புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
4 Posts - 3%
M. Priya
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
1 Post - 1%
bala_t
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
1 Post - 1%
prajai
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
296 Posts - 42%
heezulia
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - அக்டோபர்

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 01, 2015 11:49 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 LPhZPHr6T6lw4XL9bZEQ+0

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:38 pm

அக்டோபர் 20

1973 - சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.

சிட்னி ஒப்பேரா மாளிகை (Sydney Opera House) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 2007, ஜூன் 28 ஆம் நாள் இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கென நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற இதன் வடிவமைப்பு டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான ஜோர்ன் அட்சன் என்பவரால் செய்யப்பட்டது.

சிட்னி ஒப்பேரா மாளிகை 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தனித்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று. இது உலகின் மிகவும் புகழ் பெற்ற நிகழ்த்து கலைகளுக்கான அரங்கங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. 2007 ஆம் ஆண்டில், புதிய ஏழு உலக அதிசயங்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட உலகம் தழுவிய வாக்கெடுப்பில் இறுதிக் கட்டத்துக்குத் தெரிவான இருபது அதிசயங்களில் ஒன்றாகவும் இது விளங்கியது. பிரபல கட்டிடக்கலைஞரான லூயிஸ் கான் இக் கட்டிடம் பற்றிக் கூறியபோது, "இக் கட்டிடத்தில் பட்டுத் தெறிக்கும்வரை தனது ஒளி எவ்வளவு அழகானது என்று சூரியனுக்கே தெரியாது" என்றார்.

சிட்னி ஒப்பேரா மாளிகை, சிட்னி துறைமுகப் பாலத்துக்கு அண்மையில், சிட்னித் துறைமுகத்தில் உள்ள பென்னெலோங் முனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடமும் அதம் சூழலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் அறியப்பட்ட அடையாளச் சின்னம் ஆகும்.

இங்கு உற்பத்தி மற்றும் உள்ளக தயாரிப்புகளில் நான்கு முக்கிய குடியுரிமை நிறுவனங்கள் உட்பட பல நிகழ்த்து கலை நிறுவனங்கள் உள்ளன.

சிட்னி ஒப்பேரா மாளிகை, ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான பார்வையாளர் பகுதிகளில் ஒன்று, இங்கு ஆண்டுதோறும் ஏழு மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர். 28 ஜூன் 2007 முதல், ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய களமாக விளங்கி வருகிறது.

விளக்கம்: சிட்னி ஒப்பேரா மாளிகை, ஒரு நவீன திட்டத்தின் வெளிப்பாட்டுடன் தொடர் காங்க்ரீட் குண்டு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 75.2 மீட்டர் ஆரமுடைய பூகோள வடிவத்திலும் அக்கட்டடத்தின் மேற்கூரை போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:39 pm

அக்டோபர் 21

2003 - குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.

ஏரிஸ் (Eris, கிரேக்கம்: Έρις) சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் (dwarf planet) ஆகும். இது முன்னர் 136199 ஏரிஸ் என அழைக்கப்பட்டது.

இது சூரியனின் சுற்று வட்டத்தில் உள்ள 9வது பெரிய பொருள் ஆகும். 2,500 கிலோ மீட்டர் விட்டமும் புளூட்டோவை விட 27% அதிக திணிவையும் கொண்டது.

ஏரிஸ் முதன் முறையாக 2003 இல் மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆய்வுக்குழு கலிபோர்னியாவின் பலோமார் விண்வெளி ஆய்வு மையத்தில் அவதானித்தது. ஆனாலும் இது 2005 வரையில் இனங்காணப்படவில்லை.

ஏரிஸ் டிஸ்னோமியா என்ற ஒரேயொரு சந்திரனைக் கொண்டுள்ளது. மேலதிகமாக எவ்வித செய்மதிகளையும் இது கொண்டிருக்கவில்லை என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சூரியனிலிருந்து ஏரிசின் தற்போதைய தூரம் 96.7 வானியல் அலகு ஆகும். இது புளூட்டோவினதை விட மூன்று மடங்காகும். சில வால்வெள்ளிகளைத் தவிர்த்து சூரியக் குடும்பத்தில் உள்ள மிகத் தூரவான பொருள் இதுவேயாகும்.

புளூட்டோவை விட ஏரிஸ் பெரிதாக இருந்தமையினால் இது கண்டறியப்பட்டபோது சூரியக் குடும்பத்தின் "பத்தாவது கோள்' என்று அதனைக் கண்டுபிடித்தவர்களாலும் நாசாவினாலும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், 2006 ஆகஸ்ட் 24 இல் செக் குடியரசின் பிராக் நகரில் நடந்த மாநாட்டில், பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏரிஸ், புளூட்டோ, செரெஸ் போன்றவையெல்லம் கோள்கள் எனக் கருதக் கூடிய அளவில் இல்லாத சிறிய கோள்கள்; கோள்களைப் போன்ற சிறுகோள்கள் (dwarf planets), கோள்கள் அல்ல என்று வரையறுத்து, நிராகரித்து விட்டது[3].
கண்டுபிடிப்பு

ஏரிசு மைக் புரோன் (Mike Brown), சட் டுரிஜில்லோ (Chad Trujillo), மற்றும் டேவில் ரபினோவிட்ஸ் (David Rabinowitz) போன்றோரால் [2] 2005 ஆம் ஆண்டு சனவரி ஐந்தாம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கண்டுபிடிப்பு 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே கண்டுபிடிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் திகதி இக்கண்டுபிடிப்பும் மைக்மைக் குறுங்கோளின் கண்டுபிடிப்பும் இரு நாட்களின் பின் அவுமியாக் குறுங்கோளுடைய கண்டுபிடிப்பும் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:40 pm

அக்டோபர் 22

1957 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு.

வியட்நாம் போர் (Vietnam War), அல்லது இரண்டாவது இந்தோ சீனப் போர் 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975 வரை இடம்பெற்ற போரைக் குறிக்கும். சிலவேளைகளில் 1959 முதல் 1975 வரை இடம்பெற்ற நிகழ்வுகளை வியட்நாம் பிரச்சினை (Vietnam Conflict) என்று குறிப்பிடுவர்.

இப்போரானது வியட்நாம் சனநாயகக் குடியரசு (வட வியட்நாம்) க்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) கும் இடையில் இடம்பெற்றது. வட வியட்நாமின் முழு வெற்றியுடன் இப்போர் முடிவடைந்தது.

முடிவில் தென் வியட்நாம் கலைக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் பின்வாங்கின வியட்நாம் ஒன்றுபட்டது.

மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார்.

ஏப்ரல் 30, 1975 இல், தென் வியட்நாமின் தலைநகரம் சாய்கோன் கம்யூனிஸ்டுகளிடம் வீழ்ந்ததில் போர் முடிவுக்கு வந்தது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:42 pm

அக்டோபர் 23

1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் புரட்சியானது (October revolution) 1917ல் நிகழ்த்தப்பட்ட பிப்ரவரி புரட்சியை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்டதாகும். இது விளாடிமிர் லெனின், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோர் தலைமையில் போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது.

போல்ஷெவிக் புரட்சி என்றும் இப்புரட்சி அறியப்படுகிறது. இதன் மூலம் இடைக்கால ரஷ்ய அரசாங்கம் வீழ்ந்து 1918லிருந்து 1920 ரஷ்யா உள்நாட்டு கலகங்களை சந்தித்தது. அதன் பிறகு 1922ல் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

சிலர் இப்புரட்சியினை நவம்பர் புரட்சி என்றும் அழைக்கின்றனர். பிப்ரவரி புரட்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த மிதவாத கம்யுனிஸ்டுகளால் ரஷ்யாவில் பெரும் மாற்றம் நிகழவில்லை.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லெனின் தனது நண்பர்களால் உருவாக்கப்பெற்ற செம்படையினைக் (செஞ்சேனை) கொண்டு ரஷ்யாவினை கைப்பற்றினார்.

நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை வளைத்த இப்படைகளைக் கண்டு இடைக்கால அரசின் வீரர்கள் விலகி நிற்க, வன்முறையில்லாமல் ரஷ்யா கம்யுனிஸ்ட் நாடாக மாறியது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:43 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 SBD6pSJSF1Y6LUW5L7AU+24

1943 - நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.

விடுபட்ட இந்தியாவின் இடைக்கால அரசு சுருங்க விடுதலையான இந்தியா அல்லது ஆசாத் இந்த், 1943ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட தற்காலிக அரசு ஆகும்.

இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியப் படைக்கு எதிரான நாடுகளை குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார்.

ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். பிரித்தானிய அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ்.

சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. 1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார்.

டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

பிரதமர் பதவியையும், பிரதம படைத்தளபதி பொறுப்பையும் போஸ் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப் பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.

அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் வலுப்படுத்தினார். தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது.

பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்து பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.

நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக இரண்டு வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:44 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 JBFmJrwRRiSGSvJaIYw4+25

2001 - விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP), என்பது வீடுகளில் உள்ள மற்றும் அலுவலகங்களில் உள்ள கணினிகளை இயக்கும் இன்றியமையாத இயக்கு தளங்களில் ஒன்று. இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP எனும் ஆங்கில எழுத்துக்களானது துய்ப்பறிவு அல்லது பட்டறிவு என்னும் பொருள் படும் EXperience என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும்.

விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000 உடன் விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும் ஒருங்கிணைத்து முதன் முதலாக வீட்டுப் பயன்பாடுக்கு என விண்டோஸ் எண்டி கருனியில் (கேர்ணலில், kernal) இருந்து உருவாக்கப்பட்ட இயக்குதளமாக உள்ளது. இப்பதிப்பானது அக்டோபர் 25, 2001 வெளிவிடப்பட்டது. ஜனவரி 2006 IDC சேவையின் படி 400 மில்லியன் விண்டோஸ் XP இயக்குதளப் படிகள் கணினிகளை இயக்குகின்றன.

விண்டோஸ் எக்ஸ்பியைப் பின்பற்றியே விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் உருவாக்கப்பட்டது. விஸ்டா பெருந்தொகையாகக் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்காக 8 நவம்பர்2006 இலும் உலகளாவிய பொது வாடிக்கையாளர்களுக்காக 30 ஜனவரி2007 முதல் பதிவிறக்கக் கிடைக்கப் பெற்றன.

30 ஜூன் 2008 முதல் விண்டோஸ் எக்ஸ்பியை நேரடியாகப் பெற்றுக் கொள்ள இயலாது என்றாலும் கணினியை உருவாக்குபவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 31 ஜூலை2009 வரை விண்டோஸ் விஸ்டா அல்ட்டிமேட் மற்றும் பிசினஸ் பதிப்புக்களை பதவியிறக்கம் (Downgrade) செய்வதன் மூலமும் விண்டோஸ் எக்ஸ்பியைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் முக்கியமான பதிப்புக்களாவன வீட்டுப் பாவனைக்கு என உருவாக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசன் ((இது வீட்டுக் கணினிகளுக்கானது. இதில் கணினியை மைக்ரோசாப்ட் விண்டோஸ் டொமைன்களில் இணைக்கும் வசதிகிடையாதெனினும் நாவல் (Novell) நெட்வேர் இணைந்துகொள்ளலாம்.) மற்றையது அலுவலகங்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்ட தொழில்வல்லுநர் பதிப்பு (புரொபெஷனல் எடிசன்). இது வீட்டுப் பதிப்பின் வசதிகளுக்கு மேலதிகமா டொமைன்களில் இணைதல், இரு பணிக்கருக்கள் (Dual புரோசசர்களையும்) கொண்ட கணினிகளையும் இயக்கவல்லமை போன்ற திறங்கள் கொண்டது.

இப்பதிப்பானது விண்டோஸ் பயனர்களுக்கும் தொழில், வணிகப் பயனர்களுக்கென உருவானதாகும். விண்டொஸ் எக்ஸ்பி பல்லூடகப் பதிப்பு (மீடியா செண்டர் எடிசன்) என்பது பல்லூடக வசதிகள் நிரம்பியதாகும் இதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வசதியும் உண்டு. இத்துடன் 64 பிட்டு புரோசசர்களுக்கென்றே (ஏஎம்டி அத்லோன் ™ 64 FX, ஏஎம்டி செம்ப்ரோன்™, ஏஎம்டி ஒப்ரோன்™ மற்றும் இண்டெலினால் உருவாக்கபட்ட 64 பிட்டு புரோசசர்கள்) உருவாக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி புரொபஷனல் x64 பிட் பதிப்புக்களும் அடங்கும்.

விண்டோஸ் எக்ஸ்பி இதன் முன்னர் வெளிவந்த விண்டோஸ் 9x இயக்குதளங்களை விட உறுதியாகவும் வினைத்திறனுடனும் இயங்கும்.[6][7] இது வாடிக்கையாளர்களை இலகுவாகப் பணிபுரியவைக்கும் வண்ணம் பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட, வரைமுக பணிச்சூழலைக் (graphical environment) கொண்டுள்ளது. விண்டோஸ் 9x இயங்குதளங்களில் காணப்பட்ட dll சிக்கல்கள் ஏற்படாவண்னம் இங்கே சிறந்த முறையில் நிர்வாகிக்கப்படுகின்றது.

இந்த இயங்குதளத்திலேயே மைக்ரோசாப்ட் முதன் முதலாக மென்பொருள் கள்ளக் கடத்தல்களை கட்டுப்படுத்தும் விதமாக விண்டோஸ் உயிர்ப்பித்தல் (ஆக்டிவேசன் Activation) வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது.

பாதுகாப்புக் குறைபாடுகள் சில கண்டறியப்பட்டு சேவைப் பொதி 2 இல் சரிசெய்யப்பட்டது. இண்டர்நெட் எக்ஸ்புளோளர் 7 உம் வேறு சில குறைகளைச் சரிசெய்தது. விண்டோஸ் மீடியாப் பிளேயர் (ஊடக இயக்கி) மற்றும் விண்டோஸ் இண்டர்நெட் எக்ஸ்புளோளர் உடனான நெருங்கிய கூட்டு பல விமர்சனங்களைச் சந்தித்தது.

இது வளர்நிலையில் இருவாகிக்கொண்டிருந்த நாட்களில் விசிலர் என்றழைக்கப்படது.

நவம்பர் 2008 இன் இறுதியில் 66.31% வீதத்துடன் உலகின் மிகப்பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவரும் இயக்குதளமாக விண்டோஸ் எக்ஸ்பி விளங்கிவருகின்றது. டிசம்பர் 2006 இல் இந்த இயக்குதளமானது உலகில் பயன்படுத்தப்பட்டுவந்த இயங்குதளங்களில் 85% வீதமானதாக விளங்கியது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:45 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 RBYWJXANQAG80aI3oWlC+26

1776 - அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்ஸ் புறப்பட்டார்.

இந்த அமெரிக்கப் புரட்சிப் போர் அமெரிக்க புரட்சியின் காரணமாக நடைபெற்றது. பிரித்தானியப் பாராளுமன்றமானது தனக்கு குடியேற்ற நாடுகளின் இராணுவப் பாதுகாப்புக்காகச் செலவிடும் நிதியை அந்தக் குடியேற்ற நாடுகளிடமிருந்து வரியாகப் பெற்றுக்கொள்ள உரிமை இருக்கின்றது என வலியுறுத்தியது. ஏனெனில் பிரெஞ்சு மற்றும் இந்தியப் போர்களின் காரணமாக இராணுவப் பாதுகாப்புக்கான நிதி அதிகமாக விலையுயர்ந்திருந்தது.

ஆனால் குடியேற்ற நாடுகள் தாம் ஏற்கனவே உள்ளூர் அரசாங்கத்தின் மூலம் அதிக நிதியை அவர்களுக்காகச் செலவு செய்ததால் அவர்களது கொள்கையை எதிர்த்தனர்.

பிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு. அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார்.

இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் அரசியலறிவைப் பயன்படுத்தி பிரான்சின் உதவியைப் பெற்றார்.[26] அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த பிரான்சும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது; அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் பிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:46 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 NYLOhX4RQN64Jgsp3eEB+27

1275 - ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.

ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து நாட்டின் தலைநகரமாகும். இந்நகரம், IJ bay, ஆம்ஸ்டல் என்ற இரு ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது.

12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய மீனவ ஊராக ஆம்ஸ்டர்டம் உருவாக்கப்பட்டது. இன்று, இதுவே நெதர்லாந்தின் மிகப்பெரிய நகரமாகவும் பண்பாட்டு மற்றும் பொருளாதார மையமாகவும் விளங்குகிறது.

ஆகஸ்ட் 1, 2006 நிலவரப்படி, ஆம்ஸ்டர்டமில் 741,329 மக்கள் வாழ்கிறார்கள். இதுவே, அண்டியுள்ள ஊர்களையும் உள்ளடக்கிய பெரு நகரான ஆம்ஸ்டர்டமையும் கணக்கில் கொண்டால் 15 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

ஆம்ஸ்டர்மின் நகர மையம், ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் மையங்களில் ஒன்றாகும். இந்த நகர மையத்தின் வரலாறு 17ஆம் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது.

ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்தின் தலைநகராக இருந்தபோதிலும் நெதர்லாந்தின் நீதிமன்றம், பாராளுமன்றம், அரசாங்க அமைப்புகள் போன்றவை இங்கு இல்லை.

இவை அனைத்தும் டென் ஹாக் நகரில் இருக்கின்றன. தவிர, ஆம்ஸ்டர்டம், அது அமைந்திருக்கும் வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமும் அன்று. ஹார்லெம் நகரே வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமாகும்.

ஆம்ஸ்டர்டம், அதன் பன்முகத் தன்மை, பொறுத்துப் போகும் தன்மை, தாராளப் போக்கு ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:47 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 X1ZPTWLZQ1rdZIXLxJ6w+28

1955 - பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுனர் பிறந்த தினம் இன்று.

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.

இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார்.

போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார்.

1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 10:48 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 0KZyW8kkRMKsl6Sg245E+29

1950 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.

இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.

தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது.

கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக