ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

புதிய சமயங்கள்
 gayathri gopal

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

View previous topic View next topic Go down

இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by மூர்த்தி on Mon Oct 24, 2016 1:26 pm

இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

இரண்டு பிறந்த நாளைக் கொண்டாடப் போகும் குழந்தை. சில சமயம் இப்படி பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகளைக் காண முடியும்.மாசி மாதம் 29 இல் பிறந்தால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பிறந்த நாள் வரும். நம்மில் சிலருக்கு இரண்டு பிறந்த நாள்.ஒன்று திகதி அடிப்படையில்,இன்னொன்று நட்சத்திர அடிப்படையில்.

ஆனால்  லின்லே கோப் என்ற இந்தக் குழந்தை அப்படியல்ல. நிசமாகவே இரண்டு பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறாள்.வருடத்தில் இரண்டு பிறந்த நாள் பரிசுக்காக பெற்றோரிடம் அடம் பிடிக்கப் போகிறாள்.

டெக்சாசை சேர்ந்த தாய் மார்கரெட்டின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு 16 வது வாரத்தில் ஒரு கட்டி(sacrococcygeal teratoma ) இருப்பது அல்ற்றாசவுண்ட் சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.அப்போது அவளின் எடை 1 lb 3oz ஆகும்.தொடர்ந்து மருத்துவர்கள் அவதானித்த போது,கட்டி அப்படியே இருப்பது கண்டனர். 23 வது வாரத்தில் குழந்தை வளர்ந்து வருவதால்,டியூமர் பெரிதாகி இதையத்தை அழுத்தி குருதிச் சுற்று தடைப்பட்டு இறப்பு ஏற்படலாம் என்று கண்டனர்.

மருத்துவர்கள் ஆலோசனையின்படி அந்தக் குழந்தை வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, 20 நிமிடங்கள் வெளியே வைத்து கட்டி -tumour- அறுவைசிகிச்சை(do-or-die operation)  மூலம் அகற்றப்பட்டு மீண்டும் உள்ளே வைக்கப்பட்டது.கருப்பை நீர் புகாவண்ணம் சீல் வைக்கப்பட்டது.
36 வது வாரத்தில் C-section  மூலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது.இப்போது குழந்தையின் எடை 5 lb -5 oz . வாழ்த்துகள்.(நன்றி-Dr. Darrell Cass, co-director of Texas Children’s Fetal Centre)
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 960
மதிப்பீடுகள் : 466

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by T.N.Balasubramanian on Mon Oct 24, 2016 4:20 pm

மருத்துவ ரீதியாக இருமுறை பிறந்ததாக கொண்டாலும் ,
36 ம் வாரம் சிசேரியன் மூலம் பிறந்த தினம்தானே தொப்புள்கொடி
துண்டிக்கப்பட்டு ,பிறந்ததாக எடுத்துக்கொள்ளவேண்டும் .

எது எப்பிடி இருப்பினும் , மருத்துவ குழாம் , செய்த சாதனைக்கு ஒரு பெரிய ஸலாம் .

வாழ்த்துகள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by ChitraGanesan on Mon Oct 24, 2016 5:48 pm

avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by ராஜா on Tue Oct 25, 2016 1:34 am

அதிர்ச்சி

பாராட்ட வார்த்தைகள் இல்லை ....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30775
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by T.N.Balasubramanian on Tue Oct 25, 2016 10:20 am

மாசி மாதம் 29 இல் பிறந்தால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பிறந்த நாள் வரும்.

மாசி மாதமும்29 ம் தேதியும் , பிப்ரவரி 29 போல் லீப் வருட கணக்கில் அடிபடுமோ ?
தெரியாத விஷயம் !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by ayyasamy ram on Tue Oct 25, 2016 11:54 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35064
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by மூர்த்தி on Tue Oct 25, 2016 3:40 pm

பாராட்டத்திற்கு உரியது தான். விரைவில் நடக்க இருக்கும் தலை மாற்று அறுவை சிகிச்சை இதைவிட ஆச்சரியமாக இருக்கும். எலி, நாய்,குரங்கில் தலைமாற்று வெற்றியடைந்த நிலையில், மனிதனுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது.

தமிழ் மாசியில் லீப் வருடம் கிடையாது. ஆனால் 27/28/29/30/31  என நாட்கள் வரும்.

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 960
மதிப்பீடுகள் : 466

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by T.N.Balasubramanian on Tue Oct 25, 2016 4:44 pm

துர்முகி / மன்மத (சென்ற )ஆண்டில்
சித்திரை 30 /31 தினங்கள்
வைகாசி 32/32
ஆனி...... 31/31
ஆடி ........32/32
ஆவணி ..31/31
புரட்டாசி ..30/30
ஐப்பசி ......30/30
கார்த்திகை.30/30
மார்கழி......29 /29
தை...........30/29
மாசி .........29/30
பங்குனி.....31/31 தினங்கள்
என்று இருக்கிறது .
இந்த முறையில்தான் மாதங்கள்/நாட்களும் வருடாவருடம்வேறுபடுகின்றன. என்ன முறை என்று அறிய ஆவலாய் உள்ளேன் ,

எப்பிடி இருப்பினும் குறைந்தது 29 நாட்கள் வருகின்றன . ஆகவே மாசி 29 இல் பிறந்திருந்தாலும் ,ஒவ்வொரு வருடமும் 29 தேதி வந்து விடும் . 30 தேதியோ 31 தேதியோ பிறந்து இருந்தால் உங்கள் கணக்கு சரியாக வரும் என்று நினைக்கிறேன், மூர்த்தி  .

ரமணியன்
@மூர்த்தி


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by மூர்த்தி on Tue Oct 25, 2016 7:54 pm

ஐயா உங்கள் கணக்கு சரியானதுதான்.  உங்களுடன் வாதம் செய்ய முடியுமா? அந்தக் குழந்தை வாழ்வது டெக்சாசில்.அதனால் ஆங்கில மாதம் பெப்ரவரி தான். தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் மாசி என எழுதி விட்டேன். இனிமேல் கவனிக்கிறேன்.

தமிழ்- இந்து கலெண்டர்,  காலையில் இருந்து மறு நாள் காலை வரை ஒரு நாள் என்பதும், சந்திர சுற்றை வைத்தும்  கணக்கிடுகிறார்கள். 14+14 நாள் .பௌர்ணமி,அமாவாசை நடுவில் வருகிறது. மொத்தம் 29 நாட்கள்.சந்திரன் ஒளியை சூரியனிடம் இருந்து பெறுவதால்,சூரிய ஒளியை பெறுவதைப் பொறுத்து சந்திரனின் இரவு பகல் வேறுபடுகிறது.அத்துடன் சந்திரன்,பூமி சுற்றும் வேறுபடுகிறது.
ஆங்கில முறையில்365.25 நாட்கள்,அதனால் லீப் வருடம் வருகிறது.
தமிழ் மாதம் 29.5 x 12 = 354 நாட்கள்.
மேலதிக நாட்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சரிசெய்யப்படுகிறது.

இதனால்தான் இரண்டு நாட்காட்டிகளுக்கும் இடையே(Hindu-Gregorian) பண்டிகைத் திகதிகள் மாறுபடுகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 30 (ஆங்கில மாதம்) இல் வருகிறது. 2017 இல் அக்டோபர் 19 இல் வருகிறது. எப்போதும் 11-12 நாட்கள் வித்தியாசம் இருக்கும்.
தைப்பொங்கள்(இந்திரவிழா) சூரியன் வட துருவத்தில் இருந்து திரும்பி வரும் நாள் வருகிறது.

இஸ்லாமிய நாட்காட்டியும் இதே போல் சந்திரனை வைத்து கணக்கிடப் பட்டாலும் சிறிய மாற்றங்கள் உண்டு. இஸ்லாமிய முறைப்படி மாலையில் இருந்து மறு நாள் மாலை வரை ஒரு நாள் ஆகும்.அத்துடன் பிறை காண்பதைப் பொறுத்து சில இடங்களில் மாற்றம் பெறுகிறது.இஸ்லாமியர்களிடையே பல வாதங்கள் இன்றும் இருப்பதால் சரியான நாட்காட்டியை உருவாக்க முடியவில்லை.  முதல் பிறையை வைத்தே அடுத்த மாதம் தொடங்க வேண்டும் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது.

நன்றி- ஹவாய் ஆதீனம்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 960
மதிப்பீடுகள் : 466

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by T.N.Balasubramanian on Tue Oct 25, 2016 8:58 pm

நன்றி மூர்த்தி .

முன்பெல்லாம் வெள்ளி /சனி அன்றுதான் வருவீர்கள் .
இப்போது என்ன ஹாலிடேஸ் ஆ ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by சிவனாசான் on Wed Oct 26, 2016 9:06 am

இதிலென்ன சந்தேகம் முழு பரிநாமம் பெற்று வெளி வந்த ( குழந்தை )
நாள் எதுவோஅதுதான் பிறந்த நாள். முக்கிய மாக அரசியல் வாதிகள்
பிறந்த நாள் கொண்டாடுவது போல் அல்ல பிறந்த நாள் கொண்டாட்டம்,
அதாவது பிறந்தநாளில் என்ன நட்சத்திரமோ (ஜென்ம நட்சத்திரம்>>)அது
அடுத்த ஆண்டு பட்சம் ( தேய்பிரையா, வளர்பிரையா என...)பார்த்து அந்
நாளில் கொண்டாடுவதுதான் சரியான மரபு, நியதியும் கூட அன்பரே.>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by T.N.Balasubramanian on Wed Oct 26, 2016 12:55 pm

P.S.T.Rajan wrote:இதிலென்ன சந்தேகம்   முழு பரிநாமம் பெற்று வெளி வந்த ( குழந்தை )
நாள் எதுவோஅதுதான் பிறந்த நாள்.   முக்கிய மாக அரசியல் வாதிகள்
பிறந்த நாள் கொண்டாடுவது போல் அல்ல பிறந்த நாள் கொண்டாட்டம்,
அதாவது பிறந்தநாளில் என்ன நட்சத்திரமோ (ஜென்ம நட்சத்திரம்>>)அது
அடுத்த ஆண்டு பட்சம் ( தேய்பிரையா, வளர்பிரையா என...)பார்த்து அந்
நாளில் கொண்டாடுவதுதான்  சரியான மரபு, நியதியும் கூட   அன்பரே.>>>
மேற்கோள் செய்த பதிவு: 1225490

அய்யா, பிறந்த நாள் நட்சத்திரம் பார்த்து , மாதம் , நட்சத்திரம் கூடி இருக்கின் ஆண்டாண்டு பிறந்த நாள் கொண்டாட சரியான நாள் ஆகும் .

தேய்பிறையா ,வளர்பிறையா பார்த்து கொண்டாடுவது நியதி, மரபு .  சரி இல்லையே .

தேய் பிறை /வளர்பிறை --திதிகளுக்குத் தான் வரும் . ( நீத்தோருக்கு  செய்யவேண்டிய காரியங்கள் , தமிழ்மாதம் /தேய்பிறை அல்லது வளர்பிறை / திதி அன்று )
 இங்கு நட்சத்திரம் கணக்கில் வராது

 தமிழ் மாதம் /நட்சத்திரம் --உயிருடன் இருக்கும் ,நாம் கொண்டாட விரும்புபவரின் பிறந்த நாளுக்கு பார்க்கவேண்டியவை .   இங்கு பிறை /திதி கணக்கில் வராது .


இது நானறிந்த வரையில் . தவறாக நினைக்கவேண்டாம் PST rajan அவர்களே !

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Oct 26, 2016 12:57 pm; edited 1 time in total (Reason for editing : edited once)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by மூர்த்தி on Wed Oct 26, 2016 2:49 pm

ஹலிடேஸ் கிடையாது. காலையில் செய்தி படிக்கும் போது சில சமயம் வருவதுண்டு.அது ஹலிடேயாக தெரிகிறது.நான் காலை வரும்போது உங்களுக்கு மாலை நேரம். காரணம் நேர வேறுபாடு 9 1/2 மணித்தியாலங்கள்.(அடுத்த மாதம் மாறுகிறது10 ½ -standard time-daylight savings time) அத்துடன் சில வேலை நேர விதிமுறைகள் காரணமாக சில சமயம் ஒரு நாள் இரண்டு நாள் தாமதமாக செல்ல முடியும்.பெரியவங்க சிலர் வழக்கத்திற்கு அதிகமாக வேலை செய்யும் போது, அந்த மணித்தியாலங்களுக்கு அவர்களுக்கு மேலதிக நேர சம்பளம் கிடைக்காது என்பதால்,மேலதிக நேரத்தை எப்போதாவது விடுமுறையாக1/2,1,2 நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 960
மதிப்பீடுகள் : 466

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by T.N.Balasubramanian on Wed Oct 26, 2016 7:01 pm

தலைப்பு செய்தி இன்றைய டைம்ஸ் ...சென்னை பதிப்பில் வந்துள்ளது .

பெ(ய்)லர் ஹாஸ்பிடல் --ஹூஸ்டன் /டெக்சாஸ்
தாய் ...மார்கரெட் போமெர்
குழந்தை பெயர் ..லின்லி ஹோப் .

( எனது உறவினர் இதே ஹாஸ்பிடலில் பீடியாட்ரிக் கார்டியாலஜிஸ்ட் --பிசிஷியன் ஆக வேலை பார்க்கிறார் )

தாயும் சேயும் நலமாய் வாழ வாழ்த்துகள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum