புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
3 Posts - 2%
bala_t
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
1 Post - 1%
prajai
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
280 Posts - 42%
heezulia
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
6 Posts - 1%
prajai
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_m10இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்


   
   
bhimrocky
bhimrocky
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 09/08/2013

Postbhimrocky Tue Jun 30, 2015 5:59 pm

நன்றி  :நல்வரவு:  :வணக்கம்: https://www.facebook.com/bhimrocky  :வணக்கம்: :நல்வரவு: நன்றி  

இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Cropped-jeevakumaran-logo

யாழ்ப்பானம்  சங்கானையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட வி.ஜீவகுமாரன் அவர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

ஆங்கில இலக்கிய கல்வியிலும், தமிழ் புனைகதை இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் 1988ம் ஆண்டு தொடக்கம் டென்மார்க் அரச நூலகத்தில் வெளிநாட்டவர்களுக்கான பிரிவில் தமிழ் பகுதியின் பொறுப்பாளராகவும் ஆலோசகராகவும் கடமை ஆற்றுகின்றார்.  மேலும் கணினித்துறையில் தேர்ச்சி பெற்று டென்மார்க் நகரசபை ஒன்றில் புவியியல் சார்ந்த தொழில் நுட்பப்பிரிவின்(GIS – Geographic Information System) பொறுப்பாளராக விளங்குகின்றார்.

இரட்டைப் பெண் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் 2008ல் தனது 50 வது வயதில் ”யாவும் கற்பனை அல்ல” என்ற சிறுகதை–கவிதை – உரை வீச்சு தொகுப்பின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான அவர் பின்வரும் நூல்களை வெளியிட்டுள்ளார்.

“மக்கள் மக்களால் மக்களால்” என்ற நாவல் இலங்கை தமிழியல் விருது 2010 ஆல் கௌரவிக்கப்பட்டது. “சங்கானைச் சண்டியன்” என்ற 10 சிறுகதைகளும் 2 குறுநாவல்களின் தொகுப்பு சின்னப்பபாரதி விருதினால் 2011ம் ஆண்டு கௌரவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற ”கிராமத்து பெரிய வீட்டுக்காரி, ”அகாலமரணம்”என்ற சிறுகதைகள் இலங்கை தகவம் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் முதலாவது, மூன்றாவது பரிசுகளை 2010ல் பெற்றன.

இவரது மனைவியார் திருமதி. கலாநிதி ஜீவகுமாரனால் டெனிஸ் மொழியில் எழுதப்பட்ட Kærlig hilsen…mor என்ற உரைவீச்சில் அமைந்த நாவல் இவரால் ”இப்படிக்கு அன்புள்ள அம்மா”என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு சிறந்த மொழிபெயர்ப்பிற்காக தமிழியல் விருது 2011 ஆல் கௌரவிக்கப்பட்டது. அவ்வாறே ”மாங்கல்யம் தந்துதானே”, ”நாணயம்” ஆகியன 2012ல் இரு முதல் பரிசில்களைப் பெற்றுள்ளது

மேலும் டென்மார்க்கில் வாழும் இளைய சந்ததியினர் இணையத்தளங்களில் எழுதிய கவிதைத்தொகுப்பை ”மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என 2008ல் தொகுத்து வெளியிட்டார்.

மேலும் 2011ல் இலங்கையில் நடைபெற்ற எழுத்தாளர் விழாவை ஒட்டி புலம்பெயர்வு வாழ்வின் எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், நிதர்சனங்களையும் காட்டும் வகையில் 18 நாடுகளில் வாழும் 50 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ”முகங்கள்”என்ற தொகுப்பாக வெளியிட்டார்.

1998ம் ஆண்டுக்காலகட்டத்தில் டெனிஸ்-ஆங்கிலம்-தமிழ் ஆகிய மொழிகளில் ஒரு வைத்திய கையேடும் அகராதியும் இணைந்த ஒரு தொகுப்பை வெளியிட்டார்.

”நினைவு நல்லது வேண்டும்”என்ற கொள்கையுடன் பல  நூல்களை இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கும் நூலகங்களும் தன்னுடன் பணிபுரியும் எழுத்தாளர்களின் அனுமதியுடன் இலவசமாக வழங்கி வருகின்றார்.

”சமகால இலக்கியம், இலக்கிய பிரச்சனைகள் பற்றி அடிக்கடி சுமார் 6000 மின்னஞ்சல் வாசகர் வட்டத்துடன் தனது தொடர்பை பேணி வருகின்றார்.

தொடர்ந்து பல சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்களில் எழுதிவரும் இவர் ”சொல்லுக்கும் எழுத்துக்கும்” இடைவெளியில்லாது வாழ்தலை தனது குறிக்கோளாக கொண்டுள்ளார்.

1. யாவும் கற்பனை அல்ல (வி.ஜீவகுமாரன்)
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  M000625
டவுன்லோட் லிங்க்: http://www.padippakam.com/document/M_Books/m000625.pdf

2. மக்கள்.. மக்களால்… மக்களுக்காக… (வி.ஜீவகுமாரன்)
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  M000598
டவுன்லோட் லிங்க்: http://www.padippakam.com/document/M_Books/m000598.pdf

3. சங்கானைச் சண்டியன் (வி.ஜீவகுமாரன்)
இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  M000557
டவுன்லோட் லிங்க்: http://www.padippakam.com/document/M_Books/m000557.pdf

இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்  Inteview1-600x281
ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்

எத்தனை வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்?

நான் எனது 28வது வயதில் டென்மார்க் வந்த பொழுது டென்மார்க் அகதிகள் சங்கத்தின் ஆதரவில் குயிலோசை என்ற கையெழுத்துப் பிரதியிலான சிறுசஞ்சிகை ஒன்றை நடத்தினேன். அத்துடன் டென்மார்க்கில் இருந்து வெளிவந்த சஞ்சீவி என்ற இதழிலும் எழுத தொடங்கினேன்.

பின்பு டெனிஸ்கல்வி, தொழில், இரட்டைப் பிள்ளைகள் என சுமார் 20 வருட இடைவெளிக்குப் பின்பாக நான் சஞ்சிகைகளில் எழுதிய அத்தனையையும் இணைத்து எனது 50வயதில் ”யாவும் கற்பனை அல்ல” என்ற தொகுப்பாக வெளியிட்டேன்.

அதே ஆண்டின் பிற்பகுதி என நினைக்கின்றேன் ஞானம் இதழுக்கு ”அனலைதீவு” லேஞ்சு” என்னும் சிறிகதை எழுதினேன். முதன் முதலில் ஒரு சஞ்சிகையில் அச்சு வடிவில் நான் பார்த்த எனது முதல் சிறுகதை அதுதான்.

அதன் பின்பு ”மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” (இளையோர் கவிதைகளின் தொகுப்பு) தொகுப்பு)இ ”மக்கள் மக்களால் மக்களுக்காக(நாவல்), சங்கானைச் சண்டியன் (10 சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும்), ”இப்படிக்கு அன்புள்ள அம்மா” (டெனிசில் எனது மனைவியார் எழுதிய முயநசடபை hடைளநn அழசவின் தமிழ்வடிவம், ”முகங்கள்” (50 சிறுகதைகளின் தொகுப்பு), கடவுச்சீட்டு நாவல், ”ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள்” (ஞானம் சஞ்சிகையில் நான் எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு), ”ஜீவகுமாரன் சிறுகதைகள்” (ஜீவநதியில் நான் எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு), இதனைத் தவிர 90களின் முற்பகுதியில் (டெனிஸ்-ஆங்கில-தமிழ் மருத்துவ கையேடும் அகராதி ஒன்றையும் டென்மார்க்கில் வெளியிட்டேன்.

உங்களை எழுதத் தூண்டிய சம்பவம் எது?

அது இன்னமும் சிறுகதையாக எழுதப்படாத ஒரு சம்பவம் தான்.

எனது 13வயது வயதில் தினம் தினம் எங்கள் ஊரில் பெரிய மீனைகளை வெட்டி கூறுபோட்டு விற்கும் ஒரு வயதான அம்மா… மிகவும் மலிவாக மீனை விலை கேட்டேன் என்பதற்காக, ”தம்பி சட்டி கழுவி வைத்து விட்டா வந்தாய்;” எனத் தொடங்கி பின்பு ”நண்டு மொறுமொறுக்க பெண்டில் புறுபுறுக்க” என ஏளனமாகவும் என்னைத் திட்டிய அதே அம்மா… அன்று மாலை பஸ் நிiலையத்தில் மற்றைய பெண்களுடன் இருந்து அவர் கதைக்கும் பொழுது தான் கடந்த 5 தினங்களாக 3 மிளகும் 3 மிளகு தண்ணீருடன் இருந்து கந்தசட்டி விரதம் அனுஸ்டிப்பதாகவும் அடுத்த நாள் சூரன் போர் முடிய பாரணை சாப்பாடு கோயிலில் போய்ச் சாப்பிட இருப்பதாக கூறிக் கொண்டு இருந்தா. ஏனக்கு நம்பவே முடியவில்லை. அவரின் தொழிலையும் இறைபக்தியையும் கற்பனை பண்ணிப் பார்க்கவில்லை. அவரின் உலகம் எனக்குள் ஒரு பொறியைத் தந்தது. அதுவே என்னை முதல் முதலில் சிறுகதை எழுதத் தூண்டிய சம்பவம்.

சமூகவலைத்தளங்கள் எழுத்தாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும் சவாலாக இருக்கும் என நினைக்கிறீங்களா?

சொல்லுக்கும் செயலுக்கும் எழுத்துக்கும் வாழ்வுக்கும் எந்த இடைவெளியும் இல்லாது வாழும் ஒரு எழுத்தாளன் என்ற முறையிலும் எந்த ’இசும்’களிலும் என்னை நான் இணைத்துக் கொள்ளாமையும் எந்தக் கட்சி அரசியலிலும் என் எழுத்துகள் புகாமையும் மேற்கொண்ட அச்சுறுத்தலுகளுக்கோ… அன்றில் சவால்களுக்கோ என்னை இழுபு;பதும் இல்லை. நானும் அதனுள் போவதுமில்லை.

அரசியல் சூழ்நிலைகளினால் மாற்றம் பெற்று வரும் இந்த உலகத்தில் குறிப்பிட்ட பக்கம் சார்ந்து தங்களைத் தொலைத்த பல எழுத்தாளர்களின் வாழ்வு எனக்கு முன்னுதாரணமும் முன்னெச்செரிக்கையாகவும் இருந்திருக்கிறது.

அதனால் எனது வாழ்வம் எனது எழுத்தும் தனிவழியில் பயணித்துக் கொண்டு இருக்கின்றது.

எழுத்தாளர்கள் பலரும் கற்பனை சம்பவங்களையே கதையாக்கும் காலத்தில் சமூகப் பிரச்சனைகளை யாதார்த்த பூர்வமாக எழுதத் தூண்டியது எது?

ஒரு கதையின் கரு கற்பனை என்பதில் என்றுமே எனக்கு உடன்பாடு இல்லை. கரு உண்மையானதாகவும் அதனை கோர்க்கும் விதத்தில்தான் கற்பனை கலந்திருக்கிறது என நான் நம்புகின்றேன்.

ஆனால் எந்தக் கருவை முன்னுறுத்தி நாம் கதையினை நகர்த்தப் போகின்றோம் என்பது அல்லது சமூகப் பிரச்சனையை பார்க்கப் போகின்றோம் என்பது ஒரு ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தை அவன் எப்படிப் பயன்படுத்துகின்றான் என்பதனைப் பொறுத்த விடயம். அவன் சமூகத்தின் மீது கொண்ட அக்கறை…. அல்லது கோபம்…. அல்லது வேதனை… மேலாக எவ்வாறு கதையில் அதனை சமநிலையில் நகர்த்திச் செல்கின்றான் என்பதில் கதை உண்மைத் தன்மையை அல்லது நீங்கள் குறிப்பிடும் யாதார்த்த பூர்வமான நடையைப் பெறுகின்றது.

எழுத்தாளர்கள் எனும் அடையாளம் கொண்ட உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யாது?

முதலில் அவையடக்கம் காரணமாக இதனைக் குறிப்பிடவில்லை. நான் என்னை எழுத்தாளர் என ஒத்துக் கொள்வதற்கு இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஆவது செல்ல வேண்டும் என நினைக்கிறேன். மற்றும்படி எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் என்னும் பொழுது ”தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா ” என ஓர் உச்சக்கட்ட உதாரணத்தை எனக்கு காட்டிய கவிஞன் பாரதியையும் 70வரையிலான ஜெயக்காந்தனைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

எழுத்து உங்களுக்கு என்ன கொடுத்திருக்கு? எதனைப் பறித்திருக்கு?

என்னை ஒரு மனோதத்துவ வைத்தியர் போலப் பாவித்து பலர் தங்கள் சொந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு என்னிடம் ஆலோசனை பெறும் அளவுக்கு என்னால் உதவ முடியக் கூடிய பக்குவத்தை எனக்கு அளித்திருக்கின்றது.

ஞானம், ஜீவநதி என்ற இரு சஞ்சிகைகளின் பரம்பலுக்கு என்னால் உதவக் கூடிய வாய்ப்பைக் கொடுத்திருக்கு.

மிக எளிய தமிழில் காத்திரமான பிரச்சனைகளை முன்வைக்கக் கூடியவன் என்ற கௌரவத்தை தந்திருக்கு.

பல நல்ல இதயங்களின் நட்பை பெற்றுத் தந்திருக்கு.

நினைவு நல்லதாக இருக்கப் பயணப்படுவதால் எழுத்து எதனையும் என்னிடம் இருந்து பறிக்கவில்லை.

கலை இலக்கிய உலகில் நீங்கள் சாதித்தவையும் எட்டப்படாத இலக்குகள் ஏதும் இருப்பின்…..?

இதுவரை கிடைத்த பரிசுகளை சாதனையாக கருதவில்லை. அது அந்த திகதிக்கான ஒரு அங்கீகாரம். இன்றைய சாகித்திய விருது கூட நாளை அந்தத் திகதிக்கான மற்றெருவருடையதே. எதனையும் நோக்கி பயணப்பட வேண்டும் என்ற அபிலாசைகளும் எனக்கில்லை. ஆனால் ஒரு ஒட்டு மொத்த யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வினை ஒரு நாவலில் முற்று முழுதாக கொண்டு வர வேண்டும் என்ற இலக்கு என்னுள் உண்டு. அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இது சுமார் நான்கு வருடங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

ஒரு படைப்பாளி என்ற ரீதியில் கலை இலக்கிய துறைகளில் இருக்கும் பெண்கள் தொடர்பாக….?

என் சின்ன வயது தோழியும் ”இப்படிக்கு அன்புள்ள அம்மா” என்ற டெனிஸ் நூலின் ஆசிரியரும் என் மனைவியுமான கலாநிதி ஜீவகுமாரன், தற்பொழுது அவுஸ்pரேலியாவில் வசிக்கும் என்னுடன் ஆங்கில இலக்கியம் கற்ற திருமதி. ரேணுகா தனஸ்கந்தா சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளர் கனகலதா என எழுத்தாளர் வரிசை நீண்டு கொண்டே செல்லும். வாசகிகள் வட்டம் என்று பார்த்தால் என் அதிக முகநூல் தோழிகள். சிலர் கொழும்புச் தமிழ் சங்கத்திற்கு வந்திருந்தது மிக்க மன மகிழ்ச்சியைத் தந்தது.

எழுத்து எப்போதாவது உங்களை சலிப்படையவோ எரிச்சலடையவே வைத்திருக்கின்றதா?

நிச்சயமாக இல்லை. எனது ஒரு படைப்பு இன்னோர்; படைப்பு போல் இருக்க கூடாது என்பதில் நான் அதிகம் கவனம் செலுத்துவதால் அதன் அமைப்பு வடிவம் உத்திகள் பற்றி சிந்திப்பதற்கும் ஆராய்வதற்கும் தேடுவதுக்கும் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றேன். அது எனக்கு மிகவும் உற்சாகத்தை தருகின்றது. அவ்வாறில்லாமல் ஒரே வடிவில் புனைகதை இலக்கியம் படைக்கப் பயணப்பட்டிருந்தால் சிலவேளை சலிப்படைந்திருக்கலாம்.

மற்றது எதனையும் எதிர்பாராது நான் புனைவிலக்கியம் படைப்பதால் எந்த வகையிலம் நான் எரிச்சலடைவதில்லை. மேலும் எரிச்சலடைவது என்பது ஒருவரினுள்ளே எதிர்மறையான சக்தியைத் தோற்றவிக்கும் என்பதால்அதனை பெரும்பாலும் தவிர்த்துக் கொள்கின்றேன்.

ஆம் புன்னகை சக்தியைத் தருகிறது – முகச்சுழிப்பு சக்தியை விரயம் செய்கிறது. ஒருவர் புன்னகைக்கும் பொழுது ஏன் புன்னகைத்தார் என நாம் ஆராய்ந்து எங்கள் சக்தியை வீணடிப்பதில்லை. ஆனால் முகம்சுழிக்கும் பொழுது எங்களையே பல கேள்விகள் கேட்டு எங்கள் சக்தியை நாம் வீணடிக்கின்றோம் அல்லவா.

உங்கள் கதைகளுக்கு கிடைத்த கௌரவங்கள் பற்றி…..

யார் என்ற முன்பின் அறிமுகம் இல்லாது இந்தியாவில் நற்றிணைப் பதிப்பகம் நடாத்திய ப. சிங்காரம் போட்டியில் எனக்கு முதல் பரிசையும் 50.000 இந்திய பணத்தையும் பெற்றுக் கொடுத்த ஒரு தாயுமானவினதும் தந்தையானவளின் வாழ்வைக் காட்டிய ’கடவுச் சீட்டு”.

ஞானம் இதழில் தொடர்ந்து எழுதி வந்த சிறுகதைகளில் 8 கதைகளுக்கு கிடைத்த தகவம் விருதுகள்.

”சங்கானைச் சண்டியனுக்கான” சின்னப்பாரதி விருது, ”மக்கள் மக்களால் மக்களுக்காக” நாவலுக்காகவும் மற்றும் ”இப்படிக்கு அன்புள்ள அம்மா” மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை கிடைத்த தமிழியல் விருது.

ஓர் எழுத்தாளன் தன்னை பாதிக்கும் விடயங்களை பேசுபவராக இருக்க வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை. பிரச்சனைகளை புறக்கணிக் விட்டு வெறுமனே சிறுகதை எழுதுவது நியாயம் தானா?

நியாயம் இல்லைத் தான். ஆனால் நீங்கள் சொல்லும் நியாயங்கள் சாரி… கருத்துச் சுதந்திரகள் சரி அந்த அந்த நேரங்களில் சமூக மற்றும் அரசியல் விடயள்களும் தீர்மானிக்கிறது.

அது எவ்வாறு கரு வடிவம் கொண்டாலும் அதில் உள்ள உண்மைத் தன்மைத் தான் அதனை அழகிய குஞ்சுகளாக உருவெடுக்க வைக்கும்.

அவ்வாறில்யாயின் மலட்டு எருதுகளையே கவிஞர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் மீண்டும் செக்கில் பூட்டும் துர்பாக்கிய நிலையே எங்கள் இலக்கிய உலகிற்கு அமையும்.

வீரியமான வித்துகள் விதைக்கப்பட வேண்டும்.

இறுதியாக இன்றைய இளம் எழுத்தாளர்குக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.?

எழுத்து என்பது ஒரு அழகியல் சார்ந்த வடிவம். அதில் பயணம் செய்ய ஆழ்ந்த அறிவும் வாசிப்பும் மிக அவசியம். இதனை புதிய தலைமுறையினர் பழக்கப்படுத்டுதிக் கொள்ள வேண்டும். அவர்களுடன் நானும் தொடர்ந்து கைகோத்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக