந்தப் பெண்ணிடம் இருந்த பேய் பேசியது. ""என்னை விரட்ட உன்னால் முடியாது. நீ உன் ஆயுள் முழுக்க இங்கிருந்து மந்திரம் சொன்னாலும் சரிதான்... நான் விலகமாட்டேன். அது மட்டுமல்ல, நான் நினைத்தால் உன்னை இங்கிருந்து விரட்டவும் முடியும், நான் ஒரு ராட்சதன், என்னிடம் விளையாடாதே,'' என்றது.

யாதவப்பிரகாசர் நடுங்கி விட்டார். அப்போது, அவருடன் வந்திருந்த ராமானுஜர் அந்தப் பெண்ணருகே சென்றார்.

""ஐயா, யார் நீங்கள்? அப்பாவியான, இந்தப் பெண்ணின் உடலில் இருந்து ஏன் இவளை வருத்த வேண்டும்?'' என்று கேட்டார்.

அப்போது அந்த ராட்சதன் அழுதபடியே பேசினான்.

""ஐயா! தாங்கள் கல்வியில் என்னை விட உயர்ந்தவர். எனவே, உங்களோடு நான் பேசுகிறேன். நான் என் வாழ்நாளில் சகலகலைகளையும் கற்றறிந்தவனாகவே இருந்தேன். ஆனால், யாருக்கும் வித்யாதானம் செய்யவில்லை. அதன்பலனாக, இந்த ராட்சதப் பிறப்பை அடைந்து, இப்பெண்ணின் உடலில் புகுந்தேன். தாங்கள், என் தலை மீது கை வைத்தாலே போதும், நான் இந்த ராட்சதப் பிறப்பில் இருந்து விடுதலை அடைந்து விடுவேன்,'' என்றான்.

ராமானுஜரும், ஸ்ரீமன் நாராயணனை மனதில் எண்ணி, அந்த ராஜகுமாரியின் தலையில் கை வைத்தார். அந்த ராட்சதன் முக்தியடைந்தான். ராஜகுமாரி சுகமடைந்தாள். மன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.



 ஆன்மீகக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:31 am

ஆஹா .....நிறைய கதைகள் இருக்கே...பொறுமையாய் படிக்கிறேன் சிவா......பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக