புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_m10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_m10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_m10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_m10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_m10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_m10ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:02 am

கொஞ்சம் பெரிய கட்டுரையாக இருக்கு, என்றாலும் படித்தால் பலன் உண்டு ! புன்னகை

ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? B8m7jEAbQ7aXPO2V42tr+ht43915

இன்றைய இளைஞர்களின் ஆறாவது விரல் என ஸ்மார்ட்போனை சொல்லலாம். பேச மட்டும் என இருந்த போன் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எப்போதும் உடனிருக்கும் பொருளாகவும் மாறிப்போனது. கேம்ஸ் ஆட, பாட்டு கேட்க, படம் பார்க்க என கூடுதல் வசதிகளும் செல்போனில் உள்ளீடு செய்யப்பட்டன.

இப்போது செல்போன் ஸ்மார்ட்போனாக மாறி இணைய வசதிகள், ஆப்ஸ் என அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய மினி கம்ப்யூட்டராகவே மாறிவிட்டது. எந்நேரமும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியபடி இருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது.

இச்சூழலில் ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சு உடலுக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் வரும் விளைவுகள் என்னென்ன? உடல்நலம் பாதிக்கப்படுவது உண்மையா? நிபுணர்களிடம் பேசினோம்...

டாக்டர் பி.விஜய கிருஷ்ணன், காது மூக்கு தொண்டை மற்றும் தூக்க நல நிபுணர்...

போன் என்பது பேசும் சாதனம் என்பது போய், 24 மணி நேரமும் உடனிருக்கும் பொருளாக மாறிவிட்டது. அதுவும் நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன் பலரை அடிமையாக்கி வைத்திருக்கிறது. செல்போனில் அதிக நேரம் பேசுவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூளையில் உள்ள செல்களை சேதப்படுத்துகிறது.

ஸ்மார்ட்போனில் இருந்து வரும் கதிர்வீச்சானது இன்னும் பலம் வாய்ந்தது. பல மடங்கு ஆபத்தானது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரோ குறைந்தது 6 முதல் 8 மணி நேரங்கள் அதனோடே வாழ்கிறார்.

இது மறதியை ஏற்படுத்தும். தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கம் பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் வேலையை கவனத்துடன் செய்ய முடியாது. ஸ்மார்ட்போனில் வெளிப்படும் ஒளிக்கற்றையானது தூக்கத்தை பெருமளவில் கெடுக்கக் கூடியது. சிலர் போனில் வரும் செய்திகளை அடிக்கடி எடுத்து பார்த்தபடி இருப்பார்கள்.

இதனால் வேலையில் இருக்கும் கவனம் சிதறும். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆன்லைனில் இருந்துகொண்டு அதை பார்ப்பதும், வரும் செய்திகளுக்கு பதில் அளிப்பதையுமே சிலர் வேலையாக செய்வார்கள்.

தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:03 am

இதனால் அவர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு நாள் ஸ்மார்ட்போனை வீட்டில் மறந்து வைத்து விட்டாலே மிகுந்த பதற்றத்துக்கு ஆளாகிவிடுவார்கள். எதையோ இழந்து விட்டதாக தவிப்பார்கள். உபகரணமானது மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, மனிதன் உபகரணத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. இப்போதோ இது தலைகீழாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் மனிதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள்.

இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது Flight modeல் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.

குழந்தைகள்தான் இப்படி என்றால், பெரியவர்களே ஸ்மார்ட்போனில் வீடியோகேம் விளையாடும் ஆர்வத்தில் பேருந்தை தவறவிட்டவர்கள், ரயிலை விட்டவர்கள்... ஏன்? விமானத்தை தவறவிட்டவர்கள் கூட இருக்கிறார்கள்.

அடுத்ததாக, அடிக்கடி ஸ்மார்ட்போனை லேட்டஸ்ட் வரவுக்கு ஏற்ப மாற்றுபவர்களும் பலர் உண்டு. அவர்களிடம் இருக்கும் போன் நன்றாகவே இருந்தாலும் கூட, புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொண்டே இருப்பார்கள்.

இதனால் பொருளாதார பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.வழி காட்ட பயன்படுகிறது, கால் டாக்ஸி புக் செய்ய உதவுகிறது என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல், தேவைக்கு மட்டும் இவ்வகை போன்களை பயன்படுத்துவதே நல்லது. 3 நிமிடங்களுக்கு மிகாமல் போன் கால்களை பேசிமுடிப்பது இன்னும் நல்லது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசாமல், நடப்பதும் நல்லது. ஸ்மார்ட்போனை ஆப் செய்துவிட்டு யோகா, இசை கேட்டல், புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்தல், தோட்ட வேலைகளை பார்த்தல் என செய்து வந்தாலே இப்பிரச்னை பெருமளவு குறையும்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:03 am

காலை எழுந்தவுடன் தலைவலி வருகிறது. காது சூடாவது போல இருக்கிறது. இரைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. கனவுகளில் கூட ஸ்மார்ட்போனில் யாருக்கோ செய்தி அனுப்புவது, வருதல் போன்ற அறிகுறிகள் ஸ்மார்ட்போன் மீது உங்களுக்கு உள்ள உச்சபட்ச ஈடுபாட்டால் வரும் விளைவுகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கொஞ்சமும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். படுக்கையறையில் மறந்தும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதீர்கள். 3 நிமிடங்களுக்கு அதிகமாக ஸ்மார்ட்போனில் பேசுவது உடலுக்கு மட்டுமல்ல... மூளைக்கும் ஊறுவிளைவிக்கும்.

ஸ்மார்ட்போனை ஒரு நாளில் இத்தனை மணி நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என வரையறை வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடத்துக்கு ஒரு முறை எடுத்து பார்க்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்போனை இடுப்பு அல்லது பேன்ட் பாக்கெட்டில் வைப்பதால் விந்து உயிரணுக்களின் உற்பத்தி குறைந்து ஆண்மைக்குறைவு ஏற்படும் அபாயம் உண்டு.

உயிரணுக்களை உருவாக்கும் ஜீன்களின் தன்மையையே மாற்றி அமைக்கும் திறன் ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சுக்கு உண்டு. இதனால் உடலில் இருந்து ஸ்மார்ட்போன்களை தள்ளிதான் வைக்க வேண்டும்.

சட்டை பாக்கெட்டிலும் வைக்கக் கூடாது. டச் ஸ்கிரீனில் விரலை வைத்து உரசிக் கொண்டே இருப்பதால் பெருவிரல் இணைப்பில் உள்ள தசைநாரானது சிலருக்குக் கிழிந்திருக்கிறது. எந்த ஒரு உபகரணத்தையும் அளவோடு பயன்படுத்தினால் ஆபத்துகளை தவிர்க்கலாம்...’’

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:04 am

டாக்டர் மைதிலி பிரதாப், மனநல மருத்துவர்... அதீத ஸ்மார்ட்போன் பயன்பாடு மனிதர்களுக்கிடையே உள்ள உறவைக் கெடுத்து இடைவெளியை ஏற்படுத்துகிறது. சிறுவர்கள் கூட 4 முதல் 5 மணி நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்கள் என ஒரு சர்வே சொல்கிறது. குழந்தைகளிடம் விளையாட்டுப் பொருளாக கொடுக்கும் ஸ்மார்ட்போனை அரைமணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க விடக்கூடாது. வீட்டுக்கு யாரும் உறவினர்கள் வந்தால் கூட, அவர்களை கண்டுகொள்ளாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கம் அதிகம் பேருக்கு இருக்கிறது. இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் அம்னீசியா’ எனும் பிரச்னையை இந்த வகை ஸ்மார்ட்போன்கள் அதிகமாக்குகின்றன. எந்த எண்களும் அவர்களின் மனதில் தங்காது. முக்கியமான நாட்கள் எந்த தேதியில் வருகின்றன என சுத்தமாக மறந்துவிடும். குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றையும் சுத்தமாக மறந்துவிடுவார்கள். எல்லா தகவல்களையும் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருப்பார்கள். எளிய மனக்கணக்குகளை கூட அவர்களால் போட இயலாது. எந்த ஒரு விஷயத்தையும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டு இருந்தால்தான் அது நீண்ட நாள் நினைவில் (Longtime memory) இருக்கும்.

இந்த மாதிரியான டிஜிட்டல் உபகரணங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு தற்காலிக நினைவு மட்டுமே இருக்கும். முக்கிய நாட்களை, முக்கிய டெலிபோன் எண்களை டைரியில் அல்லது ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு, அடிக்கடி அதை பார்ப்பதன் மூலம் இந்த மறதியைப் போக்கலாம்.ஸ்மார்ட்போனுக்கு ஒருவர் அடிமையாகியிருக்கிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். அரைமணி நேரத்திற்கு ஒருவர் ஸ்மார்ட்போனை பயன்படுத்தவில்லையெனில் அவருக்கு பதற்றமும் படபடப்பும் அதிகரிக்கும்.

வியர்த்துக் கொட்டும். எதையோ இழந்தது போலவே காணப்படுவார். பிறர் மீது அந்த நேரத்தில் எரிந்து விழுவார்கள். கோபம் அதிகமாக வரும். இரவில் கூட உறங்காமல் ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் மனநல மருத்துவரை பார்த்து தகுந்த ஆலோசனையை எடுத்துக் கொள்வது நல்லது.

குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த உறுதி எடுத்துக் கொள்வது பயன் தரும். குடும்பத்தோடு வீட்டில் இருக்கும் போது ஸ்மார்ட்போன், லேப்டாப் என நேரத்தை செலவிடாமல் குழந்தைகளுடன் பேச நேரத்தை செலவிட வேண்டும். வார இறுதி விடுமுறை நாட்களில் போன் பேசுவதை குறைத்துக் கொண்டு, சுற்றுலா செல்வது, நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு செல்வதன் மூலம் குடும்ப உறவையும் சமூக உறவையும் பலப்படுத்திக் கொள்ள முடியும்.’’

விஜய் மகேந்திரன்
நன்றி குங்குமம் டாக்டர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக