புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
34 Posts - 52%
heezulia
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
28 Posts - 43%
mohamed nizamudeen
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
9 Posts - 1%
jairam
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
4 Posts - 1%
Jenila
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_m1020 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 23, 2016 7:39 pm

20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி

20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி34 சாதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி Gh6HTQq8TJaUqHpF6dUJ+isro_1234_2904092g

பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் வெற்றியை அறிவிக்கும் இஸ்ரோ தலைவர் மற்றும் பலர்| படம். ம பிரபு.

பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 20 செயற் கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நம் நாட்டின் சொந்த தேவைகளுக்கா கவும் வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் 3 செயற்கைக்கோள்கள், வெளிநாடு களைச் சேர்ந்த 17 செயற்கைக் கோள்கள் என ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை பிஎஸ் எல்வி சி34 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து 20 செயற்கைக்கோள்களு டன் பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன், கடந்த 20-ம் தேதி காலை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 9.26 மணிக்கு பிஎஸ்எல் வி-சி34 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மொத்தம் 26 நிமிடங்களில் கார்ட்ரோசாட் உள்ளிட்ட 20 செயற் கைக்கோள் களையும் அவற்றுக் குரிய பாதை களில் ராக்கெட் நிலை நிறுத்தியது. அப்போது, ‘இஸ்ரோ’வில் குழுமியி ருந்த விஞ்ஞானிகள் கைதட்டி மகழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார், சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்களில் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம், புணே பொறியியல் கல்லூரி, இஸ்ரோவின் கார்ட்ரோசாட்-2 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் இந்தியாவை சேர்ந்தவை. மற்ற 17 செயற்கைக் கோள்களும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவை. 20 செயற் கைக்கோள்களின் மொத்த எடை 1,288 கிலோ ஆகும்.

முதன்மை செயற்கைக்கோள்

பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் சுமந்து சென்ற செயற்கை கோள் களில் முதன்மையானது கார்ட் ரோசாட்-2 செயற்கைக்கோள் ஆகும். இது பூமியை படமெடுத்து அனுப்புதல், கடல் போக் குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள் ளும். மொத்தம் 727.5 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள், பூமியில் இருந்து 505 கி.மீ. தொலை வில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

கல்வி செயற்கைக்கோள்கள்

‘சத்யபாமா சாட்’ செயற்கைக் கோள், சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித் ததாகும். இது 1.5 கிலோ எடை கொண்டது. பசுமை இல்ல வாயுக்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டது. மேலும், புணே பொறியியல் கல்லூரி தயாரித்துள்ள ‘ஸ்வயம்’ செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.

வெளிநாட்டு செயற்கைக் க்கோள்கள்

இந்தோனேசியாவின் லபன்- ஏ3 (120 கிலோ), ஜெர்மனியின் பைராஸ் (130 கிலோ), கனடாவின் எம்3எம்சாட் (85 கிலோ), ஜிஎச்ஜி சாட்-டி (25.5 கிலோ), அமெரிக்கா வின் ஸ்கைசாட் ஜென்2-1 (110 கி.கி.), டவ் வகையை சேர்ந்த 12 (ஒவ்வொன்றும் 4.7 கிலோ) என மொத்தம் 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இதற்கு முன்னதாக, 2008-ம் ஆண்டு ஒரே ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்திருந் தது. தற்போது முதல்முறை யாக ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தி, புதிய சாதனை படைத் துள்ளது.

சிறப்பம்சம்

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப் பட்டதைத் தொடர்ந்து ஹ ரிகோட்டாவில் நிருபர்களிடம் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக் குநர் கே.சிவன் கூறியதாவது:

தற்போதுள்ள நடைமுறைப்படி ஒரே நேரத்தில் பல செயற்கைக் கோள்களை செலுத்தும்போது பல பிரச்சினைகள் உள்ளன. பொது வாக விண்ணில் ஏவப்ப டும் ராக்கெட்கள், 4 நிலைகளாக பிரிந்து செயற்கைகோள்களை செலுத் திய பிறகு எரிபொருள் தீர்ந்து கடலில் விழுந்துவிடும். ஆனால், பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட், செயற் கைக்கோள்களை விண்ணில் செலுத் திய பிறகு, அதன் இன்ஜின் இரண்டு முறை 5 விநாடிகள் இயக்கி சோதிக்கப்பட்டது.

சோதனையின் பயன்

வணிகரீதியாக ஒரே முயற் சியில் வெவ்வேறு செயற்கைக் கோள்களை வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் நிலைநிறுத்த வேண்டிய தேவை உள்ளது. அதற் காக ராக்கெட் இன்ஜின் மறு இயக்கம் என்பது அவசியமாகி றது. இதன்மூலம், ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை அனுப்பும்போது ஒரு செயற்கைக் கோளை சுற்றுப்பாதையில் நிறுத்திய பிறகு, மீண்டும் அடுத்த செயற்கைக்கோளை வேறு சுற்றுப் பாதையில் செலுத்த முடியும். அடுத்தகட்டமாக பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்டிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு சிவன் கூறினார்.

இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியதாவது:

செயற்கைக்கோள்களை செலுத் தும் செலவை குறைக்க பல முயற் சிகள் மேற்கொள்ளப்படு வருகின் றன. தற்போது ஆண்டுக்கு 12 ராக்கெட்கள் ஏவப்பட்டு வருகின் றன. வரும் ஆண்டில் அந்த எண்ணிக் கையானது 18 ஆக அதிகரிக்கப்படும். ஜூலை 12-ம் தேதி ஜிசாட்-18 செயற்கைக் கோள் ஏவப்படுவதாக இருந்தது. அதனுடன் ஏவப்படும் மற்றொரு செயற்கைக்கோளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, இந்த முயற்சி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்சாட், 2 கல்வி நிறுவனங் களின் செயற்கைக்கோள்கள் என மொத்தம் 5 செயற்கைக்கோள் களை பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்த உள்ளோம். தற்போது நம் நாட்டின் 35 செயற்கைக்கோள்கள் நமக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களை அளித்து வருகின் றன. இதில், 13 தகவல்தொடர்பு, 4 விண்வெளி ஆராய்ச்சி, 7 வழிகாட்டி செயற்கைக்கோள்கள் அடங்கும். நாட்டின் பல்வேறு தேவைகளை கருத்தில்கொண்டு இந்த எண்ணிக் கையை இரண்டு மடங்காக்க முயற்சிகள் நடை பெற்று வருகின் றன.

மேலும், அதிக எண்ணிக்கை யில் செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதால், அவற்றின் பாகங்களை ஒருங்கிணைக்கும் கூடம் ஒன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு, 3-வது ஏவுதளம் அமைப்பது குறித்து முடிவெடுக்கப் படும். இதுதவிர, விண்வெளி ஆராய்ச்சி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க இந்த ஆண்டு இறுதியில் புதிய திட்டம் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி வாழ்த்து

20 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

“இஸ்ரோ குழுவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்” என பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“ஒரே சமயத்தில் 20 செயற்கைக் கோள்கள். இஸ்ரோ தடைகளை உடைத்துக் கொண்டேயிருக்கிறது. குறிப்பிடத்தக்க வெற்றிக்காக நமது விஞ்ஞானிகளுக்கு இதயப்பூர்வ வாழ்த்துகள்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி SPfjWkEdTqKzuVwOTPoB+isro34_2904058a

படம்: ம.பிரபு

இதற்கு முன்னதாக, 2008-ம் ஆண்டு ஒரே ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்தது. தற்போது முதல்முறையாக ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி தி ஹிந்து தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 10:59 pm

20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி 3838410834 20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி 3838410834 20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக