ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

View previous topic View next topic Go down

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by ayyasamy ram on Wed May 03, 2017 8:01 pm


-
ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு 'ராம நாமம்' ஜபித்துக்
கொண்டிருந்ததைப் பார்த்தான்.
-
அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம்.
'ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி
அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், 'சேதுவுக்கும்
இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல்,
ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான்
அந்தச் சந்தேகம்.
-
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32496
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by ayyasamy ram on Wed May 03, 2017 8:01 pm


-
தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்து
விட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று,
''வானரமே! உன் ராமனுக்கு வலிமை இல்லையா? அவன் சிறந்த
வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன்
ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை
நாடவேண்டும்?'' என்று கேட்டான்.
-
அர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது
அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து
கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு
செய்தார்.
-
''சரங்களால் கட்டப்படும் சரப் பாலம் என் ஒருவனின் பாரத்தையே
தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித்
தாங்கும்?'' என்று அனுமன் கேட்டார்.
-
உடனே அர்ஜூனன். ''ஏன் தாங்காது, என்னால் முடியும். நான்
ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக்
கூட்டங்களையும் அது தாங்கும்'' என்றான் .
-
மேலும், ''பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து
உயிர் துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின் மேல் உள்ள
நம்பிக்கையால். அனுமனோ, ''நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும்
உனக்கு அடிமையாக இருக்கிறேன்'' என்கிறார்.
போட்டி தொடங்கியது. அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத்
தொடங்கினான்.

அனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக்
கொண்டிருந்தார். பாலம் கட்டி முடித்தான் அர்ஜூனன்.
அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து
வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற
மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான்.
-
-------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32496
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by ayyasamy ram on Wed May 03, 2017 8:02 pm


-

''போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை
காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன்.
ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன்.

கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்'' என்றவாறு
வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான். அனுமன்
எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை.

அப்போது ஒரு குரல் "இங்கே நடப்பது என்ன"? என்று கேட்டது.
குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர்
தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை
கேட்டறிந்தார். பின்பு அவர், ''எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி
என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள்
இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது'' என்றார்.

தொடர்ந்து, ''நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை
உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்து
கொள்ளலாம்'' என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்
கொண்டனர்.

'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை
கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று
முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா'
என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான்.

சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும்
வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல்
பாலத்தில் ஏறினார் அனுமன். பாலம் அப்படியே இருந்தது.
ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை.

பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன்
"பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல்
எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்?'' என்று கேட்டான்.
-
அர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும்
குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, ''யார் நீங்கள்?''
என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன்
காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி
பெறுகின்றனர்.

பகவான் வாய்திறந்தார் "நீங்கள் இருவருமே தோற்கவில்லை
வென்றது கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்.

இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை
உள்ளது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது,
தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு
பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்லவேண்டும்
என்று ராமநாமத்தை ஜபித்தான்.
எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.
-
----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32496
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by ayyasamy ram on Wed May 03, 2017 8:03 pm


-


-
மறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த
அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான்.
அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல்
தோற்றான்.

எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே'' என்றார்.
கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும்.
எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனைச்
சீண்டினான் அர்ஜூனன்.

அப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை
அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து
மன்னிப்பு கேட்டான்.

உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது.
ஆனால், இறைவன் ஒருவன்தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள்.
இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும்
ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.
-
---------------------------------------

இரா.செந்தில்குமார்
நன்றி0- ஆனந்த விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32496
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by விமந்தனி on Wed May 03, 2017 9:52 pm

கேட்டிராத கதை.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by T.N.Balasubramanian on Thu May 04, 2017 1:22 am

அறிவுரை கூறும் நல்லதோர் கதை

தலைப்பிற்கு பதில் :
போட்டி tie ( சரிசமானமான புள்ளிகள் )யில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் ஜெயித்தது ."கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்"
என்று அம்பயர் கிருஷ்ணர் கூறி இருக்கிறார்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum