ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

கா(த)ல் பந்து – கவிதை
 ayyasamy ram

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 T.N.Balasubramanian

நான் விட்டுவிடமாட்டேன் !
 ayyasamy ram

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய குடும்பப் பெண்கள்

View previous topic View next topic Go down

பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய குடும்பப் பெண்கள்

Post by Ramalingam K on Thu Oct 13, 2016 5:13 pm

இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராக குடும்பப் பெண்கள் உள்ளனர் - எஸ்.குருமூர்த்தி

அமெரிக்கா போன்று நாம் வாழ வேண்டும் என்று பெரிய தலைவர்கள், அறிவுஜீவிகள் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த நாட்டின் நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் 55 சதவீத திருமணங்கள், முதல் 10 ஆண்டுகளுக்குள் விவாகரத்தில் முடிகிறது. சரி அடுத்த திருமணம்தான் சிறப்பாக அமையுமா என்றால், இரண்டாவது திருமணம் 67 சதவீதமும், மூன்றாவது திருமணங்கள் 74 சதவீதமும் விவாகரத்தில் முடிகின்றன. இதனால் 51 சதவீத குடும்பங்களில் தந்தையும், தாயும் சேர்ந்து இல்லை. தந்தை இல்லாத நாடு ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது என 1998-இல் அந்த நாட்டின் சமூகவியல் நிபுணர் ஒருவர் ஒரு பெரிய நூலாக எழுதினார்.

மேலும் அமெரிக்க மக்களிடையே சேமிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது.

1960-இல் அமெரிக்க குடும்பங்களின் சேமிப்பு 80 சதவீதம்; ஆனால் தற்போது அது மைனஸ் 20 சதவீதமாக சரிந்து விட்டது. 9 கோடி அமெரிக்கக் குடும்பங்களில் 120 கோடி கிரெடிட் கார்டுகள் உள்ளன. அதன் மூலம் ஏறத்தாழ 300 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வீட்டுக்காக அவர்கள் வாங்கியிருக்கும் கடன் 10 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் 65 லட்சம் கோடி).
உறவு இல்லாத சமுதாயம்: உலகப் பொருளாதார சரிவு ஏற்பட்டதற்கு அமெரிக்க குடும்பங்கள் வாங்கிய கடன்தான் காரணம். நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பதற்கு சட்டம் உரிமை கொடுக்கிறது என்ற போக்குதான் இதற்குக் காரணம். குடும்பப் பிறப்புகள் குறைந்ததால் ஏற்பட்டதாகும்.

சேமிப்பதற்கு ஏதாவது ஒரு லட்சியம் அல்லது தூண்டுதல் இருக்க வேண்டும்; அதுதான் குடும்பம்.
அமெரிக்காவில் தாய், தந்தையைப் பாதுகாக்க வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். பிடித்தால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லாவிட்டால் விட்டு விடலாம் என முழுமை இல்லாத ஒப்பந்த உறவுமுறைகள்தான் இருக்கின்றன.

கடமையற்ற உரிமை ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, சமூகத்தை மட்டுமல்ல நாட்டையே அழித்துவிடும் என்பதற்கு மேற்கத்தியநாடுகள் உதாரணம். உலகத்துக்கே கடன் கொடுத்த அமெரிக்கா, இன்று உலகத்திலேயே அதிகம் கடன் வாங்கும் நாடாக மாறி விட்டது.

நமது உறவு முறைகளை முறிக்கும் எந்தவித சட்டம், சிந்தனை, கல்வி, அரசியல் கட்சிகள், தலைவர்கள் இந்த நாட்டின் விரோதிகளாகக் கருதப்பட வேண்டும்.
அமெரிக்காவிலிருந்து கெல்லிஸ் பகவதி என்ற பொருளாதார நிபுணர் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது அவரிடம் மன்மோகன்சிங் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசனை கேட்டபோது, "உங்கள் நாடு முன்னேற வேண்டுமானால் இந்திய குடும்பங்களின் பழக்கவழக்கங்கள் மாற வேண்டும். மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெண்கள் சேமிக்கிறார்கள். அதைக் குறைக்க வழி செய்யுங்கள். செலவீனத்தை அதிகரிக்கச் செய்யுங்கள்.

வெளிநாடுகளிலிருந்து கண்ணைப் பறிக்கும் பொருள்களை கொண்டு வந்து பெரிய வணிக வளாகங்களில் (Malls) வியாபாரத்தில் தொடங்கினால் அவர்களது வாங்கும் பழக்கம் அதிகரிக்கும். பெண்கள் கஞ்சத்தனத்திலிருந்து விடுபட்டு செலவழிக்கத் தொடங்கி விடுவார்கள். இதன் மூலம் வியாபாரம், உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகமாகும் என்று 72 பக்கங்களில் ஆலோசனை வழங்கினார்.

அவர் சொன்னது அனைத்தும் இந்தியாவில் நடந்தது. ஆனால் அத்தனை வணிக வளாகங்களையும் ரசித்த குடும்பப் பெண்கள் அங்கு விற்ற பொருள்களை வாங்கவில்லை. 1992-இல் 20 சதவீதமாக இருந்த இந்திய குடும்பப் பெண்களின் சேமிப்பு 2009-இல் 27 சதவீதமாக உயர்ந்தது.

நாட்டின் மொத்த சேமிப்பு 23 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்தது. நமது குடும்பப் பெண்களின் பொறுப்புணர்வும், கட்டுப்பாடும்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேர். பொறுப்பான குடும்பங்களுக்கு நமது பெண்கள்தான் மையம்.
"குடும்பம் " என்ற அமைப்பைக் கட்டிக்காப்போம்!
இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவோம்!
-------------------------------------------------------------------
கட்செவிப் பகிர்வில் காணக் கிடைத்தது.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய குடும்பப் பெண்கள்

Post by Ramalingam K on Sat Oct 15, 2016 6:12 am

நான் வேலைக்கு போறேன்..என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா - வாட்ஸ் அப்பில் பரவிவரும் நெஞ்சை தொடும் உரையாடல் !

''நான் வேலைக்கு போறேன்...

என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!''

கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...

நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.

நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குதான் வேலையில்லையே

நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

ம்... காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?

மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

''ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலும் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!

-------------------------------------
கட்செவியில் கண்டது
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய குடும்பப் பெண்கள்

Post by T.N.Balasubramanian on Sat Oct 15, 2016 10:12 am

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா ?
இது மாதிரி 14 வேலைகள் செய்யவேண்டாம் என்று ,
பல பெண்கள் வேலைக்குப் போய்விடுகிறார்கள் .
பாவம் மாமியார்கள் . சோகம் சோகம்
பொருளாதார தேவைக்காக பெண்கள்
வேலைக்கு சென்றது,அந்த காலத்தில் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20487
மதிப்பீடுகள் : 7853

View user profile

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய குடும்பப் பெண்கள்

Post by Ramalingam K on Sat Oct 15, 2016 10:44 am

அட , தெய்வமே !

இப்படியும் கூடவா

இக்காலத்தில் குலதேவதைகள் !!!

மாமியார் மட்டுமா ஐயா - முழு குடும்பமும் பாவம்தான் - அப்படியானால் ...!!!
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum