புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_m10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_m10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_m10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_m10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_m10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_m10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_m10ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 4:39 pm

First topic message reminder :

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 11159527_972760286080972_6381567904456958501_n

மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் வழக்குகளில் பெரும் பாலானவைகள் குடும்ப பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. நீதி கேட்டு மகளிர் காவல் நிலைய வாசலை தட்டுபவர்களுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது சமீபகாலமாக மகளிர் காவல்நிலையங்களுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு!

சம்பவம் 1:

சென்னை நீலாங்கரையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகன் ஆனந்துக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் 2013 நவம்பரில் திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சத்யா வீட்டினர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார், ரேணுகா, அவரது தாயார் மணியம்மாள், ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், 65 வயதான மூதாட்டியை மணியம்மாளை லத்தியால் அடித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த மூன்று மாதத்துக்குள் மணியம்மாள் இறந்தார்.

இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இறுதியில் ரேணுகாவுக்கு போலீஸார் கொடுத்த கெடுபிடியால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகாவிடம் விசாரித்தால் போலீசுக்குப் பயந்து அவர் எதையும் சொல்ல மறுக்கிறார்.

சம்பவம் 2:

பெயரை குறிப்பிட விரும்பாத ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவரின் நிஜக்கதை இது...

"சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி. சென்னையில் இன்ஜினியர் பணி. உடன் பணியாற்றும் பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். சில மாதங்கள் சந்தோஷமாக கழிந்தன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னைகள் வரத்தொடங்கின. விட்டுக் கொடுத்து வாழப்பழகினேன். கடைசியில் இன்னொரு வருடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கண்டித்தேன்.

பிரச்னை விஸ்வரூபமாக வெடித்தது. ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றாள். இதுதொடர்பாக என் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காதலித்து திருமணம் செய்ததால் மகளே இல்லை என்று கூறியவர்கள், என் மீது வரதட்சணை, குடித்து விட்டு செக்ஸ் டார்ச்சர் என புகார்களை அடுக்கினார்கள்.

விசாரணைக்கு மகளிர் காவல் நிலையத்திலிருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. விசாரணைக்கு சென்றேன். காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், ஒருவரை காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு இருந்தார். அவரது பார்வை என் பக்கம் திரும்பியது. "அந்த வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற கேஸ் தானே... நில்லு வந்து விசாரிக்கிறேன்!" என்றார். அவரது பேச்சு ஒருவித மிரட்டலுடன் இருந்தது.

மூன்று மணி நேரத்துக்கு பிறகு உள்ளே அழைத்தார் பெண் அதிகாரி. அங்கு என்னிடம் விசாரணை என்ற பெயரில் அசிங்க அசிங்கமாக திட்டினார். நான் கூனிக் குறுகி நின்றேன். 'ஏன்டா பொம்பளைன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா... பேண்ட அவிழ்த்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே அடைச்சா தான் உனக்கு புத்தி வரும்' என்றார். 'மேடம் எனக்கும் அவளுக்கும் எந்தப்பிரச்னையும் இல்ல... வரதட்சணை எல்லாம் யாரிடமும் கேட்கல... லவ் பண்ணிதான் மேரெஜ் பண்ணினோம்!' என்ற என் பதிலை அந்த அதிகாரி காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கடுமையாக அடித்து, ஜெயில்ல அடைச்சிட்டாங்க.

ஜாமீனில் வந்த பிறகு என் மீதான புகாரை என்னுடைய மனைவியே திரும்பப் பெற்றாள். ஆனால், அந்த அவமானத்திலிருந்து என்னால் மீளமுடியவில்லை. அன்றைக்கு நான் சொன்னதை மட்டும் அந்த பெண் இன்ஸ்பெக்டர் காது கொடுத்து கேட்டு இருந்தா எனக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது. அந்த களங்கத்தை யார் நீக்க முடியும் சார்?" என்று முடித்தார்.

சம்பவம் 3:

ஆவடியை சேர்ந்தவர் டெய்சி. இவருக்கும் அருண் என்பவருக்கும் 2011ல் திருமணம் நடந்துள்ளது. டெய்சி வுடன் வாழப்பிடிக்காமல் அருண் தலைமறைவாகி இருக்கிறார். இதுகுறித்து டெய்சி, அடையார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியை அருண் தரப்பினர் நன்கு கவனித்து இருக்கிறார்கள். இப்போது இரண்டரை வயது குழந்தையுடன் டெய்சி தனிமரமாக தவித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு சமரச தீர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக சேவகர் பொன்சேகரிடம் பேசினோம். "குற்றச்செயல்களில் ஈடுபடும் பெண்களிடம் விசாரிக்கவும், தங்களது பிரச்னைகளை தயங்காமல் பெண் போலீஸாரிடம் சொல்லவும் வசதியாக முதல் மகளிர் போலீஸ் நிலையம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1992ல் தொடங்கப்பட்டது. இப்போது சென்னை உள்பட தமிழகத்தில் 198 மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன.

ஆனால் இந்த மகளிர் போலீஸ் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை. விசாரணைக்கு அழைத்து வருபவர்களிடம், அங்குள்ள அதிகாரிகள் அநாகரீகமாக கேள்விகளை கேட்கின்றனர்.

ஜட்டியோடு ஆண்களிடம் விசாரணை நடத்தும் சம்பவங்களும் சில ஸ்டேஷன்களில் நடக்கின்றன. இதையெல்லாம் தட்டிக் கேட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்கள்" என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் முஜிபூர் ரகுமான் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங் களில் கவுன்சலிங் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். குடும்ப பிரச்னைகளுக்கு கவுன்சலிங் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், நாட்டாண்மை போல மகளிர் இன்ஸ்பெக்டர்கள் செயல்படுகிறார் கள். காவல் துறையினர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் கடமை.

அதை விட்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழக காவல் துறையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். காவல் நிலையங்களில் அநாகரீகமாக நடந்த காவல்துறை யினர் மீது பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டு நீதி பெற்று இருக்கிறார்கள்" என்றார்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து பாதிக்கப்பட் டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான புகார்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கவுன்சலிங் மையத்தில் கணவன், மனைவி இருவருக்கும் கவுன்சலிங் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. கவுன்சலிங் மூலம் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள் காவல் நிலையத்தில் நடந்து, பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமலும், யாருக்கும் பயப்படாமலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது புகார் கொடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. புகார் கொடுத்தால் இரு தரப்பிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் கடமை" என்றார்.

அதிகாரியின் கருத்தை பின்பற்றுமா மகளிர் காவல் நிலையங்கள்...?

விகடன்



ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:47 am

கோ. செந்தில்குமார் wrote:என்னுடைய அனுபவத்தையே இங்கு எனது கருத்தாக பதிவிடுகிறேன்....

வரதட்சணை வழக்குகளில் 100 க்கு 95 வழக்குகள் போலியானவை. போலியான வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விடுகின்றன. இருப்பினும் இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு யார் மருந்து தருவார்கள்? பொய் வழக்கு போட்டவர்களுக்கும் அதை அரசு சார்பில் நடத்திய மகளீர் காவல் நிலைய அதிகாரிகளுக்கும் தண்டனை தர வேண்டும். காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது 100% உண்மை. இதை யாராலும் பொய் என நிரூபிக்க இயலாது.

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இதில் மகளீர் காவல் நிலையங்களும் அடக்கம். அனைத்து காவல் நிலையங்களும் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்டும். மகளீர் காவல் நிலையங்களும் இந்த வளையத்திற்குள் வரும். அப்போதும் ஜட்டியோடு ஆண்களை நிற்க வைத்து விசாரணை செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

காவல்துறையும், நீதித்துறையும் ஒழுங்காக இருந்தால் நாட்டில் பிரச்சனைகளே எழாது. ஆனால் தற்போது நிலைமையே வேறு. இரண்டு துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அவரவர் பதவிக்கும், திறமைக்கும் ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார்கள்.

பெண்கள் கையில் சட்டத்தினை கொடுத்தால் இப்படித்தான். அவர்களுக்கு போதிய மனவளர்ச்சி இல்லை. அதிகாரம் இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் செய்ய இயலாது. இது அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலம். அதன் முன்னர் இவர்கள் எல்லாம் நிற்க இயலாது. கண்டிப்பாக மாட்டிக் கொள்வார்கள். அப்போது யார் காப்பாற்றுவார்கள் என்று பார்ப்போம்.

சாராய வழக்குகளில் வாங்கப்டும் லஞ்சத்தை விட போலி வரதட்சணை வழக்குகளில் வாங்கப்படும் லஞ்சமே அதிகம். லஞ்சம் வாங்குவதில் போட்டி வேறு. லஞ்சம் வாங்கும் காவல் துறையினரின் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதில்லை. அழிந்து தான் போய் இருக்கிறது. அப்பாவிகளின் பாவம் சும்மா விடுமா? இது எமது அனுபவம்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி சொல்வதென்றால் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி வரும். வேண்டாம். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 103459460 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 1571444738

மேற்கோள் செய்த பதிவு: 1131888

உண்மையை உரக்கக் கூறியுள்ளீர்கள் செந்தில்! பாராட்டுக்கள்!



ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Wed Apr 22, 2015 8:24 am

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 1571444738 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 1571444738 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 22, 2015 11:06 am

கோ. செந்தில்குமார் wrote:
ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி கோ.செந்தில்குமார் அவர்களே , நேற்று இந்த பதிவை படித்ததுமே உங்களிடம் இருந்து என்ன பதில் வரபோகிறது என்று ஆவலுடன் இருந்தேன். உண்மையை தயங்காமல் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். salute
மேற்கோள் செய்த பதிவு: 1131950

தயவு செய்து ஈகரையின் விதிமுறைகளை கொஞ்சம் இந்த பதிவிற்காக தளர்த்துங்கள். என்னுடைய அனுபவங்களை கடுமையான வார்த்தைகளால் மழையாக பொழிய வேண்டும்.

வேண்டாம் செந்தில் புன்னகை , நீங்கள் ஒரு அரசாங்க உத்தியோகஸ்தர் , இந்த பதிவுகளால் உங்களுக்கு எதுவும் பிரச்சினை வருவதை நாங்கள் விரும்பவில்லை புன்னகை

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 23, 2015 12:30 am

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 1571444738 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 1571444738 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக