புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_m10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_m10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_m10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_m10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_m10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_m10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_m10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_m10தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 23, 2015 3:13 pm

உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரபூர்வமாக உள்ளன.

உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழிக்கான இடம் எது?

பல மொழிகளோடு பிறந்து வளர்ந்து, தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்த போதிலும் இன்றளவும் தன் இளமைத் தன்மையை இழக்காமல் வாழ்ந்து வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழி நம் தமிழ் மொழிதான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியத்திலும் பேச்சுவழக்கிலும் இருந்த ஒரே மொழி இன்றளவும் இருக்கிறதென்றால் அது தமிழ்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

ஆனால், இந்த வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க தாய்மொழியைப் பேசுவதற்குத்தான் நாம் தயங்குகிறோம். தமிழில் பேசினால் தரம் குறைந்துவிடும் என்று தப்புக்கணக்கு போடுகிறோம்.

ஆங்கிலம்தான் அறிவா?

சிந்தனையின் தொடக்கப்புள்ளி தாய்மொழி என்று தெரிந்துகொண்ட நாம் நம் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பதைத்தான் பெருமையாக கருதுகிறோம்.

ஆங்கிலம் மட்டும்தான் அறிவு. ஆங்கிலமொழியில் படித்தால்தான் அறிவு மேம்படும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல சம்பளம் வாங்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றால்தான் அகிலமே மதிக்கும் என்பது எந்த விதத்திலும் உண்மை இல்லை. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாததால்தான் இன்றைய பெற்றோர்களின் மனநிலை வேறு திசையில் பயணிக்கிறது.

'என்னாலதான் தஸ் புஸ்னு இங்கிலீஷ் பேசுற மாதிரி படிக்க முடியலை. என் குழந்தையாவது படிக்கட்டும்' என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள். அதையே பெருமைக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.

உண்மையில், அப்படிப் படிக்கும் மாணவர்கள் இயல்பாக சிந்திக்க முடிகிறதா?

கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமையக்கூடாது. ஆனால், ஆங்கில மொழி நமக்குள் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்காமல் மனனம் செய்யும் முறையை மட்டும் கற்றுக்கொடுக்கிறது.

தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் . ஒவ்வொருவரும் சிந்திப்பது தன் சொந்த தாய்மொழியில்தான். அதுதான் இயல்பான அடிப்படை புரிதலைக் கொடுக்கும். அதுவே அந்த குழந்தையின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும்.

ஆனால், அந்த சூழலை வளர்த்தெடுக்க வேண்டிய தமிக அரசு எந்த வித அக்கறையும் காட்டாததுதான் வருத்த்ததின் உச்சம். ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் நிலவுவது எவ்வளவு பெரிய முரண்.

"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை

தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை " என்பது உலகறிந்த உண்மை.

தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, எந்த ஒரு குழந்தைக்கும் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை நாம் செயல்படுத்துவோம்.

இந்த தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

அனைத்து தனியார் அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் வழிக் கல்வி கட்டாயம் என்பதை சட்டமாக்குதல் வேண்டும். ஆங்கிலம் மொழிப் பாடமாகவும் , தமிழ் பயிற்று மொழியாகவும் இருத்தல் வேண்டும் .

மம்மி, அங்கிள் என்று குழந்தைகளை அழைக்கச் சொல்லி பெருமைப்படுவதை கொஞ்சம் மாற்றி, அழகுத் தமிழில் அன்பை வளர்ப்போம். முடிந்தவரை தமிழை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். தமிழில் பேச பயிற்சி தருவோம்.

தமிழில் பேசுவதே தகுதி என்பதை நம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவோம்.

ஏன் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும்?

எந்த மொழிக்கும் இல்லாம மென்மையும், ஆழமும், அர்த்தமும் தமிழ் மொழிக்கு இருக்கிறது.

சித்தப்பா, மாமா என்ற இரண்டு உறவுகளும் வெவ்வேறு அர்த்தம் தருபவை. ஆனால், ஆங்கிலத்தில் இருவரையும் அங்கிள் என்றே அழைப்பது உறவின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.

யானைக்கு தமிழில் வேழம், களிறு, பிடி என்று எத்தனையோ வார்த்தைகள் இருக்கின்றன. இங்கிலாந்திலே இல்லாத ஒரு உயிரினம் யானை. ஆனால், அந்நாட்டு மொழியில் எலிபேண்ட் (elephant) என்று அழைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?

மிகப்பெரிய ஆங்கில அறிஞர்கள் கூட தங்கள் படைப்புகளில் கண்ணுக்கு கண்: பல்லுக்குப் பல் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், திருவள்ளுவர் மட்டும்தான் உனக்கு தீமை செய்தவனுக்குக் கூட ,அவன் வெட்கப்படும் படி நல்லது செய் என்று சொல்கிறார்.

''நாம் பயிலும் கல்வி தாய்மொழியில் இருந்தால் மட்டுமே சிந்திக்கும் திறன் சிறப்பாக அமையும்'' என்றார் மகாத்மா காந்தி. இனியும் தமிழில் பேசுவது தகுதியா?தரக்குறைவா? நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே...
- thehindutamil

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 23, 2015 5:32 pm

நல்ல பதிவு .....பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 23, 2015 5:39 pm

நல்ல பதிவு ...பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Mon Feb 23, 2015 6:11 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு .....பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1122298 தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 23, 2015 6:31 pm

CHENATHAMIZHAN wrote:
பாலாஜி wrote:நல்ல பதிவு .....பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1122298 தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1122304

அவ்ளோ அருமையாவா பாலாஜி போட்டிருக்கார்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 8:23 pm

//சித்தப்பா, மாமா என்ற இரண்டு உறவுகளும் வெவ்வேறு அர்த்தம் தருபவை. ஆனால், ஆங்கிலத்தில் இருவரையும் அங்கிள் என்றே அழைப்பது உறவின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.//

ரொம்ப சரி யா சொன்னிர்கள் சாமி , அவங்களுக்கு 2 உறவுகள் தான்..............நமக்கு எத்தனை எத்தனை..................அதங்கா,அம்மங்கா,அம்மாஞ்சி போன்றவை என்னவென்றே இன்றைய தலை முறைக்கு தெரியாது சோகம்

//நாம் பயிலும் கல்வி தாய்மொழியில் இருந்தால் மட்டுமே சிந்திக்கும் திறன் சிறப்பாக அமையும்'' என்றார் மகாத்மா காந்தி. //

தமிழில் பேசுவது தகுதி தான் கண்டிப்பாக.....எங்கள் குடும்பத்தில் இதை கண்டிப்பாக கடைபிடிக்கிறோம்....தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே வேறு மொழிகளில் பேசுவோம்............தமிழ் தெரிந்தால் கண்டிப்பாக தமிழில் தான் பேசுவோம்.
.
.
மேலும் இப்போ பெங்களூரில் கன்னடக்கரர்களிடம் பேசும்போது நான் சொல்வேன்.." நீங்க பாட்டுக்கு கன்னடத்தில் பேசுங்கோ, நான் தமிழில் பேசுகிறேன்.....எப்படியும் புரிந்து விடும் என்று" ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 24, 2015 4:53 am

தன்மானங்க தன்னோடு பிறந்தமொழிங்க உடலில் ஓடும் ரத்தங்க.........எனலாம்.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 11:37 am

P.S.T.Rajan wrote:தன்மானங்க தன்னோடு பிறந்தமொழிங்க உடலில் ஓடும் ரத்தங்க.........எனலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1122339

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? 3838410834

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 24, 2015 11:39 am

நல்ல பதிவு சாமி அவர்களே
ஆங்கிலம்தான் அறிவா?

சிந்தனையின் தொடக்கப்புள்ளி தாய்மொழி என்று தெரிந்துகொண்ட நாம் நம் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பதைத்தான் பெருமையாக கருதுகிறோம்.

ஆங்கிலம் மட்டும்தான் அறிவு. ஆங்கிலமொழியில் படித்தால்தான் அறிவு மேம்படும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல சம்பளம் வாங்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றால்தான் அகிலமே மதிக்கும் என்பது எந்த விதத்திலும் உண்மை இல்லை.


தமிழ் தெரிந்த தமிழர்கள் சிலர் ஆங்கிலம் கலந்து பேசுவதிலும் , ஆங்கிலத்தில் பேசினால் தான் தனக்கு எல்லாம் தெரிந்தவர்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்றும் நினைக்கிறார்கள். அதுபோன்ற ஆட்களை கண்டால் எரிச்சல் தான் வருகிறது.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 24, 2015 2:08 pm

மொழியை அடிப்படையாக கொண்டு ஒருவரின் தரத்தை எடை போடுவது நம் நாட்டில் மட்டும் தான் . ஏனென்றால் நம் நாட்டில் தான் எத்தனை எத்தனை மொழிகள் பேசுபவர்கள் வாழ்கிறோம்...குதூகலம் குதூகலம் குதூகலம்

ஆனாலும் ஆங்கிலம் பேசினால் ஒரு மேன்மை என்றே எல்லா மொழியினரும் கருதுகின்றனர்..ஒரு கவர்ச்சி தன்மையினை ஆங்கில மொழி கொடுத்தாலும் அதில் ஆழ் மன உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம்.

அதனால் தான் என்னவோ குடும்பம், சொந்தம், உறவுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தினை காண முடிவதில்லை. நாம் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி பற்றினை நம் சந்ததியினருக்கு ஊட்டி வளர்க்க வேண்டும்...ஜாலி ஜாலி ஜாலி

நம் கலாச்சாரம் இன்றைய சூழலில் மாற்றம் அடைந்து கொண்டு வருகிறது...ஆனாலும் நம் அடிப்படை பண்பாட்டினை நாம் மறக்கவில்லை..அப்படி மறந்து போனவர்கள் தான் ஆங்கில மோகம் கொண்டு சுற்றுகின்றனர்..என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆங்கிலம் தேவைதான்...ஆனால் ஆங்கிலன் தான் தேவை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது...தமிழின் அருமை பெருமைகள் அறிந்தவர்கள் எவரும் இதை ஒரு விளையாட்டாக கூட கூற மாட்டார்கள்......அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஒவ்வொருவருக்கும் தாய் மொழி ஒன்றே தகுதி......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக