புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
ராஜா
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
ராஜா
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ayyasamy ram
திட்டி வாசல்
ayyasamy ram
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் SK
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
சில்லுகள்...
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
indira amirthan |
| |||
prevel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
கூரை வீட்டிலிருந்து மாளிகைக்கு...
கூரை வீட்டிலிருந்து மாளிகைக்கு...

--
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரையும் நடிகரையும்
உருவாக்கிய ஆணிவேர் இவர்தான்!
‘‘சிதம்பரத்துலதான் நான் பிறந்து, வளர்ந்தேன். ரொம்ப சாதாரண
குடும்பம். வரலட்சுமி நோன்பு அப்ப பிறந்ததால எனக்கு வரலட்சுமினு
பெயர் வைச்சாங்க...’’
சங்கோஜம் தென்பட்டாலும் கம்பீரமாகவே பேச ஆரம்பிக்கிறார்
வரலட்சுமி மோகன். எடிட்டர் மோகனின் மனைவி.
‘தனி ஒருவன்’ மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகியோரின்
அம்மா என்றால் சட்டென்று
அனைவருக்கும் இவர் யார் என்று புரிந்து விடும்.
அந்தளவுக்கு கிளை பரப்பி கனிகளையும், பூக்களையும் உலகுக்கு
கொடுத்துக் கொண்டிருக்கும் மோகன் குடும்பத்தின் ஆணிவேர்
சந்தேகமேயில்லாமல் இவர்தான்.
எப்படி இது சாத்தியமானது? தன் வாழ்க்கைப் பயணத்தின் வழியே
அதற்கு விடை தருகிறார் வரலட்சுமி மோகன். ‘‘சின்ன வயசுலேயே
அம்மா தவறிட்டாங்க. ஒரே ஒரு அக்கா. நான் இரண்டாவது. எட்டாவது
வரை ஓர் ஊர்லயும், பதினொண்ணாவது வரை இன்னொரு ஊர்லயும்
படிச்சேன். எங்க வீடு அக்ரஹாரத்துல இருந்தது. ரொம்ப ஆச்சாரமான
குடும்பம். தெருவுல ஃப்ரெண்ட்ஸோட விளையாடினாலும் தாகம்
எடுத்தா எங்க வீட்ல வந்துதான் தண்ணீர் குடிப்பேன்.
அப்படித்தான் நான் வளர்ந்தேன்.
இப்படி இருந்த என்னை தலைகீழா மாத்தினது காந்தி கிராமம்.
டீன் ஏஜ் வயசுல அங்க அடியெடுத்து வைச்சேன். காந்தியக்
கொள்கைகளை அப்படியே இம்மி பிசகாம பின்பற்றும் இடம் அது.
தினமும் குரான், பகவத்கீதை, பைபிள்ல இருந்து சர்வமத பிரார்த்தனை
நடக்கும். பிராமினா வளர்க்கப்பட்ட என்னுடைய ஆச்சாரங்கள் கொஞ்சம்
கொஞ்சமா உதிர்ந்த இடம் அதுதான்...’’ தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை
மறைக்காமல் வெளிப்படுத்தும் வரலட்சுமி மோகன், காரைக்குடியில்
பிஏ படித்திருக்கிறார்.
‘‘அப்ப சென்னைல இருக்கிற எங்கப்பாவை பார்க்க அடிக்கடி வருவேன்.
அவர் கோயில் அர்ச்சகரா இருந்தார். அப்பா வீட்டுக்குப் பக்கத்துலதான்
என் கணவர் தங்கியிருந்தார். வயது வித்தியாசம் இருந்தாலும் அப்பாவும்
இவரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்.
நிறைய விஷயங்களை பரிமாறிப்பாங்க. அப்பாவும் நானும் பேசறப்ப
எல்லாம் இவரைப் பத்தின பேச்சும் வரும். ரொம்ப உயர்வா இவரைப்
பத்தி அப்பா சொல்வார். கேட்கக் கேட்க ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும்
இருக்கும். ஏன்னா, ஒரு நிகழ்வைப் பத்தி நான் என்ன நினைக்கிறேனோ
அதையேதான் இவரும் அப்பாகிட்ட பேசியிருப்பார்!
யோசிச்சுப் பார்த்தா என் கணவர் மேல எனக்கு காதல் வந்ததுக்கே
எங்கப்பாதான் காரணம்னு நினைக்கறேன். நல்ல கணவரா, நல்ல
மருமகனா இவர் இருப்பார்னு அப்பா கணிச்சிருக்கலாம். எனக்கு அம்மா
கிடையாது. இவருக்கு அப்பா கிடையாது. இந்த ஏக்கங்கள் கூட எங்களை
இணைச்சிருக்கலாம்.
என் கணவருக்கு சொந்த ஊர் மதுரை பக்கம் திருமங்கலம். பனிரெண்டு
வயசுல சென்னைக்கு வந்திருக்கார்.
அதுவும் தன் ஊர்லேந்து நடந்தே! முதல்ல பாண்டிபஜார்ல தங்கியிருக்கார்.
டணால் தங்கவேலுகிட்ட வேலை பார்த்திருக்கார். தங்கவேலு அண்ணனுக்கு
பசங்க கிடையாது. அதனால என் கணவரை தன் மகனா வளர்த்திருக்கார்.
‘நீயும் சினிமாவை கத்துக்கோ... எடிட்டருக்குதான் இப்ப நல்ல மரியாதை’னு
சொல்லி அவர்தான் இவரை எடிட்டிங் கத்துக்க வைச்சிருக்கார்.
அப்ப இவரோட மாச சம்பளம் பதினைந்து ரூபாய். இது பத்தாதுன்னு
தங்கவேலு அண்ணன் தன் கைல இருந்து மாசா மாசம் இன்னொரு
பதினைந்து ரூபாயை கொடுப்பாராம். இந்த விஷயம் எல்லாம் எங்கப்பா
என்கிட்ட சொன்னதுதான்...’’ என்று பேசிக் கொண்டே வந்த வரலட்சுமி
சட்டென்று சுதாரித்து கணவரை ஏறிடுகிறார்.
‘ஏங்க... எல்லாத்தையும் சொல்லிடலாமா..?’’ கேட்ட மோகன் பக்கென்று
சிரிக்கிறார். ‘‘நம்மகிட்ட ஏது ஒளிவு மறைவு? தாராளமா சொல்லும்மா...’’
க்ரீன் சிக்னல் கிடைக்க, ‘எப்படி எங்களுக்குள்ள மனப்பொருத்தம்...’
என்று நம்மை நோக்கி பார்த்தபடி தொடர்ந்தார். ‘‘நாங்க பார்க், பீச்சுன்னு
எங்கயும் சுத்தலை. ‘உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்’னு
ஒருநாள் சொன்னார்.
இதுக்காகத்தானே காத்திருந்தேன்? உடனே சம்மதிச்சேன். எங்கப்பாவும்
தடையேதும் சொல்லலை. மனப்பூர்வமா ஆசீர்வதிச்சார்.
இத்தனைக்கும் என் கணவர் எங்க சமூகத்தைச் சேர்ந்தவர் இல்ல...
ஏன், மதமும் வேற வேற. ஆனா, இந்த வேறுபாடு எதுவுமே எனக்கும்
எங்கப்பாவுக்கும் தோணலை. நான் பிஏ முடிக்கிறப்ப எங்க கல்யாணம்
நிச்சயமாச்சு.
1972ல திருத்தணில கல்யாணம். அப்புறம் மதுரை போனோம்.
இவரோட மத வழக்கப்படி திரும்பவும் அங்க கல்யாணம் செஞ்சுகிட்டோம்.
-
-----------------------
Last edited by ayyasamy ram on Sat Jan 28, 2017 7:18 pm; edited 1 time in total
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410
Re: கூரை வீட்டிலிருந்து மாளிகைக்கு...

--
உண்மைல நான் மணந்தது கணவரை இல்ல... தாயை. அந்தளவுக்கு
எனக்கு தாயுமானவரா இவர் இருந்தார்... இருக்கிறார்... பொய் சொல்லலை.
நடந்ததை பூரா கேட்டா நீங்களே இந்த முடிவுக்குத்தான் வருவீங்க.
மணமானதும் வடபழனி, ராகவன் காலனில வீடு பிடிச்சோம். அப்ப
எல்லாம் வேற மதத்துக்காரங்களுக்கு வீடு தர மாட்டாங்க. சினிமால
இருக்காங்கன்னா கேட்கவே வேண்டாம். இந்த சிரமம் எல்லாம் எ
ங்களுக்கு ஏற்படலை. வீடு சுலபமா கிடைச்சது. மாடிக்கு மேல ஓலை
போட்ட கூரை.
இதுதான் எங்க வீடு. வாடகை, மாசம் 55 ரூபாய். பாத்ரூம், குளியலறை
எல்லாமே கீழ. குடிக்கிற தண்ணீரையும் கீழேந்துதான் எடுத்துட்டு வரணும்.
பெரும்பாலும் பழைய சோறுதான் சாப்பிடுவோம். சினிமால இவர்
இருக்கிறதால நல்ல சாப்பாடு இவருக்கு கிடைக்கும். ஆனா, வீட்ல நான்
பழைய சோறு சாப்பிடுவேன்னு அங்க எதையும் சாப்பிட மாட்டார்.
வீட்டுக்கு வந்து என் கூட சேர்ந்து பழைய சோறை சாப்பிட்டுப் போவார்.
அப்ப... அந்த வீட்ல எனக்குக் கிடைச்ச மனநிம்மதியும் சந்தோஷமும்
பாதுகாப்பும் இருக்கே... ஆண்களுக்கு இது புரியாது.
பெண்களால மட்டுமே உணர முடிஞ்ச சந்தோஷம் இது...’’
குரல் தழுதழுக்க ஆரம்பிக்கவே வரலட்சுமி அமைதியாகிறார்.
சட்டென்று மோகன் கொண்டு வந்து கொடுத்த நீரை ஒரு மடங்கு குடித்து
விட்டு இயல்புக்குத் திரும்புகிறார். ‘‘என்னை வேலை செய்ய
விட்டதேயில்ல. தண்ணீரைப் பிடிச்சு வைப்பார். எழுந்திருக்கறதுக்குள்ள
சமையல் செஞ்சு முடிச்சிருப்பார். ஆனாலும் வேலைதான் இவருக்கு
முதல் மனைவி. இரவு பகல் பார்க்காம உழைப்பார்.
சைக்கிள்லதான் வேலைக்கு கிளம்புவார்.
நமக்காக இப்படி நாக்கு செத்துப் போய் பழைய சோறை
சாப்பிடறாரேன்னு ஒருநாள் அசைவம் சமைக்கலாம்னு முடிவு செஞ்சேன்.
கறிக்கடைக்காரர் என்னைப் பார்த்ததுமே, ‘அப்படி ஓரமா போம்மா...
இந்த வாசனை உங்களுக்கு பிடிக்காது’னு சொன்னது இப்பவும் நினைவுல
இருக்கு. ‘இல்ல... கறி வாங்கத்தான் நான் வந்தேன்’னு சொன்னதை
அவரால நம்பவே முடியலை.
மட்டன் வாங்கி இவருக்காகவே குழம்பு வைச்சேன்.
மதியம் சாப்பிட வந்தவரு, ‘என்ன நம்ம வீட்ல மட்டன் வாசனை வருது’னு
கேட்டார். ‘நான்தான் சமைச்சு வைச்சிருக்கேன்’னு சொன்னதும் ஷாக்
ஆகிட்டார். ‘நாக்கு ருசிக்காக இன்னிக்கி நான் இதை சாப்பிட்டா...
அப்புறம் அடிக்கடி நீ கஷ்டப்படணும். உன்னை சிரமப்படுத்த விரும்பலை’னு
மொத்த குழம்பையும் தூக்கி சாக்கடைல கொட்டிட்டார்...
அந்த ஓலை வீட்டுலதான் பெரிய பையன் ராஜா பிறந்தான். இப்ப
டென்டிஸ்ட்டா இருக்கிற எங்க மகள் ரோஜாவும் அங்கதான் பிறந்தா.
இதுக்குள்ள இவரும் படிப்படியா முன்னேற ஆரம்பிச்சார்.
டப்பிங் படங்களை வாங்கி விநியோகம் செஞ்சார். தயாரிப்பாளராகவும்
உயர்ந்தார். ரொம்ப ராசியானவர்னு இண்டஸ்ட்ரில இவருக்கு பெயர்
கிடைச்சது. குறிப்பா தெலுங்குல. சிரஞ்சீவிக்கு மார்க்கெட் டல்லா இருந்தப்ப
துணிஞ்சு அவரை ஹீரோவா போட்டு படம் எடுத்தார்.
அது பெரிய சக்சஸ் ஆச்சு. அதுக்குப் பிறகு திரும்பிப் பார்க்க நேரமே
இல்லாதபடி சிரஞ்சீவி முன்னேற ஆரம்பிச்சார்.
Last edited by ayyasamy ram on Sat Jan 28, 2017 7:18 pm; edited 1 time in total
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410
Re: கூரை வீட்டிலிருந்து மாளிகைக்கு...

--
அதே மாதிரி சில லட்சங்கள்ல சம்பளம் வாங்கிட்டு இருந்த
பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய பிரேக்கை கொடுத்தது கூட என்
கணவர்தான். இதுக்குப் பிறகுதான் அவரோட சம்பளமும் கோடிகளுக்கு
உயர்ந்தது. இப்படி நாங்க முன்னேற ஆரம்பிச்சதும் கோடம்பாக்கம்
ஏரியாவுல சின்னதா ஒரு வீடு வாங்கி குடிபோனோம்.
ரவி பிறக்கறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி ‘lost of the world’
படத்துக்காக இவர் அதிகம் உழைச்சார். அதுல உடம்பு முடியாமப் போய்
படுத்த படுக்கையானார்.
1980ல ரவி பிறந்தப்ப என் கணவர் படுக்கைலதான் சிரமப்பட்டுகிட்டு
இருந்தார். ரவி பிறந்ததுக்கு அப்புறம் மறு பிறவி எடுத்தார். அதனாலயே
கடைக்குட்டினு ரவி மேல எங்களுக்கு அதிக பாசம். அதே மாதிரி மூத்த
மகன் என்பதால் ராஜா மேல கொள்ளைப் பிரியம்.
ஒரே பெண் என்பதால் ரோஜா எங்களுக்கு செல்லம். ஆக, மூணு
குழந்தைகளுமே எங்களுக்கு ஸ்பெஷல்தான்.
ஒண்ணு தெரியுமா, எங்க மாமியாருக்கு பெண் குழந்தை கிடையாது.
அதனால என்னை தன் மகள் மாதிரி கவனிச்சுக்கிட்டாங்க.
இப்ப எங்களுக்கு கூடுதலா ரெண்டு மகள்களும் ஒரு மகனும்
கிடைச்சிருக்காங்க. என்ன அப்படி பார்க்கறீங்க? எங்க வீட்டுக்கு
வந்திருக்கிற மருமகள்களையும் மருமகனையும்தான் சொல்றோம்.
மூணு பேரன், மூணு பேத்திகள்னு வாழ்க்கை ரொம்ப நிறைவா
சந்தோஷமா போயிட்டு இருக்கு...’’ சொல்லும்போதே வரலட்சுமி
மோகனின் முகத்தில் அவ்வளவு கனிவு, பெருமிதம். உண்மையில் அது
ஆணிவேரின் கம்பீரம்!
-
------------------------------
மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
நன்றி- குங்குமம்
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410
Re: கூரை வீட்டிலிருந்து மாளிகைக்கு...
பெண்ணாக பூரிப்பு அடைகிறேன்.
சசி- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum