ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 பழ.முத்துராமலிங்கம்

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 பழ.முத்துராமலிங்கம்

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

View previous topic View next topic Go down

கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:20 pm

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் மாநிலங்களவையை முடக்கினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனங்களில் அண்மையில்  சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இதனடிப்படையில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று கூடியதும், மாநிலங்களவையில் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அவர்கள் அவையை நடத்திக் கொண்டிருந்த துணைத் தலைவர் குரியனின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களையும் எழுப்பினர்.

அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வழியில்லை என்று கூறிய குரியன், அவையை 10 நிமிஷங்கள் ஒத்திவைத்தார்
-
தினமணி


Last edited by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:23 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:21 pm

[color=#CC0000]கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு சாம்ராஜ்ஜியம்: பல்வேறு நாடுகளில் பல லட்சம் கோடி முதலீடு

லண்டன், துபை, பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்துள்ளது தெரிவந்துள்ளது. இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவும் அண்மையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, கார்த்தி சிதம்பரம் லண்டன், துபை, பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல லட்சும் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆங்கில நாளேடு பயோனியர் செய்தி வெளியிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் மூலமே ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் துணை நிறுவனம் மூலம் 14 நாடுகளில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் பணமோசடி தடுப்பு கூட்டறிக்கையின் கீழ், இந்த 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் செய்துள்ள முதலீடுகள் குறித்த ஆவணங்களைப் பெறுவதற்கு அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் தில்லி நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் சிங்கப்பூரில் நடத்தி வரும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை கேட்டு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய 2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது.

இதேபோல, இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான 'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதேபோல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும் கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.

மேலும், கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும், தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும் அமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் அனைத்து வெளிநாட்டு முதலீடுகளும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தக ஒப்பந்தத்துக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வழங்கிய ஒப்புதல் முற்றிலும் சட்டவிரோதமானது என அமலாக்கத் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தினமணி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:37 pm

பயோனியர் செய்தி: கார்த்தி சிதம்பரம் மறுப்பு
-


வெளிநாடுகளில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டது குறித்து பயோனியர் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிக அளவில் விற்பனையாகாத நாளிதழ் ஒன்று எனக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் இதுதொடர்பாக பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நானும் எனது நிறுவனங்களும் சட்டத்துக்குள்பட்ட செயல்பட்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by M.Jagadeesan on Tue Mar 01, 2016 5:15 pm

இல்லாமல் புகையாது ; அள்ளாமல் குறையாது !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by ராஜா on Wed Mar 02, 2016 4:53 pm

எனக்கு ஒரு சந்தேகம் இந்த அரசியல்வாதிகள் இவ்வளவு பணத்தை கொள்ளையடித்து என்ன பண்ண போகிறார்கள் ?!

நாலு பேருக்கு தெரியுற மாதிரி நல்ல செலவு செய்து கூட வாழமுடியாது , அப்புறம் என்ன மயிருக்குடா ஏழைகள் வயிற்றில் அடித்து இப்படி கொள்ளை அடிக்குறீங்க....


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by T.N.Balasubramanian on Wed Mar 02, 2016 5:37 pm

எதற்கு வெறும் மறுப்பு .
அப்பா அம்மா இருவரும் பெரிய லாயர்கள்
பத்திரிகை மேல் மானநஷ்ட வழக்கு பதிவு செய்யவேண்டியதுதானே .

ஒரு வேளை, வழக்குப் பதிவிட , ....................

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20653
மதிப்பீடுகள் : 7985

View user profile

Back to top Go down

Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum