ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 gayathri gopal

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

View previous topic View next topic Go down

ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by T.N.Balasubramanian on Thu Apr 09, 2015 4:58 pm

ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும்  பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .

ரமணியன் 

இந்த செய்தி படியுங்கள் .

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையரான ஹரிசங்கர் பிரம்மாவின் பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சையது நசீம் அகமது ஜைதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார்.இவரைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ள நஸீம் ஜைதி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 1976- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமனமானார். 2012-ஆம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பின்னர் டெல்லி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்

நன்றி : தி ஹிந்து 

Last edited by T.N.Balasubramanian on Thu Apr 09, 2015 4:59 pm; edited 1 time in total (Reason for editing : correction)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21526
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by சாமி on Thu Apr 09, 2015 5:04 pm

@T.N.Balasubramanian wrote: என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும்  பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .

ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது. சிவன் பிறப்பிலி.தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by T.N.Balasubramanian on Thu Apr 09, 2015 5:17 pm

ஆம் நான் படித்த அளவில் நீங்கள் கூறியதில் உடன்பாடு உண்டு , சாமி அவர்களே ! நன்றி நன்றி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21526
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by சாமி on Thu Apr 09, 2015 5:27 pm

என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும்  பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் - "T.N.Balasubramanian"

ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது.
சிவன் பிறப்பிலி.
தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.

- சாமி
@T.N.Balasubramanian wrote:ஆம் நான் படித்த அளவில் நீங்கள் கூறியதில் உடன்பாடு உண்டு , சாமி அவர்களே !

சம்மந்தப்பட்ட பாடல்கள் பலவற்றில் ஒன்று இதோ:-

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

- அப்பர் சுவாமிகள்
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by ராஜா on Thu Apr 09, 2015 5:41 pm

@சாமி wrote:
@T.N.Balasubramanian wrote: என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும்  பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .

ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது. சிவன் பிறப்பிலி.தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.

உண்மை ஐயா , இதை உலக மக்கள் அனைவரும் புரிந்துகொண்டால் சமய சச்சரவுகள் எங்குமே இருக்காது.

ஆனால் உங்களின் இந்த கருத்துக்கு நமக்குள்ளேயே எதிர்ப்பு வரும் பாருங்கள் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by T.N.Balasubramanian on Thu Apr 09, 2015 6:37 pm

புரிகிறது ராஜா !

உண்மை ஐயா , இதை உலக மக்கள் அனைவரும் புரிந்துகொண்டால் சமய சச்சரவுகள் எங்குமே இருக்காது. 

சொல்வதில் 100 விழுக்காடு உண்மை .
சமயங்கள் தோன்றியதற்கு காரணமே ஒரு நெறியை மக்களிடையே உண்டாக்குவதற்குதான். 
ஆனால் முடிவில் அடிதடி சண்டைகள் .
எந்த ஒரு மதமும் , மற்றொரு மதத்தை அழிக்க சொல்லவே இல்லை .
மத கோட்பாடே அப்பிடி என்றால் , ஜாதி வித்தியாசத்தால் , மக்கள் அடித்துக் கொள்(ல் )கிறார்களே .
என்னைப் பொருத்தவரையில் , அன்பே சிவம் (இதற்கும் எதிர்ப்பு வருமோ )
ஜாதி ,மதம்-- நட்பை பொருத்தவரையில் எனக்கு --நட்பே பிரதானம் .
நாளை நாம் இருப்போமா ,நமக்கே தெரியாது . அதற்குள் 1000 சண்டை பூசல் அவசியமா ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21526
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by ayyasamy ram on Thu Apr 09, 2015 7:47 pm

-
இந்த தெய்வ படம் உணர்த்துவது என்ன?
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by சாமி on Thu Apr 09, 2015 11:34 pm

@ayyasamy ram wrote:
-
இந்த தெய்வ படம் உணர்த்துவது என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1129472

சிவபெருமானுடைய மூர்த்தங்கள் 64.
இந்த 64 உருவங்களுக்கு அடிப்படை 8 திருவுருவங்கள்.
இதை எளிதாக புரிந்து கொள்ள 12 பிரிவுகளாக பிரிப்பார்கள்.
அவையாவன:-
1) லிங்க மூர்த்தி
2) சதாசிவ மூர்த்திகள்
3) உமாமகேச மூர்த்திகள்
4) நடேச மூர்த்திகள்
5) தட்சிணாமூர்த்திகள்
6) வீர மூர்த்திகள்
7) அஸ் திர மூர்த்திகள்
8) அசுரர் முதலானோரை அழிக்கும் மூர்த்திகள்
9) பைரவ மூர்த்திகள்
10) வைத்திய மூர்த்திகள்
11) அயன் மாலுக்கு முதல் என விளங்கும் மூர்த்திகள்
12) ஏனைய லீலா முர்த்திகள்

நீங்கள் கொடுத்துள்ள மூர்த்தம் "11ஆவதாக வரும் - அயன் மாலுக்கு முதல் என விளங்கும் மூர்த்திகள்" பிரிவில் வருவது. இந்தப்பிரிவில் 4 திருவுருவங்கள் வரும்.

அவை:-
1) சங்கர நாராயண மூர்த்தி
2) ஏகபாத மூர்த்தி
3) திரிபாத மூர்த்தி
4) சக்ரப்ரத மூர்த்தி

ஆதி முதல்வனான சிவபெருமான் உலகினைப்பரிபாலனம் செய்வதற்காக
ஆக்கல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருளல்

எனும் ஐந்தொழில்களை இயற்றி வருகிறான். தன்னுடைய சாயலில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒருவரை நியமித்து ஐந்தொழில்களும் சிறப்புற அமைய அவன் வழி வகுக்கிறான்.

தொழில்களும் தொழிற்கடவுளர்களும்
ஆக்கல் - பிரம்மா
காத்தல் - விஷ்ணு
அழித்தல் - உருத்திரன்
மறைத்தல் - மகேசுவரன்
அருளல் - சதாசிவன்

சிவபெருமானின் ஐந்தொழில்களில் ஒன்றான 'காத்தல்' வேலையைச் செய்வதைக்குறிப்பிடுவதே இந்த சங்கரநாராயண மூர்த்தி மூர்த்தமாகும். இதைக்குறிப்பிடுவதே "அரியும் சிவனும் ஒன்று" என்று குறிப்பிடும் சொலவடை.

இந்த பிரம்மா... விஷ்ணு... என்பதெல்லாம் "பதவி" யின் பெயர்தானே தவிர தனித்தனி ஆட்களின் பெயர் அல்ல. இவர்கள் யாவரும் "பக்குவப்பட்ட மேல்நிலையடைந்த ஆன்மாக்கள்". இவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் "வேறு ஒரு பக்குவப்பட்ட ஆன்மா" அந்தப்பதவிக்கு வந்துவிடும்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by T.N.Balasubramanian on Fri Apr 10, 2015 6:17 am

விரிவான விளக்கம்  நன்றி சாமி 

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21526
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by T.N.Balasubramanian on Fri Apr 10, 2015 6:20 am

@ayyasamy ram wrote:
-
இந்த தெய்வ படம் உணர்த்துவது என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1129472

என்னைக் கேட்டால் ,
சுருக்கமாக சொல்வேன்  ,
ஹரியும் சிவனும் ஒன்று .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21526
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by M.Saranya on Fri Apr 10, 2015 12:32 pm

அருமையான தகவல்....

நன்றி...............
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum