புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
31 Posts - 53%
heezulia
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
1 Post - 2%
Manimegala
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
1 Post - 2%
jairam
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
13 Posts - 4%
prajai
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
3 Posts - 1%
jairam
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_m10லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 28, 2018 7:28 am

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் D5f6da8bP1444002mrjpg
-
அன்று அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். மரங்களுக்காக
அந்த ஒரு முழு நாளை ஒதுக்கிக்கொள்வது என்று முந்தைய
இரவில் முடிவெடுத்தேன்.

ஏழு நாள் லண்டன் பயணத்தில், மரங்களுக்காக ஒரு நாள்
எனும் திட்டம் யோசித்தபோது மனதுக்குத் திருப்தி அளிப்பதாக
இருந்தது. அது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பது
விடுதியை விட்டுக் கிளம்பி சாலையில் கால் வைத்ததும்
புரிந்தது.

விடுதியைச் சுற்றியே இப்போது ஏராளமான மரங்கள் நின்றன.
பெரிய பெரிய மரங்கள். நிறைய வயதான மரங்கள். எப்படி
முதல் நாள் முழுமையிலும் கண்ணில் படாமல் போயின!

அன்றைக்கு மழை இன்னும் தொடங்கியிருக்கவில்லை.
இரவு மழை பெய்த தடம் காற்றில் கலந்திருந்தாலும் மண்
உலர்ந்திருந்தது. வானம் கருநீலம் பூத்திருந்தது. மேகங்கள்
கிழக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன.

லண்டனிலிருந்து கடல் தூரம். ஆனால், காற்றில் கடல்
வாடையடித்தது. ஒருவேளை இதுவரை அறிந்திராத ஏதேனும்
ஒரு மரத்திலிருந்து வெளிப்படும் மணமாகவும் இருக்கலாம்.

அதிகாலைகளை மரங்கள் தங்களுடையதாக மாற்றி
விடுகின்றன. கருத்த, வெளுத்த, பழுப்பேறிய, சாம்பல் பூத்த
மரங்களை ஒவ்வொன்றாகக் கடந்தேன். இன்னும் வெளிச்சம்
முழுவதுமாகச் சூழாத அந்த அதிகாலையிலேயே நகரம்
சுறுசுறுப்பாகியிருந்தது.
-
---------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 28, 2018 7:28 am

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் D5f6da8bP1444003mrjpg

விக்டோரியா பூங்காவுக்கு வரச்சொல்லியிருந்தார் ஹெலன்.
அங்கிருந்து ஒவ்வொரு பூங்காவாகப் பார்க்கலாம் என்று திட்டம்.
வாழ்க்கையை எவ்வளவு எளிமையாகத் திட்டமிட்டுவிடுகிறது
ஒரு தமிழ் மனம்? மூன்று பூங்காக்களைப் பார்த்த மாத்திரத்தில்
திட்டத்தின் அபத்தம் பல் இளித்தது.

நகரம் எங்கிலும் மொத்தம் 3,000 பூங்காக்கள். பூங்கா என்பது
பெயர்தான். எல்லாம் சிறு, குறு காடுகள். 35,000 ஹெக்டேருக்கு
இவை பசுமை போர்த்தியிருக்கின்றன. சொல்லப்போனால்,
லண்டன் பெரிய நகர்ப்புறக் காட்டைத் தன்னுள்ளே உருவாக்கிக்
கொண்டிருக்கும் பெருநகரம் என்று அதைச் சொல்லலாம்

அல்லது வளர வளரப் பெருக்கும் ஒரு பெருநகரத்தைத் தன்னுள்
உள்ளடக்கி விரித்துக்கொண்டேயிருக்கும் காடு என்றும் அதைச்
சொல்லலாம். ஹெலன் சிரித்தார்.

“இங்குள்ள மரங்களைப் பார்க்க உங்களுக்கு ஒரு ஆயுள்
போதாது சமஸ். லண்டனில் இன்றுள்ள மரங்களின் எண்ணிக்கை
எவ்வளவு தெரியுமா? 84 லட்சம். இன்றைய மக்கள்தொகையுடன்
ஒப்பிட்டால் கிட்டத்தட்ட ஒவ்வொரு லண்டன்வாசிக்கும்
ஒரு மரம்.

மக்கள்தொகை ஏறஏற இந்த எண்ணிக்கையையும் அதிகரிக்க
முயற்சி நடக்கிறது. இந்த மரங்கள் அத்தனையையும் ஒரே
இடத்தில் தொகுத்தால் நகரின் 20% இடங்கள் மரங்களால் மட்டும்
நிறைந்திருக்கும்.”

“எனக்கு உண்மையாகவே பெரிய பிரமிப்பாக இருக்கிறது
ஹெலன். லண்டனைக் காட்டிலும் விகிதாச்சார அடிப்படையில்
கூடுதலான பசுமைப் பரப்பைக் கொண்ட நகரங்கள்
ஐரோப்பாவில் உண்டு என்பதை அறிவேன்.

ஆனாலும், லண்டனில் இவ்வளவு மரங்கள் ஆச்சரியம்தான்.
தொழில்மயமாக்கலை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாட்டின்
தலைநகரம். அதன் எல்லாச் சீரழிவுகளையும் பார்த்த நகரம்.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில்
ஒன்றாக வளர்ந்த நகரம். இன்னும் விரிந்துகொண்டேயிருக்கும்
நகரம்.
உங்களால் மரங்களைத் தொடர்ந்து காக்க முடிகிறது?”
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 28, 2018 7:29 am

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் D5f6da8bP1444005mrjpg
-


“தொடர்ந்து பாதுகாத்தோம் என்று சொல்ல முடியாது. நீங்கள்
குறிப்பிட்ட விஷயம்தான். தொழில்மயமாக்கல் காலகட்டம்
பெரிய நாசத்தை லண்டனில் உருவாக்கியது. கணிசமான
மரங்களை இழந்தோம். நீர்நிலைகள் நாசமாயின. சுற்றுச்சூழல்
கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

லண்டனில் பனி நாட்களில் தொழிற்சாலைப் புகையால் மக்கள்
வெளியவே வர முடியாத சூழல் எல்லாம் இருந்திருக்கிறது.
நான் சொல்வதெல்லாம் நூறு, இருநூறு வருடங்களுக்கு முன்பு.
தொழில்மயமாக்கல் தொடங்கியே இருநூற்றைம்பது வருடங்கள்
தொடுகின்றன, அல்லவா?

1950-களில்கூட நிலைமை சீரடைந்தது என்று சொல்ல முடியாது.
ஆனால், மரங்கள் மீது கை வைப்பது என்பது ஏதோ ஒருவகையில்
புனிதத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. வருடத்தில்
மரங்களைக் கொண்டாட மட்டும் லண்டனில் 60 நிகழ்ச்சிகள்
நடக்கும்.”

“எங்கள் தமிழ்க் கலாச்சாரத்திலும் மரங்களுக்குப் பெரிய இடம்
உண்டு. சொல்லப்போனால், தலவிருட்சம் என்ற பெயரில்
கோயிலுக்குக் கோயில் தனி மரங்கள் உண்டு. நாட்டார் மரபில்
மரங்களே கடவுளாக வணங்கப்படுவதும் உண்டு. நெடிய
கிராமியப் பண்பாடு எங்களுக்கு உண்டு என்பதை நீங்கள்
படித்திருப்பீர்கள்.

அதற்கு இணையான இரண்டாயிரம் வருட நகரியப் பண்பாடும்
உண்டு. என்னை எடுத்துக்கொண்டால், என்னுடைய சொந்த
ஊரான மன்னார்குடி, ஒரு சிறுநகரம். கிட்டத்தட்ட ஆயிரம் வருடப்
பழமையான ஊர். கச்சிதமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட
நகரங்களில் ஒன்று அது.

சின்ன ஊரில் நூறு குளங்கள் இருந்தன. ஊர் எல்லையில்
சிறுவனங்கள் பராமரிக்கப்பட்டன. வரலாற்றின் ஏதோ ஒரு
கணத்தில் இவ்வளவும் சடசடவென்று மக்களின் மறதிக்குள்
போய்விட்டன. இன்று எல்லாம் மாறிவிட்டது. மரங்களை
வெட்டுவது மிகச் சாதாரணமாகிவிட்டது.

‘வளர்ச்சி’, ‘விரிவாக்கம்’ என்ற பெயரில் ஒவ்வொரு நாளும்
எங்கோ மரங்கள் கீழே வீழ்ந்தபடியே இருக்கின்றன.”

“மேம்பாடு என்பது வேண்டியதுதான். ஆனால், எதைக் கொடுத்து
எதை வாங்குகிறோம் என்று ஒரு கேள்வி இருக்கிறது இல்லையா?”

“மனித வாழ்க்கையில் மிக முக்கியமான கேள்வி அது. எதைக்
கொடுத்து எதை வாங்குகிறோம்? அது ஒன்றை ஞாபகத்தில்
வைத்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தேவையே இல்லையே!

காந்தி இதைத்தான் ஆழமாகக் கேட்டார். பிரிட்டனையே
இந்த விஷயத்தில் கடுமையாக அவர் விமர்சித்திருக்கிறார்.
அதேசமயம், இங்கு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் குடிமைப்
பண்பை மெச்சவும் செய்திருக்கிறார்.

மக்கள்தொகை பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நகரத்தை விஸ்தரிக்கும்போது
மரங்களை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?”

“இரண்டாயிரம் வருட வரலாற்றில் லண்டன் எல்லாக்
காலங்களிலும் வளர்ந்தபடியே வந்திருக்கிறது. 1750-லேயே
பிரிட்டனின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கினர் –
6.75 லட்சம் பேர் - லண்டனில் இருந்தார்கள்.

உலகில் முதலில் ஒரு மில்லியன் மக்கள்தொகையைத் தொட்ட
ஐந்து நகரங்களில் ஒன்று இது. ஐம்பது லட்சம் மக்கள்
தொகையைக் கடந்த முதல் நகரமும் இதுதான். தொழில்
மயமாக்கல் காலகட்டத்தில் லீட்ஸ், மான்செஸ்டரில் ஏராளமான
மக்கள் குவிந்தார்கள். அ

வ்வளவு தொழிற்சாலைகள் இங்கிருந்தன என்று சொல்லத்தக்க
அளவுக்கு லண்டன் சூழல் இல்லை என்றாலும், லண்டனில் மக்கள்
குவிவது நிற்கவே இல்லை. இன்றும் ஒரு சின்ன அறைக்குள்
வாழ்பவர்கள் அவ்வளவு பேர் இருக்கிறார்கள்.

ஆனால், நகரம் காங்கிரீட் மேடாக மாறிவிடக் கூடாது என்ற
எண்ணம் மட்டும் மக்களிடம் இருக்கிறது. அப்புறம் ஒரு பட்ட
மரத்தைக்கூட முன் அனுமதியில்லாமல் இங்கே வெட்டிவிட
முடியாது.

நீங்கள் அறிந்தே ஒரு மரம் சேதமடையக் காரணமாக
இருந்திருக்கிறீர்கள் என்றால், 20,000 பவுண்டுகள் வரை அபராதம்
உண்டு. ஒருவேளை ஒரு மரத்தை வெட்ட அனுமதி அளிக்கப்
பட்டாலும் அதற்கு மாற்றாக இன்னொரு மரத்தை வளர்க்க
வேண்டும்.”
-
--------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 28, 2018 7:32 am

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் D5f6da8bP1444001mrjpg
-

“இதற்காகவே லண்டன்வாசிகளுக்குப் பெரிய சலாம்
போடுவேன் நான்!”

“உங்கள் பாராட்டை நீங்கள் லண்டன் மேயரை நேரில்
சந்திக்கும்போது சொன்னால் அவர் சந்தோஷப்படுவார்.
ஏனென்றால், அடுத்தடுத்து வரும் மேயர்கள் எல்லோருமே
மரம் வளர்ப்பில் எவ்வளவு அக்கறையைக் காட்டினாலும்,
‘இதெல்லாம் போதாது’ என்றே பெரும்பான்மை லண்டன்
வாசிகள் நினைக்கிறார்கள்.

நான் உட்பட. விளைவாக, காற்று மாசை எதிர்கொள்ள மரம்
வளர்ப்பு நீங்கலாக செயற்கை மரங்களை இப்போது
நகரத்தின் முக்கியப் பகுதிகளில் அமைக்கிறார்கள்.”

அப்படியான மரம் ஒன்றையும் ஹெலன் எனக்குக் காட்டினார்.
‘சிட்டி ட்ரீ’ என்று அந்தக் கட்டுமானத்தைச் சொல்கிறார்கள்.
நான்கு சாலைச் சந்திப்பு ஒன்றில் அதைப் பார்த்தேன்.

செங்குத்தான புதர் வேலிப் பலகையை நிற்கவைத்ததுபோல
அது காட்சியளிக்கிறது. பார்க்க பச்சைப்பசேலென்று இருக்கிறது.
ஒருவகை பாசியில் செய்கிறார்களாம். அதில் உள்ள ஈரப்பசை
காற்றில் கலந்து வரும் மாசுத்துகள்களையும் கெடுதல் செய்யும்
கிருமிகளையும் ஈர்த்துக்கொள்ளுமாம்.

சுமார் 275 மரங்கள் உறிஞ்சும் அளவுக்கு இணையான மாசை
இந்த ‘சிட்டி ட்ரீ’ ஒவ்வொன்றும் உறிஞ்சுகிறதாம். லண்டன்
வாசிகளின் மனநலன் சார்ந்து மட்டும் ஆண்டுக்கு 260 கோடி
பவுண்டுகளைச் செலவிடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு நோய்க்கான காரணத்தையும் செலவையும்
சுற்றுச்சூழலோடு பொருத்திப்பார்க்கிறார்கள். ஒவ்வொரு மரமும்
இந்த வகையில் விலைமதிப்பற்றதாக மாறிவிடுகிறது.

பசுமை லண்டனுக்காகக் குரல்கொடுப்பவர்கள் சிலரைப் பற்றி
ஹெலன் என்னிடம் சொன்னார். அவர்களில்
டேனியல் ரேவன் எல்லிசன் என்னை ஈர்த்தார். புவியியல்
ஆசிரியரான இவர், குழந்தைகள் – மாணவர்களிடம் ஏன் ஒரு
நகரம் பசுமையாக இருக்க வேண்டும் என்பதையும் என்னென்ன
வழிகளில் எல்லாம் லண்டனை மேலும் பசுமையாக்கலாம் என்றும்
தொடர்ந்து பேசிவருகிறார்.

“மரங்களால் நகரின் பொருளாதாரத்துக்கு மறைமுகப் பலன்
அதிகம். காற்றில் கலக்கும் கரியமில வாயுவை வெளியேற்றி
பிராண வாயுவை மரங்கள் வாரி வழங்குகின்றன. நகரில்
மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் காக்கின்றன.

நகரின் வெப்பத்தைத் தணிக்கின்றன. மேய்ச்சல் நிலங்களைக்
காட்டிலும் மரங்கள் அடர்ந்த பகுதியின் நிலம் மழை நீரை
அறுபது மடங்கு அதிகம் உறிஞ்சிக்கொள்கிறது. முக்கியமாக
நச்சுக்காற்றால் மோசமாகாமல், மக்களுடைய சுகாதாரம்
பாதிக்கப்படாமல் மரங்கள் தணிக்கின்றன.

இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு 1,327 லட்சம் பவுண்டுகள் என்று
சொல்வேன். குழந்தைகளிடம் நான் முக்கியமாகச் சொல்வதே
லண்டனில் 13,000 வகை ஜீவராசிகள் இருக்கின்றன.

இந்த 13,000 ஜீவராசிகளில் மனிதனும் ஒன்று என்ற புரிதல் நமக்கு
வேண்டும் என்பதைத்தான். இன்று உலகில் இறக்கும் ஏழு பேரில்
ஒருவர் காற்று மாசினால் இறக்கிறார்;

பிரிட்டனை எடுத்துக்கொண்டால் வருடத்துக்கு 40,000 பேர் காற்று
மாசினால் இறக்கிறார்கள். மரங்களை வெட்டுபவர்கள்
ஒருவகையில் கொலையாளிகள்” என்கிறார் ரேவன் எல்லிசன்.
-
------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 28, 2018 7:42 am



ஆயிரம் வருடங்களைக் கடந்த பல மரங்கள் லண்டனில்
இருப்பதாகச் சொன்னார் ஹெலன். டாட்டரிட்ஜ் யியூவில்
உள்ள மரம் மிகப் புராதனமானது என்றார்.

அந்திரேயர் தேவாலய வளாகத்தில் உள்ள இந்த மரம்
2,000 வருடங்கள் பழமையானதாம். “ஐயாயிரம் வருடப்
பழமையான மரங்கள் அமெரிக்கக் கண்டத்தில்
இருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் நாங்கள்
ஏழைகள்” என்றார்.

“ரொம்ப ஏழைகள்தான்” என்றேன்.

அன்று மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே ஹெலன்
விடைபெற்றுக்கொண்டார். நன்கு இருட்டியும் விடுதிக்குத்
திரும்ப மனமில்லாமல் வீதிகளில் சுற்றிக்
கொண்டேயிருந்தேன். அநேகமாக எல்லா வீடுகளை
ஒட்டியும் மரங்கள் நிற்கின்றன.

வீட்டின் வாசலில், மாடி பால்கனியில் கொடிகளைப்
படரவிட்டிருக்கிறார்கள். வீட்டுக்குப் பின்புறம் சின்ன
தோட்டம். சாலைகளில் மரங்கள். மழைத் தூறல்கள்
விழுந்தன.

குடையை விரிக்க மனமில்லை. உடலும் குளிரவில்லை.
இலக்கின்றி நடந்துகொண்டிருந்தேன். நெஞ்சமெல்லாம்
குற்றவுணர்வு அப்பிக்கொண்டிருந்தது.

எதை வாங்க இப்படி எல்லாவற்றையும் பறிகொடுத்துக்
கொண்டிருக்கிறோம்?
-
--------------------------------------------
- சமஸ்

நன்றி - தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 28, 2018 10:06 am

அருமையான இயற்கையுடன் இணைந்த வாழ்கை இது தான் உண்மையான வளர்ச்சி  லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் 3838410834 லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் 3838410834



Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sat Jul 28, 2018 12:03 pm

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் 1571444738 லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் 103459460

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் London

விமான நிலையத்தில் நான் கடந்துவந்த சுவரோர தட்டிகளை அப்போதுதான் கவனித்தேன். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருக்கும் அந்த ‘நல்வரவுப் பதாகைகள்’ ஒவ்வொன்றிலும் புன்னகை பூரிக்க இரு கைகளையும் விரித்தபடி மனிதர்கள் நிற்கிறார்கள். வெவ்வேறு மனிதர்கள். நான் அவற்றின் அருகே சென்று பார்த்தேன்.

ஒவ்வொரு படத்தின் கீழும் சம்பந்தபட்டவரின் பெயர், பணி விவரம். ‘டிம் பீக் - விண்வெளி வீரர்; ராகுல் - வாடிக்கையாளர் சேவை முகவர்; தான்யா மூடி - நடிகை; ஜோ ஹவுஸ்டன் - விமானி; ஸ்டீபன் வில்ட்ஷிர் - இசைக் கலைஞர்;ஆலன் மியாட் - தண்டோராக்காரர்; விக்கி ஃபைஸன் - விலங்குப் பராமரிப்பாளர்; கிறிஸ் ஓ நைல் - பூக்கடைக்காரர், டாம் வின்ஸி - டாக்ஸி ஓட்டுநர்.’

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் India%2Boffice%2B1

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் London-skyline_CS

(படங்கள்,விளக்கம்-சமஸ்.)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 28, 2018 1:09 pm

மேலும்  தகவல் மற்றும் படங்க அருமை 

Mr.theni

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் 3838410834 லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம் 3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக