ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 ayyasamy ram

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ஏர்செல் நிறுவனம் திவால்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Thu Jan 14, 2016 12:08 amLast edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by shobana sahas on Thu Jan 14, 2016 12:29 am

விமந்தனி அக்கா, நலம் . நீங்கள் நலமா ? என் பையன் நன்றாக உள்ளான் . அந்த திரியில் பதில் போட முடிய வில்லை .
நினைத்தாலே இனிக்கும் என்னது அக்கா ? வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் dvd யா ? புத்தகமா ?
suspense வைத்து விட்டு தூங்க போயிடீங்களே ? இங்க எனக்கு அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by ayyasamy ram on Thu Jan 14, 2016 8:47 am


-
வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும்,
விஜய் டி.வியிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார்...
-
'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை
உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக
இருந்த்துடன், மிகப் பெரிய‌ ரசிகர் வட்டம் அவருக்கு இருந்தது...
-
.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34463
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by ayyasamy ram on Thu Jan 14, 2016 8:57 am

இவரது தந்தையின் ஆன்மிக பேச்சாற்றல் குறித்து
சக்தி விகடன் இதழாசிரியர் பொறுப்பேற்றிருந்த
ரவி சங்கர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்
-
அது விபரம் பகிர்தலுக்காக

========================================
-
வேளுக்குடி கிருஷ்ணனின்
தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த
வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு
நடக்காத ஊரே இல்லை. இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேசவேண்டும்
என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை
-
இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ,
அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப்
பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப்
பாண்டித்யம்!
-
ஒருமுறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள்,
'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்"
என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டி
விட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர்.

ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்ததுபோல்,
அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

"தலையை மொட்டை அடித்துக்கொள்வது எதற்குத் தெரியுமா?
நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான்.
ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டையடித்துக் கொள்வான்.
இவன் அவனிடத்தில் தோற்றுவிட்டான் என்பதற்கான அடையாளம் அது.
-
திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு?
‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’
என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால்,
அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்.
இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன்,
வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி,
‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும்,
இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச்
செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’
என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி
நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிவிட்டார்.
-
இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு
‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.
-
நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார்திருநகரியில், அவர் அருளிச் செய்த
திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட
காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். இது ஒரு சாதனை!
-
இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர்.
ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின்
பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60.
-
சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக
அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்
தொடர்ந்து உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார்.
-
மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக்கொண்டது.
உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப்
பரிசோதித்துவிட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திவிடுங்கள்.
இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள்.
-
ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து,
திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.
-
1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி
30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர்.
அதை முடித்துவிட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார்.
அங்கே ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது.
அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்துவிட்டு, பிரசாதங்கள்
பெற்றுக்கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார்.
-
ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்;
அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!
-
-------------------


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34463
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by M.Jagadeesan on Thu Jan 14, 2016 9:21 am

இதேபோல எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் , பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக பேரறிஞர் அண்ணா திகழ்ந்தார் .


ஒருசமயம் ,சென்னை மெரினா கடற்கரையில் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்
கல்கி.
அதில் பலதலைப்புகளில் பல அறிஞர்கள் பேசுவதாக ஏற்பாடு. ஆனால்
பேச்சாளர்களில்
ஒருவர் கூடத் தலை காட்டவில்லை. கல்கிக்குக் கையும் ஆடவில்லை காலும்
ஓடவில்லை!

அச்சமயம் ஓர் இளைஞர் கல்கியை அணுகி அத்தனைத் தலைப்புகளிலும் தாமே
பேசுவதற்கு
அனுமதி கேட்டார். தயக்கத்தோடேயே இசைவளித்தார் கல்கி. அவ்வளவுதான் மடை
திறந்த வெள்ளம் போல்
வெளுத்துக்கட்டிவிட்டார் அந்த இளைஞர். அவர் வேறு யாருமில்லை,
அண்ணாதுரைதான்.

அப்போதே அவரைப் பாராட்டி 'வெறும் அண்ணாதுரை இல்லை,
இனி அறிஞர் அண்ணாதுரை" என்று பட்டம் வழங்கியவர் கல்கி. பெரும்
பேராசிரியரான உ.வே. சாமிநாதையருக்குத்
தமிழ்த் தாத்தா பட்டம் வழங்கியவர் அல்லவா கல்கி. அன்று அவரளித்த பட்டம்
இன்றுவரை அண்ணாவின்
பெயரோடு ஒட்டிக்கொண்டுள்ளது.

அண்ணா என்றதும் நம் மனக்கண் முனனால் வருவது அவருடைய பேச்சாற்றல்தான்.
'கேட்டர்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்" என்னும் வள்ளுவப் பெருந்தகையின் இலக்கணத்துக்கு
இலக்கியமாகத்
திகழ்ந்தவர் அண்ணாதுரை. ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும்
அண்ணாவின் பேச்சும்
சொல் வீச்சும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தன.

இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரைகளைக் கேட்டு
மயங்காதவரே
இல்லை எனலாம். இ;ந்தியத் தலைமை அமைச்சராக இருந்த பண்டித சவகர்லால் நேரு
அவர்கள் அண்ணாவின் உரையை மிகவும் ரசித்துக் கேட்பாராம். பாராளுமன்ற
அவைத்தலைவர்
ஆங்கிலத்தில், 'Now I invite Mr C.N.Annadurai to deliver his maiden
speech" என அழைக்கிறார்.
பாராளுமன்றத்தில் முதன் முதலாக உரையற்ற எழுகிறார் அண்ணா.

கரகரத்த தன் குரலில்
'yes I'm going to deliver my maiden speech but it's not a maiden's
speech" என்று தொடங்க அவையில் உறுப்பினர்களின்
கைதட்டல் எங்கும் எதிரொலித்ததாம். முதல் உரை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே
இவ்வளவு
கைதட்டல் வாங்கிய அரசியல்வாதி அண்ணாதுரையாகத்தான் இருப்பார்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4912
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Thu Jan 14, 2016 1:14 pm

@shobana sahas wrote:விமந்தனி அக்கா, நலம் . நீங்கள் நலமா ? என் பையன் நன்றாக உள்ளான் . அந்த திரியில் பதில் போட முடிய வில்லை .  
நினைத்தாலே இனிக்கும் என்னது அக்கா ? வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் dvd  யா ? புத்தகமா ?
suspense  வைத்து விட்டு தூங்க போயிடீங்களே ? இங்க  எனக்கு அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
நலம் தான் ஷோபனா! புன்னகை ரொம்பவும் பிசியோ.... ஆளை பார்க்கவே முடியலையே.....
.
.
.
.
இது திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Thu Jan 14, 2016 1:18 pm

ayyasamy ram wrote:திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு?
‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’
என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால்,
அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்.
இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன்,
வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி,
‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும்,
இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச்
செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’
என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: நன்றி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Thu Jan 14, 2016 1:23 pm

M.Jagadeesan wrote:முதல் உரை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே
இவ்வளவு
கைதட்டல் வாங்கிய அரசியல்வாதி அண்ணாதுரையாகத்தான் இருப்பார்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Sat Jan 16, 2016 9:57 pm

நினைத்தாலே இனிக்கும்! (1)க்தி செலுத்துபவர்களுக்கு கீதையின் 15ம் அத்தியாயம் நன்றாகத் தெரிந்திருந்தால் போதும். இதில், கண்ணன் தன்னை புருஷோத்தமன் என சொல்கிறான். "புருஷோத்தமன்' என்றால் "அனைவரையும் காட்டிலும் உயர்ந்தவன்' என பொருள். தான் மிகவும் உயர்ந்தவன் என கண்ணன் பிரகடனம் செய்கிறான்.

எல்லாரிடமும் பகவான் ஒன்றை எதிர்பார்க்கிறான். "என்னை யாரொருவன் புருஷோத்தமன் என சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்கிறானோ, அவன் என்னிடம் பக்தி செய்தவன் ஆவான்,'' என்கிறார். அப்படியானால் கோயிலுக்குப் போவது, பகவானின் பெருமைகளைக் கேட்பது என்பதெல்லாம் பக்தி செலுத்துவதாக கொள்ளப்படாதா என்ற கேள்வி எழலாம்.  

பக்தியில் பலவகை உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பக்தி செலுத்துகிறார்கள். சிலர் பிரதட்சணம்(கோயிலை வலம் வருதல்), சிலர் நமஸ்காரம் மட்டும் செய்வது என்று வழிபாட்டு முறை மாறுபடுகிறது. ஆழ்வார்கள் ஆடுவது, பாடுவது, பூத்தொடுப்பது என்று பலவிதமாக பக்தி செலுத்தியுள்ளனர். ஆக, எந்த விதத்திலும் பக்திசெலுத்தலாம்.

குழம்பு சாதம் மோர் சாதகமாகாது. மோர்சாதம் கேசரி ஆகாது. அதனதன் சுவையில் அது அது இருக்கும். அதுபோல, ஒவ்வொருவர் செலுத்தும் பக்தியும் தனித்துவம் வாய்ந்ததாக அமையும்.

எள் சாதம், எலுமிச்சை சாதம், அக்கார அடிசில், சர்க்கரைப் பொங்கல் என எல்லாவற்றுக்கும் தனித்தனி ருசி. அதுபோல, நீங்கள் எந்த வகையில் பக்தி செய்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறான் கண்ணன்.

இப்படி சம்பிரதாயங்கள் இல்லாத பக்தியையும் கூட கண்ணன் ஏற்றுக்கொள்கிறான். ஏன்...என்னை நினைத்தாலே போதும் என்கிறான்.

ஒருவர் 1008 பசுக்களை ரத்னகம்பளம் வைத்து தானம் செய்கிறார். இதுமாதிரி எல்லாராலும் செய்ய முடியுமா? அவரவர் சக்திக்கு தகுந்த பக்தி செலுத்தினால் போதும்.

அதனால் தான் கண்ணன் எளிமையான வழியைச் சொன்னான். "என்னை புருஷோத்தமன் என யார் ஒருவன் நினைக்கிறானோ, அந்த மகானுபாவன் என்னிடம் எல்லா வழிகளிலும் பக்தி செலுத்தியவன் ஆகிறான்,'' என்கிறான்.

ஆம்.. பகவானிடம் பக்தி செலுத்துபவன், மகாபாரதம், ராமாயணம், பாகவதம் என எல்லாப்புராணங்களையும் அறிந்தவன் போல் ஆகிறான். பகவானை புருஷோத்தமன் என நினைத்தாலே, தெரியாத எல்லாவற்றையும் தெரிந்தவர்கள் ஆகிறோம். ஆக, இப்படி நினைப்பது கஷ்டமான விஷயமா! இந்த நினைவிருந்தாலே நமக்கு முக்தி கிடைத்து விடும். இந்த எளிமையான பக்தி, கரும்பு தின்னகூலி கொடுத்தது போல் இருக்கிறது. தியானம், பூஜை, நைவேத்யம் செய்வது தான் பக்தி என்றில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

ஒரு பயில்வானும், சில குத்துச்சண்டை வீரர்களுடன் பத்துநாள் போட்டி போட வேண்டும். ஜெயித்தால் கோப்பை என்று அறிவிக்கப்படுகிறது. இதையே, ஒரே நாள் அந்த பத்து வீரர்களின் தலைவருடன் மோதினால் போதும். அவரை ஜெயித்து விட்டால் கோப்பை என்றால், அந்த பயில்வான் எதைத் தேர்ந்தெடுப்பார்? வலிமை குறைந்த பத்து பேர், ஆனால் பத்துநாள். வலிமையான ஒரு நபர்..ஆனால் ஒரே நாள் தான்!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Sat Jan 16, 2016 10:00 pm

இதுபோல் தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே!

ஒருவருக்கு வியாதி வந்து விட்டது. இனிப்பான மருந்தைக் கொடுத்து குடி என்கிறார்கள். அந்த இனிப்புக்கு ஆசைப்பட்டே, அந்த மனிதர், இந்த நோய் இன்னும் பத்துநாள் இருக்கக்கூடாதா என்று நினைக்க ஆரம்பித்து விடுவார். அதே நேரம் கசப்பு மருந்து கொடுத்தால், ஒரே நாளில் இந்த வியாதி ஓடிவிடாதா என கதறுவார்.

வியாதி என்பது நமது பாவங்கள். அவற்றை விரட்ட, இனிப்பு மருந்தாக பல வித பக்திமுறைகள் உள்ளன. அதைக்கொண்டு பகவானை அடைய பல பிறவிகளைக் கடக்க வேண்டிஇருக்கும். அதேநேரம் கசப்பு மருந்து என்றால் பிறவி வியாதி சீக்கிரம் பறந்து விடும். அந்த கசப்பு மருந்து தான் பகவானை நினைப்பது.

அதேநேரம், பகவானை நினைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? அவனை எப்படி நினைப்பது. அவனுக்கு பல வடிவங்கள் இருக்கின்றதே! எந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து வணங்குவது!

பகவான் சூஷ்மரூபமாக இருக்கிறான் என்கிறார்கள். அதே நேரம் தன்னை புருஷோத்தமன்.. அதாவது எல்லாரையும் விட மிகவும் உயர்ந்தவன் என நினைக்க வேண்டும் என்கிறான். ஒருவனைப் பற்றி விசாரிக்கும் போது, இவன் பாட்டு, படிப்பு எதில் உயர்ந்தவன் என்று கேட்கிறோம் இல்லையா! அதுபோல், பகவான் எந்த வகையில் உயர்ந்தவன் என்று தெரிந்து கொண்டாக வேண்டும்.

இங்கு தான் கீதையின் 15வது அத்தியாயம் முக்கிய இடம் பெறுகிறது. கீதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. பெரிய பெரிய மேதைகள் கூட, இன்று வரை கீதையை ஓரளவு தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 15வது அத்தியாயத்தைப் படித்தாலே போதும். அவனுக்கு பிறவியில்லை என்றாகி விடும்.

சரி...பகவானை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்கிறார்களே! அவனுக்கு என்னைப்போல இரண்டு கண், ஒரு மூக்கு தானே இருக்கிறது. நான் ஒரு மனைவியுடன் இருக்கிறேன். அவன் 16,108 மனைவியருடன் இருக்கிறானாமே! அப்படியிருக்க, என்னை விட அவன் எப்படி உயர்ந்தவன் ஆவான்...என்று பல கேள்விகள் எழுகின்றன. இதற்கு விடை தெரிந்தால் போதும்.

கலியுகத்தில் பகவானை நினைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.

ஒன்றாம் தேதி வந்தாச்சு! சம்பளம் வாங்கியாச்சு! ஓட்டலில் போய் 500ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை சாப்பிட்டா அந்த கண்ணனையே நேரில் சேவித்த மாதிரி ஒரு உணர்வு! ஒருவேளை சாப்பிட அழைத்துப் போகாவிட்டால், வீட்டில் ஒரே சண்டை! இதற்குத்தான் நேரமிருக்கிறதே தவிர, பகவானை நினைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருக்கிறது?

ஏனெனில், கலியுகத்தில் சுகபோகத்தில்தான் புத்தி போகும். யோகத்தின் பக்கம் போகாது. இந்தக் காலத்தில் ஜெபம், தவம் பண்ண முடியுமா! 15 நிமிடம் ஓய்வு கிடைத்தால் தூங்க எண்ணம் வரும், கதை படிக்க ஆசை வரும், இந்த காலத்தில் ஒரு அனர்த்தம் இருக்கிறது. அதுதான் தொலைபேசி. அதை காதில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேச முடியும்! பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வேண்டாத கதைகளைப் பேசத்தோன்றும். பகவானை நினைப்பதாவது! அது எப்படி முடியும்?இன்னும் இனிக்கும்......avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 6:49 am


-
இன்னும் இனிக்கட்டும்...!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34463
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Sun Jan 17, 2016 6:54 am

படிக்க படிக்க இனிமை

நன்றி விமந்தனி, தொடருங்கள் . ஆவலுடன் காத்திருக்கிறோம் .

நன்றி ayyasami ram , M Jagadeesan அரிய தகவல்களுக்கு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21173
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Sun Jan 17, 2016 11:37 pm

@ayyasamy ram wrote:
-
இன்னும் இனிக்கட்டும்...!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Sun Jan 17, 2016 11:38 pm

@T.N.Balasubramanian wrote:படிக்க படிக்க இனிமை

நன்றி விமந்தனி, தொடருங்கள் . ஆவலுடன் காத்திருக்கிறோம் .

நன்றி ayyasami ram , M Jagadeesan  அரிய தகவல்களுக்கு .

ரமணியன்
நன்றி நன்றி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Sun Jan 17, 2016 11:43 pm

நினைத்தாலே இனிக்கும்! (2)ரி...

அப்படியானால், பகவானை எப்படி தான் நம் மனதில் நிலை நிறுத்துவது?

பகவானின் நினைவு, நம் மனதுக்குள் வர வேண்டுமானால், முதலில் தர்மகாரியம் செய்தாக வேண்டும். தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் சேரச்சேர பகவானின் நினைவு தானாகவே வர ஆரம்பிக்கும்.

தர்மகாரியங்கள் நம் மனதில் சம்ஸ்காரத்தை (தீயதைப் போக்கி நல்லதைக் கொண்டு வருதல்) ஏற்படுத்தும். இயற்கை வைத்தியம் செய்யும்போது, கெட்ட உணவை மாற்றி நல்ல உணவு தருவது போல நம் மனதிலுள்ள அழுக்கையும் போக்க தர்மச் செயல்கள் துணை நிற்கும்.

மனிதஉடலில் மூத்திரம், மலம் வியர்வை ஆகிய அழுக்குகள் உள்ளன. இவற்றை வெளியேற்ற வழிகள் உள்ளன. ஆனால், மனதிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கென உறுப்புகள் ஏதுமில்லை. ஏனெனில், மனது துப்புவதில்லை. தர்மம் செய்யச்செய்ய புண்ணியம் சேரும். அது மனதிலுள்ள மாசைப் போக்கும். நல்ல விஷயங்களை நோக்கி முன்னேறினாலே போதும். மனம் சீராக ஆரம்பிக்கும்.

கலியுகத்தில் தர்மத்திற்கு விரோதமான செயல்களே அதிகமாக நடக்கின்றன. துவாதசியன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது மிகச்சிறந்த தர்மம். இப்போது பசுவையே காணவில்லையே! பிராணிகளை இம்சை செய்யாமல் இருப்பது தர்மம். ஆனால், அது மீறப்படுகிறது.

குளம் வெட்டுவது மிகமிக பெரிய தர்மம். ஆனால், தண்ணீர் வேண்டும். இப்போது, விஞ்ஞானிகள் ஆகாயத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எச்சரிக்கிறார்கள். பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. இயற்கை பாழ்படுத்தப்பட்டிக்கிறது. இன்று விஞ்ஞானிகள் சொல்லும் இந்தக் கருத்தை, வேதங்கள் எப்போதோ சொல்லிவிட்டன. அதை நாம் கடைபிடிக்கவில்லை.

குளுகுளு(ஏசி) வசதி கூடாது. சுற்றுச்சூழல் கெட்டு விடும் என்றார்கள். ஆனால், அதைத் தாராளமாகச் செய்தாயிற்று. எல்லா வசதியையும் மனிதன் தனக்கு செய்து கொண்டு விட்டான். முதலில் ஆறுகளில் தண்ணீர் காணாமல் போனது, பிறகு மணல் காணாமல் போனது, இப்போது பல இடங்களில் ஆறுகளையே காணவில்லை.

கலியுகத்தில், தாவரங்களுக்கும், பிராணிகளுக்கும் இம்சை செய்யப்படுகிறது. இதோடு விட்டதா! மனிதர்களை வாயாலேயே கொல்கிறார்கள். சரி...இப்படியெல்லாம் கலியுகத்தில் உலகம் கெட்டு விட்டதே! இனிமேல் தர்மம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். தர்மத்தைக் கடைபிடிக்கும் போதும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கஷ்டப்படாமல் ஒன்று கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அது மட்டுமல்ல! கஷ்டப்பட்டால் தான் தர்மம் நிலைக்கும். ஆக, மிகுந்த கஷ்டப்பட்டே மனஅழுக்கைப் போக்க பாடுபட்டாக வேண்டும்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Sun Jan 17, 2016 11:46 pm

தர்மத்தைக் கடைபிடிப்பது என்பது ஒரே நாளில் வந்து விடாது. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும். பொது உபயோகத்திற்காக ஒரு குளம், கிணறு வெட்டப் போகிறீர்கள். அதற்கே ஆயிரம் எதிர்ப்பு வரும். காரணம், இதற்கு முன் நாம் தர்மம் செய்யாததால் தான் இதுபோன்ற எதிர்ப்பே வருகிறது. அதற்காக அந்தச் செயலை விட்டு விடக்கூடாது. எதிர்ப்பை ஊக்கத்துடன் வென்று தர்மத்தைச் செய்தாக வேண்டும்.

தர்மம் என்றால் ஏதோ பெரிய அளவில் செய்தாக வேண்டுமென்பதில்லை. ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த வியாபாரம் லட்சரூபாய் முதலீடு உரியதாக மாறுவது போல், கொஞ்சம் கொஞ்சமாக புண்ணியம் செய்தாலே போதும். ஒன்றுமே இல்லையா! கஷ்டப்படும் 2 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாலே (இலவச டியூஷன்) போதும். பத்து கோடி ரூபாயில் பள்ளிக்கூடம் கட்டி தான், பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதில்லை.

தர்மத்தை வெறுப்பவர்கள் இப்போது அதிகம். இயற்கை தர்மத்தைக் கடைபிடிக்காததால் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு கிரப்பம் பழம், நாகப்பழம், விளாம்பழம் ஆகியவை எல்லாம் கிடைப்பதே இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வாழைப்பழம், மாம்பழம், இலை கூட கிடைக்காமல் போய்விடும் போல் இருக்கிறது. இனிமேல் இலை என்றால் பச்சைக்கலரில் ஒரு மாத்திரை, மிளகாய் என்றால் சிவப்புக்கலர் மாத்திரை என்று மாத்திரை மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு உலகம் கலியில் சிக்கிக் கிடக்கிறது.

இந்த சிக்கலில் இருந்து மீள வழியுண்டா?

உண்டு... பகவானைப் பிரார்த்தித்தால் மீண்டு விடலாம். அவனை வணங்க வேண்டுமானால் பல ரூபங்களில் உள்ளான் என்கிறார்களே! நான் எந்த ரூபத்தில் வணங்குவது என்ற கேள்வி எழும்.

அவன் சூஷ்ம ரூபமாக இருக்கிறான். "சூஷ்மம்' என்றால் "சிறிய' "அல்பம்' என்று பொருள் கொள்ளலாம். "ரூபம்' என்றால் "வடிவம்'. அதாவது, அவன் சிறிய வடிவமாக உள்ளான். அச்சுதன் என்று அவனைச் சொல்கிறார்களே! அவனுக்கு சின்ன அச்சுதன், பெரிய அச்சுதன் என்றெல்லாம் பாகுபாடுஉண்டா? சிறிய வடிவாக உள்ள அவன், நம் மனதிற்குள் நிற்பானா?

கலியுகத்தில் பகவானை மனதில் இருத்தி தியானம் செய்வது என்பது லேசில் வராது. இதில் அவன் மிகச்சிறிதாக இருந்தால், அவனை எப்படி மனதில் இருத்தி தியானிப்பது?

ஒரு வேலைக்கு போக வேண்டுமானால், பயிற்சி வகுப்பு, நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று பலபடிகளைத் தாண்டிப் போக வேண்டியுள்ளது. அதுபோல், தியானம் செய்யவும் பல படிகளைத் தாண்டியாக வேண்டும்.

எந்தப் படிக்கட்டில் தவறு செய்தாலும் தியானம் சித்திக்காது. அப்படியானால் ஒருமனதாக தியானம் செய்வது
எப்படி? முதலில், பகவானை புருஷோத்தமன் என நம்ப வேண்டும். அதாவது<, எல்லாரையும் விட உயர்ந்தவன் என நினைக்க வேண்டும்.

ஏகாதசியன்று பட்டினி கிடத்தல், அன்னதானம், குடிநீர் தானம் செய்தல், கோயில் கட்டுதல், கல்வி சொல்லிக் கொடுத்தல் ஆகிய தர்மகாரியங்களைச் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, புண்ணியம் சேரும். புண்ணியம் சேரச்சேர பகவானை தியானிக்கும் மனப்பக்குவம் வரும். அந்தப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தர்மம் செய்யச் செய்ய மனத்தெளிவு வரும். அதன்பின், பகவானைத் தியானிப்பதில் சிரமம் இருக்காது.

பகவானை எந்த உருவில் தியானிப்பது என்பதில் முதலில் சூஷ்மரூபத்தை எடுத்துக் கொள்ளலாம். அது கண்ணுக்கு தெரியாது. புலன்களுக்கு எட்டாதது. இந்திரியங்களால் அறிய முடியாதது. அதாவது, நமக்கு கட்டுப்படாதது. இதை எப்படி நாம் நினைப்பது!இன்னும் இனிக்கும்......


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Jan 19, 2016 12:22 am

நினைத்தாலே இனிக்கும்! (3)ம் உடம்பு கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், ஆத்மாவை நம்மால் பார்க்க முடிகிறதா! எக்ஸ்ரே இயந்திரத்தால் கூட ஆத்மாவைப் படம் பிடிக்க முடியாது. ஏனெனில், அது கண்ணுக்குத் தெரியாதது. மிகவும் சூட்சுமமானது. அப்படியே தெரிந்தாலும் அதனால் நன்மை ஏதும் உண்டா? பணம் குறைந்த அளவு இருந்தால் ஐஸ்வர்யம் இல்லை என்று குறைப்பட்டுக் கொள்ளலாம்.

பருமனாக இருப்பவன், ஒல்லியானவனைப் பார்த்து பொறாமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆத்மா என்ற சூட்சுமம் மறைவாக இருப்பதால், யாருக்குஎன்ன நஷ்டம்? ஆனால், அளவில் சிறிய ஆத்மாவுக்கு சக்தி அதிகம் ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டது. அதற்கு ஒன்றுமே ஆவதில்லை. அது உருவில் சிறியது. பந்து போல் எழுந்து உட்கார்ந்து விடும்.

அதேநேரம் பெரியவர்கள் விழுந்தால், "ஐயோ..அப்பா..'' என எழுவதற்குள் உயிரே போய் விடும். அளவில் பெரிதாக இருந்தாலும் சக்தி குறைந்து விடுகிறது. பெரிய சரீரத்திற்கு சக்தி குறைவு.

சூட்சுமமான ஆத்மாவுக்கு பலம் மிக அதிகம். அது மிகச்சிறிய ஒன்று தான். ஆனால், எல்லாம் செய்யும். இதை "அணுமாத்ர ரூபம்' என்பார்கள். அதாவது மிகவும் சிறியது என்று பொருள். அணுவை விட சிறியதாக ஆத்மா இருந்தாலும், சக்தி மட்டும் மிக அதிகம். சிறிய ஆத்மா பிரிந்து விட்டால், இந்த பெரிய உடலே சாய்ந்து விடுகிறது.

இதன் பெருமையை இன்னும் அளவிடலாம். உடலுக்கு தான் உயரம், எடை எல்லாம் இருக்க வேண்டும்.

ஒருவர் 72 கிலோ எடை இருந்தார். அதை 62 ஆக குறைக்க யோசனை சொன்னார் வைத்தியர். தினமும் 10 பழம் சாப்பிடணும் என்றார். வந்தவர், ""சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா'' என்றார். இப்படி கேட்டால் என்னாகும். 72 கிலோ 82 ஆகி விடும். இதுதான் பெரிய உடலின் நிலை.

ஆனால், நம் உடல் எடை எவ்வளவு கூடினாலும், குறைந்தாலும் நமக்குள் இளைப்பான ஒரு நல்லவர் இருக்கிறார். அவரது பெயரே ஆத்மா. இவர் எடை கூடுவதுமில்லை. குறைவதுமில்லை.

உருவத்தை தான் மனிதர்களால் கேலி செய்ய முடியும். ஒரு வீட்டின் உள்ளே இருப்பவர் ஏதோ இன்னொருவரைப் பற்றி குறை கூறி பேசிக்கொண்டிருக்கிறார். நாம் கதவைத் தட்டுகிறோம். உடனே, பேச்சை மாற்றி விட்டு "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே' என்று மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போல நடித்து கதவைத் திறக்கிறார்.

ஒருவரது குணநலன்களையோ, உடலமைப்பையோ, கொண்டு இவ்வாறு பரிகசிப்பது நல்லதல்ல என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பா, அம்மாவுக்கு வீட்டில் சிராத்தம் வரும். அந்தக் காலத்தில் திதி கொடுத்து முடிய மாலை நான்கு மணி ஆகி விடும். அதன் பிறகு தான் சாப்பாடு. திதி பண்ணுகிறவருக்கே திதி கொடுக்க வேண்டி வந்து விடுமோ என்னும் அளவுக்கு நேரம் இழுக்கும். அதுவரை நாம் பட்டினியாக இருப்போம். உடலை அந்தளவு படுத்திய காலங்கள் உண்டு.

ஆத்மாவுக்கு இப்படிப்பட்ட சிக்கலே கிடையாது. ஏனெனில் அது அப்படியே இருப்பது. யார் கண்ணுக்கும் தெரியாது. எனவே அதை யாராலும் குறை சொல்லவும் முடியாது. அதற்கு பசிக்கவும் செய்யாது. சாப்பாடே தேவையில்லை.

உடலில் அழுக்கு இருந்தால் குளித்து கழுவுகிறோம்.

மனதிலுள்ள அழுக்கை என்ன செய்வது? ஒருவர் சொன்னார்.. ""ராமா..ராமா..என்று அவன் நாமத்தை தினமும் 1008 தடவை சொல்லு,'' என்று.

அதைக் கேட்டவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

அரை மணி நேரம் இப்படி மந்திரம் சொல்லி என்னாகப் போகுது
இப்படியெல்லாம், கேட்குமளவுக்கு மனதில் அழுக்கு இருக்கிறது. வண்டியிலுள்ள அழுக்கை உப்புத்தாள் வைத்து எடுப்பது போல, மனதிலுள்ள இந்த அழுக்கையும் உப்புத்தாள் வைத்து எடுக்க வேண்டும். அந்த உப்புத்தாள் தான் தர்ம காரியம்.avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Jan 19, 2016 12:25 am

அமிர்த சுதா என்ற நூலில், அனிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா,வாக்ஷித்வம், இஷாத்வம் ஆகிய எட்டு வகை சித்திகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சித்திகளை அடைந்த சித்தர்கள் இப்போதும் நம்மிடையே இருக்கிறார்கள்.

கலியுகம் மொத்தம் 4லட்சத்து 32 ஆயிரம் வருஷங்கள். இப்போது தான் 5116ம் ஆண்டை எட்டியிருக்கிறோம். அஷ்டமாசித்திகளை அடைந்த வசிஷ்டர் 71 சதுர்யுகம் வாழ்வார். ஒருசதுர்யுகம் என்றால் 43 லட்சத்து 21 ஆயிரம் ஆண்டுகள். இதை 71ஆல் பெருக்கினால்....!

அவ்வளவு வருஷம் வாழ்பவர் வசிஷ்டர்.

இன்றைய சூழ்நிலையில் நம்மால் அஷ்டமாசித்திகளை அடைய முடியுமா என்றால் முடியவே முடியாது. நிலைமை அப்படி இருக்கிறது.

திருமலைக்கும், சோளிங்கருக்கும் போய் மலை ஏற ஆசை இருக்கிறது. ஆனால் கால் ஆபத்து தடுக்கிறது. மலை ஸ்தலங்களில் நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஏதோ கயிறு கட்டி (ரோப்கார்) தூக்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு தான் உடலின் நிலை இருக்கிறது.

இப்படியிருக்க, இந்த உடலைக் கொண்டு அஷ்டமாசித்திகளை அடைவது என்றால் எப்படி?

அப்படி கஷ்டம் என்று சொல்லும் அளவுக்கு இந்த அஷ்டமா சித்திகளில் தான் என்ன இருக்கிறது?

அனிமா என்றால் அணுத்தன்மையை அடைதல். அதாவது, நம் உருவத்தை ஒரு அணுவின் அளவுக்கு சுருக்கிக் கொள்ளுதல். ஆறு அடி உள்ளவன் இந்த சித்தியைப் பெற்றால், புள்ளியளவு கூட தன்னைச் சுருக்கும் ஆற்றல் பெறுவான்.

லகிமா என்றால் லேசாக மாறுதல்.

"இலகுவான' (லேசான) என்று சொல்கிறோமே! அந்தச் சொல் கூட இந்த சித்தியில் இருந்து வந்தது தான். அதாவது, கனமான இந்த உடலை லேசாக்கி இறகு போல பறத்தல்.

நம் உடலை ஓரளவுக்கேனும் நாம் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது.

சாப்பிட்ட பின்னும் கூட வேகமாக நடக்குமளவு நம் சாப்பாட்டின் அளவைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். சாதாரணமாக மூச்சு விட வேண்டும்.

ராமனும் லட்சுமணனும் ராவணனுடன் சண்டை போட்டனர். லட்சுமணன் மயங்கி விட்டான். அவனை மிக எளிதாக தூக்கி விடலாம் எனக்கருதி முயற்சித்தான் ராவணன். முடியவில்லை. 20கைககளையும் சேர்த்து தூக்கமுயன்றான். அப்போதும் முடியவில்லை.

ஆனால், ஆஞ்சநேயர் வந்தார். ஒரே கையால் எளிதாக அவனைத் தூக்கி விட்டார். காரணம் என்ன! ராவணனுக்குள் நல்ல எண்ணம் இல்லை.

தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இதுபோன்ற சித்திகள் எல்லாம் வராது.

ஆஞ்சநேயர் நல்ல எண்ணத்தின் வடிவம். அவரால் எளிதாக லட்சுமணனைத் தூக்க முடிந்தது.

நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் இத்தகைய சித்திகள் கைகூடும்.
தொடரும்.


இன்னும் இனிக்கும்.....
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Tue Jan 19, 2016 10:48 pm

நல்ல எண்ணங்களை கடைப்பிடிப்போம் .
நன்றி , தொடருங்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21173
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Wed Jan 20, 2016 11:48 pm

@T.N.Balasubramanian wrote:நல்ல எண்ணங்களை  கடைப்பிடிப்போம் .
நன்றி , தொடருங்கள் .

ரமணியன்
நன்றி நன்றி நன்றி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Wed Jan 20, 2016 11:55 pm

நினைத்தாலே இனிக்கும்! (4)ஷ்டமா சித்திகளில் மூன்றாவது "பிராப்தி'. "தூரத்தில் இருப்பதைத் தொடுவது' என்பதே இந்த சித்தி. அதாவது, விரல் நுனியால் சந்திரனைக் கூடத் தொடலாம். இது ஏதோ சித்து வேலை அல்ல. ஞானத்தை வளர்த்துக் கொண்டால், இதெல்லாம் சாத்தியமே. கொஞ்சமாவது தியானம் செய்தால் தான், சித்திகளை அடைவதற்குரிய ஆரம்பக்கட்டத்திலாவது நுழைய முடியும்.

சித்திகளில் நான்காவது, "பிராகாம்யம்'. அதாவது தடையின்றி விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல். அது எந்த விருப்பமாக இருந்தாலும், அது நிறைவேறி விடும்.

பரத்வாஜர் ஆஸ்ரமத்துக்கு ராமபிரான் போனார். பரதன் அங்கே சதுரங்க சேனையைத் திரட்டிக் கொண்டு வந்தான். பரத்வாஜர் நான்கு சிஷ்யர்களுடன் ஆஸ்ரமத்தில் இருக்கிறார்.

வந்தவர்களை எப்படி பசியோடு அனுப்புவது? மொத்த சேனைக்கும் விருந்து போட வேண்டும்.

இத்தனை பேருக்கு சாப்பாடு போட வேண்டுமானால் செலவு என்னாகும்? செலவழித்தாலும், சாப்பாடு தயாரிக்க ஆள் வேண்டும். அவ்வளவு பொருட்களை ஒரே சமயத்தில் திரட்ட வேண்டும்.

ஆனால், பரத்வாஜர் அதுபற்றி கவலைப்படவே இல்லை.
""கை கால் அலம்பு, இலையைப் போடப் போறேன்,'' என்று சாதாரணமாக பரதனிடம் சொல்கிறார்.

""சுவாமி! என் படைக்கே சாப்பாடு போடுவதென்பது எப்படி சாத்தியம்?''

""அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்! எல்லாரையும் உட்காரச் சொல்,'' .

தசரதர் வைத்த விருந்தை விட பெரிய விருந்து இங்கே பரிமாறப்பட்டது. மாம்பழமே 12 வகை, ஆரஞ்சு 22 வகை, 50 வகை காய்கறி, 20 வகை கூட்டு...எப்படி இவ்வளவும் தயாரானது?

"பிராகாம்யம்' என்ற சித்தியை பரத்வாஜர் அறிவார். இந்த சித்தியை அடைந்தவர்கள் நினைத்தஉடன் எதுவும் நடந்து விடும். இத்தனை பேருக்கு விருந்து தயாராக வேண்டும் என அவர் நினைத்தார்!

அது நடந்து விட்டது. நம்மால் அது முடியுமா?

சில பேர் சமைத்தால் பாத்திரத்தை விட்டே வெளியே வராது. ஏனென்றால், அதற்கு அதை விட்டு வர பிடிக்கவில்லை. ஆனால், அடுப்பு மூட்டாமலே சோறு போட்டார் பரத்வாஜர்.


ஐந்தாவது சித்தியாக உள்ளது "மகிமா'. இதற்கு "பிரம்மாண்டத்தை விட பெரிய உடல் எடுப்பது' என பொருள். பிரம்மாண்டம் என்றால் இந்த பிரபஞ்சம். எத்தனை உலகங்கள் இருக்கிறதோ, அதை விட பெரிதாக வடிவெடுப்பதே இந்த சித்தி கை கூட வேண்டுவதின் நோக்கம்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், "எது பெரிதோ அதைவிட பெரிதாகுதல்' எனலாம்.

ஆஞ்சநேயர் சீதையைத் தேடி லங்கைக்கு போனார். கடலைத் தாண்டிப் பறக்கும் போது, சுரஷா என்ற நாகமாதா அவரைத் தடுத்தாள்.

""ஆஞ்சநேயா! நீ எனக்கு உணவாக வேண்டும் என பிரம்மா என்னிடம் சொன்னார். ஆனால், நீ என்னைத் தாண்டி செல்கிறாயே!'' என்றாள்.

""நாகமாதா! நான் இப்போது ராமகாரியம் தொடர்பாகச் சென்று கொண்டிருக்கிறேன். அதை முடித்து விட்டு வந்து, தங்களுக்கு உணவாகி விடுகிறேன்,'' என்றார் ஆஞ்சநேயர்.

இதை யார் நம்புவார்கள்? ஆவென வாயைத் திறந்தாள் சுரஷா. ஆஞ்சநேயர் உள்ளே போய் விட்டார். ஆனால், தன் உடலை பத்து யோஜனை தூரத்திற்கு பெரிதாக்க, சுரஷாவும் வாய் அளவை உயர்த்திக் கொண்டே போனாள். சட்டென உருவத்தை அணுவளவு சிறிதாக சுருக்கிய (அனிமா சித்தியைப் பயன்படுத்தி) ஆஞ்சநேயர், அவளது காது வழியாக வெளியேறி விட்டார். ஆக, சித்திகளை அடைந்தவர் என்பதால், அவருக்கு அது சாத்தியமாயிற்று.

அது மட்டுமல்ல! ""அம்மா! உன் வாய்க்குள் புகுந்து வெளியேறி விட்டேன். இதனால், நான் உனக்கு உணவாகி விட்டதாகவே அர்த்தம்,'' என்றார்.

சாமர்த்தியமான பிள்ளை அவர். ஆகாயத்தில் சூரியனைப் பழமாகப் பார்த்து பறந்து பிடித்த சாமர்த்தியக்காரர். நமக்கெல்லாம், ஏதோ ஒரு சிறுதிறமை இருந்தாலே, பெருமை பேச ஆரம்பித்து விடுவோம்.Last edited by விமந்தனி on Thu Jan 21, 2016 12:01 am; edited 1 time in total


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Thu Jan 21, 2016 12:00 am

தம்பட்டம் அடிப்போம். அனுமான், சிறுவயதில் சூரியனைப் பழமாய் நினைத்து பறிக்கப் போன சம்பவத்தை மறந்தே போனார். ஜாம்பவான் ஞாபகப்படுத்த போய்தான், அவரது திறமையே அவருக்கு தெரிய வந்தது.

சித்திகளில் ஆறாவது "ஈசிதா'. அதாவது, மரம், மட்டை, மண், செடி, கொடியைக் கூட நம் சொல்லுக்கு கட்டுப்படச் செய்தல். ராம ராவண யுத்தம் முடிந்து, அயோத்தி செல்லும் வழியில் உள்ள மரங்களையெல்லாம் பூத்து குலுங்க வேண்டும் என்றும், பழங்கள் பழுக்க வேண்டும் என்றும் விரும்பினார் பரத்வாஜர். அவர் சொல்லுக்கு தாவரங்களெல்லாம் கட்டுப்பட்டன. கார்த்திகை மாதம் மாம்பழம் கிடைக்குமா என்றால் சீசன் கிடையாது. ஆனால், இவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.

சித்திகளில் ஏழாவதான "வசிதா' என்னும் "தன்வசப்படுத்துதல்' மூலம் பரத்வாஜருக்கு இதெல்லாம் சாத்தியமானது.

காமவாசியாயுதா என்னும் எட்டாவது சித்தி பற்றியும் தெரிந்து கொள்வோம். இதுவும் "நினைத்தது நடத்தல்' என்ற வகையில் அடங்கும். சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் நேரமாகும். வேலை இருக்கும்.

ஆனால்,

இருந்த இடத்திலேயே சாப்பிட நினைத்தால் அது சாத்தியமாகி விடும்.
இப்படி சித்திகளை நமக்கெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால், அதற்கு பல தர்மகாரியங்கள் செய்ய வேண்டும்.

தர்மகாரியம் என்றவுடன், ஆரம்பத்திலேயே பெரிதாக ஏதும் செய்ய வேண்டுமோ என நினைக்க வேண்டாம். சிறியதில் ஆரம்பித்தால் போதும். அது போகப்போக பெரிதாக மாறி விடும். ஆறுமாதம் பொறுமையாக தர்மத்தைச் செய்து பாருங்களேன். கொஞ்சம் கொஞ்சமாக தர்மசிந்தனை மனதில் ஊறிவிடும்.

தெளிவு, புத்திக்கூர்மை, சாந்தி, ஆனந்தம் ஆகியவையும் எட்டு சித்திகளையும் அடையத் தேவை. ஆனால், இவற்றை அடையவிடாமல் பாவங்கள் நம்மை மூடிக்கொண்டுள்ளன.

ஆத்மா இருக்கிறாரே! அவர் தான் நாம்! உடலுக்கு சூஷ்ம ரூபம் இல்லை. அது ஸ்தூல (கண்ணுக்குத் தெரியும்) ரூபம்.

கொசு, எறும்பு போன்றவை கூட கண்ணுக்குத் தெரியும். ஆனால், ஆத்மாவை யாரும் பார்க்க முடியாது. அது மிகவும் நுண்ணியது. அது தங்குவதற்கு கட்டடமே வேண்டாம். குளிக்க வேண்டாம். அதற்கு உடம்பே இல்லை. சமைத்தாலும் சாப்பிட வாயில்லை.

அதற்கு வியாதியே வராது. சம்பந்தி சண்டை எல்லாம் அதற்கு கிடையாது.

அப்படியானால், ஆத்மாவுக்கும், உடலுக்கும் என்ன சம்பந்தம்? அது ஏன் உடலுக்குள் இருக்க வேண்டும்? ஆராய்வோம்.


இன்னும் வரும்....


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Thu Jan 21, 2016 7:19 am

கல்யாணத்திற்கு முன்பே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு .
சித்திகள் பல கிடைக்கவேண்டும் என  நினைத்ததுண்டு .
எந்தன் மகனுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது

{.எந்தன் மனைவிக்கு தங்கைகள் நாலு } அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21173
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Thu Jan 21, 2016 7:21 am

அஷ்டமா சித்திகள்

தொடருகிறேன் ,விமந்தனி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21173
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by சசி on Thu Jan 21, 2016 8:24 am


அருமை அக்கா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum