புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
127 Posts - 54%
heezulia
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Mon Oct 12, 2015 11:09 pm

First topic message reminder :

தோல்வி கண்டு துவளாதே!!!


"முடியாதது"- மூளையில்
ஏறினால்...
முடிந்ததும்  "முடியாதது"
ஆகி விடும்!!!

நேற்றைய முயற்சி தன்
முன்னேற்றத்தில் கண்ட
வெற்றியே இன்றைய
தோல்வி!!!

முயற்சியின் தளர்ச்சி
தொடங்கிய இடம் -
தோல்வி!!!

முயற்சியின் வளர்ச்சி
முடிந்த இடம் -
வெற்றி!!!

முதல் முயற்சியில்
கிடைத்த வெற்றியில்
முழு ருசி ஏது???

வெற்றியில் கண்ட
பெருமைக்கு ஏது
தோல்வியில் கண்ட
பொறுமை???!!!

எதிர்பார்ப்பது எல்லாம்
நடந்தால் எதார்த்தம்
இறந்து விடும்!!!

எதிர்பார்ப்பு எதார்த்தமாய்
இருந்துவிட்டால் எல்லாம்
வெற்றியாய் அமைந்து விடும்!!!

போராட்டத்தில் பிறந்த நாம்
போராடாமலே இறப்பதோ???

                                 - பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue Oct 13, 2015 11:25 pm

ஒருதலைக் காதல் - 1

காதல் ஒப்புகை கண்களில் சொட்ட
காதலி நெருங்கினாள் மெல்ல ...

கண்கள் தொடர கைகள் படர
கவிதை ஒன்று மலர்ந்தது!!!

இருவருக்கும் இருந்த நெருக்கம்
இடையில் செல்ல இடமின்றி
இடவலமாய் சென்றது காற்று !!!

விட்டு விட்டு துடித்த இதயம்
விடாது துடித்தது...
விட்டு விடாதே என்று...

விடவில்லை நானும்
விடை பெறவில்லை அவளும் ...

சற்று நேரத்தில் ...



இன்னுமா நீ முழிக்கல...
மணி ஆகுது பாரு...
சீக்கிரம் எழுந்திரி...

- ஒருதலைக் காதல்!!!

- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue Oct 13, 2015 11:25 pm

கவித்துளிகள் - 2

கற்பனை விதையில்
முளைத்த கதை - கவிதை !!!

எதிர்பார்ப்பிற்கும்
எதார்த்தத்திற்கும்
இடையே நின்ற
இடைவெளி - ஏமாற்றம் !!!

வரையறை இல்லாத
நிறைவை நோக்கிய
நிகழ்கால பயணம் - வாழ்க்கை !!!

கரை மோதும் கடல் அலைகள்...
காலம் தரும் - இன்பதுன்பங்கள் !!!

கடல் அலையில் துள்ளி ஆடும்
காகித ஓடம் - இளமை !!!

- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue Oct 13, 2015 11:26 pm

கவித்துளிகள் - 3

கைகள் கூடுதல்
கைகூடாத வரை
காதல் இன்பம்
குறைவதில்லை
கனவில்!!! - ஒருதலைக்காதல்!!!

தனிமைக் கடலில்
கற்பனை ஓடம் கொண்டு
கருத்து வலை வீசி
கவிதை மீன் பிடிக்கும்
கலைஞன் - கவிஞன்!!!

கற்பனை வெள்ளத்தை
கருத்துமடை போட்டு
கடந்த நிகழ்வுகள் கொண்டு
கவி விளைக்கும்
வல்லமை - புலமை!!!

எண்ணிய ஆசையை
அடைந்து துய்க்கும் வேளை...
இடைவிடாத எண்ண போராட்டம்
இயல்புநிலை திரும்பும்
சில நொடி இதம் - இன்பம் !!!





எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue Oct 13, 2015 11:27 pm

இனி ஏது இவை எல்லாம் ???


கருவறை கண்ட பின்
கல்லறை காணும் வரை
காணும் அனுபவம்
கணக்கற்றதாயினும்...

குழந்தைப் பருவத்தில்
கூடுதல் சுகமே !!!

நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்

குரங்கு பெடல் மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்

பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்

பெட்டி அடைத்த தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்

கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்,
சில்லுக்கோடு, சூட்டுக்காய், பகடை,
பாண்டி, பேபே,பல்லாங்குழி, பரமபதம், டயர் வண்டிப் போட்டி, நண்டூருது நரியூருது, இன்னும் சொல்ல
மறந்த ஏராளமும்

ஐந்து பைசா பத்து பைசா மிட்டாயும்
ஐந்து ரூபாய் திருவிழா கடை சர்பத்தும்
ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில்
குட்டி போட்ட மயிலிறகும்

பனை மட்டை காத்தாடியும்
பரணி வைத்த மாட்டுத் தொழுவமும்
படச்சுருள் கொண்டு பார்த்த
வேட்டிப் படங்களும்

அம்மியும் திருவையும்
ஆட்டுக்கல் மாவில் சுட்ட தோசையும்

உரலில் குத்திய நெல்லும்
உறியில் கட்டிய தயிறும்
உண்டியல் பணத்தில் வாங்கிய
முதல் இங்க் பேனாவும்

ஊர்புற தொலைக்காட்சியில்
ஒன்றாய் அமர்ந்து ரசித்த
ஒளியும் ஒலியும் ஒணிடா மண்டையும்
ஊஞ்சலாடிய ஆலமர விழுதுகளும்

பசி மறந்து பங்குனி வெயிலில்
ஆடிய ஆட்டமும்
பதனீர் குடிக்க ஓடிய ஓட்டமும்
பக்கத்து வீட்டு சமையல் அன்பும்

பக்கத்து ஊர் வரை சென்று
பிடித்த பட்டாம்பூச்சியும்
பின்ன மரத்தில் ஏறிப் பிடித்த
பொன் வண்டுகளும்
பார்த்து பார்த்து கட்டிய
மணல் வீடுகளும்


கூட்டு வண்டியும் கூட்டாஞ்சோறும்
குரும்பைத் தேரும் கொல்லைப்புற
குப்பைக் குழியும்

கூடை வைத்த குண்டு பல்பும்
கூடை வைத்து குருவி பிடித்ததும்
கூராய் சீவ முயன்ற
பென்சில் காயங்களும்

பூவரச இலையில் செய்த பீப்பியும்
பூதக் கண்ணாடி ஒளியில் எரிந்த சருகும்
பூம்பூம் மாட்டின்
தலையாட்டல் ஒலிகளும்

கல்லு சிலேட்டும் கோவை இலை
அழிப்பானும்
கெண்டியில் சுவைத்த தேனீரும்
கரகாட்டம் மயிலாட்டம்
ஒயிலாட்டம் காண ஓடி வரும்
திருவிழா கூட்டமும்

மரப்பலகையும் மட்பாண்ட சமையலும் மரப்பாச்சி
பொம்மைகளும்
மழைக்கால கப்பலும்
மண்பூசிய வீடுகளும்
மார்கழி மாத தாதர் தாத்தாவும்

விடிய விடிய விழித்து செய்த
தீபாவளி பலகாரமும்
வீடு வீடாய் பகிர்ந்த பரிமாற்றமும்
விறகு அடுப்பு சமையலில்
கண்ட சுவையும்


அனைவரின் அரவணைப்பில்
கிட்டிய அன்பும்
அரைஞாண் கயிற்றில்
கட்டிய கண்டிப்பும்

ஆல் இந்தியா ரேடியோவும்
ஆகாச வானியும்
ஆடிப்பெருக்கில் ஆற்றில்
தேடிய பேரிக்காயும்

வைக்கோல்போர் அருகே
தட்டிய வரட்டியும்
வயல்வெளி பனைமர
தூக்கனாங்குருவிக் கூடும்

ரிப்பன் கட்டிய
ரெட்டை சடையும்
தாத்தா காட்டிய
ரெட்டைவால் குருவியும்

நித்தம் விரும்பிய நிலாச் சோறும்
ரத்தம் அரும்பிய தை மாத பல் ஈறும்

திண்ணையில் சுற்றிய
தேக்கு மர தூண்களும்
தென்னையில் கிடைத்த
புயல்கால குருத்துகளும்

சிமிலி விளக்கும் சுரைக்குடுக்கும்
சில தடவை கேட்ட
ஒப்பாரியும் தாலாட்டும்

நெல் முளை விட்டதும் நெல் கீறி
பல் முளை விட்டதும்
கொல்லையில் அவித்த நெல்லும்

துண்டு போட்டு உடும்பு பிடித்ததும்
தூண்டில் போட்டு பாம்பு மாட்டியதும்

நலம் நாடிய கடிதங்களும்
மனம் வாடிய தந்திகளும்
வாழ்த்து கூறிய பொங்கல்
வாழ்த்து அட்டைகளும்

குதிரிலும் பத்தாயத்திலும்
நிறைந்த நெல்லை அண்டி
வந்த அந்துப் பூச்சிகளும்
மரத்தில் விண்மீன்களைக் காட்டிய
மின்மினிப் பூச்சிகளும்

கொடுக்கா புளியும்
தண்ணீர் கொடுத்தான் பழமும்
குளத்தில் போட்ட
கண் சிவந்த குளியலும்

வாழைச் சருகில் சாப்பிட்ட இட்லியும்
வடகம் காய வைத்த
முற்றம் வைத்த ஓட்டு வீடும்

இரவு நேர தாத்தா பாட்டி கதைகளும்!!!

இதில் சொல்லி விட்ட நிகழ்வுகளும்
சொல்ல விட்ட நிகழ்வுகளும்
ம(றை)றந்து விட்ட மகிழ்ச்சிகளே !!!

இந்த தலைமுறையோடு
முடிந்தது எல்லாம்.!!!

இனி ஏது இவை எல்லாம் ???

- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue Oct 13, 2015 11:28 pm

கவித்துளிகள்-1

பிரம்மன் படைப்பில் பிறழாத
கவிதை - காதல்!!!

தேகக் கவர்ச்சியில் திரண்ட
உணர்ச்சி - காமம்!!!

எண்ணிரு ராகங்களில் எங்குமில்லா
இசை- மழலை மொழி!!!

நிகழ்வினை- வினையாலணையும் பெயராய் நனவு தொலைத்த
நினைவு-கனவு!!!

எண்ணம் தேய்ந்து எல்லாம் ஓய்ந்து
உலகம் மறந்த இடைவேளை- உறக்கம்!!!



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue Oct 13, 2015 11:30 pm

அழகான நாட்கள் !!!

காலம் கூட
கவிதை எழுதுகிறது !!! -
உன்னை என்னில் கண்ட
முதல் நொடி !!!

உன்னைக் கண்ட
முதல் கணம்;
மீண்டும் தர
மறுக்கும் காலம்;
மீட்கும் முயற்சியில்
நான்...

விரும்பியே தொலைகிறேன்
உன்னில்...
விரைவில் மீட்டுவிடு உன்
மனதில் !!!

வேண்டுமென்றே
விழுந்தேன்
நீ வேண்டுமென்றே!!!

இதயத்தில் வழியவிடு காதலை...
இதழ்கள் வியர்த்தோடும் வரை!!!...

இதயம் பேச இணையும் போது
இதழ்கள் வழி மூடி விடுவதால்
வழி விடுகின்றன விழிகள்!!!

"நொடி"க்கு நொடியில்
அர்த்தம் அமைத்தன...
நொடிக்கு நொடி
இமைக்கும் உன்
இமைகள்!!!

நொடி முள்ளும்
மனம் உடைந்தது...
கடிகாரத்தில்
தைக்காமலே!!!

- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 11:31 pm

வாவ் ! நிறைய போட்டுவிட்டீங்க, மெதுவாய் படித்து பின்னூட்டம் போடுகிறேன் வெங்கடேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Oct 14, 2015 12:06 am

இல்லை அம்மா.எல்லாம் ஏற்கனவே பதிவேற்றியவைதான்.ஓரிடத்தில் குவித்திருக்கிறேன்.அவ்வளவுதான் ..அழகான நாட்கள் மட்டுமே புதிது .



எண்ணம் போல் வாழ்வு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 14, 2015 12:41 am

B.VENKATESAN wrote:இல்லை அம்மா.எல்லாம் ஏற்கனவே பதிவேற்றியவைதான்.ஓரிடத்தில் குவித்திருக்கிறேன்.அவ்வளவுதான் ..அழகான நாட்கள் மட்டுமே புதிது .
மேற்கோள் செய்த பதிவு: 1168792

ஒ...சரி சரி......ஓரிடத்தில் இருப்பது ரொம்ப நல்லது...பின்பொருநாள் நமக்கே உதவும்...............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Mon Oct 19, 2015 1:06 am

எத்தனை அழகு !!!
எல்லாமே அழகு !!!

மனதை மயக்கும்
மழையின் ஓசை அழகு !
மழை நீரில் அரும்பும்
கணநேர நீர்க்குமிழி அழகு !
மஞ்சள் நீராடும்
அந்தி வானம்
மற்றுமோர் அழகு !!!

விழிகள் பேசும்
வினோதம் அழகு !
விழிதேடும் விடை அழகு !
விரல் கோதும் விதம் அழகு !!!

பகலவனைக் கண்டு
பதுங்கும் பனித்துளி அழகு !
பழம் கொறிக்கும் அணிலின்
சுறுசுறுப்பு அழகு !
புதுப்புத்தகப் பக்கங்களில்
நுகரும் புது வாசம்
இன்னுமொரு அழகு !!!

தலையணையில் கிட்டாத
தாய்மடி இதம் அழகு !
தீண்டுவது தெரியாமல்
தீண்டும் தென்றல் அழகு !
தீபாவளி வெடி முழக்கம் கூட
திகட்டாத ஓர் அழகு !!!

அன்னை பாடும்
தாலாட்டு அழகு !
ஆசிரியர் இடும்
அரைக்குட்டு அழகு !
அதிகாலை ஆழியில்
குளித்தெழும் ஆதவன்
அழகோ அழகு !!!

உழைத்து களைத்த பின்
உறக்கம் அழகு !
ஊஞ்சல் ஆடுகையில் வரும்
ஓயாத ஒலி அழகு !
விரும்பி வாங்கிய
குழந்தை உதை கூட
வினோத அழகு !!!

காலை நேர
பறவை ஒலிகள் அழகு !
கானகத்தே கவிபாடும்
குயிலோசை அழகு !
காதோரம் கடக்கும் போது
கொசு தரும் இம்சை கூட
ஓர் அழகு !!!

மலை நடுவில் ஒளியும்
மாலை நேர சூரியன் அழகு !
முட்டினாலும் வலிக்காத
நத்தையின் கொம்புகள் அழகு !
முற்றிய நெற்கதிர்கள்
முகம் சாய்க்கும் பணிவும்
முற்றிலும் அழகு !!!

காதலி தரும் முதல்
முத்தம் அழகு !
களைந்த ஆடையில்
மொத்தமும் அழகு !
காணுதற்கினிய கனவு
கலையும் வரை அழகு !!!

துணை தேடும் மழைக்கால
தவளை ஒலிகள் அழகு !
தூறலில் நின்று ஆடும்
துளிர்விட்ட இலைகள் அழகு !
தூவானம் வரையும்
கருவியற்ற அரைவட்டம்
அத்தனை அழகு !!!

வெண்மை குழைத்து
தண்மை பூசும்
வெண்ணிற இரவு அழகு !
வெற்றிடம் நுழையாத
ஒலியின் வெட்கம் அழகு !
வெட்டவெளி வாரி இறைத்த
விண்மீன்கள் விண்ணின் அழகு !!!

பிரிவின் பின் கூடுதலில்
பின்னிப் பிணைதல்
காதலுக்கு அழகு !
பின்னழகு போர்த்தும்
பின்னாத கூந்தல்
கன்னிக்கு அழகு !
பின்விளைவு அறியா வேகம்
இளமைக்கு என்றும் அழகு !!!

சக்கரத்தில் சரியாத
சரியான மண்பானை
குயவனின் கலையழகு !
சேம இலை உதிர்த்த
பாதரச நீர்த்துளிகள் அழகு !
செதுக்கிய சிலையில்
கல்லின் பொறுமை கூட
சிந்தனைக்கு ஓர் அழகு !!!

நீலம் குழைத்த வானில்
நீந்திச் செல்லும் மேகம் அழகு !
நீரோடை நடுவே
நின்றாடும் கொக்கின்
நீண்ட தவம் அழகு !
நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டு(ம்)
நிகழும் நினைவுகள் என்றும்
நீங்காத அழகு !!!

தோல்வியில் நனைந்த
வெற்றி அழகு !
தோல்வியை நினையாத
நெற்றி அழகு !
தோல்வியில் துவளாத மனம்
தோல்விக்கே அழகு !!!

கடையாத தயிரின்
உடையாத நிலை அழகு !
கடையாணி மை போடும்
கச்சிதமான வட்டங்கள்
கூட்டு வண்டிக்கு
கூடுதல் அழகு !

காலத்தை வென்று நிற்கும்
கன்னித் தமிழ் என்
கவிதைக்கே அழகு !!!

- பா.வெ.





எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக