புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
17 Posts - 2%
prajai
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
5 Posts - 1%
jairam
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 5:04 pm

ஸ்ரீகுருவே நம:
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்

உலகின் ஞான பீடம், நமது பாரததேசம் என்பதில் ஐயம் இருக்க முடியாது. நமது பரத கண்டத்தில் எங்கேனும் ஓர் இடத்தில் எப்போதும் உலக மக்களுக்கு நமது கொடையாகும் வேதங்கள் ஒலித்துக் கொண்டே இருப்பவை என்பதிலும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை.

ரிக், யஜுர், சாம , அதர்வணம் என வேதங்கள் நான்கு. இவை சதுர்வேதம் என்னும் ஒரே சொல்லால் குறிப்பிடப்படுபவை. நம் அமுதத்தமிழ் சதுர்வேதத்தை நான்மறை என நவிலும் . பொதுவாக மறை என்றும் வேதங்கள் , குறிப்பிடப்படுபவை.

மறை நான்கிலும் உரைக்கப்பட்ட செய்யுளாகட்டும், உரைநடையாகட்டும் அல்லது உரையாடல்களாகட்டும் அனைத்தும் மந்திரம் என்றே பெயர் பெறுபவை. மற்ற நூல்களுக்கு இத்தகைய உயர்வு இல்லை.

நிறைமொழி மாந்தர் சிந்தையிற் கிளர்ந்த மறைமொழிதான் மந்திரம். மனதால் திரும்பத் திரும்ப தியானிப்பதும் மந்திரம்.

வேதம் என்றால் அறிவு என்று பொருள். ஆழ்ந்து பார்த்தால் அறிவின் களஞ்சியம்தான் வேதங்கள். வேதங்கள் ஒரு பூங்கா என்றால் அதில் மலர்ந்த மலர்களே மந்திரங்கள். அற்புத அறிவை தெள்ளத்தெளிவாக அருளும் அந்த அமுத மொழிகளை நாமும் நமது கோவில்களிலும், வீட்டின் அனைத்து காரியங்களிலும் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றோம்- பொருள் விளங்காமல்.

மந்திரங்கள் சிலவற்றின் பொருளைப் புரிந்து கொண்டால் தெய்வ வழிபாட்டின் போதும் இதர பிற நிகழ்வுகளின் போதும் அவை நமது மனத்திற்கு நிம்மதியையும் நன்மையையும் அளிப்பதாக இருக்கலாம் என்னும் நம்பிக்கையில் மந்திரப் பொருள் காணும் நோக்கமே , “மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்” என்னும் தலைப்பிட்ட இப்பதிவு. இனி மந்திர மலர்களின் அழகு, வண்ணம், அலர்வு, மணம் , அவற்றால் நமக்கு ஆகும் இன்பம் ஆகியனவற்றை ஒவ்வொன்றாக அறிவுப் பூர்வமாகக் காண்போம்.

முதலில் :

ॐ असतो मा सदगमय ।
तमसो मा ज्योतिर्गमय ॥
मृत्योर्मामृतम् गमय ।
ॐ सानति ॐ सानति ॐ सानतिः

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதி: கமய
ம்ருத்யோ: மா அம்ருதம் கமய
ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி:

இதற்கு அப்யாரோஹ மந்திரம் என்றும் பெயர். அதாவது அபி+ஆரோஹ = அப்யாரோஹ என்றால் உயர்த்துதல் என்று பொருள். இந்த மந்திரம் ஜபிப்பவரின் நிலையை உயர்த்துவதாவது.
இது சுக்ல யஜுர் வேதத்தில் வரும் ப்ரஹதாரண்யக உபநிஷத்தின் சாந்தி மந்திரம்.

பதப்பொருள்:

ॐ - ஓம் – அவ்வாறே ஆகட்டும்.
असतः –அஸத: - மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டது
मा – மா - என்னை
सत् – சத்- மாறாத உண்மை.
गमय -கமய –அழைத்துச் செல்க
तमसः –தமஸ: - அறியாமையாகிய இருள்
मा – மா - என்னை
ज्योतिः – ஜோதி: - அறிவுடைமை யாகிய ஒளி.
गमय -கமய –அழைத்துச் செல்க
मृत्योः – ம்ருத்யோ: - மனத்தின் மயக்கம்
मा – மா - என்னை
अमृतम् – அம்ருதம் – மனத்தெளிவு.
गमय -கமய –அழைத்துச் செல்க
सानति –சாந்தி - நிம்மதி அடிப்பொருள் விளக்கம்

பதவுரை :

முதல் அடி:

असतः मा सत् गमय - அசத: மா சத் கமய –

மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டநிலையில் இருந்து என்னை மாறாத உண்மைக்கு அழைத்துச் செல் ( அதாவது ஆன்ம விடுதலையை எனக்கு அளி)

இரண்டாவது அடி :

तमसः मा ज्योतिः गमय - தமஸ: மா ஜ்யோதி: கமய -

அறியாமையாகிய இருளில் இருந்து என்னை அறிவுடைமை யாகிய ஒளிக்கு அழைத்துச் செல்
( அதாவது எனது அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞ்ஞானத்தை எனக்கு அளி)

மூன்றாவது அடி :

मृत्योः मा अमृतम् गमय – ம்ருத்யோ: மா அம்ருதம் கமய –

மனத்தின் மயக்கத்திலிருந்து என்னை மனத்தெளிவிற்கு அழைத்துச் செல்
( அதாவது எனது மனமயக்கதை அகற்றி எனக்கு மனத்தெளிவை அளி)

நான்காவது அடி:

ॐ सानति ॐ सानति ॐ सानतिः - ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி:-

என்னிடம் இருந்தும், எனக்கு அப்பால் இருந்தும் , இயற்கையிடமிருந்தும் ஆக மூவகையிலும் எனக்கு நிம்மதி உண்டாகட்டும் – அவ்வாறே ஆகட்டும்.

தெளிவுரை :
1. மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டநிலையில் இருந்து என்னை மாறாத உண்மைக்கு அழைத்துச்
செல் ( அதாவது ஆன்ம விடுதலையை எனக்கு அளி);

2. அறியாமையாகிய இருளில் இருந்து என்னை அறிவுடைமை யாகிய ஒளிக்கு அழைத்துச் செல்
( அதாவது எனது அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞ்ஞானத்தை எனக்கு அளி);

3. மனத்தின் மயக்கத்திலிருந்து என்னை மனத்தெளிவிற்கு அழைத்துச் செல்
( அதாவது எனது மனமயக்கதை அகற்றி எனக்கு மனத்தெளிவை அளி);

4. என்னிடம் இருந்தும், எனக்கு அப்பால் இருந்தும் , இயற்கையிடமிருந்தும் ஆக மூவகையிலும் எனக்கு
நிம்மதி உண்டாகட்டும் – அவ்வாறே ஆகட்டும்.







+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 26, 2016 8:52 pm

ஸ்ரீ குருவே நம:

गायत्री मन्त्रः

“காயத்ரீ மந்த்ரத்தின் பொருள்”

காயத்ரீ என்றால் 24 எழுத்துக்களைக் கொண்ட பாடல் என்பது பொருள். பொதுவாக வரிக்கு 8 எழுத்துக்கள் கொண்ட மூன்று வரிகளாக இப்பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு வரிகளோ அல்லது நான்கு வரிகளோகூட இருக்கலாம். ஆனால் ஒரு பாடலின் மொத்த எழுத்துக்கள் 24 மட்டுமே. இது சம்ஸ்க்ருத இலக்கண விதிகளுள் ஒன்று.

‘गायन् காயன்’ என்றால் பாடுபவர்; ‘ त्रै த்ரை’ என்றால் காப்பாற்றுதல் என்றும் ‘ गायत्री காயத்ரீ’ என்றால் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன் இஷ்ட தேவதையை வேண்டி பாடப்படும் பாடல் என்றும் பொருள் கூறுவதுண்டு.

சூரிய காயத்ரீ , குரு காயத்ரீ , சிவ காயத்ரீ, விஷ்ணு காயத்ரீ, பிரம்ம காயத்ரீ , நாரயண காயத்ரீ என்று எல்லாவகை கடவுளர் மேலும் பல காயத்ரீ பாடல்கள் உண்டு.

பொதுவாக காயத்ரீ என்றால் நம் எல்லோருக்கும் தெரிந்த சூரிய காயத்ரீ தான்.

அப்பாடல் :

ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं ।
भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॥

பதம் பிரித்த பாடல்

ॐ भू : भुवः सुवः तत् सवितुः वरेण्यम् ।
भर्गः देवस्य धीमहि दियः नः प्रचोदयात् ॥

ஓம் பூ: புவ: சுவ: தத் சவிது: வரேண்யம்
பர்க: தேவஸ்ய தீமஹி திய: ந: ப்ரசொதயாத்

பதப்பொருள்:

ॐ – ஓம் -அப்படியே ஆகட்டும்
भू : – பூ: – பூமி
भुव – புவ – காற்று; வளிமண்டலம்
सुवः சுவ:- பூமிக்கும், கிரகங்களுக்கும் இடைப்பட்ட பகுதி
(ஆகிய பிரபஞ்சம் முழுவதுமாய் நிறைந்திருக்கும்)
तत् - தத் -அந்த
सवितुः - சவிது: - பிரபஞ்சம் முழுவதும் விளங்க வைப்பதை – ஒளிகூட்டுவதை
वरेण्यम् – வரேண்யம் – உயர்ந்த ஆற்றல்– போற்றுதலுக்குறியதை
भर्गः – பர்க: -ஞானப் பிரகாச த்தின் வாயிலாக அஞ்ஞான இருளைப் போக்குவதாக இருப்பது.
देवस्य – தேவஸ்ய - மேலாம் நிலையில் இருப்பது .
धीमहि - தீமஹி - சிந்திப்போம்.
धिय: திய : - தியானித்தல்
य: - ய: - எவராக இருப்பவரோ( அவரை)
न: - ந: - நம்முடைய, நம்மை
प्रचोदयात् - ப்ரச்சோதயாத் - அழைத்துக் கொள்ளட்டும்.

தெளிவுரை:

பூமி, காற்று, பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் இடைப்பட்ட பகுதி ( ஆக எங்கும் நிறைந்திருந்து) பிரபஞ்சம் முழுவதும் விளங்க வைக்கும் அந்த போற்றுதலுக்குறியது எதுவாக இருக்கிறதோ , ஞானப் பிரகாசம் என்னும் அறிவாகிய ஒளியின் வாயிலாக அஞ்ஞான இருளைப் போக்குவதும் மேலாம் நிலையில் இருப்பதுமாகும் அதை அறிவினால் சிந்திப்போம் . அது நம்மை அழைத்துக் கொள்ளட்டும் ( அதுவாக ஆகுவோம்). அப்படியே ஆகட்டும்.


கருத்துரை:

எங்கும் நிறைந்த பரம்பொருள் இப்பிரபஞ்சத்தைத் தன் ஒளியால் விளங்கவைப்பது போல் , அதுவே ஸ்ரீகுருவாக இப்பூவுலகிற்கு வந்து நம் அறியாமையாகிய இருளை அகற்றி அறிவுடைமையாகும் ஒளியை நம்முள் ஏற்றிவத்து , அதன் தன்மையை நாம் விளங்கிக் கொள்ளும்படியாக நம்மை ஆக்கி, நம்மை அதனையே எப்போதும் தியானிக்கவைத்து நம்மை அதுவாகவே ஆக்கிக்கொள்ளட்டும்.
அப்படியே ஆகட்டும்.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 5:44 pm


தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்

ஸ்ரீகுருவே நம:

மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்

3.
शुक्लाम्बरतरम् विष्णुम् शशिवर्णम् चतुःभुजम्
प्रसन्नवतनम् त्यायॆत् सर्वविक्नॊप शान्तयॆ

ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே

பதப்பொருள்:
शुक्ल अम्बर तरम् विष्णुम् शशि वर्णम् चतुः पुजम्
प्रसन्न वतनम् त्यायॆत् सर्व विक्न उप शान्तयॆ

शुक्ल – ஷுக்ல – தூய்மை; உண்மை> அறிவு
अम्बर =அம்பர - ஆடை; வானவெளி
तरम् – தரம் – அணிந்திருத்தல்; சூழ்ந்திருத்தல்
विष्णुम् - விஷ்ணும் – உலகம் முழுவதும் வியாபித்து இருப்பது.
शशि – சந்திரன்
वर्णम् – வர்ணம் -அழகொளி
चतुः भुजम् –சது: புஜம் - நான்கு திசைகள்
प्रसन्न – ப்ரசன்ன –நம் கண்ணெதிரில் காணப்படுகின்ற
वतनम् – வதனம் -முகம்
त्यायॆत् – த்யாயேத் – தியானிப்போம்.
सर्व विक्न -சர்வ விக்ந – அனைத்து இடர்கள்
उप –உப – உடனிருந்து.
शान्तयॆ – ஷாந்தயே – அமைதிப்படுத்தட்டும்.

தெளிவுரை:

உண்மை அறிவே(மெய்ஞ்ஞானம்) வடிவாவதும்,
ஆகாயப் பெருவெளியையே ஆடையாகக் கொண்டு நீக்கம் அற எங்கும் சூழ்ந்து இருப்பதும்,
பிரபஞ்சம் முழுவதுமாய் வியாபித்துப் பரந்து விரிந்து இருப்பதும்,
சந்திரனின் ஒளிக்கதிர்களைப்போல் மனத்திற்குக் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதும்;
எல்லாதிசைகளிலும் விளங்குவதும்,
உலகில் மானுடப் புறக் கண்களுக்குப் புலனாவது அனைத்தையும் தன் முகங்களாகக் கொண்டதுமாகவும்
விளங்கும் பரம்பொருளை நினைவால் தியானிப்போம்.
அது, நம் உடன் இருந்து கொண்டு நாம் ஆற்றும் கடமைகளுக்கு உண்டாகும் தடைகளை அமைதிப்படுத்தட்டும்( முடிவில் நம் அறச்செயல்கள் நன்றாக நிறைவடையட்டும்).




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 4:38 pm

தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்
(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)

5. सर्व मङ्गल माङ्गल्ये शिवे सर्वार्थ साधिके ।
शरण्ये त्र्यम्बके देवी नारायणी नमोस्तुते ।। - श्री सूक्तम् – ३१

சர்வ மங்க3ல மாங்க3ல்யே ஷிவே சர்வார்த்த2 சாதி4கே |
ஷரண்யே த்ரையம்ப3கே தே3வீ நாராயணீ நமோஸ்த்துதே || – ஸ்ரீ சூக்தம் 31

பதப்பொருள்

முதல் அடி

सर्व – சர்வ -எல்லாமகும்
मङ्गल மங்கல - நன்மை
माङ्गल्य –மாங்கல்ய – உகந்த தன்மையது
शिव –ஷிவ - கருணை
सर्वार्थ –சர்வார்த்த - எல்லாவற்றிற்கு மாக
साधिक –சாதியக – அளவிற்கு அதிகமாக

இரண்டாவது அடி

शरण्य –சரண்ய – பாதுகாப்பது
त्र्यम्बक –த்ரையம்பக – மூவுலகிலும் பரவி நிற்றல்
देवी –தேவீ - பெருமதிப்பு
नारायणी – செல்வத்தின் இருப்பிடம்
नमः – நம: -வணக்கம்
अस्तु - இருக்கட்டும்
ते –தே –உனக்கு

தெளிவுரை :

பிரபஞ்சத்தில் எல்லாமும் ஆவதும், அனைவருக்கும் நன்மையை அளிக்க வல்ல உகந்த தன்மையாவதும், உலக இருப்புக்கள் யாவற்றிக்கும் அளவிற்கும் அதிகமாக கருணையாவதும், (கடந்த காலத்தில் இருந்த உலகம், நிகழ்காலத்தில் இருக்கும் உலகம் மற்றும் எதிர்காலத்தில் இருக்கப்போகும் உலகம் ஆகிய ) மூவுலகங்களிலும் எப்போதும் எங்கும் நீக்கமற பரவி இருப்பதும், பெருமதிப்பு வாய்ந்ததும், அனைத்துச் செல்வமாக ஆவதும் ஆகிய உனக்கு (ஆற்றலுக்கு-எங்களுடைய) வணக்கம் அமையட்டும்.

விளக்கவுரை :

நமது வேதகால ஞானிகள் பிரபஞ்சப் பேராற்றலையே பலவாறாக வணங்கினார்கள். அவ்வாறான வணக்கத்தில் ஒன்றுதான் இந்த அற்புத மந்திரமும் அதன் அறிவார்ந்த விளக்கமும்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 29, 2016 4:11 pm


தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்
(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)

6.
ॐ राजाधिराजाय प्रसह्य साहिने नमो वयं वैश्रवणाय कुर्महे।
स मे कामान् कामकामाय मह्यं कामेश्वरो वैश्रवणो ददातु।
कुबेराय वैश्रवणाय महाराजाय नम:।

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய சாகினே நமோ வயம் வைஷ்ரவணாய குர்மஹே |
ச மே காமான் காமகாமய மஹ்யம் காமேஷ்வரோ வைஷ்ரவணோ ததாது |
குபேராய வைஷ்ரவணாய மஹாராஜாய நம: ||

பதப்பொருள் :

முதல் அடி

ॐ - ஓம் - அவ்வாறே ஆகட்டும்
राजाधिराजाय – ராஜாதிராஜாய – உயர்வானவைகளுக்கெல்லாம் உயர்வானதற்கு
प्रसह्य - ப்ரஸஹ்ய - தன்னிகரற்றதான
साहिने – சாகிநே - அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் தன்மையும் வல்லமையையும் படைத்தது
नमः - நம: - வணக்கம்.
वयं – வயம் – நாங்கள்
वैश्रवणाय – வைஸ்வரணாய – உலகம் முழுவதையும் தம் செல்வமாக கொண்டிருப்பதற்கு
कुर्महे – குர்மஹே - செய்கிறோம்

இரண்டாம் அடி
सः - ச: - அவர்
मे - மே -எனக்கு
कामान् -காமான் - ஆசைகள்
कामकामाय - காம காமாய்- ஆசைகளை நிறைவேற்றிவைப்பதில் விருப்பம் உள்ளதற்கு
मह्यं – மஹ்யம் - எனக்கு
कामेश्वरः – காமேஷ்வர: -ஆசைகளின் தலைவன்
वैश्रवणः – வைஷ்ரவண: உலகாக விளங்குபவன்
ददातु - ததாது - கொடுத்து அருளட்டும்

மூன்றாம் அடி
कुबेराय - குபேராய - உலகின் அனைத்து செல்வமும் ஆகுபவனுக்கு
वैश्रवणाय – வைஷ்ரவணாய -உலகாக விளங்குபவனுக்கு
महाराजाय - மகாராஜாய -மிகுந்த உயர்வானவனுக்கு
नम: -நம: - வணக்கம்.

பொருள்விளக்கம்:

இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் உயர்வானவைகளுக்கெல்லாம் உயர்வானதற்கு;
தன்னிகரற்றதாக உலகம் யாவையும் தாங்கிக்கொள்ளும் தன்மையும் வல்லமையையும் உடையதற்கு;
உலகம் முழுவதையும் தம் செல்வமாக கொண்டிருப்பதற்கு;
நாங்கள் வணக்கம் தெரிவிக்கின்றோம்.

அவர் எனக்கு ஆசைகளை உண்டாக்கி வைக்கட்டும்;
ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் விருப்பம் கொண்டவனும் உலகமாக விளங்குபவனும் ஆகிய அந்த ஆசைசைகளின் தலைவன் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுத்து அருளட்டும்.

உலகின் அனைத்து செல்வமும் ஆகுபவனுக்கு
உலகாக விளங்குபவனுக்கு
மிகுந்த உயர்வானவனுக்கு
வணக்கம்.

அவ்வாறே ஆகட்டும்


கருத்துரை:
எவ்வளவு பணிவாகப் பரம்பொருள் வணங்கப்படுவதை இப்பாடலில் கவனிக்கலாம். கோவில்களிலும் இன்னபிற உயர்வான மரியாதைகள் அளிக்கப்படும்போதும் அதை நடத்திவைக்கும் பூசகரே பரம்பொருளிடம் இதனை தனக்கே வேண்டுகிறார்.

மரியாதை செய்யப்படுபவரைச் சொல்லச்சொன்னாலும் கூட கொஞ்சம் ஏற்கலாம். அதுவும் இல்லை.

பணம், பொருள், செலவு, ஆற்றல், நேரம் ஆகிய அனைத்தும் விழாவை நடத்துபவர் உடையது. ஆனால் அதை நடத்தி வைத்துவிட்டு, அச்செயலுக்குக் கணிசமான சன்மானமும் பெற்றுக்கொண்டு அதனாலாகும் பயனையும் பூசகரே வேண்டிக்கொண்டு செல்வதுதான் நமக்கு மந்திரத்தின் பொருள் விளங்காமையயால் விளையும் சூன்ய( zero) பலன்.

ராஜாதிராஜாய என்று சொல்லப்பட்ட உடனே ஏதோ தான்தான் ராஜராஜன் ஆகிவிட்ட மயக்கத்தில் விழாவைச் செய்பவர் நிறைவு கொள்கிறார். ஆனால் இங்கு விஷயமே வேறாக இருக்கிறது.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 6:23 pm

தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்
(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)

7
ஈசாவாஸ்ய, ப்ருகதாரண்யக உபநிஷதங்களின் சாந்தி மந்திரம்

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते।
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

பதப்பொருள் :
முதல் அடி

ॐ - ஓம் – அவ்வாறே ஆகட்டும்.
पूर्णम् अतः –பூரணம் அத: - அது( பரம்பொருள் ) முழுமையானது.
पूर्णम् इदं - பூரணம் இதம் – இங்கே ( இவ்வுலகத்தில்) இருப்பவையும் முழுமையானவையே.
पूर्णात् –பூர்ணாத் – அந்த பரம் பொருள் என்னும் முழுமையில் இருந்துதான் .
पूर्णम् –பூர்ணம்- இங்கே உலகில் இருக்கும் முழுமைகள்,
उदच्यते –உதச்யதே - உதயமாகின்றன.


இரண்டாவது அடி
पूर्णस्य –பூர்ணஸ்ய – இந்த உதயமகிய முழுமையினுடையதில் இருக்கும்
पूर्णम् – பூர்ணம் - முழுமையை
आदाय – ஆதாய- நீக்கி விட்டால் ( எடுத்துவிட்டால்)
पूर्णम् एव – பூர்ணம் ஏவ- உதயமானதில் முழுமை மட்டுமே
अवशिष्यते - அவசிஷ்யதே – எஞ்சி நிற்கிறது

மூன்றாவது அடி

ॐ शान्तिः शान्तिः शान्तिः – ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: – மூவுலகிலும் நிம்மதி நிலவட்டும்.


பொருள்விளக்கம்:
அவ்வாறே ஆகட்டும்.

அது( பரம்பொருள் ) முழுமையானது. இங்கே ( இவ்வுலகத்தில்) இருப்பவையும் முழுமையானவையே.
அந்த பரம் பொருள் என்னும் முழுமையில் இருந்துதான் இங்கே உலகில் இருக்கும் முழுமைகள்
உதயமாகின்றன.

இந்த உதயமாகிய முழுமையினுடையதில் இருக்கும் முழுமையை நீக்கி விட்டால் ( எடுத்துவிட்டால்)
உதயமானதில் முழுமை மட்டுமே எஞ்சி நிற்கிறது.

மூவுலகிலும் நிம்மதி நிலவட்டும்.

கருத்துரை:

பொதுவாக சாந்தி மந்திரங்கள் பரம்பொருளிடம் ஏதாவது ஒரு வேண்டுதலையோ அல்லது அதற்கு வேண்டுபவரின் வணக்கத்தையோ சமர்ப்பித்தலாகவே இருக்கும். ஆனால் இம் மந்திரம் உலக உண்மையைக் கூறுகிறது. பிரபஞ்சம் முழுமைக்கும் நிறைந்திருப்பது பரம்பொருளைத் தவிற வேறு இல்லை என்கிறது.

இந்த உலகமும் உலகத் தோற்ற இருப்புக்களும் ஒரு மாயையே தவிற உண்மையில் அவைகள் பரம்பொருளேதான் என்கிறது இந்த மந்திரம்.

இதைப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு தேவைப்படுகிறது.

(கடலும் உண்மையில் மாயையே எனினும் புரிந்து கொள்வதற்காகக்) ‘கடல் அதாவது சமுத்ரம் என்னும் படைப்பை ஒரு ஒப்பிற்கு ( அல்ஜீப்ரா கணிதத்தில் எடுத்துக் கொள்ளும் “ x –எக்ஸ்” என்பதைப்போல) பரம்பொருளாகக் கொள்வோம்.

இப்போது கடல்அலை கடலில் (கடல் நீரில்) இருந்து உதயமாகிய ஒரு தனி உருவம் கொண்டது. ஆகையால் கடல் வேறு , கடல் அலை வேறு என்பதுபோல் இரண்டும் வெவ்வேறாகவே நமக்குத் தெரிகிறது. இவ்வாறுதான் பரம்பொருளும் உலகமும் வெவ்வேறாகத் தெரிகின்றன.

இம்மந்திரம் கடலை முழுமை என்கிறது. கடல் என்னும் முழுமையில் இருந்து உதயமானதால் அலையையும் அது முழுமை என்கிறது. ஆனாலும் அலை என்பது தன்னுள் கடல்நீர் என்னும் முழுமையைக் கொண்டுள்ள மாயை என்பதே உண்மை என்பதுதான் மந்திரத்தின் உட்பொருள்.

இப்போது முழுமையையும் மாயையும் கொண்டுள்ள அலையில் இருந்து அதில் இருக்கும் முழுமை என்னும் கடல்நீரை அப்புறப்படுத்திவிட்டால் அங்கு அலையைக் காண முடியவில்லை - அப்புறப் படுத்தப் பட்ட கடல்நீரே அப்புறப்படுத்தப் பட்ட புதிய இடத்திலும் எஞ்சுகிறது என்பதுதான் விளங்கிக் கொள்ள வேண்டியது. அதுபோலவே உலகம் என்பதில் உறையும் பரம்பொருளைத் தனியே எடுத்துவிட்டால் - அதாவது உலக இருப்புக்களில் பரம்பொருள் இல்லையாகில் , இந்த உலகம் எதுவுமே இல்லாத சூன்யம் (அதாவது 0 zero ). அதாவது உலகம் மாயை.

இன்னுமொரு உதாரணம் .
இருட்டில் போகும் வழியில் ஒரு பாம்பு கிடக்கிறது. ஆனால் அது பாம்பு அல்ல- ஒரு துண்டு கயிறு. இப்போது உண்மையான கயிற்றை அப்புறப் படுத்திவிடால் , அங்கு பாம்பு காணப்படுவதில்லை – எடுக்கப்பட்ட உண்மையான கயிறே எஞ்சுகிறது.
அதாவது கயிறு உண்மை. கயிற்றின்மீது பாம்பு என்னும் மாயை எற்றிவைக்கப்பட்டது. ஏற்றிவைக்கப்பட்ட பாம்பில் இருக்கும் உண்மையான கயிற்றை அப்புறப் படுத்தி விட்டால் உண்மையான கயிறு மட்டுமே எஞ்சுகிறது - பாம்பு என்னும் மாயை இல்லாததாகிறது. இங்கு கயிறு என்பது பரம்பொருள். பாம்பு என்பது உலகம்.

இதுவே அத்வைதம் என்னும் அற்புதத் தத்துவம் – நம் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் வெளிக் கொணர்ந்தது
ஸ்ரீகுருவே நம:





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 8:28 pm

அர்த்தம் தெளிவாக உள்ளது .
ஆனால் மேலெழுந்தவாரியாக படிக்காமல் ,ஆழ்ந்து படிக்க ,அவகாசம் தேவைப் படுகிறது .
நன்றி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 8:36 pm

ஆம் ஐயா !

அற்புத மந்திரம் இது.

அடியன் கிரங்கிப்போனேன் - இதன் பொருள் அறிந்து

அத்வைத மார்க்கத்திற்கு இதற்குமேலும் சான்றுகள் தேவைப்படுமோ என்ற எண்ணம் தேவையற்றதாகும் என்பது அடியனின் கணிப்பு.

வேதகால ஞானிகளை வணங்குகிறேன் - தங்களைப் போன்ற சான்றோர்களின் ஆசிகளுடன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 9:05 pm

சுக்லாம் பரதரம் விஷ்ணும் ......
எங்கள் கிராமத்தில் , சிலேடையாக , எங்கள் நண்பர்கள் மத்தியில் உலா வரும் இந்த சுக்லாம்...... .
காப்பி குடித்தாகி விட்டதா என்பதை கேட்பதற்கு பதில் இப்பிடி கேட்போம் .
வீட்டிற்கு உபாயத்தியாயம் செய்யும் புரோகிதர் , எனது ஒன்று விட்ட அண்ணனின்
பள்ளி தோழர் .அவர் கூறியது .
ரசியுங்கள் . ரசிப்பதற்கு மட்டுமே .கிண்டல் அடிப்பதாகவோ /கேலி செய்வதாகவோ யாரும் நினைக்கவேண்டாம் . வேத மந்திரத்தை கேலி செய்வதாக எண்ண வேண்டாம் . அப்பிடி யாராவது
நினைத்தால் பதிவை நீக்கிவிடலாம் .
இப்போது தொடருங்கள்

சுக்லாம் பரதரம் ---வெண்மையான ஆடை தரித்தவர் --( பால் ,காய்ச்ச ,மேலே வெண்மையான ஆடை படியும் )  
விஷ்ணும் --கருப்பு நிறமுடையவர் ( கருப்பு நிற காப்பி டிகாக்ஷன் )
இவை இரண்டையும் கலக்க ,
சசி வர்ணம் ---மனதிற்கு பிடித்த நிறமுடைவர் .( தேவைக்கேற்ப பாலோ /டிகாக்ஷனோ கலப்பதால்  பிடித்த நிறத்தில் காப்பி தயார் )
சதுர் புஜம் --நான்கு கையுடையவர் ( மனைவி இரெண்டு கைகளால் கொடுக்க , கணவன் இரண்டு கைகளால் வாங்க ...அங்கே நான்கு கைகள் )
ப்ரசன்னவதனம் ...பிரகாசமான முகம் உடையவர் ( காப்பியை குடிக்க , முகம் மலர்கின்றது )
த்யாயேத் --வேண்டிக்கொண்டால் ...( அந்த சமயத்தில் மனைவி புடைவையோ /நகையோ வேண்டுமென  ,வேண்டிக்கொள்ள )
சர்வ விக்னோப சாந்தியே ... கேட்ட வரம் விக்னமில்லாமல் கிடைக்கும்  ( கேட்டது கேட்டபடியே கிடைக்கும் )
இளமை நினைவுகள் --மலர்ந்த நினைவுகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 9:42 pm

ஐயா!

விளையட்டிற்கு என்றாலும் பொருட்பிழையோ கருத்துப் பிழையோ இல்லை.

சந்தோஷமே மிகுகின்றது.

இப்பொருளில் என்ன குறை இருக்க முடியும் !

நவில்தொறும் நூல்நயம் இவ்வாறுதானே !

உண்மையில் அற்புதம் - ஹாஸ்யம் - உண்மையும் கூட.

விளையாட்டிற்கும் மந்திரம் பயன்படுதல் ஒரு உயர்வான சிந்தையே

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக