புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
56 Posts - 50%
heezulia
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து குயில்கள்- செந்தில் கார்த்திக்-

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 1:55 pm

First topic message reminder :

கிராமத்து குயில்கள்  செந்தில் --கார்த்திக் -

களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)      கார்த்திக்[/color]
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.

கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே
கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே
ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே
ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ...

கன்டாங்கி சேலை கூட கந்தையாகி போகும் புள்ள.
கண்மணியே உன் மேல வச்ச ஆசை புதுசுதான்டி.
என் உசுரு இருக்கு முட்டும் மயிலே நான் மறப்பேனா.
உலகமே எதிர்திட்டாலும் நீதானே என் உசுரு.

ஒன் மனசு நெனப்பு மட்டும் ஒசத்தியா மச்சானே –நான்
உள்ளத்துல ஆசையெல்லாம் கல்லாக்கி வெச்சேனே
நமக்கு வருமானம் இல்லாம வண்டி ஓடாதே
நாளும் காசு செக்க நீ போனா கழுத்த நீட்டுறனே

காசு பணம் வேனும் முன்னு பட்டனம் தான் போகனுமா ?
கழனி காடு இங்கு இருக்கு பாடு பட்டா போதுமடி.
காரவீடு ஒன்னு இருக்கு காராம் பசு மூணு இருக்கு.
காட குஞ்சு பொரிச்சிருக்கு கம்மல் கூட வாங்கி இருக்கு.
கண்மணியே உன நானும் கண்ணீர் சிந்த விடமாட்டேன்.

பட்டணம் போகாட்டி பட்ட தெனம் ஏத்திக்குவ (பட்ட - பட்ட சாராயம் )
காடு கழனி வச்சு கந்து ரொம்ப வாங்கிக்குவ
கார வீடு எல்லாமே கடனுக்கு போயிரும்மே
காசு பணம் சேக்க நீ கடல் தாண்டி போனாலும் –நான்
கண்ணாளா எப்போதும் கண்முழிச்சு காத்திருப்பேன்

கடல் தாண்டி போனவங்க கஸ்டத்த கேட்டேன்டி.
கடல் தாண்டி போயித்தான் காசு பணம் பாக்கனுமா.
கழனியில் பாடுபட்டா காசு பணம் சேத்திடலாம்.

காலையில எழுந்திடுவேன் காளை ரெண்டு பூட்டிகிவேன்.
காட்டை நல்லா உழுதுடுவேன் கரை வச்சி பூசிடுவேன்.
கஞ்சியத்தான் குடிச்சிபுட்டு கஸ்டப்பட்டு உழைச்சிடுவேன்.
கண்மணியே உனை நானும் ராணி போல பாத்துகுவேன்.

ஒன் பேச்சு இத்தனநாள் ஒதவாம போச்சுதைய்யா
நான் நெனச்ச கனவெல்லாம் கானல்நீரா ஆச்சுதைய்யா
காடு கழனியெல்லாம் கருவேலம் மொலச்சுதைய்யா

காலைல  ஒனக்கு கள்ளுக்கட கெடச்சுதைய்யா
கஷ்டம் தெரியாத ஒன்கிட்ட வாக்கபட்டா
காது கம்மலோட வருங்காலத்தயும் தொலச்சிருவேன்

ஊரெல்லாம் மழைபெஞ்சி வெள்ளகாடா போனதடி.
நாடெல்லாம் மழைபெஞ்சி நாசமா போனதடி .
நம்ம ஊரு கரட்டு பக்கம் ஒரு துளி பெயிலடி .

ஈசானி மூலையதான் தினம் தினம் பாத்து நின்னேன் .
வடக்கால மூலையில வெண் மேகம் கருத்திருக்கு .
காஞ்சிபோன என் மனசும் வெள்ள பூவா மலர்ந்திருக்கு .

தெருவோரம் கிழக்கால காலி மனை ஒன்னுஇருக்கு .
கடகன்னி வச்சிடலாமுனு எண்ணம் ஒன்னு வந்திருக்கு .
கடல் தாண்டி போகவேண்டாம் இங்கேயே பொழசிடலாம்.
காடு கழனி பாத்துக்கலாம் சொந்த தொழில் செய்திடலாம் .
கண்மணியே உன்னை நானும் பிறிந்திட மாட்டேனே ..

அழவாத்தான் பேசுறியே அறிவு கெட்ட மச்சானே
ஆலக்கெனறு தோண்ட காசு கொஞ்சம் வேணுமே
கடன்கோடுத்தே காலியாவும் கடகன்னி வெச்சாவே –பின்ன
கஞ்சி குடிக்கத்தான் அஞ்சூடு போவணுமே

பவுண கொஞ்சம் கலட்டி தாரேன்
டவுனுக்கு நீ போகவேணும் –நல்லா
காசு பணம் சேத்து வந்து –என்ன
கண்ணாலம் பண்ண வேணும்

இருக்கிற காலம் மட்டும்
இன்பமா வாழ்ந்துக்கணும் -இனியாச்சும்
இல்லேங்கற வார்த்தைய
சொல்லாம இருந்துக்கனும் ......

போயிவா... மச்சானே ..போயிவா.... மச்சானே
பொழப்புக்கு புறப்பட்டு போயிவா.... மச்சானே

தொடரும் கருவாச்சியின் காதல்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 12, 2016 1:58 am

மனசொடஞ்சி போவாதே என் மானமுள்ள ரஞ்சிதமே
மனச விட்டு போரேனே  என் பாசமுள்ள அஞ்சுகமே.

ஆடு மாடு மேய்கயில மந்தையில நானிருப்பேன்.
வார செலவு செய்யயில சந்தையில நானிருப்பேன்.
காடு கழனி உழுகையில கருமேகமாக காத்திருப்பேன்.
கஞ்சி பானை கழுவையில கரி போல காஞ்சிருப்பேன்.
கண்ண மூடி தூங்கயில கனவாக கலந்திருப்பேன்.

ஊர் குருவி கூட கூவ மறந்து போகும் கண்ணே.
உன் பெயர் கூற என்மனசு என் மனசு துடிக்குதடி பெண்ணே.
வீரனாக பெயர் எடுத்து வந்திடுவேன் கண்ணே.
வீண் பேச்சு பேசமாட்டேன் புரிஞ்சிதடி பெண்ணே.

கண்மூடி தூங்கயில இரவெல்லாம் உன் நினப்பு.
காலத்தின் கோலமடி நான் பிரியும் நேரமடி.

உன்னை ஒத்தையில விட்டுபுட்டு தவிக்கிதடி என் மனசு.
ஊர் முழுக்க பேசுமுன்னு கலங்குதடி என் உசுரு.

வீரனாக நான் வருவேன் பாசத்தோடு காத்திரு.
தாலியத்தான் தந்திடுவேன் தங்கமே நீ காத்திரு.
நம் காதல் உண்மையடி மயிலே நீ பூத்திரு.
நான் ஊர் திரும்பும் காலம் வரை குயிலே நீ காத்திரு.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 12, 2016 4:03 am

Aathira wrote:இந்தக் கிராமத்துக் குயில்களின் குரல் இனிமை. படிக்கும் இதயங்களில் இனியவை நானூறு. வாழ்த்துகள் இருவருக்கும். தொடருங்கள்... நாங்களும் படிக்கத் தொடருகிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1187104

 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 1571444738  கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 1571444738  கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 3 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 7:54 am

மனசொடஞ்சி போவாதே என் மானமுள்ள ரஞ்சிதமே
மனச விட்டு போரேனே  என் பாசமுள்ள அஞ்சுகமே.

ஆடு மாடு மேய்கயில மந்தையில நானிருப்பேன்.
வார செலவு செய்யயில சந்தையில நானிருப்பேன்.
காடு கழனி உழுகையில கருமேகமாக கருத்திப்பேன்.
கஞ்சி பானை கழுவையில கரி போல காஞ்சிருப்பேன்.
கண்ண மூடி தூங்கயில கனவாக கலந்திருப்பேன்.

ஊர் குருவி கூட கூவ மறந்து போகும் கண்ணே.
உன் பெயர் கூற என்மனசு மனசு துடிக்குதடி பெண்ணே.
வீரனாக பெயர் எடுத்து வந்திடுவேன் கண்ணே.
வீன் பேச்சு பேசமாட்டேன் புரிஞ்சிதடி பெண்ணே.

கண்மூடி தூங்கயில இரவெல்லாம் உன் நினப்பு.
காலத்தின் கோலமடி நான் பிரியும் நேரமடி.

உன்னை ஒத்தையில விட்டுபுட்டு தவிக்கிதடி என் மனசு.
ஊர் முழுக்க பேசுமுன்னு கலங்குதடி என் உசுரு.

வீரனாக நான் வருவேன் பாசத்தோடு காத்திரு.
தாலியத்தான் தந்திடுவேன் தங்கமே நீ காத்திரு.
நம் காதல் உண்மையடி மயிலே நீ பூத்திரு.
நான் ஊர் திரும்பும் காலம் வரை குயிலே நீ காத்திரு.

போனாலும் போன மக்கா ரோசம் பொத்துக்கிட்டு போனாரே
ஆனாலும் அந்த மக்கா பாசம் ஒத்துக்கிட்டு நிக்கலையே.
இதுவரைக்கும்
என் மொவத்த பாக்காம ஒரு நாள உட்டதில்ல
என் பேச்ச கேக்காம ஒரு வார்த்த தட்டவில்ல

எப்படித்தான் இருக்காரோ இந்த
சிறுக்கி மவள மறந்தபுட்டு
இத்தனநாளு இருக்காரே –இந்த
கிறுக்கி சொல்ல மிதிச்சுகிட்டு

ஆகாரம் நேரத்துக்கு அங்கத்தான் கெடைகாதே
அதுக்காக அந்தமனிசன் அரநிமிசம் பொறுக்காதே
ஆறு மாசம் நெஞ்சு முள்ளகொண்டு குத்துதே
அவரோட நெனப்பு கள்ளகொண்டு அடிக்குதே

அன்பு மச்சானு கடுதாசி வருமுன்னு –நான்
உறக்கம் மறந்துபுட்டு ஒரு வழியா காத்திருந்தேன்
அழவு மச்சான ஒருதாட்டி பாக்கனுன்னு –நான்
உண்ண மறந்துபுட்டு உருதேஞ்சு போயிருந்தேன்

தெரியுமா மச்சானே தெரியுமா மச்சானே –நான்
தேம்பி தேம்பி அழுவதுந்தான் தெரியுமா மச்சானே ..
ஆறுமாசமா நான் அழகொளிஞ்சு போயிருந்து –ஒன்
அழவு மொகத்த கான கொடல்சுருங்கி காத்திருந்தேன்

கண்ணால கவலையில கலை  எழந்தா மவராசி
ஆத்தாவும் அய்யாவும் அந்நாடும் அதபேசி –பின்ன
மாமங்காரன் வந்து என்ன மருவூட்டு மொறபேசி –பருசம்
மால போட்டு போயிட்டான்ய்யா மிடுக்காக கைவீசி

கண்கலங்கி நிக்கிறேன் கதிகலங்கி நிக்கிறேன் –என்
கண்ணான மச்சானே கொஞ்சம் காதுகொடுத்து கேட்டிடுங்க
கடுதாசி பாத்துபுட்டு ஒருதாட்டி வந்துடுங்க
கண்ணாலம் பண்ணி எனக்கு கருகமணி போட்டுடுங்க..

மானமுள்ள மச்சானே மானமுள்ள மச்சானே
மருவாத கொடுதிதுக்கு மறுபதில போடுமைய்யா –நான்
மருவூடு வாரதுக்கும் இல்ல சுடுகாடு போறதுக்கும்
மறக்காம நீ எனக்கு கடுதாசி போடுமைய்யா ..

ஒருமாசம் இருந்துக்குவேன் ஒன்பதில எதிர்பாத்து –அததான்டி
ஒருநாளு போனாலும் என் உசுர மாச்சுக்குவேன்
மானமுள்ள மச்சானே மசெறங்கி வாருமைய்யா
மருவாத கொடுத்தென்ன உசுரோட காக்குமைய்யா ...

தொடரும் ....

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:04 am

கார்த்திக் செயராம் wrote:மனசொடஞ்சி போவாதே என் மானமுள்ள ரஞ்சிதமே
மனச விட்டு போரேனே  என் பாசமுள்ள அஞ்சுகமே.

ஆடு மாடு மேய்கயில மந்தையில நானிருப்பேன்.
வார செலவு செய்யயில சந்தையில நானிருப்பேன்.
காடு கழனி உழுகையில கருமேகமாக காத்திருப்பேன்.
கஞ்சி பானை கழுவையில கரி போல காஞ்சிருப்பேன்.
கண்ண மூடி தூங்கயில கனவாக கலந்திருப்பேன்.

ஊர் குருவி கூட கூவ மறந்து போகும் கண்ணே.
உன் பெயர் கூற என்மனசு என் மனசு துடிக்குதடி பெண்ணே.
வீரனாக பெயர் எடுத்து வந்திடுவேன் கண்ணே.
வீண் பேச்சு பேசமாட்டேன் புரிஞ்சிதடி பெண்ணே.

கண்மூடி தூங்கயில இரவெல்லாம் உன் நினப்பு.
காலத்தின் கோலமடி நான் பிரியும் நேரமடி.

உன்னை ஒத்தையில விட்டுபுட்டு தவிக்கிதடி என் மனசு.
ஊர் முழுக்க பேசுமுன்னு கலங்குதடி என் உசுரு.

வீரனாக நான் வருவேன் பாசத்தோடு காத்திரு.
தாலியத்தான் தந்திடுவேன் தங்கமே நீ காத்திரு.
நம் காதல் உண்மையடி மயிலே நீ பூத்திரு.
நான் ஊர் திரும்பும் காலம் வரை குயிலே நீ காத்திரு.
மேற்கோள் செய்த பதிவு: 1187105

அருமை ,

(சிறு பிழைகள் , திருத்தி உள்ளேன் .
என் மனசு மனசு என்று இருந்ததில்
இரு மனசு நடுவே 'என் ' இணைக்கப்பட்டது ,
ஒரு emphasis க்காக
ர...ன்.
)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:15 am

கிராமிய நடையிலே கொண்டு போகும் இருவர் கவிதை

கிருஷ்ணன் -பஞ்சு போல்,
விஸ்வநாதன் -ராம முர்த்தி போல்,
அந்த காலத்து ரெட்டைப் புலவர்கள்  போல் .

தொடருங்கள் . நன்றாக உள்ளது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 1:38 pm

T.N.Balasubramanian wrote:கிராமிய நடையிலே கொண்டு போகும் இருவர் கவிதை

கிருஷ்ணன் -பஞ்சு போல்,
விஸ்வநாதன் -ராம முர்த்தி போல்,
அந்த காலத்து ரெட்டைப் புலவர்கள்  போல் .

தொடருங்கள் . நன்றாக உள்ளது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187353

மிகவும் நன்றி ஐயா ...

கண்ணால கவலையில கலை எழந்தா மவராசி  

இதில் கலையான முக பொலிவை இழந்து நிற்பதாக பதிவிட்டிருந்தேன் . ஆனால் தங்கள் காலை என்று திருத்தியிருப்பதன் மூலம் அங்கு தாங்கள் புரிந்து கொண்ட அர்த்தம் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா ஐயா ...??

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:04 pm

(இரவில் )கண்ணால கவலையில், காலை எழுந்தா மவராசி,
என்றே மனதில் கொண்டேன் .
எழுத்து பிழைகள் அதிகம் கண்ணில் படுவதால் ,
கலை --காலை --குழப்பம்
.

உங்கள் கலை உங்களக்கு திருப்பி தந்துவிடுகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 10:18 pm

T.N.Balasubramanian wrote:(இரவில் )கண்ணால கவலையில், காலை எழுந்தா மவராசி,
என்றே மனதில் கொண்டேன் .
எழுத்து பிழைகள் அதிகம் கண்ணில் படுவதால் ,
கலை --காலை --குழப்பம்
.

உங்கள் கலை உங்களுக்கு திருப்பி தந்துவிடுகிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187572

மிகவும் நன்றி ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Jan 21, 2016 12:06 pm

உன் கடுதாசி கிடைசிதடி கண்ணான கண்மணியே .
உன் கனவெல்லாம் கண்டெடுத்தேன் பொன்னான பொன்மணியே .
உன்னோட வலியெல்லாம் வார்த்தையால சொல்லிபுட்ட .
உன் இதயம் கலங்குவது உனக்கு அங்கு தெரியாதா ?
உன்னை பிரிஞ்சி நானும் இங்கு வாடுறேண்டி ரஞ்சுதமே
உன் நெனப்பு மனசுக்குள்ள வாட்டுதடி அஞ்சுகமே

மாடன் ஊட்டு திண்ணையில மயிலே நான் உறங்கையில
மஞ்ச தண்ணி ஊத்தியது நெனப்பு இருக்கு
மயில காள ஓட்டிவர  மந்தையில நீ இருக்க
மறஞ்சி நின்னு சிரிச்சி பேசியது நெனப்பு இருக்கு
மந்தகர ஓடையில மஞ்ச தேச்சி நீ குளிக்க
மறஞ்சி நின்னு பாத்ததும் நெனப்பு இருக்கு .

பக்கத்து நாட்டோட பக ஒன்னு வந்திருக்கு .
பட்டாளத்து படைகொரு வேல ஒன்னு காத்திருக்கு .
படு பாவி பகையோட சண்ட ஒன்னு நடக்கிருக்கு.
பாவிகளை அழிசிடவே நானும் அங்க போறேண்டி .

கருமருந்து நாத்தம் கூட உன் வாசம் வீசுதடி
கன்னி வெடி சத்தம் கூட உன் பேச்சு கேக்குதடி  
கடுதாசி பாக்ககூட பல நாலா ஆச்சிதடி.
கன நிமிஷம் கூட கல்லறையா போகுதடி .
கருகமணி போட்டிடுவேன் கூர சேல தந்திடுவேன் .
கலங்காதே பொன்மணியே கருத்த மச்சான் நானிருக்கேன் .

மறு பதிலும் வந்திருச்சு மனம் நெறஞ்சு போயிருச்சு
சலுதீள வாரமுன்னு சங்கதியும் கெடச்சிருச்சி –மனசுக்குள்ள    (சலுதீள-விரைவில்)
ஒட்டடையும் ஒழிஞ்சிருச்சு உள்மனசும் தெளிஞ்சிருச்சு –இனி  
ஒரு வழியா ஒறங்கிக்குவேன் ஒன் நெனப்புல உருகிக்குவேன்

கண்ணாலம் கிட்டவர கார கொஞ்சம் பூசுறாக
கண்ணால செலவுக்கு ஆட்ட கொஞ்சம் விக்கிறாக
பந்த கால பதிச்சிபுட்டு பட்டணமும் போகுறாக
பட்டு சேல எடுத்தாந்து பரிகாசமும் பன்னுறாக (பரிகாசம் –கிண்டல்)

ஒருவாரம் பின்னபோய் உள்ளம் கொஞ்சம் இருட்டுதைய்யா
ஒருவாறு எனக்கென்னவோ உள்மனசோ உருட்டுதைய்யா(ஒருவாறு-ஒருமாதிரி)
பொல்லாத சொப்பனமும் வந்து வந்து போகுதைய்யா –பட்சி
பொழுதோட சவனமும் சொல்லி சொல்லி காட்டுதைய்யா  

அடுப்புக்குள்ள பூன கண்டேன்
ஆந்த தெனம் அலற கண்டேன்
கோட்டானும் கொனைக்க கண்டேன்
கோபுரமும் சாய கண்டேன்

சாவி கொத்து சரிய கண்டேன்
சாவு மேளம் எடுக்க கண்டேன்
குடுகுடுப்ப கோடாங்கி  
கொரலென்னவோ கேக்க கண்டேன்

விடிஞ்சித்தான் நான் இருந்தேன் வெறகு கட்டோட
வெரசாத்தான் வருதைய்யா வண்டி ரோட்டோட
வெசனம் மனசுக்கு மச்சான் வண்டில  –நான்   (வெசனம் –தவிப்பு,ஏக்கம்)
வெரசா போனேனே வண்டி பின்னால

ஜீப்பு ஒன்னு வாருதைய்யா சிங்கத்த தான் ஏத்திக்கிட்டு
மாமன் ஊடு போகுதைய்யா மச்சான் பேர கேட்டுகிட்டு

கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு கோலகலமா இருப்பாரோ
துப்பாக்கி தூக்கிகிட்டு துடிதுடிப்பா இருப்பாரோ
ஒரு சேல எடுத்தாந்தேன் ஒருவார்த்த தொடுப்பாரோ
ஒண்டி நானும் பாக்குறனே ஓரக்கண்ண கொடுப்பாரோ

மாருக்குள்ள படபடப்பு அடி அடின்னு அடிக்கிறதே
மனசுக்குள்ள அவர்நெனப்பு இடி இடியா இடிக்கிறதே
மச்சானோட மொகத்த பாக்க மனசு ரொம்ப துடிக்கிறதே
மாமன் ஊட்டுபக்கம் பாத்து மனுச பட எடுக்கிறதே

ஜீப்பு போய் நின்னுருச்சு சிங்கம் அங்க எறங்கலையே
மாமன் ஊட்டு வாசலுல மச்சான் மொகத்த காங்கலையே  

நாலு பேரு எறங்குறாக நாலா பக்கமும் பாக்குறாக
சவப்பெட்டிய தூக்குறாக சங்கதிய சொல்லுறாக
சலுதீள வாறேனுட்டு சடலமாவே வந்துட்டாரே (சலுதீள –விரைவில்)
சரிஞ்சி நானும் விழுகுறேனே சடலமாத்தான் ஆகுறேனே

ரதியவள் போல் பேரழகில்
கருநிறத்தில் இருந்திட்டால்
நம் கதையின் மதியவளே

மதியவளின் மனமதனை
ஆள்பவனோ மதுவதனின்
மடியதனில் கிடந்திட்டான்
அனுதினமும் பதியவனே

பதியவனின் கதியுனர்ந்த
மதியவளோ பணமென்னும்
நிதி செய்ய படிபித்தால் பதியவனை

மதியவளின் சொல்லதனில்
உதித்தனவே மதிமாற்றம் பதியவனில்
மதியவளின் சொல்லதனை  
மதித்தானே மதிமனதன்
பதியவனே புதியவனாய்

கதியந்த காலத்தை
நிதியதனின் கைவசத்தால்
விதியதனை வென்றிடவே
விழித்திட்டான் வீருகொண்டான்
விடைபெற்றான் மதியவளின்
விருப்பமின்றி புதியவனாய்

புதியவனாய்...புதியவனாய் ....  
படைக்களமும் புகுந்திட்டான்
படைவீர முகமெடுத்தான்
சதி செய்த நாட்டினரை
கொதி யுண்ட குருதியினால்
குதித்தெழுந்தான் துடித்தெழுந்தான்
மிதித்து சென்றான்  வதைத்து சென்றான்  
சதிகார படையதனை பதியவனே

பலத்தோடு போரிட்ட
பதியவனின் மதி ஒளிந்து
குதித்தானே சதிகாரன் –முதுகில்
குருவாளில் துளைத்தானே

விதிவசத்தால் வீழ்ந்திட்டான்
வீரனவன் பதியவனே
விதியவனின் விளையாட்டில்
பதியவனும் போய்விட்டான்
பரமேசன்…….கைவசமே

பதியவனின் மரண கதியறிந்து
பதியவனின் முகமதனை பாராமல்
மதியவளும் மறுநொடியே மரித்தனளே

மதி மயங்கி கிடந்திட்டான்
மதுவினது கைவசத்தால் என ஏசி
பதியவனை எலனமாய் சிரித்தவர்கள்
துதித்தார்கள் பின்னாளில்
அவன் வீர துதிபாடி  

இரு சடலமதை
சிதையில் இட்டு கொளுத்தியதால்  
கிடைதிட்ட சாம்பலதை
திதி கொடுத்து
நதியதனில் கரைத்தனரே  
நதியினது உதவியினால்
நன்றாக கலந்தனரே
நற்சேர்க்கை பெற்றனரே
நாம் அறிந்த காதலர்கள் ......
பதியவனும் மதியவளும் .  ஐ லவ் யூ  ஐ லவ் யூ

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதுவரை கிராமத்து குயில்களாய் கூவியவர்கள்
கார்த்திக் செயராம் & கே.செந்தில் குமார்

முற்றும்.........:வணக்கம்:

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 21, 2016 2:12 pm

மரணத்தில் சங்கமம்
நெஞ்சை தொட்டது .
கூவிய இரு குயில்களுக்கும்
சுத்திப் போடவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக