புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
38 Posts - 49%
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
32 Posts - 42%
jairam
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
2 Posts - 3%
சிவா
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
1 Post - 1%
Manimegala
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
13 Posts - 4%
prajai
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
9 Posts - 3%
jairam
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Rutu
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?


   
   

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 21, 2018 12:35 pm

21.02.2018

நல்ல வேளை மூர்த்தி, Youtubeட்ட கோபப்படாம பேசி, விஷயத்தை கேட்டுடீங்க. நன்றி மூர்த்தி. 


ஷூட்டிங் ஸ்பாட்ல MGR அப்படித்தான் நடந்துக்குவாராம். அவருக்கு புடிக்காத மாதிரி மத்தவங்க நடந்துட்டாங்கன்னா, packup சொல்லிருவாராம். இப்படி நடந்து, சில படங்களில தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் வந்திருக்காம். தான் சொல்றத மத்தவங்க கேக்கணும்னு நினைப்பு. இல்ல இல்ல, கேட்டுத்தான் ஆகணும்ங்கிறதில உறுதியா இருப்பாராம். 

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 21, 2018 12:50 pm

heezulia wrote:21.02.2018

நல்ல வேளை மூர்த்தி, Youtubeட்ட கோபப்படாம பேசி, விஷயத்தை கேட்டுடீங்க. நன்றி மூர்த்தி. 


ஷூட்டிங் ஸ்பாட்ல MGR அப்படித்தான் நடந்துக்குவாராம். அவருக்கு புடிக்காத மாதிரி மத்தவங்க நடந்துட்டாங்கன்னா, packup சொல்லிருவாராம். இப்படி நடந்து, சில படங்களில தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் வந்திருக்காம். தான் சொல்றத மத்தவங்க கேக்கணும்னு நினைப்பு. இல்ல இல்ல, கேட்டுத்தான் ஆகணும்ங்கிறதில உறுதியா இருப்பாராம். 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1260147

அப்போ MGR ஒரு angry bird னு சொல்ல வறீங்களா





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 10:00 am

அதற்கு பெயர் கோபமில்லை.
அதற்கு பெயர் (நான்--என்கின்ற) ego .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 28, 2018 7:33 pm

28.02.2018

பச்சை விளக்கு [1964] – இராம அரங்கண்ணல், இறைமுடிமணி, கதை எழுத, AVM செட்டியார் தயாரிச்ச படம். எஞ்சின் டிரைவர் சிவாஜி. இவரது நண்பர் நாகேஷ். இவங்களுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்கள். ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. பா.....................தி படம் எடுத்தாச்சு. ஆனா, படத்துக்கு இன்னும் பேர் வைக்கல.

சரவணன் ஸ்டூடியோவுக்கு போற வழியில, ஒரு ரெயில்வே கேட் இருந்துச்சாம். இந்த கேட் பக்கத்தில கட்அவுட் வச்சாராம். என்னான்னு? ‘சிவாஜி நடிக்கும்’னு போட்டு, அதுக்கு கீழ ஒரு பச்சை விளக்கு படம். அதுக்கும் கீழ ‘வருகிறது’ னு போட்டு, விளம்பரம் வச்சாங்களாம். இதை பார்த்த ஜனங்க என்ன பேசிக்கிட்டாங்க? AVM படம்னு தெரியுது. சிவாஜி நடிக்கிறார்னும் இருக்குது. ஆனா கதை என்னவா இருக்கும். பச்சை விளக்கு படத்தை போட்டு வச்சிருக்காங்களே. ஒரு வேளை, ரயில் சம்பந்தப்பட்ட படமா இருக்குமோன்னு பேசிக்கிட்டாங்களாம்.

படத்துக்கு என்ன பேர் வைக்கலாம்னு AVM நிறுவனத்தாரும், மத்தவங்களும் பேசினாங்க. இல்ல, விவாதம்மினாங்க. என்ன புரியலியா? விவாதிச்சாங்க. கொஞ்சமாவது புரிஞ்சுதா? இல்லியா? விவாதம் செஞ்சுகிட்டாங்க. அப்பா.................டா, ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

விளம்பரத்தில, பச்சை விளக்கு படத்தை போட்டு ‘வருகிறது’ன்னு விளம்பரப்படுத்தி இறிருக்கீங்களே. அப்டீன்னா படத்துக்கு ‘பச்சை விளக்கு”ன்னே பேர் வச்சிருங்கன்னு இந்தப் படத்தின் டைரடக்கர் பீம்சிங் சொன்னார். பீம்சிங் கூட சேர்ந்துகிட்டு, வேற சிலரும் அதையே சொன்னாங்க. அப்டீ.............. இப்டீன்னு பச்சை விளக்குன்னே பேர் வச்சுட்டாங்க.

எடுத்த பாதி படத்தை செட்டியார் பார்த்தார். போச்சுடா, அவருக்கு படம் புடிக்கலேன்னுட்டாராம். அம்புட்டு செலவழிச்சுட்டு, இப்டீ சொன்னா எப்டீங்க? அது சரி, அவர்தானே தயாரிப்பாளர். அதனால அவர்தானே கவலைபடணும். படம் புடிக்கலேன்னு என்ன செஞ்சுட்டார்னு தெரியும்ல? வேற கதைய எழுத சொல்லிட்டாராம். அதுக்கப்புறமாத்தான், புஷ்பலதா, AVM ராஜன் பாத்ரதிங்களை உருவாக்கினாங்களாம்.


- பரணி

Heezulia  மீண்டும் சந்திப்போம் 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 03, 2018 1:30 pm

03.03.2018 

ஒரு திரைக்கதையை எழுதுவாங்கஅப்புறமா அதுல யாரை நடிக்க வைக்கலாம்னு தீர்மானம் பண்ணுவாங்க. அப்போ MGR படம்லாம் நல்லா ஓடிட்டிருந்த சமயம். அதனால அவரை வச்சு ஒரு படத்த தயாரிக்கலாமேன்னு AVM சரவணன் ஆசைப்பட்டார். யார்ட்ட போய் கதையை கேக்கலாம்னு யோசிச்சு, திருலோகசந்தரை போய் பார்த்திருக்கார். சரவணன் தன் ஆசையை சொல்லி டிஸ்கஸ் செஞ்சார். அவரும் MGRகுன்னே............ ஒரு கதையை ரெடி செஞ்சுட்டார். 

கண்டுபுடிச்சிருப்பீங்களே, ஆமா, அதே...............தான். அன்பே வா...............

இப்ப செட்டியார்ட்ட எப்டீ சொல்றது? MGRக்காக ஒரு கதை ரெடீ...............யா இருக்கு. அவரை வச்சு படம் எடுக்க போறோம்னு சொன்னா, செட்டியார் ஊஹும்ன்னுர்வாரு.

அந்த சமயத்தில MGR நடிச்ச எங்க வீட்டு பிள்ளை நல்.............லா ஓடிட்டு இருந்துச்சு. அதனால AVMஇன் distributors, MGRஐ வச்சு ஒரு படம் பண்ணலாமேன்னு சரவணன்ட்ட சொல்லியிருக்காங்க. சரவணனும் கொஞ்சம் தைரியத்தை வரவழச்சு, அப்பாட்ட போய் விஷயத்தை சொன்னார். செட்டியார் என்னன்னா, சரீ...........ன்னுட்டார். சரவணனுக்கு ஆச்சரியம்.

சந்தோஷமா MGR வீட்டுக்கு போயி, விஷயத்தை சொன்னார். 
MGRக்கும் AVM படத்தில நடிக்கணும்னு ஆசை இருந்துச்சாம். அந்த சமயத்தில் RM வீரப்பன் MGRஐ வச்சு ஒரு படம் எடுத்துட்டு இருந்தார், நான் ஆணையிட்டால். இந்தப் படத்தை முடிச்சிட்டுதான், AVM தயாரிக்கும் அன்பே வா படத்தில நடிப்பதாக சொல்லிட்டார், MGR. 1965ல எங்க வீட்டு பிள்ளை படம் ஓடிட்டு இருந்ததால, 1966 பொங்கலுக்கு அன்பே வா படத்தை ரிலீஸ் செய்யணும்னு  சரவணன் ஆசைப்பட்டார். ஆனா நான் ஆணையிட்டால் இடையில இருக்கே. இதை எப்ப முடிக்கிறது, அன்பே வா எப்ப ஆரம்பிக்கிறது?

MGRட்ட பேசினதில, RMVட்ட பேசிட்டு சொல்றாதாக சொல்லிட்டார். அப்புறமா சரவணன் MGRஐ போய் பார்த்தப்போ, MGR மூணு லட்சம் கேட்டிருக்கார். ஓரளவு சரவணன் சந்தோஷப்பட்டார், எப்படியோ MGR தாம்படத்தில நடிக்க சம்மதிச்சுட்டார்னு. சரவணன் தன் ஆபீசுக்கு போன கொஞ்ச நேரத்தில, RMV அங்க வந்தார். அன்பே வா ரிலீஸ் ஆனதுக்கு பிறகு, நான் ஆணையிட்டால் படத்தை ரிலீஸ் செய்றதா சொன்னார். சரவணனுக்கு சந்தோஷம் தா.............ங்கல. ஆனா அதுக்குப்பறமா RMV, ஒரு குண்டை தூக்கி போட்டாரு பாருங்க, சரவணனுக்கு அதிர்ச்சி. அன்பே வா படத்தில நடிக்கிறதுக்கு, MGR இன்னும் இருபத்தஞ்சாயிரம் கேக்குறதா சொன்னார், RMV.

MGR அந்தப் பணத்தை கேட்டாரா, இல்ல RMVயே கேட்டாரா, தெரியல.

செட்டியார் இதை கேட்டு வருத்தப்பட்டார்.
MGRக்கு அன்பே வா கதை புடிச்சு போச்சு. கதைப்படி சிம்லாவில நடக்கிறதா இருந்துச்சு. அஞ்சு நாள் சிம்லாவில ஷூட்டிங் நடத்திட்டு, மீதி படத்தை ஊட்டியில எடுத்தாங்க.

முழூ............... படத்தையும் சிம்லால நடக்கிறதாக நம்மள ஏமாத்திட்டாங்களோ?

சிம்லா குளிரில எல்லா...............ரும் நடுங்கிட்டு இருந்தாங்களாம். ஆனா MGR சட்டையில்லாமலேயே, காலை...............ல எந்திருச்சு, வெளிய போயி எக்சர்சைஸ் பண்ணுவாராம்.

இந்தப் படத்துக்கு TR ராமச்சந்திரனை புக் செய்றதா இருந்துச்சாம். செட்டியாரின் விருப்பம். ஆனா MGR தங்கவேலு வேணும்னு சொல்லிட்டாராம். சரீ.................. MGR சொல்லிட்டாரேன்னு தங்கவேலுவை புக் செஞ்சாங்க.
ஒரே பேர் இருக்கிறதால TRR நடிக்கிறது MGRக்கு ego ப்ராப்ளம் இருந்திருக்குமோ?

இந்தப் படத்தின் ஷூட்டிங்ல, சரவணனும், MGRஉம் நெருக்கமாயிட்டாங்களாம். MGRஐ பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரவணன் அப்பப்போ வந்து, MGRட்ட பேசிட்டு போவாராம். திடுதிப்புன்னு MGR, “இனிமே என்னை பார்க்க இங்க வராதீங்க”ன்னு சரவணன்ட்ட சொல்லிட்டாராம். சரவணனுக்கு அதிர்ச்சி. என்னடா இவர் இப்டி சொல்லிட்டாரேன்னு வருத்தப்பட்டாராம். MGR, “நீங்க இங்க என்னை பார்க்க வந்தா, நான் உங்களுக்கு சரியா கால்ஷீட் கொடுக்கிறதில்ல. அதனாலதான் நீங்க என்னை வந்து பாத்து பேசுறீங்கன்னு மத்தவங்க நெனச்சுருவாங்கல்ல” ன்னு சொன்னாராம். மத்தவங்க MGRஐ பத்தி தப்பா நெனச்சுற கூடாதுங்களாம். இதை கேட்டு சரவணன் ஆச்சரியப்பட்டு போனார்.

- பரணி

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 03, 2018 2:04 pm

03.03.2018

பாக்கியராஜ் படங்கள் சக்................க போடு போட்டுக்கிட்டு இருந்த சமயம். செட்டியாருக்கு ஒரு ஆசை. பாக்கியராஜ் டைரக் ஷன்ல ஒரு படத்தை தயாரிக்கணும்னு. நல்ல ஆசைதானே. பாக்கியராஜ்ட்ட பேசினார். அவரும் சரீன்னுட்டு, கதை எழுத ஆரம்பிச்சார். பாக்கியராஜ் கதையை சொல்லவா வேணும். அவ்ளோ................. நல்லா எழுதுவார். கதையை எழுதிட்டார். செட்டியாரை ஹோட்டல்ல வந்து பார்க்க சொன்னார். ஆனா சரவணன், கதையை ஆபீஸ்லதான் கேக்குறதுதான் பழக்கம்னு சொல்லியிருக்கார்.

“நான் கதை சொல்லும்போது, எந்த வித எடஞ்சலும் இருக்கக்கூடாது. அதனாலதான் ஹோட்டலுக்கு வர சொல்றேன்” ன்னு பாக்கியராஜ் சொல்லிட்டார். AVM சகோதரர்களும்  ஹோட்டலுக்கு போனாங்க. பாக்கியராஜ் தன் ஆளுங்களை ரூமை விட்டு வெளியே போக சொல்லிட்டார். கதை சொல்றவரும், கேக்குறவங்களும் தவிர, ரூம்ல வேற யா............ரும் இல்ல.

பாக்கியரஜ் கதை சொல்ல ஆரம்பிச்சார். அவர் கைல டைரியோ, பேப்பரோ, பேனாவோ, padஓ, ஹின்ட்டுக்கு ஒரு பேப்பரோ எத்.............துவும்...............மே இல்ல. அவர்பா.................ட்டுக்கு கதை சொல்றார், மனுஷன். இவங்க பா.....................ட்டுக்கு கதையை ஆ..................ச்சரியத்துடன் கேட்டுகினு இருக்காங்க. அவர் கதை சொன்ன விதம் அப்டி.

எத்தனையோ................. பேர்ட்ட அவங்க கதை கேட்டிருப்பாங்க. ஆனா பாக்கியராஜ் சொன்னது மாதிரி, அவங்க இதுவரை கதை யா.............ர்ட்டயும்  கேட்டதில்லியாம். அப்டீன்னா, கதை அவங்களுக்கு புடிக்காம இருக்குமா? ரொம்ப ரொம்ப புடிச்சிருச்சு. சரி................. கதைக்கு என்ன பேர்ன்னு கேட்டாங்களாம். சின்ன வீடுன்ருக்கார் பாக்கியராஜ்.

“என்னது, சின்ன வீடா? இந்த பேர்ல படம் தயாரிக்கிறதா இல்ல” ன்னுட்டாங்க AVM சகோதரர்கள். பாக்கியராஜ் அப்புறமா யோசிச்சு முந்தானை முடிச்சுன்னு பேரை மாத்திறலாம்னு சொல்லியிருக்கார். இப்படியாகத்தானே பாக்கியராஜின் சின்னவீடு கதை முந்தானை முடிச்சாயிருச்சு........... [1983].

பேரை மாத்தி என்ன பிரயோஜனம்? இந்த பேர்ல ஒரு பிரச்னை. முந்தானை முடிச்சு – எட்டு எழுத்தாச்சே. எட்டு எழுத்து இருக்கக்கூடாதாமே. செண்ட்..........................டிமென்ட். என்ன செய்றது? இந்த எட்டு நம்பரை எவன் கண்டுபுடிச்சான்னு அவங்களுக்கு கோவம் வந்திருக்குமோ? என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க.

அர்ஜுன். இவர் யார் தெரியுமோ? ஆ............மா, இது கூடவா தெரியாது, இது ஒரு கேள்வீன்னு கேக்க வந்துட்டியேன்னு கேக்குறீங்களா? என்னது, அப்ப இல்லியா? 

உடனே.................. மகாபாரதத்துக்கு போயிறாதீங்க. இல்லேன்னா நடிகர் அர்ஜுன்னு சொல்லிறாதீங்க. ரெண்டுமே................. இல்ல.

இவர் AVMமின் டிசைனர். புத்திசா.....................லி. இவர் செஞ்சதை படிச்சு பார்த்து, எனக்கு ஆ..........ச்ச்சரியமா போச்சு. நீங்களும் ஆச்சரியப்பட வேணாமா? ஐயய்யோ, வேணான்னு சொல்லிறாதீங்க. அப்புறம் நான் எப்டீ எழ்துறது? நீங்களும் ஆச்சரியப்படணும், படணும், ணும், ம்ம்ம்

முந்தானை முடிச்சு. இந்த பேர்ல, ரெண்டு வார்த்தைக்கும் பொதுவான எழுத்து ‘மு’. சரியா? அதனால ரெண்டு வார்த்தைக்கும் ‘மு’ வையே பெருஸ்............ஸா எழுதி, பொதுவான எழுதாக மாத்தி எழுதிட்டார். இப்ப ஏழு எழுத்தாயிருச்சுல்ல. என்னா அறிவு, என்னா அறிவு அந்த அர்ஜுன்க்கு. அதனாலதான் AVM நிறுவனத்தில இருக்கார்.


திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 R107s2


படம் சென்னை அலங்கார் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. படத்தை பார்த்த பாக்கியராஜின் மனைவி ப்ரவீனா, “நிச்சயமா இந்தப் படம் சில்வர் ஜூப்லி வரை போகும்”னு சொன்னாராம். ஆனா, 100 நாள் கூட ஓடல. “என்னடா இது, மதுரகாரனுக்கு வந்த சோதன”ன்னு என்னமோ சொல்வாங்களே, அது மாதிரி முந்தானை முடிச்சு படத்துக்கும் ஒரு சோதன வந்துச்சு.

‘தூங்காதே தம்பி தூங்காதே’, AVMஇன் தயாரிப்பு. கமலை வச்சு ப்ரமா..............ண்டமா உருவாயிட்டு இருந்துச்சு. இது ப்ரவீனாவுக்கு தெரிய வந்துச்சு. “ஏன் சார், உங்க அடுத்த படம் ‘தூங்காதே தம்பி தூங்காதே. அதை அலங்கார் தியேட்டர்லதான் ரிலீஸ் செய்ய போறீங்களா”ன்னு சரவணன்ட்ட கேட்டார். ப்ரவீணாவின் ஆதங்கள் சரவணனுக்கு புரிஞ்சிருச்சு. முந்தானை முடிச்சு அட்டகாசமான படம்னு மறுக்க முடியாது. ‘முந்தானை முடிச்சு’ நல்லா ஓடினா, இந்த தியேட்டர்லேயிருந்து எடுக்க மாட்டேன். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை வேணும்னா சத்யம் தியேட்டர்ல ரிலீஸ் செஞ்சுக்கிறேன்”னு சொல்லிட்டாராம். அதுபடி செய்யவும் செஞ்சார். அலங்கார்ல முந்தானை முடிச்சு வெள்ளி விழா கொண்டாடியது.


- பரணி

Heezulia மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 10, 2018 11:37 pm

10.03.2018


கவிதாலயம் ரஜினியை வச்சு முதல் தடவையாக தயாரிச்ச படம் நெற்றிக்கண். K பாலசந்தர் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி தயாரிச்சார். இந்தப் படத்தின் டைரக்டர் SP முத்துராமனுக்கும் கவிதாலயம் முதல் படம்.
 
இந்தப் படப்பிடிப்புக்கு என்னல்லா...........ம் தேவையோ, அதெல்லாம் டக்கு டக்குன்னு கெடச்சுதாம். “செலவை பத்தி கவல்.........லயே.................. படாதீங்க. AVMக்காக எப்படி படம் எடுப்பீங்களோ, அப்படி க்ரா.......................ண்டா படத்தை எடுங்க.”ன்னு பாலசந்தர் சொல்லிட்டார். டைரக்டர் SP முத்துராமனுக்கு படு சந்தோஷம்.
 
மகன் ரஜினிக்கு ஜோடியாக நடிச்ச மேனகாவுக்கு, அவங்க அம்மாதான் எந்தெந்த ஸீனுக்கு எப்படி நடிக்கோணும்னு சொல்லி கொடுத்துட்டு இருந்தார்.
 
ஒரு தடவை பாலசந்தர் முத்துராமன்ட்ட, “உன் படத்தில சண்டை ஸீன்ல்லாம் பிரமாதமாய் இருக்கு. உன் ஷூட்டிங்கை நான் பாக்கணும்”னு சொன்னாராம். முத்துராமனும், “தாராளமாய் வாங்க சார். வர்ற புதன்கிழமை அன்னிக்கி, குன்றத்தூர்ல ஒரு நைட் ஷூட்டிங் ஸீன் எடுக்கிறேன்”ன்னு சொன்னார். பாலசந்தர், “நான் உன்னை தொந்தரவெல்லாம் பண்ணமாட்டேன். ஒரு ரசிகனாய் வந்து பார்க்கிறேன்”னு சொன்னார்.
 
பாலசந்தர் குன்றத்தூர் போனார். ரஜினிகூட, நாலு பேர் தீப்பந்தங்களோடு சண்டை போட்ற  ஸீன். தீப்பந்தங்களால ரஜினியின் முகத்தில அடிக்கணும். திடீர்னு “கட் கட் கட்”னு சத்தம். பார்த்தா............... பாலசந்தர். அவர் சொன்னதுதான் அந்த “கட் கட் கட்.” இப்படி சொல்லிட்டு, ரஜினிட்ட ஓ........................டி வந்துட்டார். முத்துராமனுக்கு ஷாக். ஷூட்டிங்ல மூக்கை நுழைக்க மாட்டேன்னு சொல்லிதானே வந்தார்னு ஷாக்.
 
பாலசந்தர் ரஜினியை கட்டிபுடிச்சு, “என்னப்பா, மூஞ்சில தீ பட்டுருச்சா?”ன்னு பதைத்து கேட்டிருக்கார். அப்புறம் முத்துராமனை திரும்பி பார்த்து, “என்னப்பா முத்துராமன், இப்படியா ரஜினி முகத்தில நாலு பேர் தீப்பந்தங்களை வச்சு அடிக்கிற மாதிரி ஷாட் வைப்பீங்க? இந்த ஃபைட் ஸீன்ல்லாம் வேண்டாம். எனக்கு ரஜினிதான் வேணும்”ன்னாராம். ஷூட்டிங்க் இடையில  பாலசந்தர் பூந்ததுக்கு காரணம் முத்துராமனுக்கு அப்பதான் புரிஞ்சுது.
 
முத்துராமன், “பயப்படாதீங்க சார், பாதுகாப்பாகத்தான் செய்வாங்க. ஜூடோ ரத்னம் மாஸ்டர் ரஜினியின் பாதுகாப்புக்கு எல்லா பிளானும் செஞ்சு வச்சிருக்கார்.”ன்னு சொன்னார். “இல்லப்பா, எனக்கு பயமா இருக்கு”ன்னு சொல்லிட்டு, தூரமா போயி உக்காந்துட்டாராம்.
 
பாலசந்தர் அங்க இருந்தா, ஃபைட் ஸீன் எடுக்க விடமாட்டார்னு, படத்தின் தயாரிப்பு நிர்வாகி நடராஜன், அவரை அங்கேயிருந்து கூட்டிகிட்டு போய்ட்டார். போகும்போது கூட, “ரஜினியை பத்திரமா பாத்துக்கோங்க.”ன்னு பாலசந்தர் சொல்லிட்டு போனார். பாலசந்தர் படங்களில அவர் ஏன் சண்டை காட்சியை வைக்கிறதில்லேன்னு அப்போதான் முத்துராமனுக்கு தெரிஞ்சுதாம்.
 
ஆமா............. பாலசந்தர் படத்தில ஃபைட் ஸீன் வந்ததே இல்லியா?
 
"ரஜினியின் நடிப்பு இதுல சூப்பரா வரணும். அதுவும் அப்பா கேரக்ட்டர் சூப்..............பரா வரணும் முத்துராமன்.” னு பாலசந்தர் சொன்னாராம். படம் முடிஞ்சதும், பாலசந்தர் படத்தை பார்த்துட்டு, தான் நெனச்சபடியே ரஜினி நடிச்சிருக்கார்னு பாராட்டி சொன்னார்.
 
- ஹிந்து  

Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 12, 2018 4:49 pm

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 16, 2018 12:07 am

16.03.2018

வெற்றிக்கூட்டணி தயாரிப்பாளர்  கோவைத்தம்பி & கதாசிரியர் cum டைரக்டர்  R சுந்தரராஜன் எடுத்த படம், நான் பாடும் பாடல். அம்பிகா & சிவகுமார் ஹீரோயின் & ஹீரோ. வழக்கம்போல இளையராஜா ம்யூஸிக். கன்னியாகுமரி மாவட்டத்தில எடுக்கப்பட்ட படம்.

இந்த படத்தில ரெண்டு மாதிரியான க்ளைமாக்ஸ் யோசிச்சு வச்சிருந்தார், இயக்குனர் R சுந்தரராஜன். ஒண்ணு.............., அம்பிகா இறந்து போற மாதிரி. இன்னொண்ணு, அம்பிகாவின்   நெத்தியில சிவகுமார் பொட்டு வச்ச  இடத்தை, அம்பிகாவே நெருப்பால சுட்டுக்கொள்ற மாதிரி.

இந்த ரெண்டில எதை செலக்ட் செய்றதுன்னு, கோவைத்தம்பிக்கும், சுந்தரராஜனுக்கும் குழப்பம். என்ன செய்றதுன்னு தெரியாம, முடிவு தங்களால எடுக்க முடியாதுன்னுட்டு, வேற ஒருத்தர்ட்ட அந்த பொறுப்பை கொடுத்துட்டாங்க. யாருன்னு நினைக்கிறீங்க, இளையராஜா.

அது சரி..................., பயணங்கள் முடிவதில்லை படத்துக்கு இளையராஜா போட்டு கொடுத்த 30 ட்யூன்கள்ல, காட்ச்சிக்கேத்த மாதிரி ட்யூன்களை செலெக்ட் செய்ய இளையராஜாவை கேட்டுகிட்டாங்க. அது ந்யாயம். ஏன்னா அது இசை சம்பந்தப்பட்டது. ஆனா நான் பாடும் படத்தில ஸீனையே செலக்ட் செய்ய சொல்லியிருக்காங்களே.

சரி சரி, அது அவங்களுக்குள்ள understanding. அது பத்தி உனக்கென்ன? நீ நடந்ததை மட்டும் சொல்லு.

படத்தில வந்த க்ளைமாக்ஸ், அதாவது, அம்பிகா நெருப்பால தன் நெத்தியை சுட்டுகிறது. ஸீனை கூட இளையராஜா நல்லாத்தான் செலக்ட் செஞ்சிருக்கார்.

இதுக்கப்புறம் சுந்தரராஜன் பிஸியான டைரடக்கர் ஆயிட்டார்.


- ரமணி  

Heezulia   

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 1:16 pm

இதுக்கப்புறம் சுந்தரராஜன் பிஸியான டைரடக்கர் ஆயிட்டார்.

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 3838410834



Sponsored content

PostSponsored content



Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக