புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
bala_t
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
290 Posts - 42%
heezulia
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - மார்ச்

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Feb 28, 2015 11:21 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Oox7N2SmRHy3XiS9BJNh+March-0

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:02 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 SmhxBSnnSBSmJ9iktELE+March-15

கிமு 44 - ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.

933 - பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் ஜெர்மானிய மன்னன் முதலாம் ஹென்றி ஹங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.

1493 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.

1776 - தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.

1802 - இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1815 - நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.

1848 - ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. ஹாப்ஸ்பேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

1877 - முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ணில் ஆரம்பமானது.

1917 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் த்சார் மன்னன் முடி துறந்தான்.

1922 - எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்னனானான்.

1943 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியப் படைகள் உக்ரேனின் ஹார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.

1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.

1970 - எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.

1984 - விடுதலைப் புலிகளின் ஆதிகாரபூர்வ ஏடு விடுதலைப் புலிகள் வெளியிடப்பட்டது.

1985 - முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

1988 - ஈராக்கியப் படைகள் குருதிய நகரான ஹலப்ஜா மீது இரசாயன நச்சுக் குண்டுகளை வீச ஆரம்பித்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1990 - பிரித்தானிய ஊடகவியலாளர் பர்சாட் பாசொஃப்ட் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டார்.

1990 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1991 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.

2004 - சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

2007 - இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:04 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 Cds0RsTVmWDlNIELDggD+March-16

கிமு 597 - பாபிலோனியர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றினர்.

1190 - சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

1521 - மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.

1792 - சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்பட்டான். இவன் மார்ச் 29 இல் இறந்தான்.

1926 - முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.

1939 - பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

1942 - முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).

1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.

1963 - பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.

1966 - ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

1968 - வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1969 - வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991 இல் விடுதலை ஆனார்.

1988 - ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2006 - மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:06 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 LbW47QINSCGzhufuFKjL+March-17

1776 - அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர்.

1805 - நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

1845 - இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.

1861 - இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது.

1886 - மிசிசிப்பியில் 20 ஆபிரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

1891 - பிரித்தானியாவின் எஸ்எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.

1919 - றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

1942 - மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1950 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1958 - ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது.

1959 - டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.

1966 - ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் ஸ்பெயினுக்கருகில் கண்டுபிடித்தது.

1969 - கோல்டா மெயர் (Golda Meir) இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.

1970 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.

1988 - கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

1988 - எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் (EPLF) எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1992 - ஆர்ஜெண்டீனாவில் இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.

1996 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.

2000 - உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:09 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 SkWfb3tTcaQ86qcQK3Ig+March-18

1241 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.

1438 - ஹாப்ஸ்பேர்க்கின் இரண்டாம் ஆல்பேர்ட் ஜெர்மனியின் மன்னனாக முடி சூடினான்.

1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1874 - வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

1909 - ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.

1913 - கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.

1922 - ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.

1925 - இலினோய் மற்றும் இண்டியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் கொல்லப்பட்டனர்.

1937 - டெக்சாஸ் மாநிலத்தில் நியூ லண்டன் நகரில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட ஹிட்லரும் முசோலினியும் கூட்டிணைந்தனர்.

1944 - இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பேர்லின் நகரைத் தாக்கின.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் ஜப்பானுக்கும் நேச நாடுகளிக்கும் இடையில் ஒகினவா சமர் ஆரம்பமாகியது.

1953 - மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1965 - சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ஆனார்.

1970 - கம்போடியாவின் மன்னர் நொரொடோம் சிஹானூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.

1971 - பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - ரஷ்யாவில் வஸ்தோக்-2எம் ஏவுகணை ஏவப்படுகையில் வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.

2003 - ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்தியா வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

2003 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் ஜப்பான் ஹாக்கோன் நகரில் ஆரம்பமாயின.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:11 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 YHgIcMhSsWfdrvyp6j6b+March-19

1279 - யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது.

1861 - நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.

1915 - புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.

1918 - நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.

1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1944 - இரண்டாம் உலகப் போர்: நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.

1972 - இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1982 - போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.

2002 - ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2004 - தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார்.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:12 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 BDOafYuFRNmfOvhwYWog+March-20

கிமு 44 - ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.

1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1616 - சேர் வால்ட்டர் ரலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் லண்டனில் விடுவிக்கப்பட்டார்.

1739 - நாதிர் ஷா டில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.

1760 - பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.

1815 - எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான்.

1861 - மேற்கு ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.

1916 - அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

1934 - ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர்.

1942 - போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1942 - மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினார் கொல்லப்பட்டனர்.

1948 - சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1956 - பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.

1974 - லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

1988 - எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

1995 - டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.

2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:15 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 0oZH5wxYSFKEqW9VLaFw+March-21

1413 - ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1556 - கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் ஒக்ஸ்போர்ட் நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.

1788 - லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.

1800 - ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிஸ் நகரில் ஏழாம் பயஸ் பாப்பரசராகப் பதவியேற்றார்.

1801 - பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.

1844 - பஹாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும்.

1857 - டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1905 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது புகழ் பெற்ற சிறப்புச் சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்.

1913 - ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டு 20,000 வீடுகள் அழிந்தன.

1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1933 - டேச்சு வதை முகாம், நாசிகளின் முதலாவது வதை முகாம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது.

1935 - பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தனர்.

1948 - முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.

1960 - நிறவெறி: தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.

1970 - முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.

1980 - ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மொஸ்கோவில் 1980 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1984 - மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.

1990 - 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.

1994 - ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய Schindler's List ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.

1998 - புனித வெள்ளி உடன்பாடு வடக்கு அயர்லாந்தில் எட்டப்பட்டது.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:17 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 6RHntUWpSdOL9WqiO4CK+March-22

1622 - வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.

1829 - கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.

1873 - புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.

1895 - முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.

1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1945 - அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.

1960 - ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 - இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1993 - இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.

1995 - சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.

2004 - ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2006 - பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:19 pm

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 TBKuuSMTS16samDKSMS3+March-23

1752 - கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது.

1801 - ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னன் வாள் ஒன்றினால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.

1816 - அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.

1848 - நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர்.

1857 - எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.

1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.

1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.

1931 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.

1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.

1956 - பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது.

1965 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.

1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.

1982 - குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.

1994 - சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

1996 - தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 12:08 am

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 4TaxMINJSvO88fU00VTj+March-24

1878 - பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.

1923 - கிறீஸ் குடியரசாகியது.

1944 - ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறைய்யில் இருந்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர்.

1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.

1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1965 - நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.

1972 - ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.

1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.

1999 - கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொஸ்லாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.

1999 - பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக