ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காக்கா முட்டை - விமர்சனம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

காக்கா முட்டை - விமர்சனம்

Post by சிவா on Tue Jun 09, 2015 12:16 am

First topic message reminder :


நடிகர் : ரமேஷ் திலகநாதன்
நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் : மணிகண்டன் எம்
இசை : ஜி வி பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு : மணிகண்டன் எஸ்

ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டு, அதை எப்படியாவது வாங்கி சாப்பிடவேண்டும் என்பதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதையொட்டி செல்லும் கதைதான் காக்கா முட்டை.

படத்தில் இரண்டு சிறுவர்கள் சகோதரர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களது தாயாக ஐஸ்வர்யா. ஜெயிலில் இருக்கும் தனது கணவரை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் என்று ஐஸ்வர்யா முயற்சிகள் எடுத்து வருகிறார்.

எனினும் படத்தின் பெரும்பாதி இரண்டு சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவரை சுற்றியே பயணிக்கிறது. எந்த இடத்திலும் சற்றும் தொய்வில்லாமல் இவர்களது நடிப்பு கதையை தூக்கி நிறுத்தியிருக்கிறது. படத்தில் எந்த இடத்திலும் சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமாக காட்சிகளில் பதிந்திருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்லாமல், இவர்களுடைய நண்பர்களாக வரும் சிறுவர்களும் எதார்த்தம் மீறாமல் நடித்து கைதட்டல் பெறுகிறார்கள். முகம் நிறைய மேக்கப்பை பூசிக்கொண்டு நடிகைகளுக்கு மத்தியில், ஐஸ்வர்யா அழுக்கு முகத்தோடும், நல்ல நடிப்போடும் படம் முழுக்க கம்பீரமாய் வலம் வந்திருக்கிறார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் என்பது உறுதி.

இதுவரையிலான படங்களில் மிகவும் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த ஜோ மல்லூரி, இந்த படத்தில் சிறுவர்களோடு சேர்ந்து சிறுவனாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், சூது கவ்வும் ரமேஷ், யோகி பாபு ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் மணிகண்டன் தனது முதல் படத்தில் மிக அழுத்தமான பதிவை தமிழ் சினிமாவுக்கு செய்திருக்கிறார் என்றால் மிகையாகாது. வெளிவருவதற்கு முன்பே பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் காக்கா முட்டை இவருக்கு சினிமாவில் ஒரு எனர்ஜியை கொடுத்திருக்கிறது என்று நம்பலாம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரொம்பவும் திறமையோடு வேலை வாங்கியிருக்கிறார் என்பது திரையில் பார்க்கும் காட்சிகள் மூலம் தெரிகிறது. இவருடைய பலமே படத்தின் திரைக்கதைதான். எந்த இடத்திலும் படம் போரடிக்கிறது என்று சொல்ல முடியாத அளவிற்கு அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கச்சிதமாக இருக்கிறது. பின்னணி இசையும் அபாரம். மணிகண்டன் ஒளிப்பதிவில் சென்னையை அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.

மொத்தத்தில் ‘காக்கா முட்டை’ அழகு.


மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: காக்கா முட்டை - விமர்சனம்

Post by சிவா on Sat Jun 13, 2015 1:01 pm

@krishnaamma wrote:
@seltoday wrote:எனது பெயர் தான் ஜெ.செல்வராஜ் . எனது சொந்த கட்டுரைகளையே அதிகம் பதிவிடுகிறேன். சரிங்க இனி சரி செய்து கொள்கிறேன்.  ஆனாலும் எனது பதிவை கமெண்ட் பகுதியில் பதிவிடுவதால் நிறைய பேர் வாசிக்காமலே போய் விடும் சூழல் உள்ளதே !
மேற்கோள் செய்த பதிவு: 1144330

நன்றி ராஜ், அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், எல்லோரும் படித்து பின்தான் பின்னுட்டம் போடுவோம், கண்டிப்பாக உங்கள் பதிவை எல்லோரும் படிப்பார்கள், அதற்கு மேலே , உங்கள் பதிவை மேற்கோள் காட்டி பதிவு போட்ட சிவாவே சாக்ஷி புன்னகை............

.
.
நீங்க கூர்ந்து பார்த்திர்கள் என்றால், சில படங்களுக்கு 2 - 3 விமரிசனகள் கூட இங்கு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.............. ஆனால் தொடர் பதிவு போல இருக்கும்.......ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு கொள்கை இருப்பது போல, நம் தளத்தில் , ஒரு விஷயத்துக்கு  ஒரு திரி , அதாவது,  ஏதாவது ஒன்றை பற்றி நாம் எழுத  ஆரம்பித்தால் அது பற்றின முழு விவரங்களும் ஒரே திரி இன் கீழ் அடங்க வேண்டும் என்று கொள்கை இருக்கு. அதனால் தான் நான் இணைத்தேன்............

இது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்..ஓகே வா?

புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ராஜ் புன்னகை.............அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் தொடர்ந்து உங்கள் மேலான பதிவுகளை இடுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


பாராட்டுக்கள் அக்கா!
அழகாக நம் தளத்தின் விதிமுறையை எடுத்துக் கூறியுள்ளீர்கள். அன்பு மலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காக்கா முட்டை - விமர்சனம்

Post by krishnaamma on Sat Jun 13, 2015 1:17 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:
@seltoday wrote:எனது பெயர் தான் ஜெ.செல்வராஜ் . எனது சொந்த கட்டுரைகளையே அதிகம் பதிவிடுகிறேன். சரிங்க இனி சரி செய்து கொள்கிறேன்.  ஆனாலும் எனது பதிவை கமெண்ட் பகுதியில் பதிவிடுவதால் நிறைய பேர் வாசிக்காமலே போய் விடும் சூழல் உள்ளதே !
மேற்கோள் செய்த பதிவு: 1144330

நன்றி ராஜ், அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், எல்லோரும் படித்து பின்தான் பின்னுட்டம் போடுவோம், கண்டிப்பாக உங்கள் பதிவை எல்லோரும் படிப்பார்கள், அதற்கு மேலே , உங்கள் பதிவை மேற்கோள் காட்டி பதிவு போட்ட சிவாவே சாக்ஷி புன்னகை............

.
.
நீங்க கூர்ந்து பார்த்திர்கள் என்றால், சில படங்களுக்கு 2 - 3 விமரிசனகள் கூட இங்கு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.............. ஆனால் தொடர் பதிவு போல இருக்கும்.......ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு கொள்கை இருப்பது போல, நம் தளத்தில் , ஒரு விஷயத்துக்கு  ஒரு திரி , அதாவது,  ஏதாவது ஒன்றை பற்றி நாம் எழுத  ஆரம்பித்தால் அது பற்றின முழு விவரங்களும் ஒரே திரி இன் கீழ் அடங்க வேண்டும் என்று கொள்கை இருக்கு. அதனால் தான் நான் இணைத்தேன்............

இது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்..ஓகே வா?

புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ராஜ் புன்னகை.............அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் தொடர்ந்து உங்கள் மேலான பதிவுகளை இடுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


பாராட்டுக்கள் அக்கா!
அழகாக நம் தளத்தின் விதிமுறையை எடுத்துக் கூறியுள்ளீர்கள். அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1144674

மிக்க நன்றி சிவா புன்னகை................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

காக்கா முட்டை ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sun Jun 21, 2015 8:55 am

காக்கா முட்டை ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி !
இயக்கம் ; மணிகண்டன் !
இசை; ஜி .வி .பிரகாஷ் குமார் !
சரியான படத்திற்கு சரியான தேசிய விருது வழங்கிய தேர்வுக் குழுவிற்கு நன்றி .இயக்குனர் மணிகண்டன் அவர்கள் படத்தை சிற்பி சிலை செதுக்குவது போல செதுக்கி வெற்றி பெற்றுள்ளார் .மக்களை முட்டாளாக்கும் பேய்ப்படமும் மசலாப்படமும் எடுக்கும் எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம்.
இந்தப்படத்தில் குத்துப்பாட்டு இல்லை . வெட்டுக் குத்து இல்லை சண்டைக்காட்சி இல்லை ,கவர்ச்சி நடிகை நடனம் இல்லை .நடிகையின் சதையை நம்பாமல் நல்ல கதையை நம்பி படம் எடுத்துள்ளனர் .பாராட்டுக்கள் .நம்பமுடியாத கதாநாயகன் துதி இல்லாத நல்ல படம்
படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து படத்தோடு ஒன்றி விடுகிறோம் .இயக்குனரின் வெற்றி .சென்னையில் சேரியில் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டி உள்ளார் .
கணவன் குற்றம் செய்து விட்டு சிறையில் இருக்கிறான் .மாமியா இரண்டு மகன்களை வளர்க்கும் தாயாக நடிகை ஐஸ்வர்யா சிறப்பாக நடித்து உள்ளார் .அல்ல பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.இரண்டு சிறுவர்களை மையமாக வைத்து கதை நகர்கின்றது.
கணவன் சிறையில் இருப்பதால் மனைவி வேலைக்கு சென்று மகன்கள் இருவரையும் வயதான மாமியாவையும் வளர்த்து வருகிறாள் .கோழி முட்டை சாப்பிட வழி இல்லை .சிறுவர்கள் அம்மா போடும் சோறில் கொஞ்சம் சட்டை பையில் வைத்து எடுத்துச் சென்று காக்காக்கு வைத்து காகா என்று கத்த காக்கா மரத்தில் இருந்து வந்ததும் மரத்தில் ஏறி காக்கா முட்டையைப் பார்க்கிறான். மூன்று உள்ளன .மூன்றையும் எடுக்காமல் தனக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று போதும் .ஒன்று காக்கைக்கு இருக்கட்டும் என்று வைத்து விடுகிறான் எடுத்து வந்து காக்கா முட்டையை இருவரும் குடிக்கின்றனர் .அதில் இருந்து அவர்கள் பெயர் பெரிய காக்கா முட்டை ,சின்ன காக்கா முட்டை என்று ஆகின்றது .காக்கா இருக்கும் மரம் ,சிறுவர்கள் விளையாடும் இடம் . ஒருவர் விலைக்கு வாங்கியதும் . காக்காக்கள் வாழும் மரத்தை அறுக்கும்போது சிறுவர்கள் கலங்கி விடுகின்றனர் . காக்காக்கள் எங்கு வாழும் என்று வருந்துகின்றனர் . நெகிழ்ச்சியான காட்சி.
தம்பிக்கு இரவு தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது .அதை கேலி செய்யும் போது மனம் வருதுகின்றான்.
சிறுவர்கள் தொலைக்காட்சிப் பார்த்து நடிகரின் சிம்புவின் ரசிகர்கள் ஆகிறார்கள் .சிம்பு வந்து திறந்து வைக்கும் பீசா கடையை வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்து . பீசா சாப்பிட வேண்டும் என்று ஆசை பிறக்கின்றது .ஏழைச் சிறுவர்கள் அம்மாவிடம் கேட்டுப் பார்க்கிறார்கள் .
அம்மாவோ சிறையில் உள்ள கணவனை வெளியில் எடுக்க வழக்கறிஞருக்கு பணம் செலவு செய்து துன்பத்தில் வாழ்கிறாள். அம்மா பீசா விலை ரூபாய் 300 என்றவுடன் வாங்கித் தர மறுக்கிறாள் அவர்களாகவே பணம் சேர்த்து பீசா வங்கிச் சாப்பிட முடிவு செய்கின்றனர்.தொடர்வண்டிப் பாதையில் சிந்திக் கிடக்கும் கரிகளை எடுத்து வந்து கடையில் போட்டு பணம் வாங்கி சேர்க்கின்றனர்.
ஆயா பேரன்களின் பீசா ஆசை போக்க தோசை சுட்டு அதை பீசா போலவே அலங்கரித்து தருகிறாள் .பேரன்கள் தின்று விட்டு பீசா போல நூல் வரவில்ல்லை என்கின்றனர் .கெட்டுப் போனால்தான் நூல் வரும் என்கிறாள் .
நல்ல சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு பீசா கடைக்கு செல்வோம் என்று முடிவு செய்து .நல்ல சட்டை வாங்க கடைக்கு சென்று பார்க்கின்றனர் .அதுவும் பெரிய கடை அதிலும் உள்ளே விட மாட்டார்கள் என்று கருதி .சட்டை எடுத்து விட்டு நிற்கும் பணக்கார சிறுவனுக்கு பானி பூரி வாங்கிக் கொடுத்து,பணமும் கொடுத்து சட்டை வாங்கிக் கொண்டு வந்து .போட்டுக் கொண்டு மறுபடியும் பீசா கடைக்கு செல்கின்றனர் .
அப்போதும் காவலாளி உள்ளே விட மறுக்க இந்த சண்டையை வெளிய வந்து பாரத்த பணியாளர் சிறுவனைஓங்கி அடிக்க ,அதை சேரி சிறுவர்கள் திருடிய அலைபேசியில் படம் பிடிக்க .அந்தப்படமே பெரிய பிரச்சனையாக உருவெடுக்க ,ஊடங்களில் ஒளிபரப்பாக, விவாதிக்கப் படுகிறது. பிரச்சனை பெரிதாகின்றது என்பதை உணர்ந்த பீசா கடை முதலாளி காவல் அதிகாரி மூலம் சிறுவர்களை வரவழைத்து ஊடகங்களையும் வரவழைத்து வரவேற்று பீசா தருகிறார் .சிறுவர்கள் பீசாவை தின்றுப் பார்த்து விட்டு ஆயாவின் தோசை நன்றாக இருந்ததே .பீசா நன்றாக இல்லையே என்கின்றனர் .படம் முடிகின்றது .இறுதிக் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நல்ல முடிவு.
சிறுவர்களின் ஆயாவாக வரும் பாட்டி மிக நன்றாக நடித்து உள்ளார் ஆயா இறந்து விட்ட காட்சியின் போது படம் பார்க்கும் அனைவரின் கண்ணும் கலங்கி விடுகிறது .சிறுவர்கள் பீசாவிற்காக சேர்த்து வைத்து இருந்த பணத்தை ஆயாவின் இறுதிச் சடங்கிற்கு தருகின்றனர் .
. இயக்குனர் மணிகண்டன் போகிறபோக்கில் படத்தில் பல செய்திகள் சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .வசனம்ஆனந்த் அண்ணாமலை எழுதி உள்ளார் .நன்று .பாடல்கள் இசை பின்னணி இசை யாவும் நன்று .பாடல்கள் .முத்துகுமார் .ராஜ்குமார் எழுதி உள்ளனர் .பாடல் வரிகள் சிந்திக்க வைக்கின்றன .
கருப்பு என்று யாரையும் ஒதுக்காதீர்கள் . உலகில் பிறந்த யாவரும் சமம் .ஏழை பணக்காரன் பாகுபாடு ஒழிய வேண்டும் .
தொலைக்காட்சி வரும் முன் ஏழைகள் நிம்மதியாக வாழ்ந்தனர் . தொலைக்காட்சி வரும் விளம்பரங்கள் நுகர்வு கலாசாரத்தை பரப்பி ஏழை சிறுவர்களின் மனதில் துன்பம் .
உலகமயம் ஏழைகளை வாட்டி வதைக்கிறது .பணக்காரச் சிறுவர்களைப் பார்த்து ஏழைச் சிறுவர்கள் மனம் ரணமாகிறது . சேரி வாழ்வில் இன்னும் விடியவில்லை .
படம் முடிந்து விட்டுக்கு வந்தபின்னும் படம் பற்றிய நினைவுகள் மனதை வருடுகின்றன .இதுதான் இயக்குனர் மணிகண்டன் வெற்றி . வறுமை வாழ்க்கையைப் பற்றி படம் தயாரித்து தனுஷும் வெற்றிமாறனும் பணக்காரன் ஆகி விட்டனர் .
படம் முடிந்ததும் நான் உள்பட பலரும் எழுந்தி நின்று கரஒலி தந்தோம் .படத்தில் துளி கூட ஆபாசம் இல்லை குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய நல்ல படம் .
முடிவாக நூடுல்ஷ் தடை செய்தது போல பீசாவும் தடை செய்தால் நன்று என்று தோன்றியது .
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: காக்கா முட்டை - விமர்சனம்

Post by ராஜா on Sun Jun 21, 2015 12:11 pm

விமரிசனத்திற்கு நன்றி , படம் பார்க்கவேண்டும்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காக்கா முட்டை - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum