ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 krishnaamma

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

தமிழ்நேசன் அவர்களுக்கு
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

ஓ...இளையவனே...!!
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

இன்று இளைஞர்களால்
 krishnaamma

உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து
 krishnaamma

பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்
 krishnaamma

ஏவுகணை ஏவப்பட்ட 10 வது நிமிடத்தில் ஜப்பானுக்கு ஆபத்து!!
 krishnaamma

ஞாபகங்கள்
 krishnaamma

ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
 krishnaamma

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
 krishnaamma

நீ எப்போது கற்க போகிறாய் ?
 krishnaamma

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 krishnaamma

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 krishnaamma

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
 krishnaamma

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.
 krishnaamma

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
 krishnaamma

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அறிமுகம்...லியோ !
 M.Jagadeesan

உழைப்புக்கு மரியாதை...!
 T.N.Balasubramanian

தியானா - ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
 Muthukumaran88

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
 ராஜா

காகம் ஓர் அழகு
 vashnithejas

புத்தியுள்ள காகம்
 M.Jagadeesan

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
 M.Jagadeesan

பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
 ayyasamy ram

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
 ayyasamy ram

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
 ayyasamy ram

‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்
 ayyasamy ram

உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

துருக்கி நாட்டுக் கதை !
 krishnaamma

ஆன்மீகக் குட்டி கதை!
 krishnaamma

⁠⁠⁠ருத்ராட்சம் அணியும் முறை !
 krishnaamma

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்
 krishnaamma

விவரிக்க வார்த்தைகள் இல்லை!
 krishnaamma

3D ஓவியங்கள் !
 krishnaamma

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
 krishnaamma

வாழ்க்கை வசந்தமாகும் !-படித்ததில் (கேட்டதில்) பிடித்த வரிகள் !
 krishnaamma

கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் –
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

நல்ல தங்காள்
 krishnaamma

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
 krishnaamma

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.
 மூர்த்தி

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 T.N.Balasubramanian

பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
 T.N.Balasubramanian

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
 ராஜா

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வெயிலுக்கேற்ற குளியல்

View previous topic View next topic Go down

வெயிலுக்கேற்ற குளியல்

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 6:00 am


-
-ஸ்ரீதேவி மோகன்
-
மழையும் இல்லை… மரமும் இல்லை. வெயில் வெயில்
வெயில் மட்டுமே என்ற நிலைமைதான் இப்போது.

வாட்டும் இந்த வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள,
வெயிலின் கொடுமையை தணித்துக்கொள்ள சில குளியல்
வகைகளை நமக்காக இங்கே சொல்கிறார் இயற்கை மற்றும்
யோகா மருத்துவர் இந்திரா தேவி…
-
* வெயில் நாட்களில் பொதுவாக இரண்டு வேளை குளிர்ந்த
நீரில் குளிப்பது நல்லது. குழந்தைகளாக இருந்தால் வெது
வெதுப்பான நீரை பயன்படுத்தலாம்.

* வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உடம்பு மற்றும் தலைக்கு
நல்லெண்ணெயை தேய்த்து ஊற வைத்துக் குளிக்க வேண்டும்.

* உடம்பு சூட்டை தணிக்க நன்னாரி வேர் அல்லது வெட்டி
வேரை தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து
அந்த நீரை பயன்படுத்தி குளிக்கலாம்.

* சாண்டல்வுட் ஆயில், ரோஸ் வுட் ஆயில், லெமன் ட்ரீ ஆயில்,
அரோமா ஆயில் போன்றவற்றை இரண்டிலிருந்து மூன்று
சொட்டு குளிக்கும் தண்ணீரில் விட்டு குளிக்கலாம்.
இவை உடம்புக்குக் குளிர்ச்சி அளிக்கும். அரோமா ஆயில்
பயன்படுத்தும் போது சூடு மட்டுமின்றி மன அழுத்தமும் குறையும்.

* வெயிலில் அலைந்து களைப்பாகவும் உடம்பு முழுக்க
வலியையும் உணர்பவர்கள் பெப்பர்மின்ட் ஆயிலை 2 சொட்டு
குளிக்கும் நீரில் விட்டுக் குளிக்கலாம்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28266
மதிப்பீடுகள் : 7220

View user profile

Back to top Go down

Re: வெயிலுக்கேற்ற குளியல்

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 6:01 am

* முல்தானி மெட்டியை இரவு முழுவதும் மண்பானையில்
ஊறவைத்து மறுநாள் அதை உடல் முழுதும் பூசி 45 நிமிடங்கள்
வரை ஊற வைத்திருந்து காய்ந்த பின் குளிக்கலாம்.

* நல்ல களிமண் கிடைக்கும் பட்சத்தில் அதையும் இரவு
முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதனை
தலையில் இருந்து கால் விரல்கள் வரை பூசி நிழலில் நின்று
கொண்டு 45 நிமிடங்கள் காய வைத்து பின்னர் குளிக்கலாம்.
உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

* வெந்தயத்தை பேஸ்ட் போல அரைத்து தலையில் ஒரு
மணி நேரம் ஊற வைத்து குளித்தாலும் குளிர்ச்சி கிடைக்கும்.

* உடல் சூட்டை தணிக்க கைப்பிடி அளவு செம்பருத்தி
இலைகளை அரைக்காமல் அப்படியே தண்ணீரில் போட்டு
ஊற வைத்துக் குளிக்கலாம். கைப்பிடி அளவு செம்பருத்தி
இலைகளை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்தால்
கொழகொழவென்று ஒரு பேஸ்ட் கிடைக்கும்.
இதை ஷாம்பு போல பயன்படுத்தி தலைக்குக் குளிக்கலாம்

* ஒரு கைப்பிடி வேப்பிலையும் அரை ஸ்பூன் மஞ்சளும்
கலந்த தண்ணீரில் குளிக்கும் போது சின்னம்மை, தட்டம்மை
போன்ற நோய்த்தொற்றுகளிலிருந்து தப்பிக்கலாம். வெயில்
நேரத்தில் இந்த நீரை பயன்படுத்தி குளிக்கும் போது
சொரியாஸிஸை கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
வேப்பிலையும் மஞ்சளும் இயற்கையில் கிடைக்கும் கிருமி நாசினி.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28266
மதிப்பீடுகள் : 7220

View user profile

Back to top Go down

Re: வெயிலுக்கேற்ற குளியல்

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 6:03 am


---
* தலையில் நல்லெண்ணெய் தேய்த்து அரை மணி நேரம்
ஊற வைத்த பின், அதன் மேல் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை
மற்றும் அரை ஸ்பூன் மஞ்சளுடன் ஒரு பெரிய வெங்காயத்தையும்
சேர்த்து அரைத்த கலவையை தேய்த்து ஒரு மணி நேரம் ஊற
வைத்துக் குளித்தால் உடல் சூடு குறையும்.

பொதுவாக வெயில் நேரத்தில் அதிகம் வியர்க்கும். தலையில்
ஏற்படும் வியர்வையினால் உண்டாகும் பேன் மற்றும் பொடுகு
தொல்லை இந்த குளியலால் குறையும். பேன் மற்றும் பொடுகு
தொல்லை அதிகம் இருப்பவர்கள் அந்த கலவையுடன் ஒன்று
அல்லது இரண்டு மிளகு வைத்தும் அரைத்துப் பூசி குளிக்கலாம்.

* வெயில் காலத்தில் வெயில், தூசி போன்ற காரணங்களால்
சிலருக்கு பருத்தொல்லை அதிகம் காணப்படும். முகத்தில் பரு
இருப்பவர்கள் வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து
பருக்களின் மீது பூசி அரைமணி நேரம் ஊற வைத்து பின்
குளித்தால் பருத் தொல்லை குறையும்.

* கற்றாழையின் சாற்றை தலை மற்றும் கை கால்களில் பூசி
அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் உடல் குளிர்ச்சி
அடையும்.

* குழந்தைகளை டப் தண்ணீரில் விட்டு சிறிது நேரம்
குளிப்பாட்டலாம். வெயிலுக்கு அவர்களுக்கு இதமாக இருக்கும்.
பெண்களும் ஹிப் பாத் எனப்படும் டப் பாத் எடுக்கலாம்.
மாதவிடாய்க்கு முன்பு வரும் உடல் வலி இதனால் குறையும்.

* வியர்க்குரு இருக்கும் இடங்களில் குளித்த பின் சந்தனத்தைப்
பூசிக் கொள்ள வேண்டும்.
-

* முடிந்தால் சம்மர் டிரிப்பாக அருவிகளுக்குச் சென்று நீராடி
வரலாம்.


* எல்லாவற்றிற்கும் மேல் உடல் வறட்சியைத் தடுக்க,
சூட்டை தணிக்க வெயில் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க
வேண்டும்.

குங்குமம் தோழி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28266
மதிப்பீடுகள் : 7220

View user profile

Back to top Go down

Re: வெயிலுக்கேற்ற குளியல்

Post by krishnaamma on Thu Apr 20, 2017 12:25 am

தேவையான நல்ல பதிவு அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53649
மதிப்பீடுகள் : 10689

View user profile

Back to top Go down

Re: வெயிலுக்கேற்ற குளியல்

Post by பாலாஜி on Thu Apr 20, 2017 12:06 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19714
மதிப்பீடுகள் : 3902

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum