புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
284 Posts - 42%
heezulia
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 31, 2016 12:35 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 IuCnzF3gRfyrjtwqSq7k+February

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 12:29 pm

நன்றி கார்த்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:01 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 3

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 DXRo25AxReamst7d2yzy+Peraringnar_Anna

1969 - சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர்.

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:03 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 4

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 9dp1lDMTNzdvyQhmBj7A+285px-Beschi_Tamil_literature

1742 - வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் இறந்த தினம் இன்று.

 வீரமாமுனிவர், இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:04 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 5

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 ZGWTDWiR2WBnYivkUHwA+images

1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

 பனாமா கால்வாய் பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது அமைக்கப்படும் முன்னர் கப்பல்கள் தென்னமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியே செல்ல வேண்டியிருதது.

பதினாறாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கால்வாய்க்கான எண்ணம் இருந்தது. 1880 இல் பிரான்சு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. 22000 தொழிலாளர்கள் இறந்து இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

1900களில் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடங்கி 1914 இல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கால்வாய் 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடையது. பனாமாவின் அரசாங்கத்தால் 1999 இல் கையகப்படுத்தப்பட்டது.

கால்வாய் 1914 ல் திறக்கப்படும்போது சுமார் 1,000 ஆக இருந்த கப்பல் போக்குவரத்து 2008 ல் 14,702 கப்பல்களாக உயர்ந்துள்ளது.2008 ஆண்டு வரை 815.000க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய் வழியாக கடந்துள்ளது.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:07 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 6

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 Lq3v2lKaTlGJ8DrxPwwt+Motilal_nehru

1931 - மோதிலால் நேரு, இந்திய அரசியற் தலைவர் இறந்ததினம் இன்று.

காஷ்மீர் பண்டித் குடும்பத்தில் பிறந்த மோதிலால் அக்கால ஜெய்ப்பூர் மாநிலத்தில் வசித்துவந்தார். இவரது தாத்தா லெட்சுமிநாராயண், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர். இவரது தந்தை கங்காதர் நேரு டெல்லியில் காவலராகயிருந்தவர். கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். பின்னர் சுயாட்சிக் கட்சியில் இணைந்து பிரித்தானிய அரசுக்கெதிராய் போராடினார். சைமன் குழுவிடம் பேச்சு நடத்த 1928ல் அமைக்கப்பட்ட நேரு குழுவின் தலைவராகயிருந்தவர்.

மோதிலால் நேரு ஒரு சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:09 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 7

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 TfWIta55THKztD5TkKxY+338px-Charlie_Chaplin

1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

இவரது முதல் டாக்கீஸ் 1940 ஆம் ஆண்டில் வெளியான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் - ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறைப் பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார்.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:11 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி  8

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 SHKFtF3VSvu18l2fFQ97+images(1)

1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

நாஸ்டாக் (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) ஓர் அமெரிக்க பங்குச்சந்தை. 3,200 நிறுவனங்கள் உள்ளிட்ட இச்சந்தை உலகில் வணிக மூலதனத்தின் (market capitalization) படி உலகில் இரண்டாமிடத்திலுள்ள பங்குச் சந்தை ஆகும். 1971இல் உருவாக்கப்பட்ட இச்சந்தை அமெரிக்காவின் முதல் மின் சந்தை ஆகும். இதில் வர்த்தகங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் நடைபெறும். இது 1992 ஆம் ஆண்டில் இலண்டன் பங்குச் சந்தையுடன் இணைந்து கண்டங்களுக்கிடையேயான பங்குச் சந்தை வர்த்தகத்தையும் தொடங்கியது. இதன் வணிக நேரமானது கிழக்குப்பகுதி நேரத்தின்படி (Eastern Time Zone) காலை 09:30 முதல் மாலை 05:00 மணி வரை ஆகும். இப்பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4.45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:13 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 9

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 G36aENPT5a67MghumPjI+images(2)

1900 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.

டேவிசுக் கோப்பை (டேவிஸ் கோப்பை, Davis Cup) ஆண்கள் டென்னிசு விளையாட்டில் ஓர் முதன்மையான பன்னாட்டு அணி விளையாட்டுப் போட்டி ஆகும். இதனை பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு (ITF) நடத்துகிறது. இப்போட்டி இக்கூட்டமைப்பின் அங்கத்தினர் நாடுகளுக்கிடையே தோல்வியுறுவி வடிவத்தில் நடைபெறுகிறது. இது துவக்கத்தில் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அணிகளிடையே சவால் போட்டியாக 1900ஆம் ஆண்டு யடைபெற்றது. 2005ஆம் ஆண்டில் 134 நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. இப்போட்டியின் வரலாற்றில் கூடுதலாக வெற்றி பெற்ற நாடுகள் ஐக்கிய அமெரிக்க நாடு (32 முறை கோப்பையை வென்றும் 29 முறை இரண்டாவது நிலையிலும்) மற்றும் ஆத்திரேலியா (28 முறை வென்றும், நான்கு முறை நியூசிலாந்துடன் இணைந்து ஆத்திரேலேசியா என வென்றது உட்பட, 19 முறை இரண்டாவது நிலையிலும்) ஆகும். தற்போதைய வெற்றியாளராக ஸ்பெயின் விளங்குகிறது.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:17 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 10

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 BuRoLKcKRUaSbeFk8jWc+330px-GateIndia

1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.

புது தில்லி (இந்தி: नई दिल्ली, உருது: نئی دہلی) இந்தியாவின் தலைநகரமாகும். இது தில்லியின் தேசிய தலைநகரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்காவுன் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.

இம்மாநகருக்கான அடிக்கல் நாட்டு விழா, 1911 திசம்பர் 15 இல் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது மேற்பார்வையில் கட்டுமானப்பணி நடந்தேறியது. புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புதுதில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 2011 திசம்பர் 12 இல் புதுதில்லியின் நூற்றாண்டு விழா நடந்தேறியது. புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது. மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும், நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது[8]. அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது. 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:20 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 11

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 3ORUuBWQzaneMxoqLbFc+Malayapuram_Singaravelu_Chettiar

1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை இறந்த தினம் இன்று.

ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார்.

சிங்காரவேலர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது.வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.

சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார்.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக