ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

குச்சி ஐஸ் வேணுமா…
 ayyasamy ram

கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
 ayyasamy ram

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
 M.Jagadeesan

மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?

View previous topic View next topic Go down

யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?

Post by ayyasamy ram on Mon Oct 24, 2016 8:51 pm

திருமணம் முடிந்த புதிதில் அம்மா, உறவினர், நண்பர்
என எல்லோரும் கேட்கும் கேள்வி ஏதாவது நல்ல செய்தி
இருக்கா? அல்லது ஏதாவது விஷேசம் உண்டா? எ
ன்பதுதான்.

நாம் கூட பல திரைப்படங்களில் இந்த வசனம் இடம்
பெறுவதைப் பார்த்திருப்போம். அதாவது தனது மகள்
கருவுற்று இருக்கிறாளா? என்பதை அம்மாக்கள் நாசுக்காக
கேட்கிற கேள்வியாம். இந்தக் கேள்வியை மையமாக
வைத்துக் கொண்டு 3 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய
Any Good News என்ற ஒரு காணொளியை
வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப்.

இவர் ஏற்கெனவே கொடைக்கானல் வோன்ட்
(Kodaikkanal Won’t) காணொளியில் பங்காற்றிய
அதிர்வை ஏற்படுத்தியவர்.

யூனிலீவர்க்கு எதிராக சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக வரிகள்
எழுதி பாடிய சோபியா, இந்தக் காணொளியில் பெண்களின்
நிலையை உண்மையாகப் பதிவு செய்துள்ளார். பெண்கள்
எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்கள் கருத்தரித்து குழந்தை
பெற்றுக் கொள்ளவில்லை எனில் சமூகமும் சரி
அப்பெண்ணின் குடும்பமும் சரி அவரது சாதனைகளை
அங்கீகரிக்காது.

ஏன் அவரது அம்மாவான மற்றொரு பெண்ணால் கூட
இச்சாதனைகள் புறந்தள்ளப்படும் என்பதை தனக்கே உரிய
பாணியில் சொல்லியுள்ளார் சோபியா அஷ்ரப்.
இந்த 3 நிமிடக் காணொளியில் அவரே பாடி நடித்துள்ளார்.

காணொளியின் ஆரம்பத்தில் அம்மா தன் மகளிடம் ஏதாவது
நல்ல செய்தி இருக்கிறதா? என்று கேட்கிறார். அதற்கு அவரது
மகள் அன்றாட வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த நல்ல
விஷயங்களை தான் செய்து மகிழ்ந்த தருணங்களைக் கூற
அவரது அம்மா மகள் கூறிய எதற்கும் பதில் பேசாமல்
மறுபடியும் நல்ல செய்தி இருக்கிறதா? எனக் கேட்கிறார்.

இப்பொழுது மகளோ தனது அலுவலகம், பதவி உயர்வு
பற்றியெல்லாம் சொல்கிறார். இவற்றையும் அவரது அம்மா
கணக்கில் கொள்ளாமல் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க
இப்பொழுதோ சற்று ஆவேசமாக உலக அரசியல்
பிரச்சினைகளிலும் அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் வறுமை
ஒழிப்பிலும் தான் முக்கியப் பங்கெடுத்ததாக கூறும் மகள்
ஆணாதிக்கத்தை முற்றிலும் ஒழித்ததாகவும் கூறுகிறார்.

இவை எல்லாவற்றிற்கும் அமைதியாக இருந்துவிட்டு மறுபடியும்
அதே கேள்வியை அதே ஒலியில் கேட்கிறார் அவரது அம்மா.

அந்த நாசுக்கான கேள்விக்கு கடைசியாக இல்லை என்ற
பதிலைச் சொல்கிறார் மகள். அந்தப் பதிலுக்கு அம்மாவின்
முகபாவனை பாவம் நிறைந்ததாகவே இருக்கிறது.

இந்தக் காணொளியானது இசை நாடகம் போன்றே இருக்கிறது,
அவரது அம்மா கேட்கும் கேள்விகெளுக்கெல்லாம் தன்னிடம்
உள்ள சின்ன கிடாரை இசைத்துக் கொண்டே பதிலைப் பாடலாகச்
சொல்கிறார் மகள்.

உண்மையில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் மகளிடம்
தொடர்ந்து அந்த ஒரே கேள்வியையே கேட்கிறார் அம்மா.
அப்பெண்ணின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது?
அலுவலகச் சூழல் எப்படி இருக்கிறது? உண்மையில் அவளுக்கான
பிரச்சினைகள் என்ன? என்பதைப் பற்றி அறிந்துகொள்ள அவரது
அம்மாவுக்கு ஆர்வம் இல்லை.

அவரது ஆர்வம் எல்லாம் தனது மகள் கருத்தரித்துவிட்டாளா?
இல்லையா? என்பதுதான். அப்படியே இல்லை என்ற பதில் வந்த
போது கூட தனது மகளுக்காக அவர் வருத்தப்படவும் இல்லை

மாறாக பாவப்படுகிறார். நீ என்ன சாதித்து என்ன பயன்? என்பது
போன்ற முகபாவனையை வெளிப்படுத்துவது அப்பெண்ணின்
அத்தனை சாதனைகளையும் மகிழ்ச்சிகளையும்
கேள்விக்குட்படுத்துகிறது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29819
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?

Post by ayyasamy ram on Mon Oct 24, 2016 8:51 pm

தற்போதைய சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்வது,
திருமணத்தில் தனக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுப்பது,
பிடித்ததைப் படிப்பது என பல விஷயங்களிலும் சுதந்திரமாக
செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. உண்மையில்
இவ்வாறு இருக்கும் பெண்களின் சதவீதமே குறைவாகத்தான்
உள்ளது.

இத்தகைய பெண்கள் திருமண வாழ்க்கைக்குப் பின் அதே
நிலையைத் தொடர முடிகிறதா? என்பதும் கேள்விதான்.
இது போன்ற நிலையில் பெண்கள் என்னதான் சாதித்தாலும்
அவரது அங்கீகாரம் என்பது குழந்தையைப் பெற்றெடுப்பதில்தான்
இருக்கிறது.

பெண் என்பவள் முதலில் தாயாகத்தான் சமூகத்தில் சித்தரிக்கப்
படுகிறார். அதன் விளைவே அவளுக்கு குழந்தை பிறந்தால்தான்
அவளுக்கான் அங்கீகாரம் கிடைக்கும் என்பதும். பல பெண்களின்
அம்மாக்களே இதனை செய்வது உண்டு.

இவ்வளவு முக்கியமான கருத்தை கொஞ்சம் ஜாலியாக இந்தக்
காணொளியில் காணலாம்.

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29819
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?

Post by T.N.Balasubramanian on Mon Oct 24, 2016 9:12 pm

ஆம் அதுதான் நல்ல செய்தி ,சந்தேகம் இல்லாமல் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19875
மதிப்பீடுகள் : 7214

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum