ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்

View previous topic View next topic Go down

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்

Post by ayyasamy ram on Sun Apr 05, 2015 7:37 am


இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்,
50 கூறுகிறேன்…’ என, ஆரம்பித்தார் குப்பண்ணா.
அவற்றில் சிலவற்றை அச்சில் ஏற்ற முடியாது என்பதால்,
தவிர்த்து விட்டேன்.

இதோ… குப்பண்ணா கூறியவற்றில் சில:

* இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்;
எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்;
சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;
படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி
முதலியோருக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
கண்டிப்பாக உதவ வேண்டும்; இது, மிகவும் புண்ணியம்.

* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்,
அவர்களுக்கு உதவ வேண்டும்.

* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன்
சேர்ந்த வேம்பு இவை எதிரில் செல்ல நேரும் போது,
வலது புறம் சுற்றிச் செல்ல வேண்டும்.

* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு
உட்கொள்ளக் கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி
சாப்பிடவோ, துணியில்லாமல் குளிக்கவோ, சூரியனுக்கு
எதிரில் மலஜலம் கழிக்கவோ கூடாது.

* கன்றுக்குட்டியின் கயிறை தாண்டவோ, மழை பெய்யும்
போது ஓடவோ, தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கவோ
கூடாது.

* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம்
கழிக்கக் கூடாது.

* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ,
பெண்கள் கற்பை இழந்துவிட்டால், புண்ணிய நதியில்,
18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.

* திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழ்பவனை,
சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

* சாப்பிடும்போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு,
கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின், நீர்
அருந்த வேண்டும்.

* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால்
தண்ணீர் அருந்தக் கூடாது.

* கோவணமின்றி, வீட்டின் நிலைப் படியை தாண்டக்
கூடாது.

* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு
அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து,
மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.

* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட
வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில்
நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை
கிள்ளி எறிந்து விட வேண்டும்.

* சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ,
வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின்
பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக்
கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன்,
தாய்க்கும், பெண், தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக்
கூடாது.

* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரியை பார்க்கச்
செல்லும் போதும், ஆலயம் செல்லும்போதும் வெறுங்
கையுடன் செல்லக் கூடாது.

* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டுமே
சொறிய வேண்டும்; இரண்டு கைகளாலும் சொறியக்
கூடாது.

* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க
கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி,
தலையில் தேய்க்க வேண்டும்.

* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ
படுக்கக் கூடாது.

* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி,
ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

* பேசும்போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து
படுக்கக் கூடாது; நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு, காலால் தேய்க்கக்
கூடாது; பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை
கிடைக்காமல் போய் விடும்.

* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன்,
பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன்
மனைவியை கூடுதல் இவை மூன்றுமே பிராய
சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள்,
கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள்
இவர்களது குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.

* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர்,
மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களை பற்றி
வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள
தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை
இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது
படக் கூடாது.

* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி
போடாமலிருப்பது பாவம்.

* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, சகல
தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு,
புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை
கொடுப்பது புண்ணியம்.

* தூங்குபவரை திடீரென்று எழுப்பவோ, தூங்குபவரை
உற்றுப் பார்க்கவோ கூடாது.

* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

* தலை, முகம் இவற்றில், முடியை காரணம் இல்லாமல்
வளர்க்கக் கூடாது.

* அண்ணன் தம்பி; அக்காள் தங்கை; ஆசிரியர் – மாணவர்;
கணவர் மனைவி; குழந்தை – தாய்; பசு – கன்று
இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத்
தான் நுழைய வேண்டும்.

* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு
ஆலோசனை கூறக் கூடாது.

— என, சொல்லி முடித்தார் குப்பண்ணா.

இவற்றில் சில அறிவுரைகளை இக்காலத்தில் பின்பற்ற
முடியுமா என்பது சந்தேகம் தான். சில, மூட
நம்பிக்கையாகவும் தெரிகிறது. வாசகர்கள் தெரிந்து
கொள்வதற்காக எழுதி விட்டேன் இனி, அவரவர் விருப்பம்!

———————————————-
அந்துமணி பா.கே.ப., – வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum