புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_m10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_m10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_m10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_m10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_m10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_m10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_m10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_m10மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 4:37 pm

நான் வயிற்றில் சுமந்த குழந்தை, நான் பெற்றெடுத்த என் மகனின் குழந்தை” இப்படி ஒரு பெண் சொன்னால் நமக்கு என்ன தோன்றும்? சிலருக்கு அருவருப்பு ஏற்படலாம்; சிலர் ஆச்சர்யப்படலாம், குழப்பம்கூட அடையலாம். அந்தத் தாய் இப்படி ஒரு காரியம் செய்யத் துணிந்ததற்கு அழுத்தமான காரணமிருக்கிறது.


”வாரீர்! அணைத்து மகிழ வேண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருகமாட்டோமோ?
செம்பவழத்து சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!”
என்று பாரதிதாசன் குழந்தையின் சிரிப்பை அழகாக வர்ணிக்கிறார். யாருக்குத்தான் குழந்தைகளைப் பிடிக்காது? நம்மை உலகையே மறக்கச்செய்யும் மாயவித்தை தெரியும் மழலைக்கு. நம் நாட்டிலும் குழந்தை வரம் வேண்டி, கோயில் கோயிலாகச் சுற்றிக் கடவுளிடம் வேண்டிக்கொள்வது ஒருபக்கம் நடக்கிறது; இன்னொரு பக்கம் குழந்தைப்பேற்றுக்காக மருத்துவ முறையிலும் சிலர் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இந்தியாவில் வாடகைத்தாய் முறை பிரபலமடையவில்லை. ஆனாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 4:37 pm

ஒரு தாய், தனது மகனுக்காக வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுத்த நிகழ்வு நடந்திருப்பது அமெரிக்காவில்! அர்கான்சஸ் மாகாணத்தில் வசிப்பவர் கெய்லா ஜோன்ஸ் (Kayla Jones). வயது 29. அவருக்கும் அவரது கணவருக்கும் குழந்தையில்லையே என்கிற ஏக்கம். காரணம், கெய்லாவுக்கு 17 வயது இருக்கும்போதே, ஏதோ ஒரு நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டார். அந்தச் சூழ்நிலையில் அவருடைய கர்ப்பப்பையில் (Uterus) பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள். `இனி அவரால் குழந்தையை வயிற்றில் சுமக்க முடியாது’ என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், கெய்லாவின் கருமுட்டைப்பை (Ovary) நீக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் அவரின் கருமுட்டையைக் (Ovum) எடுத்து, குழந்தையைப் பெற அவருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. எனவே, ஒரு வாடகைத்தாயை அமர்த்திக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஜோன்ஸ் தம்பதி முடிவெடுத்தார்கள்.


வாடகைத்தாய் கிடைப்பது அத்தனை எளிதான காரியமாக இல்லை. பல இடங்களில் தேடி அலைந்தார்கள். ஆனால், பொருத்தமான, நம்பிக்கையான வாடகைத்தாய் யாரும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு அருகிலேயே ஒரு வாடகைத்தாய் கிடைத்தால், அவர்களின் நேரடிப் பார்வையில் வாடகைத்தாயை பிரசவம் வரை பார்த்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். மகனும் மருமகளும் குழந்தைக்காகப் படும் அவஸ்தைகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் பேட்டி (Patty). ஒருநாள் கெய்லா ஜோன்ஸிடம் தயக்கத்தோடு பேட்டி சொன்னார்... “நீங்கள் சொல்லும் நிபந்தனைகளுக்கெல்லாம் யாருமே ஒத்துவர மாட்டார்கள். நான் வேண்டுமானால் வாடைகைத்தாயாக உன் குழந்தையை சுமக்கட்டுமா?” முதலில் கெய்லாவும் அவர் கணவரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், யோசித்துப் பார்த்ததில் அது சாத்தியமானால் நல்லதுதானே என்றும் தோன்றியது. குடும்பத்தில் எல்லோரும் கூடிப் பேசி, பேட்டி வாடகைத்தாயாக முடியுமானால் அப்படியே நடக்கட்டும் என்கிற முடிவுக்கு வந்தார்கள். முதல்கட்டமாக, 50 வயதான பேட்டிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. `அவருக்குக் குழந்தையைச் சுமக்க்கும் அளவுக்கு உடம்பில் தெம்பிருக்கிறது, ஆரோக்கியமாக இருக்கிறார்’ என்று சோதனை முடிவில் தெரியவந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 4:38 pm

ஐ.வி.எஃப் (IVF - In vitro fertilization) எனப்படும் பெண்ணின் கருமுட்டைக்குள் விந்தணுவை செயற்கையாகச் செலுத்தி, அதன் பிறகு, கருமுட்டையை வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கும் முறையான செயற்கை கருவூட்டலை மருத்துவர்கள் பேட்டிக்குச் செய்தார்கள். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டாம் முயற்சியில், 2017, மே மாதம் பேட்டி கருவுற்றார். குடும்பமே மகிழ்சியில் திளைத்தது.


2017, டிசம்பர் 30-ம் தேதி பேட்டி, அவரது மகனின் மகனை அறுவைசிகிச்சை மூலம் பெற்றெடுத்தார். குழந்தைக்கு க்ராஸ் ஆலன் ஜோன்ஸ் (Kross Allen Jones) என்று பெயர் வைத்தார்கள். குழந்தையை முதன்முதலில் கையில் வாங்கிய கெய்லா ஜோன்ஸ், “இப்போது என் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. என் மகன் கிராஸ் இனிப்பான அதிசயம். வாடகைத்தாய் முறையில் இவனை பெறுவதற்குள் நாங்கள் பல துன்பங்களை அனுபவித்துவிட்டோம். நாங்கள் வேதனையோடு கண்ணீர் வடித்த அத்தனை துன்பங்களுக்கும் பரிசாக, காணிக்கையாக இவன் கிடைத்திருக்கிறான். இவனோடு ஒப்பிட்டால் எங்கள் கஷ்டமெல்லாம் ஒன்றுமேயில்லை. எங்கள் துன்பங்கள் அனைத்தும் ஒரு நொடியில் மாயமாகிவிட்டன” என்று ஆனந்தக் கண்ணீர்விட்டிருக்கிறார்.
“குழந்தைப்பேறின்மை, குழந்தை பெற்றுகொள்வதற்கான அனைத்து வழிகளையும் எங்களுக்குக் காண்பித்துவிட்டது. எங்கள் கதையைக் கேட்பவர்கள் பலவிதமாகப் பேசுகிறார்கள். சிலர், `இது இயற்கைக்கு புறம்பானது’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். எங்கள்நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால், அவர்களுக்கு இது இயற்கைக்கு புறம்பானதாகத் தெரியாது” என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் கெய்லா ஜோன்ஸ்.
குழந்தையைப் பெற்றெடுத்த பேட்டி,``இப்போது நான் சந்தோஷத்தின் உச்சத்தை உணர்கிறேன். என் மகன், மருமகளுக்காக நான் எனது பேரனை வயிற்றில் சுமந்ததைப் பெரிய வெகுமதியாகக் கருதுகிறேன். எங்கள் குடும்பமே இப்போது ஆசீர்வதிக்கப்பட்டதைப்போல் உணர்கிறேன்” என்று நெகிழ்ந்திருக்கிறார். 50 வயதிலும் தன் மகனின் மகனைச் சுமந்த பேட்டியின் தாயுள்ளம் போற்றுதலுக்குரியது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 4:40 pm

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! XByfjSExTaKRWZMl6zaL+Screenshot_2018-03-23-16-38-58மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! JBsw7HMQOmtWC9jlVt0T+Screenshot_2018-03-23-16-39-15

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 4:41 pm

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! YZ5df54SIPqrSyZXWB1w+Screenshot_2018-03-23-16-39-31

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 23, 2018 5:00 pm

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! 3838410834 மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! 3838410834

இது தாய் பாசத்தின் உச்சக்கட்டம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 7:01 pm

SK wrote:மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! 3838410834 மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்! 3838410834

இது தாய் பாசத்தின் உச்சக்கட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1263693
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக