புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_m10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 53%
heezulia
இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_m10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_m10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10 
52 Posts - 60%
heezulia
இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_m10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_m10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_m10இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைஞானியை பற்றி சில தகவல்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 5:48 am

First topic message reminder :

தேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார். தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல்! ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு. மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு. ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, "இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்" என்று எழுதினார். இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, "இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்" என்றார். சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: "I Know...Mr. Vaiko". எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்). இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள். பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'பேட்டா' (தக் தக் கர்னே லகா..., கோயல் சி தேரி போலி...), 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது! இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்!," என்றார் அமைதியாக. இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து. ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். "ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.

நன்றி இலக்கிய ன் -போர்ம் என்டிசி

நன்றி விக்கிபீடியா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 7:44 am

இசைஞானியின் திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்

    * இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
    * "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
    * "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
    * "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
    * 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
    * "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
    * "இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
    * ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
    * "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
    * மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.


நன்றி விக்கிப்பிடியா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 12:43 pm

இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 3838410834 இசைஞானியை பற்றி சில தகவல்கள் - Page 2 3838410834 எத்தனை முறை படித்தாலும் திகட்டாத செய்திகள் .. இளையராஜா வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அவதாரம். இந்த பூமி உள்ளவரை இவரின் புகழ் நிலைத்திருக்கும்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 12:54 pm

இப்பவும் பூந்தமல்லி சாலையில் இருக்கும் பிரீஸ் ஓட்டலை கடந்தால் அந்த ஞாபகம் வருமாம் இசைஞானி இளையராஜாவுக்கு. இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இவர் இருந்த நேரம் அது. தேன் சிந்துதே வானம் என்ற படத்தின் இசையமைப்பாளர் வெங்கடேஷ்தான். அப்படத்தில் இளையராஜாவையும் ஒரு பாடலுக்கு ட்யூன் போட சொல்லியிருந்தார். தேன் சிந்துதே வானம்... என்று நாம் இப்போது கேட்டு வியக்கும் அந்த அற்புதமான ட்யூனையும் போட்டிருந்தார் ராஜா. அப்பாடலின் விசேஷம் என்னவென்றால் பல்லவி முடியாமல் நீண்டு கொண்டே போகும். இதற்காக பாடல் எழுத முதலில் வாலியை வரவழைத்தாராம் வெங்கடேஷ். அவரும் ஏதேதோ எழுதினார். ஆனால் வெங்கடேஷ§க்கும் சரி, இளையராஜாவுக்கும் சரி. திருப்தியில்லை. இதில் ஒரு நாள் கழிந்தது. மறுநாள் இதே ட்யூனுக்கு பாடல் எழுத வந்தார் புலமைப்பித்தன். அவரும் என்னென்னவோ எழுதி பார்த்தார். இருவருக்குமே திருப்தியில்லை. கடைசியாக கண்ணதாசனை வரவழைத்திருந்தார்கள். ட்யூன் போட்டு சில தினங்கள் ஆன பிறகும் அதற்கு வரிகள் கிடைக்கவில்லையே என்ற கவலை ராஜாவுக்கு. தயாரிப்பாளரும் சீக்கிரம் பாடலை கொடுங்க என்று நச்சரிக்க, இன்னையோட இந்த பிரச்சனையை முடிச்சிரணும் என்று முடிவு கட்டியிருந்தார்கள் இருவரும். ஆனால் பாடல் எழுத வந்த கண்ணதாசன் அதை தவிர மற்ற வேலைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஏராளமான கடன் தொல்லை வேறு. அவர் இங்கிருப்பதை தெரிந்து கொண்ட கடன்காரர்கள் போனிலும் நேரிலும் தொந்தரவு செய்து கொண்டேயிருக்க, எல்லாவற்றுக்கும் சிரித்தபடி பதில் சொல்லியே நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தாராம் கவியரசர். மதியம் சாப்பாடு. முடிந்ததும் து£க்கம் என்று பிற்பகலும் வெறுப்புடனேயே நீண்டது. அண்ணே, பாட்டு எழுதிடலாம்ணே என்று நைசாக வந்த வேலையை ஞாபகப்படுத்தினாராம் இளையராஜா. பாட்டுதானே எழுதிடலாம்னு கண்ணதாசன் உட்கார்ந்தது பிற்பகல் ஐந்து மணி சுமாருக்கு. அப்போதுதான் பாடலுக்கான சுச்சுவேஷனையே கேட்டாராம் கவியரசர். உடனே இராம.கண்ணப்பனை எழுத சொல்லிவிட்டு வரிகளை கோர்க்க ஆரம்பித்தார். 'தேன் சிந்துதே வானம். உனை எனை தாலாட்டுதே... மேகங்களே...' ஓரிடத்தில் கூட தடங்கல் இல்லை. யோசிப்பதற்காக நெற்றியை சொரியவில்லை. கொட்டிக் கொண்டேயிருந்தன வரிகள். மொத்தம் 12 நிமிடங்களில் வெங்கடேஷ§ம் இளையராஜாவும் மனசுக்குள் யோசித்திருந்த அந்த பாடலை எழுதி கொடுத்துவிட்டார். ராஜாவை பொறுத்தவரை சென்னையில் அவரால் மறக்க முடியாதது அந்த பிரீஸ் ஓட்டலும்தான்.

 

அவரால் சென்ட்மென்ட்டாக நம்பப்படும் இன்னொரு ஓட்டல் பிஷர்மேன் கோவ். கோவளம் பீச் அருகே இருக்கிறது இந்த நட்சத்திர ஓட்டல். காரணத்தை நம்மால் அறிய முடியவில்லை. எப்போதாவது இந்த ஓட்டலுக்கு வருவார். அவருக்கு பிடித்த 5 ம் எண் அறையை ஒதுக்குவார்கள். ஒரு நாள் மட்டும் தனிமையில் தங்கியிருந்துவிட்டு கிளம்புவார்.

அவர் மாதத்திற்கு ஒருமுறையாவது வந்து போகிற இடம் பார்சன் காம்ப்ளக்சிற்கு அருகில் உள்ள வீடு ஒன்று. கமலாம்மாள் என்ற பெண்மணி வசிக்கிறார் இங்கே. இளையராஜாவை அழைத்துக் கொண்டு போய் தன்ராஜ் மாஸ்டரிடம் அறிமுகப்படுத்தி வைத்து இவருக்கு இசை சொல்லி தாருங்கள் என்று இசை பயணத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தவரே இந்த கமலாம்மாள்தான்!

மைலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ் இளையராஜாவால் மறக்கவே முடியாத இடம். இந்த ஓட்டலின் மாடியில்தான் இவரது இசை குரு தன்ராஜ் மாஸ்டர் தங்கியிருந்தார். ஆழ்வார் பேட்டையில் பாரதிராஜாவுடன் அறை எடுத்து தங்கியிருந்த இளையராஜா அங்கிருந்து தினமும் இங்குதான் வருவார். இப்போது ஓட்டல் இருக்கிறது. ஆனால் தன்ராஜ் மாஸ்டரும், அந்த அறையும்தான் இல்லை.

சென்னைக்கு வந்து பிழைப்புக்கு வழி இல்லாமல் போனால் என்ன செய்வது? மெரீனா பீச்சில் பாடியாவது சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது இளையராஜாவுக்கும், அவரது சகோதரர்களுக்கும். பெரிய இசையமைப்பாளர் ஆனபின் தனது தம்பிகளுடன் இந்த பீச்சில் அமர்ந்து பாடுவது போல ஒரு போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டார். குமுதம் அட்டை படத்தில் வந்த அந்த புகைப்படம் ராஜாவின் ஆல்பத்தில் இப்போதும் முக்கிய இடத்தில் இருக்கிறது.

நன்றி தமிழ் சினிமா.காம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 1:03 pm

ஆதியில் காற்று மட்டுமே இருந்ததாக வேதம் சொல்கிறது... அந்த காற்று இசையாக இருந்தது.. அந்த இசை இளையராஜாவாக இருக்கிறது!!'

ராஜா ராஜா தான்.

நன்றி விக்கிபீடியா..
நன்றி தமிழ் சினிமா.காம்.
நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 5:45 pm

ayyasamy ram wrote:
-அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது.
'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!'
என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.
-
[You must be registered and logged in to see this link.]
இளையராஜா அவர்கள் காலத்திற்கு பின் இசை- பாடல்கள் என்று குறிப்பிடும் அளவுக்கு
மிகப்பெரிய சாதனையாளர்,நன்றி ஐயா.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Dec 28, 2015 8:14 am

அனைவரது தகவலும் அருமை .....



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக