புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! Poll_c10தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! Poll_m10தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! Poll_c10 
44 Posts - 51%
heezulia

32 Posts - 37%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! Poll_c10தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! Poll_m10தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! Poll_c10 
162 Posts - 49%

127 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 9:17 am

தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! IE9JdrLQSQyUm3TLZkJF+Albert-Einstein

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிவிட்டது... தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களின் கனவுகளை பெரும்பாலும் ஊடகங்களே நிரப்பிக் கொள்ளும், ‘அவர் மருத்துவர் ஆக விரும்புகிறார்... அவர் மாவட்ட ஆட்சியர் ஆக விரும்புகிறார்...’ என்று மாணவர்களின் எதிர்காலத்தை, அவர்களை சுற்றி நின்று கொண்டிருப்பவர்கள் நிர்ணயம் செய்வார்கள்.

குழந்தைகளும், தங்கள் பெற்றோர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்த திருப்தியுடன் பாவமாக நின்று கொண்டிருப்பார்கள். இது வழமையான நிகழ்வுதான். ஆனால், இதில் கொடுமையான நிகழ்வு என்னவென்றால், மதிப்பெண் குறைந்தவர்கள் அல்லது தேர்வில் தோல்வியுற்றவர்கள், உன்னதமான வாழ்வின் மீது அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, இதுதான் ‘அடையாளங்கள்’ என்று கற்பிக்கப்பட்ட அனைத்தையும் இழந்து நின்று கொண்டிருப்பார்கள். மதிப்பெண் மட்டும்தான் வாழ்வு என்று நம்பும் சமூகம் அவன் மீது மேலும் மேலும் அழுத்தங்களை திணிக்கும். வாழ்வு சூன்யமாகி விட்டது என்று நம்ப வைக்கும். ஏன் அவனோ/ அவளோ தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளக் கூட தூண்டும். இப்போதுதான் அந்த மாணவனுக்கு பள்ளியின், ஆசிரியரின், பெற்றோரின் அரவணைப்பு தேவைப்படுகிறது...

'கல்வி, வாழ்விற்கு நல்ல ஊன்று கோல்' என்றாலும், இங்கு அனைவரும் சுயமான கால்களுடன் பிறந்தவர்கள் என்ற நினைவூட்டவேண்டியது, இப்போது அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரின் கடமை.

வெற்றியாளர்கள் படுதோல்விகளை சந்தித்தவர்கள்:

இது வழக்கமான் ஆறுதல் வார்த்தைகள்தான் என்றாலும், இதில் உண்மையில்லாமலும் இல்லை. பெரும்பாலான வெற்றியாளர்கள் தங்கள் இளமை காலத்தில் படுதோல்விகளை சந்தித்தவர்கள் பற்றி இங்கு பார்ப்போம் புன்னகை .................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 9:18 am

ஆல்பர்ட் என்ஸ்டீன்:

இன்று மேதை என்ற வார்த்தைக்கு அர்த்தமாக பார்க்கப்படும் ஆல்பர்ட் என்ஸ்டீன், தன் இளமை காலத்தில் முட்டாளாக பார்க்கப்பட்டவர்.  நான்கு வயது வரை அவருக்கு பேச்சு வரவில்லை. ஏழு வயது வரை எதையும் வாசிக்க முடியாமல் திணறி இருக்கிறார். பள்ளி நிர்வாகம் இவருக்கு கல்வியளிப்பது சமூகத்திற்கு எவ்விதத்திலும் பயன் தராது என்று வெளியே அனுப்பியது. ஆனால் இன்று...?

சார்லஸ் டார்வீன்:

டார்வீன்,  தன் இளமை காலத்தில் சோம்பேறி என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். தன் சோம்பேறி தனத்திற்காக பள்ளி நிர்வாகத்திடமும் , அப்பாவிடமும் கடும் தண்டனைகளையும் பெற்று இருக்கிறார்.

ஐசக் நியூட்டன்:

பள்ளி  காலத்தில் படுதோல்விகளை சந்தித்தவர் ஐசக் நியூட்டன். பள்ளி படிப்பு வராததால், தங்கள் பூர்வீக பண்ணையை கவனித்துக் கொள்ள அவர் பணிக்கப்பட்டார். ஆனால், அதிலும் தோல்வியை சந்தித்தவர் அவர்.

தாமஸ் எடிசன்:

தாமஸ் எடிசனும் இதற்கு விதிவிலக்கல்ல. பள்ளி காலத்தில் எதற்கும் லாயக்கற்றவர் என்றே அடையாளம் காணப்பட்டவர் அவர். ஒரு அறிவியலாளராக, மோசமான 1000 தோல்விகளுக்கு பின்னரே மின்சார விளக்கை கண்டுபிடித்தார்.

வின்ஸ்டன் சர்ச்சில்:

போர் காலத்தில் பிரிட்டனை வழிநடத்திய வின்ஸ்டன், தனது ஆறாம் வகுப்பில் தோல்வியுற்றவர் என்றால் நம்ப முடிகிறதா...? ஆம். மோசமான தோல்விகளுக்கு பின்னரே அவர் சிகரம் தொட்டார்.

இவர்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கி ரவுலிங் என்று உலக அளவில் இந்த பட்டியல் மிக நீளம். நமக்கு இந்திய அளவிலும் நடிகர் கமல் துவங்கி, பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

இவை வெற்று சமாதானங்கள் அல்ல
:

இவை வெற்று சமாதானங்கள் அல்ல. இதுதான் நிசர்சனமும் கூட.  நாம் இயல்பாக குழந்தைகளுக்கு என்ன வருகிறதோ, அதை மெருகேற்ற உதவி புரியாமல், சந்தைக்கு என்ன தேவையோ அதை திணிக்க முயல்கிறோம். சந்தை நிலை இல்லாதது, அது காலத்திற்கு ஏற்றார் போல் மாறும். அதற்கு ஏற்றார் போல் தம் பிள்ளைகள் ஆட வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் மட்டும் அல்ல.

நிலையான வெற்றிக்கு உகந்ததும் அல்ல.  ஆம். உங்கள் பிள்ளைகள் உண்மையாக வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புவீர்களாயின், அவர்கள் பறவைகள் என்று உணருங்கள். அவர்களது சிறகுகளை வெட்டி ஓட்டப்பந்தயத்தில் ஓட விடாதீர்கள்.

தொடரும் ..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 9:20 am

லிங்கனிடமிருந்து பயிலுங்கள்:

அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன்,  தனது மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித்தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்,  கல்வி குறித்து பல புரிதல்களை ஏற்படுத்தக் கூடியது.

தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! TpBfsRRORUmbmG2lbXOG+250

அதில் அவர், “என் மகனுக்கு... தோல்வியிலிருந்து படிப்பினை பெறவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள், பொறாமையில் இருந்து விலகி நிற்க, அவனுக்குப் பயிற்றுவியுங்கள். ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தால் வாழ்வு இன்பத்தைத் தரும் என்று உணர்த்துங்கள்.

புத்தகங்களில் பொதிந்துள்ள அற்புதங்களை அவனுக்கு சொல்லி கொடுங்கள். அதே சமயம் நீலவானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகளின் புதிரையும், சூரிய ஒளியில் கண்சிமிட்டும் தேனீக்களின் சுறுசுறுப்பையும் பச்சைப்பசேல் என்ற மலைப்பரபில்  விரிந்து பரந்திருக்கும் பூக்களின் மலர்ச்சியையும்  ரசிக்க, சிந்திக்க அமைதியான மனநிலையை அவனுக்கு அளியுங்கள்...

பள்ளியில் ஏமாற்றுவதைவிட, தோல்வி அடைவது பல மடங்கு கண்ணியமானது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். மற்றவர்கள் அனைவரும் தவறு என்று தகிடுதத்தம் செய்தாலும் தனது எண்ணங்கள் சரியானவை என்று உறுதி கொள்ளும் அளவுக்கு அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டுங்கள்...

குறிப்பாக, தன் மீது அபரிமித நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்; அப்போதுதான் மனிதகுலம் மீது அவன் அபரிமித நம்பிக்கை கொண்டிருப்பான்." என்று எழுதினார்.  

ஆனால், இப்போது வணிகமயமான கல்வி சூழலில், ஆசிரியருக்கும் மாணவருக்கும் எந்த உணர்வுபூர்வமான பந்தமும் இல்லாதபோது, இத்தகைய கடிதத்தை நாம் எழுத முடியாது. ஆனால்,  தங்களது பிள்ளைகள் மீது உண்மையாக பாசமும், அக்கறையும் இருக்குமாயின், பெற்றோர்கள் லிங்கன் எழுதியதைதான் செய்ய வேண்டும்.

தேர்வு தோல்விகள், வாழ்கை மீதான குழந்தைகளின் நம்பிக்கைகளை எக்காரணம் கொண்டும் சிதைத்துவிட அனுமதிக்கக்கூடாது.

மு. நியாஸ் அகமது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 9:24 am

வரும் மார்க்குகள் தான் உன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று நம் குழந்தைகளை 'டார்ச்சர்' செய்யாமல் இருந்தாலே போறும், அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு செயல் படுவார்கள். எல்லோருமே டாக்டராகவும் என்ஜினியராகவும் ஆனால் மத்த துறைகளில் சாதிக்கப் போவது யார்? புன்னகை ......இதை பெற்றோர்கள் யோசிக்கணும் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 18, 2016 9:37 am

தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! 103459460
-
தேர்வில் தோல்வி பயத்தினால் கோவை மாவட்டம்
பெரிய நாயக்கன்பாளையத்தில் இன்று சக்தி கணேஷ்
என்ற மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொண்டார்.
-
யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்
என்றும், குறைவான மார்க்குள் வாங்கியிருந்தாலும்
அறிவியல், கலை
உள்ளிட்ட பிரிவுகளில் பல வாய்ப்புகள் உள்ளன.
என்றும் சகாயம் அவர்களும் அறவுரை வழங்கியுள்ளார்...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 9:49 am

ayyasamy ram wrote:தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்! 103459460
-
தேர்வில் தோல்வி பயத்தினால் கோவை மாவட்டம்
பெரிய நாயக்கன்பாளையத்தில் இன்று சக்தி கணேஷ்
என்ற மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொண்டார்.
-
யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்
என்றும், குறைவான மார்க்குள் வாங்கியிருந்தாலும்
அறிவியல், கலை
உள்ளிட்ட பிரிவுகளில் பல வாய்ப்புகள் உள்ளன.
என்றும் சகாயம் அவர்களும் அறவுரை வழங்கியுள்ளார்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1207549

அடாடா.........சோகம்....எத்தனை சொன்னாலும் இந்த பசங்களுக்கு புரியவே மாட்டேன் என்கிறது ...பாவம் அவன் பெற்றோர்.........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 18, 2016 10:02 am

தேர்விலே தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ள அவசியமில்லை ! ஒன்றுமே படிக்காதவர்கள் கூட அரசியலில் புகுந்தால் , கோடி கோடியாக சம்பாதிக்கலாம் . எனவே தன்னம்பிக்கையைக் கைவிடவேண்டாம் .
படிப்பு வேறு; திறமை வேறு . வாழ்க்கையில் வெற்றிபெற 90 % திறமையும் , 10 % படிப்பும் இருந்தாலே போதுமானது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக