ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 velang

நாட்டு நடப்பு - கவிதை
 ayyasamy ram

நதிக்கரை - கவிதை
 ayyasamy ram

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காமம் எதனால் உண்டாகிறது?

View previous topic View next topic Go down

காமம் எதனால் உண்டாகிறது?

Post by மூர்த்தி on Sun Oct 23, 2016 7:00 pm

ஒருவன் வண்டியை திறந்த வெளியில் அல்லது தனது வீட்டில் எப்படியெல்லாமோ ஓட்டி மகிழ்கிறான். விபத்து ஏற்பட்டாலும் அவனுடன் முடிகிறது. அதுவே வீதிக்கு வந்தால் எத்தனை அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படும்.

அதே போல் காதல் காமம் ஒரு உயிரினத்தின் உன்னதமான உணர்வாகும். காமம் அவனளவில்-அவளளவில் இருந்து விட்டால் அது இன்பம்,உன்னதமான உணர்வுமாகும்.

காமம் பற்றி வள்ளுவன் சொல்கிறான்.........

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

அது அவனை மீறி வெறியாகி வெளியே சென்று விட்டாலோ? இன்றைய நாளில் உலகெங்கும் குழந்தை முதல் முதியவர் வரை பாதிப்புக்குள்ளாகி கொலை,கடத்தல், ஆசிட் வீச்சு, இணையங்களில் பரவும் கொடூரங்கள் என பயங்கர ஆயுதமாகி அழித்து விடும்.இப்படி அழித்துக் கொண்டிருப்பதை நாம் தினமும் காண்கிறோம்.

பாலியல்வன்புணர்வு,பாலியல் முறைகேடுகள், காம வெறி உலகையே ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்படும் ஆண்களும் பெண்களும் குடும்பங்களும் சமூகமும்  இந்த அரக்கப் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவிக்கிறது.

தற்போதய அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் எல்லா பிரச்சனைகளையும் விட  பாலியல் குற்றச்சாட்டுகள் முக்கிய விடயமாக இருந்து வருகிறது. பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் பாலியல் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, நான் பாதிக்கப்பட்டேன் என்று பிரச்சாரத்தில் குரல் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்னொருபுறமாக அதிகமாகி வருகிறது.

காதலைப் போல் காமமும் ஒரு உன்னதமான மென்மையான உணர்வு.ஒருவர் விரும்பினால் மட்டுமே காதலும் காமமும் ஏற்புடையது என்கிறார் வள்ளுவர்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

பொதுவாக, காமம் என்ற சொல் உடலின்பத்தையோ வெறியையோ உணர்த்தும் வகையில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால்தான் காமத்துப்பால் எனக் கேட்டவுடனே சிலர் மருட்சி அடைகின்றனர். ஊடல் காமத்திற்கு இன்பம்.வள்ளுவன் என்ன சொல்கிறான்.............

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

இந்தக் காமம் ஒருவனது உள்மனதில் தோன்றும் விகாரங்களால் ஏற்படுகிறது என்பது புத்தர் கொள்கை. எனவே காமத்திற்குக் காரணம் மனம்தான் என்கிறது பௌத்தம்.

காமத்திற்குக் காரணம் மனம் இல்லை. அதற்குக் காரணம் வெளியில் இருந்து மனதைப் பாதிக்கும் புறப்பொருட்கள்தான் என்கிறது, ஆசீவகம்.

தமிழகத்தில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன,இனி எதுவுமே இல்லை என தொலைக்காட்சிகள், ரெமோ நாயகன் அழுததற்காக விவாதம் நடத்துகிறது.  
பிரச்சனைகள் தீர்ந்து விட்டது என்கிறீர்களா? இல்லை என்கிறீர்களா?

இன்று நடந்து வரும் காமத்திற்கு(காமவெறிக்கு) ஆளாகி உயிரைப் பறி கொடுப்போர்,பாலியல் கொடுமைகளை அனுபவிப்போர்,இவர்களை எண்ணிப் பார்த்து,இதற்கு என்ன காரணம்?  
மனமா,புறச்சூழலா அல்லது வேறு காரணங்களா?  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by Ramalingam K on Sun Oct 23, 2016 7:08 pm

காமம் என்பது எல்லா உயிர்களுக்கும் இயற்கை அளித்த உணர்வு.

காமம் இன்றேல் உலகமும் உயிர்களும் ஏது - உலகமே சூன்யமாகிவிடும்

காமம் என்பது ஆசை .

உடலின்பமும் ஒரு வகை ஆசையால் உண்டாவதே.

பயமும் சந்தர்ப்பமின்மையும் இருக்கும் வரை எல்லாம் சிறப்பாகவே இருக்கும் - காமம் உட்பட.

சந்தர்ப்பமும் கிடைத்து , பயமும் இல்லை எனில் அங்குதான் அனர்த்தம் உருவாகிறது
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by T.N.Balasubramanian on Sun Oct 23, 2016 7:12 pm

இன்று நடந்து வரும் காமத்திற்கு(காமவெறிக்கு) ஆளாகி உயிரைப் பறி கொடுப்போர்,பாலியல் கொடுமைகளை அனுபவிப்போர்,இவர்களை எண்ணிப் பார்த்து,இதற்கு என்ன காரணம்?  
மனமா,புறச்சூழலா அல்லது வேறு காரணங்களா?  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மூர்த்தி

மிகவும் யோசிக்க வேண்டிய ,அலச வேண்டிய ,தலைப்புதான் .
மனதிற்கு ,புறச்சூழலுக்கும் பங்கு உண்டு .
மற்ற காரணங்கள் விழுக்காடு விகிதத்தில் குறைவாகவே இருக்கும் .  

சிறிது வெளிவேலை இருப்பதால் ,சிறிது நேரம் கழித்து தொடர்கிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20500
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by M.Jagadeesan on Sun Oct 23, 2016 9:12 pm

Man is a social animal என்று சொல்வார்கள் .விலங்குகளுக்குத் தாய் ,தங்கை , தமக்கை என்ற பாகுபாடு இல்லை . மனிதனும் , தோன்றிய காலத்தில் இவ்வாறே இருந்தான் . தற்போதும் செய்தித்தாள்களில் தந்தை மகள் உறவு , அண்ணன் தங்கை உறவு என்ற செய்திகள் வருவதைப் பார்க்கலாம் . இவையெல்லாம் இதைக் காட்டுகிறது ? மனிதன் விலங்கு நிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது .

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு .

என்ற குறட்பாவில் சான்றோரை வள்ளுவர் ஏன் இழுக்கவேண்டும் ? " சான்றோர்க்கு " என்ற வார்த்தைக்குப் பதிலாக " மாந்தர்க்கு " என்று இருந்தாலும் வெண்பா இலக்கணம் தளை தட்டாது . பின் ஏன் " சான்றோர்க்கு "
என்ற சொல்லைப் பெய்தார் ?

" புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குதற்கு அருமையின் , அதனை அடக்கிய ஆண்மையைப் பேராண்மை என்கிறார் "

என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர் .

ஆகவே காமத்தை நெறிப்படுத்த முடியுமேயன்றி அடக்க முடியாது. அது படித்தவன் ,படிக்காதவன் , மேதை முட்டாள் என்று யாரையும் விடாது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4745
மதிப்பீடுகள் : 2318

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by T.N.Balasubramanian on Sun Oct 23, 2016 9:15 pm

சிறு வயது காதல் ,அதாவது பள்ளி வயது காதல் , ஈர்ப்பு ,(infatuation ) என்ற பிரிவில் வரும்
என்றே எண்ணுகிறேன் . விடலைப்பருவம் ,கன்னிப் பருவம் சுலபமாக ஒருவர் பால் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும் . அது காதலா , காதலின் அர்த்தம் என்ன என்று பகுத்து அறிய கூற முடியாத பருவம் .
அதை காதல் என  இரு பாலாறும் நினைத்து உருகுவதும் சில சமயம் தொடுதலில் ஆரம்பித்து ,  அதரபானம் வரை நீடிப்பது முதலியன மனம் சம்பந்தப்பட்டதே .
படிப்பெல்லாம் முடிந்து ,ஒரே அலுவலகத்திலிலோ , ஒரே துறையிலோ வேலை செய்யும் ஆண் பெண் இருவருமே யோசித்து மணம் முடித்தால் வாழ்க்கை நல்லமுறையில் அமையும் என்று பேசி முடிவு எடுத்து மணம் புரிவது ..மனம் சம்பந்தப்பட்டதே .  
அதே சமயம் வேறு சில காரணங்களால் , மனமுறிவு ,ஏற்படும் போது ,  அந்த சோகத்தை தாங்க முடியாமல் , அவசரமாக எடுக்கும் முடிவுகள் , தனக்கு கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எதிர் மறை எண்ணங்களால் கொலைகளில் முடிகின்றது . அழகு சம்பந்தப்பட்டது எனில் அந்த அழகை அழிக்க ஆசிட் கைக்கு வருகிறது .இதுவும் மனம் சம்பந்தப்பட்டதே .  

ஒரே துறையில் வேலை செய்பவர்கள் , உதாரணத்திற்கு சினிமா துறையை எடுத்துக் கொள்வோம் .
இது 90 % ஆணாதிக்கம் உடைய துறை . ஆண்கள் ஊதியம் பெறுவது அதிகம் . அதிக  சமயங்களில் ,
தன்னுடன் நடிக்க வேண்டிய நடிகை ,X அல்லது Y அல்லது Z என்று தேர்ந்து எடுக்கும் உரிமை ஆணுக்கே இருக்கிறது .  வேறு பல காரணங்களால் அதை ஒத்துக்கொள்ளும் இயக்குனர்களும் ,பட தயாரிப்பாளர்களும் உண்டு.  அந்த இடத்தில் , அந்த x ,Y ,Z தானாகத்தான் இருக்கவேண்டும்  என போட்டி மனப்பான்மையில் , சில பல தியாகங்களை, பல விதங்களில்  நடிகைகள் செய்ய தயாராக இருக்கிறார்கள் . வெற்றியும் பெறுகிறார்கள் . வேறொன்றை பார்க்கலாம் . தனியார் கம்பெனி . தனக்கு மேல் உள்ள அதிகாரி அவர் வைத்ததுதான் சட்டம் . அவருடன் வளைந்து கொடுத்துப் போனால்தான் , குடும்ப பொருளாதாரத்திற்கு , கொஞ்சம் உயர்வு கிடைக்கும் , கவனமாக பாதுகாப்பாக அப்பிடி நடந்து கொள்வதால் , பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என தியாகங்கள் செய்வதும் சூழ்நிலை காரணம்தான் . பல விஷயங்கள் இக்காலங்களில் இப்பிடித்தான் நடக்கின்றன . சம்பந்தப்பட்டவர்கள்
கவலை படுவதாக தெரிவதில்லை .  
ஆனால் சில சமயங்களில் ,சிலர் ஏமாறுவதால் , சிலர் ஏமாற்றுவதால் , பழிக்குப்பழியாக ,நேரிடையாகவோ அல்லது வேறு /மூன்றாம் ஆட்கள் மூலமாகவோ கணக்கு தீர்த்துக் கொள்கிறார்கள் . இங்கு சூழ்நிலை /மனம் ரெண்டுமே சம்பந்தப்படுகிறது .

ஆசிட் வீச்சு  / கொலை புரிதல் தவிர்க்கவே முடியாதா ? 90 % முடியாது என்றே எண்ணுகிறேன் .
better wisdom prevails ...சிறிதே புத்திக்கூர்மையுடன் , கிடைக்காவிட்டால் என்ன , உயிர் வாழ்வே முடியாதா , போன்ற சிந்திக்கும் குணமுள்ள 10% ,வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் .

காமவெறிக்கு ஆளாகும் பெண்கள் , பாதுகாப்பு இல்லாதவர்கள் . அவர்களை குறி வைத்தே சில காமவெறியர்கள் காலத்தில் இறங்குகிறார்கள் . விதவிதமாக அனுபவிக்க துடிக்கும் வெறி . இவர்கள் நோயாளிகள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20500
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by Ramalingam K on Mon Oct 24, 2016 7:16 am

பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு கற்கும்/கற்பிக்கப்படும் கல்வி முறை,

மாறிவரும் உணவு மற்றும் உடை கலாச்சாரம்,

ஆணும் பெண்ணும் சமம் என்று பேசிகொண்டு இருபாலரும் தேவையற்ற நிலைகளில் உரிமை கோருதல்,

தன்னைக் கெடுத்துக் கொள்வதற்கும், தான் கெட்டுப்போவதற்கும் கிடைக்கும் ஏராளமான சூழ்நிலை வாய்ப்புக்கள்,

பயமின்மை,

எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்னும் மருத்துவ வசதி,

தாராளமான பணப்புழக்கம்,

தட்டிக்கேட்கவும், கண்காணிக்கவும் ஆள் இல்லாத வகையில் தனிக்குடித்தனம்,

உடன் பிறந்த உறவுகள் இல்லா பிள்ளைகள்.

உரிமை/ சுதந்திரம் என்னும் பெயரில் இருபாலருக்கும் இடையே நட்பு முறை,

உழைக்காமல் உண்டு களிக்கலாம் என்னும் மனப்பான்மை,

இதுபோன்றவையும் இன்னும் பல காரணிகளும்,

இயற்கையின் இயல்பான உந்தாற்றலும் இன்றைய இதுபோன்ற அவலநிலைக்குக் காரணிகள் என்றும் கொள்ளலாம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by மூர்த்தி on Mon Oct 24, 2016 1:22 pm

ஆங்கிலத்தில் இன்ட்ரானெட்டில் ,இதன் அடிப்படையில் Lust and Love என்ற தலைப்பிட்டு கொடுத்தோம். அவர்கள் கருத்து என்ன? பார்க்கலாம்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 11, 2017 11:22 am

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3840
மதிப்பீடுகள் : 2008

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by ayyasamy ram on Sat Mar 11, 2017 11:55 am


-
காதலை விளையாட்டாய்க்
கருதாதே தம்பி!
உண்மைக் காதலை உணராமற் போனால்
ஒழிந்து போவாய்! அழிந்து போவாய்!
ஆன்மபலம் கொண்டவர்க்கும்
அஞ்சாமை பெற்றவர்க்கும்
உரிய பாதையது
ஆபத்தான அவ்வழியில்
விளையாட்டாய்ப் போகாதே!
-
-------------------------
உமர்கய்யாம் (ருபாயத்)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30953
மதிப்பீடுகள் : 9541

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by T.N.Balasubramanian on Sat Mar 11, 2017 12:24 pm

4 1 /2  மாதம் அடங்கி இருந்து,
பிறகு காமம் மறுமுறை தலைதூக்கியுள்ளதே, முதியோர்களிடமிருந்து  புன்னகை புன்னகை .  


அது சரி மூர்த்தியின் intranet   கருத்துக்கள் என்ன ஆச்சு ?
ரமணியன்  


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20500
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by மூர்த்தி on Sat Mar 11, 2017 11:58 pm

இது  செமினார் முடிவில் நடக்கும் ஒரு மாணவர் கருத்தரங்கு மட்டுமே. ஒவ்வொருவரும் பொதுவான பிரச்சனைகள் பற்றிய ஒரு தலைப்பை தெரிவு செய்வார்கள். அதிக வாக்குகள் பெறும் (intranet )தலைப்பு கருத்தரங்கில் பேசப்படும். முடிவை அவரவர்கள் கையிலே விட்டு விடுவோம்.இந்த செமினாரில் நான் கொடுத்த தலைப்பு பலரின் வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. (Lust and Love)

திருக்குறள் சொன்ன காமம் பற்றி எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் அறிவு எனக்கில்லாததால் Lust and Love என்ற தலைப்புக் கொடுத்தேன்.அதே சமயம் இங்கு வாழும் சூழ் நிலை கலாச்சாரம் போன்றவற்றின் பாதிப்பும் கருத்துகளில்  இருக்கும் என்பதும் நமது கலாச்சாரம்,சமூகச் சூழல் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதையும் கருத்தில் கொண்டு  பொதுவாக வைக்கப்படும் கருத்துகளையே
எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது.

அப்படிச்  சொல்லப்படட கருத்துக்கள் சில......

சிலரின் வாதம் அறிவியல் பக்கமாக சென்றது. dopamine , serotonin, testosterone அளவுகளின் பாதிப்புகளால் தூண்டப்பட்டு காமத்தின் பக்கம் செல்கிறார்கள் என்ற வாதமும், அதனால் தவிர்ப்பது சிரமம் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.ஆண்கள் 20 வயதளவில் testosterone அளவு 10 மடங்கு அதிகமாவதால்  அவர்களின் ஆசைகள் அதிகம் எனவும்,அதே சமயம் பெண்களின் நிலை 20-30 வயதுகளில் ஆசைகள் அதிகரித்து பின்னர் குறைவடைய ஆரம்பிக்கிறது என்றும் இதனால் பலாத்காரம் அதிகரிப்பதாகவும் கருத்துகள் வைக்கப்பட்டன.

ஆனால் அப்படி வைத்தவர்கள் தலையில் கொட்டுவது போல் பதிலடி கொடுத்தார்கள் சிலர். அந்த தூண்டுதலை தடுக்க முடியாதவன் மனிதனாக இருக்க முடியாது. மிருகமாக கருதப்படலாம் என்றும் சில முதியவர்கள் கூட  தவறு  செய்வதை காண முடிகிறது என்றும் சொல்லப்பட்டது.இதற்கு என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.(சமீப காலத்தில் வயதில் கூடிய பிரபலங்கள் சிறுவயதுப் பெண்களை மணம் முடித்தது செய்திகளாக வந்திருந்தது) ஹாலிவுட் பிரபலங்கள் பில் கொச்பி,ஜாக்சன் போன்றவர்கள் வயதில் மிக்க கூடியவர்கள் இக்குற்றச்  சாட்டுகளுக்கு ஆளானவர்கள்.

பெண்களின் அலங்காரம்,உடை போன்றவை காரணமாக பாலியல் துன்புறுத்தல் அதிகமாகிறது என்ற வாதம் எடுபடவில்லை.சினிமா,தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் காமத்திற்கு தூண்டுதலாக இருக்கின்றது என்ற வாதமும் வைக்கப்பட்டது.ஏனோ பலர் அதை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. சிலர் திருமணத்தின் பின் ஏற்பட்ட நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம் என்றனர். ஏன் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாதா/பிரிந்து வேறு மணம் முடிப்பது/மருத்துவரை நாடுவது இப்படி பல வழிகள் இருக்கிறதே என்ற கேள்விகளை சிலர் எழுப்பினர்.

காமம் அதைத் தொடர்ந்து வரும் விபச்சாரம்,பாலியல் துன்புறுத்தல் பற்றி வைக்கப்பட்ட கருத்தில், 25% ஆண்களும்,15% பெண்களும் இவற்றில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருக்கின்றனர்(இங்குள்ள நிலை). அதனால் காமம் இருவருக்கும் பொதுவானது என்றும், இருவருமே தப்பான வழியில் செல்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. (ஒரு பெண் ஆணை பலாத்காரப்படுத்திய வழக்கொன்றை சுட்டிக் காட்டினார் ஒருவர்.)

சுவையான கேள்வி ஒன்றை ஒருவர் வைத்தார். உடலுறவு காரணமாக ஏற்படும் ஆர்வம்/ஆசை காமமா அல்லது பலாத்காரம் செய்வது காமமா? (lust and sex  -assault). (காமம் என்ற உணர்வை எப்படி எல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள்?) காமம் வேறு,காமவெறியினால் ஏற்படும் தாக்குதல்கள் வேறு என்று விளக்கம் கூறினர் சிலர்.

சமீப காலங்களில் பள்ளிகளில் வேலை செய்யும் இடங்களில் அதிக தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்ற அறிக்கையை சுட்டிக் காட்டினர் சிலர்.(sexual abuse, sexual assault.,Sexual harassment, -in schools,colleges, working palces,millitary)

ஒவ்வொரு 98 வினாடிகளுக்கு ஒரு பாலியல் தாக்குதல் அமெரிக்காவில் நடைபெறுகிறது.எட்டு நிமிடத்துக்கு ஒரு குழந்தை(16 க்கு குறைந்த) தாக்குதலுக்கு உள்ளாகிறது.அதே சமயம் ஆயிரத்தில் ஆறு பேர் மட்டுமே தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.ஐந்து பெண்களில் ஒரு பெண்ணும்,20 ஆண்களில் ஒரு ஆணும் பாலியல் தாக்குதலுக்கு(rape) ஆளாகிறார்கள்  எனவும்,  பலர் சில காரணங்களுக்காக வெளியிடுவதில்லை எனவும்,இது ஒரு கொடிய தொற்று நோய் எனவும் அதை நம்மால் தடுக்க முடியவில்லை எனவும் -முன்னாள் சனாதிபதி ஒபாமா தனது பதவிக்கால இறுதியில் வருத்தத்துடன் தெரிவித்த கருத்தாகும்.

இதனால் கிராமப்புற பெண் குழந்தைகளை கல்லூரிகளுக்கு அனுப்ப பெற்றோர் அச்சமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.இப்படியான குற்ற வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவது மிகக் குறைவாகவும்,பலர் சில மாதங்களிலேயே தண்டனை முடிந்து வெளியே வந்து விடுவதையும் காண முடிகிறது.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by மூர்த்தி on Sun Mar 12, 2017 12:05 am

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி, தப்புச் செய்யும் ஆண்-பெண் ஒருபுறம், காம வெறியுடன் பலாத்காரம்,ஆசிட் வீச்சு,கொலை,கடத்தல்  என செல்வது இன்னொருபுறம்.ஒன்று காமவெறி(Adultery) ,மற்றது மிருக குணம். இந்தக் கருத்து வைக்கப்பட்ட போது இப்படி சிந்திப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்பட்டது.

Love - infatuation (காதல்-ஈர்ப்பு) இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் ஆசையை வளர்த்துக் கொள்வதால் காமவேறி-பலாத்காரம் (காமம் அல்ல) ஏற்படுகிறது என்றும்,இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை தவறாகப் புரிந்து கொள்வதால் ,பெண் தன்னை விரும்புகிறாள் என்று ஆசையை வளர்த்துக் கொள்வதும்,அது கிடைக்காமல் போவதால்/தவறாகி விடுவதால் பலாத்காரம் ஏற்படுகிறது என்ற கருத்தும் எண்ணிப் பார்க்க வைத்தது. உண்மையாகவும் பட்டது. டிஸ்கொ,பார்களுக்கு வருவோரில் பலர் இப்படி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

(சமீப கால தமிழ் நாட்டில் நடந்த சம்பவங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக  உள்ளது. காதலிக்க மறுத்த மாணவி ஆசிட் வீச்சுக்கு உள்ளானாள் போன்ற சம்பவங்கள். தொட்டுப் பேசினால்,சிரித்தால்,நெருங்கிப் பழகினால் உடனே தவறாகப் புரிந்து கொண்டு பின்னால் துரத்துவது…..இதற்கு சினிமாவும்/தொலைக்காட்சியும் காரணமாக இருக்கலாமா?.)

Love -Lust ஆங்கிலத்தில் சற்றே மாறுபட்டிருந்தாலும்,தமிழில் காதல் - காமம் ஒன்றல்ல.ஆனால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று செர்ந்திருக்க வேண்டியவை.இரண்டும் இயற்கையான மனித உணர்வுகள்.காமம் குறுகிய கால இன்பம்,காதல் நீண்டகால இன்பம்.காதலினால் காமம் ஏற்பட வேண்டும். காமத்திற்காக காதல் ஏற்படக் கூடாது.இப்படியான கருத்துகளை பலரும் வரவேற்றார்கள்.

இப்படி பல கருத்துக்கள் வைக்கப்படடாலும் மாணவர்கள் என்பதால் அவற்றை தடுக்கும் வழிகளை அவர்களால் வைக்க முடியவில்லை.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: காமம் எதனால் உண்டாகிறது?

Post by T.N.Balasubramanian on Sun Mar 12, 2017 9:19 pm

நன்று நல்ல  பகிர்வு .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Mar 12, 2017 9:19 pm; edited 1 time in total (Reason for editing : edited once)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20500
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum