புதிய பதிவுகள்
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10 
70 Posts - 60%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10 
107 Posts - 60%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 7 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .


   
   

Page 7 of 46 Previous  1 ... 6, 7, 8 ... 26 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 7 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 7 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 7 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 7 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 7 ><img src=]" />



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 11:03 am

கண்டி விடுதியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
======================================

எனது இலங்கைப் பயணம் . - Page 7 8Ji36pZ2STKjkN8kQ4fl+3a



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 26, 2016 10:52 am





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 26, 2016 11:15 am

அன்று இரவில் கண்டியில் , ஏரிக்கு முன்பு உள்ள ஹோட்டலில் தங்கினோம் அன்று இரவு Induction அடுப்பில் சோறு சமைத்து சாப்பிட்டோம் .இரவு நிம்மதியாகத் தூங்கினோம் .

மறுநாள் (25 – 12 -2015 ) காலை குளித்து  முடித்தபின் சுமார் 10 மணி அளவில் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம் .

நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் நுவரெலியா மாவட்டத்தின் தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும். இலங்கையின் மிகவும் உயரமான , அழகான குளிர் பிரதேசம் நுவரெலியா ஆகும்.

இந்த நுவரேலியா மாவட்டத்தில் ரம்பொடை அனுமன் கோவில் , MACK WOOD டீ தொழிற்சாலை மற்றும் சீதா எலிய ஆகிய மூன்று இடங்களைப் பார்த்தோம் .

நுவரெலியா மாவட்டத்தில் கம்பளை நுவரெலியா பிரதான பாதையில் ரம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை ஒன்றின் சிகரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது

இலங்கை சின்மயா மிஸ்ரீனினால் நிருவகிக்கப்படுகின்ற இந்த ஆலயம் சுவாமி சின்மயானந்தரின் விருப்பத்துக்கேற்ப 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது

ஒரு நாள் சுவாமி சின்மயானந்த ஓர் இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொது எந்த ஒரு பழுதும் இல்லாமல்  வாகனத்தடை ஏற்ப்பட்டது. இதனால் அதிர்ந்த சுவாமி அந்த இடத்தில் சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.

அப்போது தான் அது அனுமனின் பாதகமலம் முதன் முதலில் இலங்கைக்கு வந்து அடைந்த இடம் என்பதை உணர்ந்தார். பின்பு அவரே அங்கு அனுமன் கோவில் உருவாக்கப்பட்டதற்கு காரணமாக திகழ்ந்தார். 3200  அடி மலை உயரத்தில் பத்து ஏக்கர் பரப்பளவில் நிலம் வாங்கினார்.

சுவாமி சின்மயானந்தா  இலங்கையில் அனுமனுக்கு கோவில் இல்லை என்பதை அறிந்து  கோவில் கட்டினார். இங்கு தான் முதன் முதலில் அனுமன் கோவில் இலங்கையில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

16 அடி உயரம் கொண்ட இந்த அனுமனின் அபிஷேக ஆராதனைகளுக்கு ஏதுவாக இருபுறமும் படிக்கட்டுகளையும் அமைத்தார். கருவறை முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் விநாயகர், சீதை , ராமர் ஆகியோர்களுக்கும் சிலைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்த நிலையில் உள்ளது.
இந்த ஆலயத்திலுள் ஸ்ரீ பக்த அனுமன் சிலை 16 அடி உயரமானது. தமிழ் நாட்டிலுள்ள மகாபலிபுரத்திலுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த அனுமன் சிலை தமிழகத்திலிருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து றம்பொடைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட இந்தச்சிலையைப் பிரதிஷ்டை செய்த பின்பு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்க செய்தியாகும் .

கோவில் உயரமான இடத்தில் உள்ளதால் சுற்றிலும் உள்ள சில ஊர்களின் எழில்மிகு  தோற்றத்தை காணலாம். அனுமன் ஜெயந்தி அன்று 108 பால்குடம், 1008 சங்காபிஷேகங்கள் நடைபெறும். மோதிர திருவிழா என்பது இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுவதாகும்.

அதாவது சீதை இலங்கையில் இருக்கும்போது அவளது பாதுகாப்பிற்க்காக ராமன் தந்த மோதிரத்தை சீதையிடம் வழங்கி வருமாறு அனுமாரிடம் கூறினார். இந்த தினத்தையே மோதிர திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆலயத்துக்கு சகல இனமக்களும் சகல மதத்தினரும் வந்து செல்வது முக்கிய அம்சமாகும். ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலய ஆச்சிரமத்தின் ஊடாக ஒவ்வொரு பூரணித்தினத்தன்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. இந்த ஆச்சிரமத்தினால் பிரதேசத்தில் வாழுகின்ற சிறுவர்களுக்கு முன்பள்ளி ,அறநெறி கல்வி புகட்டப்படுவதோடு ,கல்வி உதவிகளும் பெண்களுக்கு சுயத்தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன

இக்கோவில் இலங்கையின் நுவரேலியா எனும் இடத்திற்கு அருகில் உள்ளது.தரிசன நேரம் காலை 7-12.45 வரையிலும் மாலை 3.30-6.30 வரையும் ஆகும்.

கோவிலின் உள்ளேசென்று பிரம்மாண்டமான அனுமன் சிலையைத் தரிசனம் செய்தோம் .பிரசாதம் பெற்றுக்கொண்டு , வெளியில் வந்து சிறிதுநேரம் அமர்ந்தோம் .

கோவிலின் அழகும் , முன்புறம் உள்ள பூச்செடிகளும் கண்ணைக் கவர்ந்தன. அங்கிருந்து நுவரெலியா மாவட்டத்தின் அழகை ரசிக்கலாம் . சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு , சாப்பிடுவதற்காகக் கீழே வந்தோம் . அங்கு ஹோட்டல்கள் எதுவும் இல்லை . நாங்கள் கொண்டுவந்திருந்த ரொட்டித் துண்டுகளை அனைவரும் சாப்பிட்டோம் . காலையில் ரொட்டி சாப்பிட்டு எனக்குப் பழக்கம் இல்லாத காரணத்தால் , அன்று முழுவதும் எனக்கு வயிறு சரியில்லாமல் போயிற்று .

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் டீயும் , இரப்பரும் அதிகம் . இலங்கை நாட்டின் டீத்தூள் உலகப்புகழ் பெற்றது .நுவரெலியா மாவட்டத்தில்  வழிநெடுகிலும் ஏராளமான டீ தோட்டங்களைப் பார்த்தோம் . அங்கு இருக்கும் டீ தொழிற்சாலைகளில் MACK WOOD TEA  தொழிற்சாலை மிகவும் புகழ் பெற்றதாகும் .

நாங்கள் அங்கு சென்ற சமயம் டிசம்பர் 25 . அன்று தொழிற்சாலைக்கு விடுமுறை என்பதால் தேயிலைகளில் இருந்து TEA தயாரிக்கும் செய்முறையை எங்களால் பார்க்க இயலவில்லை . தொழிற்சாலையை சுற்றிப் பார்க்க அனுமதித்தார்கள் .
நிர்வாகத்தினரால் நடத்தப்படும் ஹோட்டலில் அனைவரும் TEA சாப்பிட்டோம்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 26, 2016 11:24 am

ஸ்ரீலங்காவின் முக்கிய நகரங்களைக் காட்டும் வரைபடம்.
===================================================

எனது இலங்கைப் பயணம் . - Page 7 CYu8oGUTMXe904pnErJQ+28-1414479679-sri-lanka-map43-600



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 26, 2016 11:27 am

ரம்பொடை அனுமன் கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம் .
===================================================

எனது இலங்கைப் பயணம் . - Page 7 JatyS9TDRYGDgSXQsu09+Anumaankovil



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 26, 2016 11:28 am

அனுமனின் பிரம்மாண்ட தோற்றம் .
================================

எனது இலங்கைப் பயணம் . - Page 7 5LYPDgdtSUeWnesS1E1S+anuman



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 26, 2016 4:23 pm

கோவில் படிக்கட்டுகளில்...
========================
எனது இலங்கைப் பயணம் . - Page 7 XvwyJ88VSJqqX3It1vBR+AK



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2016 4:37 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:நல்ல பட தொகுப்பு .நன்றி .
குட்டி யானை க்யூட் யானை .
ஸ்ரீலங்கா சுற்றுலா பயணம் கொள்ள சிறந்த மாதம் எது என்று கூற இயலுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198956

நாங்கள் சென்ற சமயத்தில் பருவநிலை நன்றாக இருந்தது . அதிக வெயிலும் இல்லை ;அதிக மழையும் இல்லை . பிற்பகலில் சில நாட்கள் மழை பெய்தது; அதுவும் சிறிதுநேரத்தில் நின்றுவிட்டது .எனவே டிசம்பர்அல்லது ஜனவரி மாதத்தில் செல்வது நல்லது .
மேற்கோள் செய்த பதிவு: 1198965

தகவலுக்கு நன்றி ,ஜெகதீசன் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2016 4:55 pm

பொன்னியின் செல்வன் + பெரஹெர திருவிழா .
நினைவு படுத்தியதற்கு நன்றி .
நான் முதலில் படித்த சரித்திர நாவல் பொன்னியின் செல்வன் .
அந்த காலத்தில் கல்கியில் வந்த தொடர்கதையை தனியாகப் பிரித்து 6 புத்தகங்களாக
பைண்டு செய்து வைத்து இருந்தார்கள் நண்பனின் தாய் .
காலாண்டு பரிட்சை விடுமுறையில் , நான் தனியாக வீட்டில் இருக்க வேண்டிய சந்தர்ப்பம் .
காலையில் காபி , பொன்னியின் செல்வன் ,,,,,காலை டிபன் ,,, பொன்னியின் செல்வன்
குளித்து ,,,,பொன்னியின் செல்வன்,மதிய உணவு ,,,பொன்னியின் செல்வன்,
மாலை டிபன் ....பொன்னியின் செல்வன்,இரவு உணவு ...பொன்னியின் செல்வன்அந்த புத்தகத்தை படித்து முடித்து , மறு நாள் இந்த புத்தகத்தை கொடுத்து அடுத்தப் புத்தகம் . இப்பிடியே கழிந்தது எந்தன் விடுமுறை .
கடைசி பாகம் மட்டும் நீண்டது .ரெண்டு நாட்கள் எடுத்துக் கொண்டது .
சரித்திரத்தில் ஆர்வத்தை உண்டாக்கியது கல்கியின் எழுத்துக்கள் .
கல்கிக்கு பிறகு சாண்டில்யனின் எழுத்துகளில் ஒரு ஈர்ப்பு .
பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவந்ததற்கு நன்றி ,Jagadeesan .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 26, 2016 8:34 pm

பிற்காலச் சோழர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பொன்னியின் செல்வனைப் படிக்கவேண்டும்; பல்லவர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் சிவகாமியின் சபதத்தைப் படிக்கவேண்டும் .பொன்னியின் செல்வன் தற்போது கல்கியில் மீண்டும் தொடர்கதையாக வருகிறது . அதற்காகவே நான் கல்கியை வாரா வாரம் வாங்குகிறேன் .

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 7 of 46 Previous  1 ... 6, 7, 8 ... 26 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக