ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 anikuttan

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

View previous topic View next topic Go down

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by ayyasamy ram on Tue Jul 12, 2016 7:33 am


-
இமயமலைச் சாரலில் இருந்த காலவ முனிவருக்குக்
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று
முக்காலங்களையும் அறியும் சக்தி இருந்தது.
-
அவரிடம் பலரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்பார்கள்.
அப்படி கேட்பவர்களை தன் முன்பாக நிறுத்தி, அவர்களை
நன்றாக உற்றுப்பார்த்து விட்டு, கண்களை மூடித் தியானிப்பார்
காலவ முனிவர். பின்னர், அவர்களின் எதிர்காலத்தை
சுருக்கமாக சொல்லிவிடுவார். இதனால் காலவ முனிவர் பற்றிய
தகவல் பலருக்கும் தெரியவந்தது. அவரிடம் வரும் மக்கள் கூட்டமும்
அதிகரித்தது.
-
இந்த நிலையில் தங்களின் எதிர்காலம் பற்றி தெரிந்து
கொண்ட பலரும், ஒழுக்கமின்றி வாழத் தொடங்கினர்.
எப்படியிருந்தாலும் நமக்கு இதுதான் நடைபெறப் போகிறது. இனி
நாம் ஏன் இறைவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம்
அவர்களுக்குத் தோன்றி விட்டது. இதனால் கடவுள் வழிபாடு
செய்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
பல்வேறு தவறுகளை அச்சமின்றி செய்யத் தொடங்கினர்.  
-
இந்தநிலையில் இளம் துறவி ஒருவர், காலவ முனிவரைத் தேடி
வந்தார். அவர் காலவ முனிவரிடம், தன்னுடைய எதிர்காலத்தைக்
கண்டறிந்து சொல்லும்படி வேண்டினார். காலவ முனிவரும்
கண்களை மூடித் தியானித்தார்.
-
ஆனால், அவருக்கு இளம் துறவியின் எதிர்காலத்தைக் கண்டறிய
முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் காலவ முனிவரால் அது
முடியாமல் போயிற்று.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by ayyasamy ram on Tue Jul 12, 2016 7:50 am


அதிர்ச்சியடைந்த முனிவர் தன்னிடம் வந்தவரைப் பார்த்து,
‘இளம் துறவியே! நான் பலமுறை முயற்சித்தும், தங்களுடைய
எதிர்காலத்தை என்னால் கண்டறிய முடியவில்லை’ என்றார்.

அதைக் கேட்ட இளம் துறவி, ‘முனிவரே! என்னுடைய எதிர் காலம்
தங்களுக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை, இந்தப் பூலோகத்தில்
பலருடைய எதிர்காலத்தைக் கண்டு சொன்ன நீங்கள், உங்களுடைய
எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்ததுண்டா?’
என்றார்.

அப்போதுதான், ‘தன்னுடைய எதிர் காலத்தை இதுவரை பார்க்காமல்
இருந்து விட்டோமே’ என்ற எண்ணம் காலவ முனிவருக்கு ஏற்பட்டது.

கண்களை மூடிய காலவ முனிவர், ‘தன் முன்பாக நிற்கும் இளம்
துறவியாக வந்திருப்பவர் யார்? தனது எதிர்காலம் எப்படி இருக்கும்’
என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அப்போது தன்னிடம் இளம்
துறவியாக வந்திருப்பவர், எமதர்மன் என்பதும், தனக்கு
நவக்கிரகங்களின் இடமாற்றத்தினால் இன்னும் சில மாதங்களில்
தொழுநோய் பிடித்து துன்புறப்போகிறோம் என்பதும் தெரிய வந்தது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by ayyasamy ram on Tue Jul 12, 2016 7:52 am


-
கண்களைத் திறந்தார் முனிவர். ஆனால் இப்போது இளம் துறவியைக்
காணவில்லை. தன்னுடைய எதிர்காலம் குறித்து வருத்தமடைந்த
காலவ முனிவர் யோசனையில் ஆழ்ந்தார்.
-
பின்னர், நவக்கிரகங்களின் மாற்றத்தால் ஏற்படப்போகும் நோயை
வராமல் தடுக்க, நவக்கிரகங்களையே வேண்டுவது என்று முடிவு
செய்தார். அதன்படி நவக்கிரகங்களை வேண்டி கடுமையான தவமிருந்தார்.
அவரது தவத்தில் மகிழ்ந்த நவக்கிரகங்கள் முனிவரின் முன்பாக தோன்றின.
-
அவர்களிடம் முனிவர், ‘நவக்கிரகங்களே! உங்கள் இடமாற்றங்களால்
எனக்கு வர விருக்கும் தொழுநோயை வராமல் செய்து, என்னை நல்ல
உடல்நலத்துடன் இருக்கச் செய்யும் வரத்தினைத் தந்தருள வேண்டும்’
என்று வேண்டினார். நவக்கிரகங்களும் அவர் வேண்டிய வரத்தைத் தந்தன.
-
சாபம்
-
முனிவருக்கு நவக்கிரகங்கள் வரமளித்த தகவல், படைப்புக் கடவுளான
பிரம்மாவுக்கு தெரியவந்தது. அவர், நவக்கிரகங்களை அழைத்து விசாரித்தார்.
‘நவக்கிரகங்களே! இறைவனை வேண்டாமல், உங்களிடம் மட்டும்
வேண்டுபவர்களுக்கு, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்கும் அதிகாரம்
உங்களுக்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?’ என்றார்.
-
அதற்கு நவக்கிரகங்கள், ‘காலவ முனிவர் எங்களை நோக்கிக் கடுந்தவம்
செய்ததில் நாங்கள் மகிழ்ந்து போனோம். அந்த மகிழ்ச்சியில்தான் நாங்கள்
விதி முறைகளை மறந்து, அவருக்கு வரமளித்துத் தவறு செய்து விட்டோம்’
என்றன.
-
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by ayyasamy ram on Tue Jul 12, 2016 7:55 am

-
அதைக் கேட்டுக் கோப மடைந்த பிரம்மா, ‘தனிப்பட்ட முறையில் வ
ரமளிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும், முனிவர்
கேட்ட வரத்தை அளித்து பெரும் தவறு செய்து விட்டீர்கள். இந்தத்
தவறுக்குத் தண்டனையாக, முனிவருக்கு வர வேண்டிய தொழுநோய்,
இனி உங்களை வந்து சேரும்’ என்று சாபமிட்டார்.
-
பிரம்மாவின் சாபத்தால் கவலையடைந்த நவக்கிரகங்கள், ‘சுவாமி!
நாங்கள் செய்த தவறை உணர்ந்து விட்டோம், எங்களுக்கு இந்தச்
சாபத்திலிருந்து விடுபட உதவ வேண்டும்’ என்று வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலில் மனமிரங்கிய பிரம்மா, ‘நவக்கிரகங்களே!
நீங்கள் அனைவரும் பூலோகத்தில் உள்ள அர்க்கவனம் என்ற இடத்தில்
வீற்றிருக்கும் பிராணேசுவரர் எனும் சிவலிங்கத்திற்கு, கார்த்திகை
மாதம் தொடங்கி எழுபத்தெட்டு நாட்கள் வணங்கி வாருங்கள்.
அப்போது சாபம் நீங்கும்’ என்றார்.
-
விமோசனம்

-
பூலோகம் வந்த நவக்கிரகங்களுக்குப் பிரம்மாவின் சாபப்படி தொழு
நோய் ஏற்பட்டது. இதனால் நவக்கிரகங்கள் பெரும் துன்பமடைந்தன.
தங்களுக்குக் கிடைத்த கடுமையான தண்டனையை நினைத்து வருத்த
மடைந்த அவர்கள், சாப விமோசனம் பெறுவதற்காக அர்க்கவனம்
நோக்கிச் சென்றனர். அப்படி செல்லும் வழியில் அகத்திய முனிவரைச்
சந்தித்தனர். அவரிடம் தாங்கள் சாபம் பெற்றக் கதையைக் கூறி
வருந்தினர்.
-
அதைக் கேட்ட அகத்தியர், ‘நவக்கிரகங்களே! பிரம்மா சொன்னபடி
திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் நீங்கள்
தங்கியிருந்து, அங்கிருக்கும் சிவலிங்கத்திற்குத் தொடர்ந்து எழுபத்தெட்டு
நாட்கள் வழிபாடு செய்து வாருங்கள். அப்படி நீங்கள் வழிபாடு செய்யும்
நாட்களில், எருக்கு இலையில், தயிர் கலந்த உணவை வைத்து விடிவதற்கு
முன்பு சாப்பிட்டு விடுங்கள். மற்ற நேரங்களில் உணவு எதுவும் உண்ண
வேண்டாம். இப்படிச் செய்து வந்தால் விரைவில் நோய் விலகும்’ என்றார்.
-
அப்போது நவக்கிரகங்கள், ‘அகத்தியரே! எத்தனையோ இலைகள்
இருக்கும்போது, எருக்கு இலையில் வைத்து உணவு உண்ணச் சொல்வதற்கு
ஏதாவது சிறப்புக்காரணம் இருக்கிறதா?’ என்று கேட்டன. அதற்கு
அகத்தியர், ‘நீங்கள் நான் சொன்னபடி செய்து வாருங்கள். உங்களுக்கு
சாப– விமோசனம் கிடைக்கும் நாளில், அது எதற்கு என்பது உங்களுக்கே
தெரியவரும்’ என்று கூறினார்.

அகத்தியரிடம் விடைபெற்றுக்கொண்ட நவக்கிரகங்கள், அர்க்கவனம்
சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு அருகில் இருந்த குளத்தில் இருந்து நீர்
எடுத்து அபிஷேகம் செய்தனர். அந்த வனத்தில் அதிகமாக கிடைத்த
எருக்கு மலர்களைக் கொண்டு இறைவனை அலங்கரித்து வழிபட்டனர்.
பின்னர் ஒவ்வொரு நாளும் விடிவதற்கு சற்று முன்பாக, அகத்தியர் கூறியது
போல், எருக்கு இலையைப் பறித்து, அதில் தயிர் கலந்த உணவை வைத்து
சாப்பிட்டு வந்தனர்.

அவர்கள் அவ்வாறு வழிபடத் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும்,
அவர்கள் உடலிலிருந்த தொழுநோய் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது.
பிரம்மா சொன்னபடி எழுபத்தெட்டு நாட்கள் முடிவடைந்த போது, அவர்கள்
உடலிலிருந்த தொழுநோய் முற்றிலுமாக நீங்கி விட்டது.

அப்போது அவர்களுக்கு ஒரு உண்மை தெரியவந்தது. தாங்கள் இருந்த
பகுதி முழுவதும் இருந்த எருக்குச் செடிகளின் பூக்களில் இருந்து வரும்
நறுமணத்தை சுவாசித்ததாலும், எருக்கு இலையில் தயிர் கலந்த உணவை
வைத்து உண்ணும் போது, அந்த எருக்கு இலையிலிருந்து கிடைக்கும் மருந்துப்
பொருளையும் சேர்ந்து உண்டதால் விரைவில் தங்கள் நோய் நீங்கியிருக்கிறது
என்பதை உணர்ந்தனர்.

அதற்கு காரணமாக அகத்தியரை மனதார நினைத்து வணங்கினர்.
பின்னர் 28–ம் நாள் முடிவில் நோய் முற்றிலுமாக நீங்கி அனைவரும் தேவ
லோகம் சென்றனர்.

நமக்கு மேலானவர்கள் இருக்கும் போது, நாம் அவர்களின் வழிகாட்டுதலின்
படி செயல்படுவதே நல்லது. அதைத் தவிர்த்து, நாமாகத் தனித்துச் செயல்
பட்டால் நமக்குப் பெரும் துன்பங்களே வந்து சேரும் என்பதையே நவக்
கிரகங்கள் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.

நோய் நீக்கும் எருக்கு இலைக் குளியல்


பிரம்மாவிடம் சாபம் பெற்ற நவக்கிரகங்களின் தொழுநோய் நீங்கிய நாள்,
தை மாதத்தில் வரும் ரத சப்தமி தினமாகும்.
அன்றைய தினத்தில் ஏழு எருக்கு இலைகள், எள், மஞ்சள் கலந்த அரிசி
ஆகியவற்றைத் தலையில் வைத்து, நீர் நிலைகளிலோ, வீட்டிலோ குளிக்க
வேண்டும். பின்னர் சூரிய வழிபாடு செய்து, அருகில் உள்ள கோவில்களுக்குச்
சென்று இறைவனை வழிபட்டால், நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள்
விலகும் என்பது ஐதீகம்.

அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். பத்ரம் என்றால் இலை என்று
பொருள்படும். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால், எருக்க இலைக்கு
‘அர்க்க பத்ரம்’ என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே, பிறகு எருக்கு பத்ரம்,
எருக்கு இலை என்று ஆனது. நோய்களும், அதனால் ஏற்படும் துன்பங்களும்
சூரிய பகவானின் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று
‘அர்க்க பத்ர ஸ்நானம்’ எனப்படும் எருக்கு இலைக் குளியல் நடைமுறை
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
-
-----------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by krishnaamma on Tue Jul 12, 2016 12:19 pm

மிக நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 7:54 pm

நல்ல பகிர்வு.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum