ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

View previous topic View next topic Go down

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

Post by T.N.Balasubramanian on Sat Apr 15, 2017 4:52 am

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகுமாறு தினகரனுக்கு நெருக்கடி:ஒட்டுமொத்தமாய் அனைவரும் பன்னீர் அணிக்கு மாற முடிவு?

'உங்களால் தான், கட்சி பிளவுபட்டது; ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்' என, தினகரனுக்கு எதிராக, அமைச்சர்கள் பகிரங்கமாக குரல் எழுப்பியுள்ளனர். 'அதை சொல்ல நீ யார்' என, தினகரன் பாய்ந்ததால், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கடுப்படைந்துள்ளனர்.
விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பறிக்கும்படியும், அவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, அவர்கள் அனைவரும் பன்னீர் அணிக்கு மாறவும் தயாராகி வருவதாக தெரிகிறது.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. அதன் காரணமாக, இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.பிரச்னைக்கு காரணமான விஜயபாஸ்கர், அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால், அவர் பதவி விலக மறுத்து விட்டார். அவரை நீக்க, தினகரனும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு, அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன், எம்.சி.சம்பத், ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி உட்பட பல அமைச்சர்கள், தினகரன் வீட்டிற்கு சென்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடராஜன், ஓ.எஸ்.மணியன் உட்பட சில அமைச்சர்கள் வரவில்லை. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்.பி.,க்கள் வைத்தியலிங்கம், வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

தினகரன் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், விஜயபாஸ்கரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என, முதல்வரின் ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் வலியுறுத்தினர்.அதற்கு தினகரன் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு மணி நேரம் நடந்த விவாதத்தில், கடுமையான வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.
இறுதியாக, வரும், 17ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வரும்படி, விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அவர் விசாரணைக்கு சென்று வந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, முடிவு செய்வோம் என, கலைந்து சென்றனர்.முதல்வர் ஆதரவாளர்களும், தினகரன் ஆதரவாளர்களும், நேரடியாக மோதிக் கொண்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கூட்டத்தில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள், விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என, வலியுறுத்தினர். அப்போது தளவாய் சுந்தரம், 'அதெல்லாம் தேவையில்லை' எனக் கூறியதுடன், தேவையில்லாமல் சில விஷயங்களை பேசினார். உடனே அமைச்சர் தங்கமணி, 'உங்கள் மாவட்டத்தில், கட்சியை நாசம் செய்து விட்டீர்கள். இப்போது, இங்கு வந்து நாசம் செய்ய பார்க்கிறீர்கள்' என, கோபத்துடன் கூறினார். அதை கேட்டு, எரிச்சல் அடைந்த தினகரன், 'என் மீது வழக்கு உள்ளதால், நான் காணாமல் போய் விடுவேன் என, நினைக்கிறீர்கள். என் மீதான வழக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது; அதை எப்படி முடிக்க வேண்டும் என, எனக்கு தெரியும்; நான், 200 கோடி ரூபாய் செலவழித்ததால் தான், நீங்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறீர்கள்' என, கூறினார்.
அப்போது, ஒரு அமைச்சர் குறுக்கிட்டு, 'உங்கள் பணத்தையா செலவு செய்தீர்கள்; கட்சி பணம் தானே' என கேட்க, தினகரன் கோபத்தின் உச்சிக்கு சென்றார். அத்துடன், திவாகரனையும், அவரது மகனையும் குறிப்பிட்ட, அந்த அமைச்சர், 'பணம் செலவு செய்த அப்பாவையும், மகனையும் கூட, நீங்கள் ஓரங்கட்டி விட்டீர்களே' என கேட்க, தினகரனின் கோபம் மேலும் அதிகரித்தது.
உடனே, அமைச்சர் ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, 'அதை சொல்ல நீ யார்' என கேட்டதும், அருகிலிருந்த அமைச்சர் வேலுமணி கொந்தளித்து விட்டார். 'உங்களாலும், விஜயபாஸ்கராலும் தான், இவ்வளவு பிரச்னையும்' என, அவர் ஆவேசத்தில் பேச, இருவருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர்களை சமாதானப்படுத்திய தினகரன், 'என் குடும்பத்தினரே, எனக்கு எதிராக செயல்படுகின்றனர். 17ம் தேதி, பெங்களூரு போய் சித்தியை பார்க்க போகிறேன். அதன்பின், நான் முடிவெடுத்துக் கொள்கிறேன். நான் நினைத்தால், நீங்கள் அமைச்சராக இருக்க முடியாது' எனக்கூறி மிரட்டினார்.உடனே வேலுமணி, 'இது நீங்கள் கொடுத்த பதவி அல்ல; அம்மா கொடுத்த பதவி' என, பதிலடி கொடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயகுமார், தம்பிதுரை ஆகியோர், 'இது, பலமா, பலவீனமா என யோசிக்க வேண்டிய நேரம். மத்திய அரசு, உங்கள் மீது தான் கோபமாக உள்ளது. நீங்கள் ஒதுங்கினால் பிரச்னை தீரும். எனவே, நீங்கள் தான், இப்பிரச்னையில் முடிவெடுக்க வேண்டும்' என, தினகரனிடம் கூறினர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும், 'நீங்கள் வெளியேறுங்கள்; உங்களால் தான் கட்சி பிளவுபட்டது; ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. நீங்கள் ஒதுங்கிவிட்டால், நாங்கள் பிரிந்து சென்றவர்களுடன் பேசி, கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுத்து விடுவோம்' என்றனர்.இதற்கு, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, உதயகுமார் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்தது. இறுதியாக, எந்த முடிவும் எடுக்கப்படாமல், கூட்டம் கலைந்தது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காரசார விவாதம் தினகரன் ஒப்புதல்!
ஆலோசனை கூட்டம் குறித்து, தினகரன் கூறியதாவது:
இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை, தேர்தல் கமிஷன் விசாரிக்கிறது. இதில், மத்திய அரசு தலையிடுவதாக தெரியவில்லை. எங்கள் ஆட்சியில், அனைவருக்கும் பேச சுதந்திரம் உள்ளது. அமைச்சரவையில் மாற்றம் எதுவும் வராது. விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்; எதுவும் சிக்கவில்லை. அவர் விசாரணை முடிந்து, ஊருக்கு சென்றுள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து கூற, என் வீட்டுக்கு அமைச்சர்கள் வந்தனர். அப்போது, பல பிரச்னைகளை ஜாலியாக பேசினோம். சில விஷயம் தொடர்பாக, காரசாரமாக பேசினோம். சிலர் சில தகவல்களை கூறும்போது, காரசாரமாக விவாதம் நடந்தது. விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுவது, தவறான தகவல்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -தினமலர்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

Post by M.Jagadeesan on Sat Apr 15, 2017 9:06 am

"காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது " என்று சொல்வார்கள் .

மன்னார்குடிக் கும்பல் அதிமுகவின் காலை சுற்றிய பாம்பு . அது கட்சியையும் , ஆட் சியையும் கபளீகரம் செய்யாமல் விடாது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

Post by T.N.Balasubramanian on Sat Apr 15, 2017 5:52 pm

உண்மைதான்.
யார் யார் எவ்வளவு பணம் பண்ணலாம் என்பதிலேயே
குறியாக உள்ளனரே தவிர வேறில்லை.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum