புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
31 Posts - 48%
heezulia
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
156 Posts - 50%
ayyasamy ram
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 12:33 pm

First topic message reminder :

சென்னை: மத்திய அரசு நிதியை குறைத்துவிட்டது என்று 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றும்போது முதல்வர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, ''மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளன. 14வது நிதி ஆணையம் தமிழகத்திற்கு பெரும் அநீதியை இழைத்து விட்டது.

மேகதாதுவில், கர்நாடகா அணை கட்ட எந்த முயற்சி எடுத்தாலும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டிட அரசு முழு மூச்சாக செயல்படும். சூரியஒளி சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடம்.

மேலும், மத்திய அரசின் பல்வேறு நிதி உதவிகள் வருங்காலங்களில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைத்து வந்த பங்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.1,137 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்று குற்றஞ்சாட்டி உரையாற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்ற தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

மேலும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தே.மு.தி.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்ஜெட் சிறப்பம்சங்கள்...

* 40.3 கோடி மனுக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம்.

* பொதுச்சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு.

* அம்மா திட்டம் மூலம் 43.9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு தரப்பட்டுள்ளது.

* தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு ரூ 46.77 கோடி நிதி ஒதுக்கீடு.

* 17,18,19ம் நூற்றாண்டைச் சேர்ந்த 120 அரிய புத்தகங்கள் இலக்க முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* சாலை விபத்துகளை தடுக்க உயர் முன்னுரிமை.

* சாலை விபத்துகளை தவிர்க்க கூடுதலாக  ரூ.165 கோடி ஒதுக்கீடு.

* சிறைத்துறைக்கு ரூ 227.03 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறைச்சாலை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ரூ10.78 கோடி ஒதுக்கீடு.

* தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ10.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* காவல்துறைக்கு ரூ5,568 கோடி நிதி ஒதுக்கீடு.

* நீதித்துறைக்கு ரூ 809.70 கோடி ஒதுக்கீடு.

* 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்.

* கிராமப்புற வறுமை ஒழிப்பின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணும் பணி விரைவில்  முடியும்.

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ 250 கோடி.

* தமிழக வாழ்வாதர திட்டத்திற்கு ரூ 107 கோடி ஒதுக்கீடு

* பயனாளிகளுக்கு மானியங்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

* சமூக நலத்திட்ட உதவித்தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

* விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.5,500 கோடி வழங்க இலக்கு.

* ரூ.4,955 கோடியாக இருந்த பயிர் கடன்கள் ரூ.5.500 கோடியாக அதிகரிப்பு.

* சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ரூ.50, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.70 மானியம்.

* விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத் தொகை ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

* விவசாயிகளுக்கு கடன்கள் வட்டின்றி வழங்கப்படும்.

* தோட்டக்கலை பயிர்ப் பரப்பு 25.9 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு.

* விலையில்லா ஆடுகள், பசுக்கள் வழங்க ரூ.241 கோடி நிதி ஒதுக்கீடு.

* 12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்க திட்டம்.

* 25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்தப்படும்.

* கைத்தறை மற்றும் நெசவுத்துறைக்கு 499.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* கைத்தறி விற்பனையை ஊக்குவிக்க தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு ரூ.78.45 கோடி.

* தமிழகத்தில் உள்ள 113 அணைகளை புனரமைக்க ரூ.450.13 கோடி ஒதுக்கீடு.

* நீர்ப்பாசத் துறைக்கு ரூ.3,727.37 கோடி நிதி ஒதுக்கீடு.

* நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* மின்சாரத் துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2015-16ம் ஆண்டில் மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.7,136 கோடியாக உயர்வு.

* நெடுஞ்சாலைத் துறைக்கு 8,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு.

* 427 கி.மீ. சாலைகள் ரூ.2,414 கோடியில் இரு வழித்தட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,422.08 கோடி நிதி.

* 6 ஆயிரம் கி.மீ. ஊரக உள்ளாட்சி அமைப்புச் சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி நிதி.

* வரும் நிதியாண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.

* திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி ரூ.100 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்வு.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.365.91 கோடி நிதி ஒதுக்கீடு.

* தகவல் தொழ்ல்நுட்பவியல் துறைக்கு ரூ.82.94 கோடி நிதி ஒதுக்கீடு.

* சூரிய ஒளி பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி ஒதுக்கீடு.

* மாணவர்களுக்கான இலவச பேருந்து பயன மானியத்திற்கு ரூ.480 கோடி.

* டீசல் மாணியம் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* மக்கள் நல்வாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8,245 கோடியாக உயர்வு

* தேசிய சுகாதார இயக்க திட்டத்திற்கு ரூ.1,342.67 கோடி

* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி நிதி ஒதுக்கீடு.

* கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு.

* குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்திற்கு ரூ.50 கோடி.

* மகளிர் சுகாதர திட்டத்திற்கு ரூ.60.28 கோடி நிதி ஒதுக்கீடு.

* மெட்ரோ ரயில் பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

* அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களுக்கு விரிவு.

* 250 பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.

* பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.140.12 கோடி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,575.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வகை கலவை சாதம் வழங்க ரூ.1,470.53 கோடி.

* சுற்றுலாத் துறைக்கு ரூ.183.14 கோடி

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ரூ.110.57 கோடி நிதி உதவி.

* பிற பல்கலைக் கழகங்களுக்கு ரூ.868.40 கோடி நிதி உதவி.

* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696.82 கோடி நிதி.

* விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்க நிதி ரூ.1,037.85 கோடி

* 6.62 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.219.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* ரூ.450.96 கோடி நிதியில் பள்ளிக் கட்டமைப்பு வலுப்படுத்த திட்டம்.



தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 5:23 pm

தமிழக மக்களை கடனாளியாக்கும் பட்ஜெட்: ராமதாஸ் கருத்து

2015 -16ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு - செலவு காகித அறிக்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் 2015- 16ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரும், நிதிநிலை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையைக் கூட ஜெயலலிதாவின் புகழ்பாடும் அறிக்கையாக மாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். ‘அம்மா’ இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததாலோ என்னவோ, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தை கடுமையாக பாதிக்கக்கூடிய விவசாயம், தொழில் உற்பத்தி, மின்வெட்டு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. தமிழகத்தில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். தமிழக அரசுத் துறைகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இத்தகைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம் போல் இரண்டு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. புதிய மின்திட்டங்களையும் அறிவிக்காமல், அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களையும் செயல்படுத்தாமல் மின்வெட்டைப் போக்கப் போவதாக ‘வெறும் கையால் முழம் போடும்’ வேலையைத் தான் அரசு செய்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காக லோக் அயுக்தாவை ஏற்படுத்தவும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.

ஒரு மாநிலம் வளர்ச்சியடைய விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய 3 துறைகளும் செழிக்க வேண்டியது அவசியம் ஆகும். சுகாதாரத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2 % அதாவது சுமார் ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் ரூ.8245 கோடி (0.8%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 62,000 கோடி ஒதுக்குவதற்கு பதிலாக ரூ.20,936 கோடி (2.04%) மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதன்மைத் துறையான வேளாண்துறைக்கு ரூ.6613 கோடி (0.65%) மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான 3 துறைகளுக்கும் மொத்தமாக ரூ.35,794 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதைவிட 70 % அதிகமாக இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கு ரூ. 59,185 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழக அரசு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறதா.... அல்லது இலவசங்களுக்கு முக்கியத்துவம் தருகிறதா? என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023&ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 5 விழுக்காடு அளவுக்குக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக தமிழக அரசின் நிதிநிலை மிக மோசமான நிலையில் இருப்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.

2014-15 ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூ. 91,835 கோடியாக இருக்க வேண்டும்; ஆனால், இது 85,772 கோடியாக குறைந்து விட்டது. வணிக வரி வருவாய் ரூ.68,724 கோடி என்ற இலக்கை எட்ட முடியாமல் ரூ.65 ஆயிரம் கோடிக்கும் கீழ் குறைந்து விட்டது. முத்திரைத் தாள் வருவாய் ரூ. 10,470 கோடி என்ற இலக்கை விட குறைவாக ரூ.9,330 கோடி என்ற அளவில் தான் உள்ளது. மோட்டார் வாகன வரி வருவாயும் ரூ.8083 கோடி என்ற இலக்கில் பாதியாக, அதாவது ரூ.4279 கோடியாக குறைந்து விட்டது.

அதேநேரத்தில் அரசின் செலவுகள் மட்டும் கணிக்கப் பட்டதை விட அதிகமாக ரூ. 1.37 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. தமிழக அரசின் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் வளர்ச்சியை எட்டியுள்ள ஒரே விஷயம் மது விற்பனைதான். மற்ற அனைத்து வரிகளும் இலக்கை எட்ட முடியாத நிலையில் ஆயத்தீர்வை வருவாய் மட்டும் ரூ.6,483 கோடி என்ற இலக்கைத் தாண்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, மதுவிற்பனை வருவாயும் கிட்டத்தட்ட இலக்கைத் தொட்டு ரூ.26,188 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. மேலும் 2015 -16ம் ஆண்டில் ரூ.29,627 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பது தான் அதிமுக அரசின் சாதனையாகும்.

2015 -16 ம் ஆண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ. 28,578 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ரூ.31,829 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதை சமாளிக்க ரூ.30,446 கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்திருப்பதால் நடப்பாண்டின் இறுதியில் தமிழக அரசின் நேரடி கடன் சுமை ரூ.2,11,483 கோடியாகவும், மொத்த கடன் சுமை ரூ.4,12,500 கோடியாகவும் இருக்கும். இது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததை விட ரூ.5,000 கோடி அதிகம் ஆகும்.

அரசின் நேரடிக் கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.17,856 கோடியை தமிழக அரசு செலுத்த விருக்கிறது. தமிழக அரசு வாங்கிக் குவிக்கும் கடன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,053 கடன் சுமத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் கடன் சுமை ரூ. ரூ.2.85 லட்சமாக இருக்கும். நம்பி வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசு செய்த கைம்மாறு மாநிலத்தையும், மக்களையும் மீளமுடியாத கடன் வெள்ளத்தில் மூழ்கடித்தது தான்.

மக்களுக்காக சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக கொசுவலை, எல்.இ.டி பல்பு உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறார்.இது மொத்த பட்ஜெட் மதிப்பில் 0.40 விழுக்காட்டிற்கும் குறைவாகும். மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சிக்கு உதவாத, தொழில் வளர்ச்சியை பெருக்காத, வேலைவாய்ப்பை உருவாக்காத, பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளக்கூடிய, தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு - செலவு காகித அறிக்கை ஆகும்.'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.



தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 5:25 pm

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Gallerye_135616720_1214880



தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 25, 2015 7:03 pm

நடப்பாண்டின் இறுதியில் தமிழக அரசின் நேரடி கடன்
சுமை ரூ.2,11,483 கோடியாகவும்,
மொத்த கடன் சுமை ரூ.4,12,500 கோடியாகவும் இருக்கும்.
-
- அதிர்ச்சி அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 10:40 pm

மாணவ - மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ரூ.1100 கோடி ஒதுக்கீடு

மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 21.65 லட்சம் மாணவ- மாணவி யர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். 2015-2016-ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் இந்த முன்னோடித் திட்டத்திற்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.11,274.16 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இது 2015-2016-ம் ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டில் 20.46 சதவீதமாகும். இதுபோன்றே, பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு ரூ.657.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திட்ட ஒதுக்கீட்டில் 1.19 சதவீதமாகும்.மத்திய அரசு தனது பங்கான ரூ.982.31 கோடியை முழுமையாக அளிக்காத சூழ்நிலையிலும், உயர்கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்த அரசு 2014-2015-ம் ஆண்டில் ரூ.669.64 கோடி வழங்கியது. இந்த முயற்சிகளைத் தொடர்ந்திட 2015-2016-ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி உதவித் தொகைத் திட்டங்களுக்கு முறையே ரூ.56.37 கோடியும், ரூ.674.98 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது 97,539 மாணவ - மாணவியர் தங்கிப் பயிலும் 1,304 ஆதிதிராவிடர் விடுதிகளும், 2,782 மாணவ - மாணவியர்கள் தங்கிப் பயிலும் 42 பழங்குடி யினர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. 2015- 2016-ம் ஆண்டில் மாணவ - மாணவியரின் உணவுச் செலவிற்காக ரூ.102.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

2014-2015-ம் ஆண்டு ரூ.52.47 கோடி மதிப் பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது. 2015-2016-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத் தில் இப்பள்ளிகளின் கட் டமைப்பை மேம்படுத்தவும், விடுதிகளைப் பராமரிக்கவும் ரூ.162.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறப்பு நிதியுதவியின் கீழ் ரூ.130 கோடி இந்நிறுவனத்திற்கு வரும் நிதியாண்டில் வழங்கப் படும்.

ஒருங்கிணைந்த பழங்குடி யினர் மேம்பாட்டுத் திட்டம் ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் 2015-2016-ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத் தப்படும். பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகளில் விடுதி வசதிகளை மேம் படுத்துவதற்கென, இதி லிருந்து ரூ.10 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இப் பணிகளுக்கு சிறப்பு முக் கியத்துவம் அளிக்கப்படும்.

கடந்த நான்கு ஆண்டு களில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையின மாணவ - மாணவியருக்கான 77 புதிய விடுதிகளை அமைப்ப தற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது 81,164 மாணவ-மாணவியர் பயன்பெறக்கூடிய 1,305 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2014-2015-ம் ஆண்டில் 10.36 லட்சம் மாணவ - மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மூலம் பயன்பெற்றுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.216.38 கோடி செலவில், 218 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றன. 2015-2016-ம் ஆண்டில் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களுக்காக, ரூ.250.49 கோடியும், விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவுச் செலவினங்களுக்காக ரூ.82.69 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக ரூ.101.59 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களை திறம் படச் செயல்படுத்துவதன் மூலமாக சிறுபான்மையின மாணவ- மாணவியர்கள் சிறப்பான பயனடைந்து வருகின்றனர். 2015-2016-ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில், இத்திட்டங் களுக்காக ரூ.106.51 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.2015-2016-ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் சிறுபான்மையினர் நலனுக் காக ரூ.115.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 11:43 pm

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 10167945_938594352839809_1329024831082537043_n
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், அடிக்கொரு முறை "மாண்புமிகு அம்மா" எனக் கூறினார். இன்றைய உரையில் மொத்தம் 151 முறை மாண்புமிகு அம்மா என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தி உள்ளார்.



தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக