புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
32 Posts - 54%
heezulia
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
17 Posts - 3%
prajai
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
4 Posts - 1%
jairam
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_m10சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2018 2:52 am

சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Tamil_News_large_2119189

திருவனந்தபுரம் : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் பிரச்னையில் கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால், சன்னிதானத்தில் பெண் போலீசாரை நியமிக்கும் முடிவு கைவிடப்பட்டது. தொடர் போராட்டங்களால், முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சபரிமலையில், பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, 10 - 50 வயது வரையுள்ள பெண்கள், கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. அய்யப்பன், பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இந்த நடைமுறை, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், 'அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம்' என, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து, ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு, சீராய்வு மனு தாக்கல் செய்யாதது, கேரளாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மாநில அரசைக் கண்டித்து, பெண்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைப் பார்த்து, சில கட்சிகளும் நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

இந்த பிரச்னையில் சுமுக நிலையை ஏற்படுத்தும் வகையில், ஐயப்பன் பிறந்ததாக நம்பப்படும், பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் தாழமன் தந்திரி குடும்பத்தினரை, பேச்சு நடத்த, மாநில அரசு அழைத்தது. 'சீராய்வு மனு தாக்கல் செய்யாத நிலையில் பேச்சு நடத்தி பயன் இல்லை' என, அவர்கள் அழைப்பை நிராகரித்ததால், போராட்டம் மேலும் வலுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்திய பெண்கள், தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தனர். ஐப்பசி மாத பூஜைக்கு பெண்கள் வந்தால், அவர்களை தடுக்க, பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பந்தளத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள், அக்., 11ல்,- ஊர்வலமாக புறப்பட உள்ளனர்.

இப்பிரச்னை குறித்து விவாதிக்க, காங்., தலைமையிலான கட்சிகளின் கூட்டம் நேற்று நடந்தது. இதன் பின், எதிர்க்கட்சித் தலைவரும், காங்., மூத்த தலைவருமான, ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ''இப்பிரச்னையில் மத நம்பிக்கை உள்ளவர்களின் பக்கம் நிற்போம். பா.ஜ., சந்தர்ப்பவாதமாக செயல்படுகிறது,'' என்றார்.

இந்நிலையில், அக்., 11-ல், பந்தளத்தில் துவங்கி, அக்., 15-ல், திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நிறைவு அடையும்

வகையில், நீண்ட யாத்திரை நடத்தப் போவதாக, பா.ஜ., மாநில தலைவர், ஸ்ரீதரன் பிள்ளை அறிவித்தார்.



சபரிமலையில், பெண்களின் பாதுகாப்புக்காக பெண் போலீசாரை அனுப்ப, மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக, 40 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அந்த முடிவில் இருந்து, அரசு பின்வாங்கி உள்ளது. 'ஐப்பசி மாத நடை திறப்பின் போது, பெண் போலீசாரை அனுப்ப வேண்டாம்; தேவைப்பட்டால் பம்பை வரை அனுப்பலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.



எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

சமீபத்திய மழை பாதிப்பின் போது ஏற்பட்ட சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. சபரிமலை பிரச்னையில் கலவரம் ஏற்படுத்த, சிலர் முயற்சிக்கின்றனர்; இது, மாநில நலனுக்கு நல்லதல்ல.

'தீர்ப்பை அரசு செயல்படுத்தும்' என, நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளோம். அதனால், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது. மத நம்பிக்கை உள்ளோருடன் மோதும் எண்ணம், அரசுக்கு இல்லை. அரசியல் ரீதியாக கலகம் ஏற்படுத்துவோரிடம், அரசு அடிபணியாது. இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், முதல்வர் பினராயி விஜயனும், அவரது கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



சபரிமலை கோயிலுக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, 'நாயர் சர்வீஸ் சொசைட்டி' மற்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலையில் முழுமையாகவே பெண்களை அனுமதிக்காமல் இருந்தால் தான், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக கருதப்படும். ஆனால், சபரிமலையில், பெண்களையும் அனுமதிக்கிறோம். அதே நேரத்தில், ஐயப்பன், பிரம்மச்சாரி கடவுள் என்பதால், பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற மதம் அடிப்படையிலான சம்பிரதாயத்தில் தலையிட யாருக்கும், நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூட, பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவே கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், பாலியல் பாகுபாடு எதுவும் சபரிமலையில் இல்லை. அதனால், தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்




சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 09, 2018 9:55 pm

இதுக்கு தான் தல நான் கோயிலுக்கே போரது இல்ல



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 10, 2018 10:05 pm

இவ்வாரான செயலை வேடிக்கை பார்க்கத்தானே நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இது சட்டமல்ல .காலங்காலமாய் கடைபிடித்துவரும் ஆன்ம தர்மம். சட்டம் சொல்கிறது நாறபது ஆண்டாக புரம்போக்கை பயன்படுத்தி வந்தால் அவனுக்கே சொந்தமாக்குகிறது. அதே போல் சுமார் ஐம்பது ஆண்டுக்கு மேலாக வாடகை குடியிருப்பில் இருப்பவனுக்கு அவ்வீட்டை உரிமை கொண்டாட க்கூட சட்டம் உதவுகிறது. அதுபோல் உள்ள பாரம்பரிய கட்டுப்பாட்டை ஏதோ ஓர் பெரிய தீர்ப்பு போல் அறிவித்து கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் வேலை வாங்கிக்கொண்டது எனலாம் .எத்தனையோ வழக்குகள் நீண்ட காலமாக தீர்ப்பு வழங்காமல் காலம் கடந்து வருவதை கண்காணித்து திறமையாக செயல்பட்டால் நீதி மன்ற நீதிபதிகளை பாராட்டலாம்......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 14, 2018 5:59 am

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு கேரளாவில் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது


கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை அமல்படுத்தப் போவதாக கேரளாவில் ஆட்சியில் இருக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டுக்கு இந்த தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்ற போதிலும், கோர்ட்டு தீர்ப்பை மீற முடியாது என்றும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் கேரள அரசுக்கு எதிர்க்கட்சியான காங்கிரசும் மற்றும் பாரதீய ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரியத்தையும், வழிகாட்டு முறைகளையும் மாற்றக்கூடாது என்று கோரி பாரதீய ஜனதா போராட்டம் நடத்தி வருகிறது.

மேலும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் டெல்லியிலும் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தாலும், பாரம்பரியத்தை தாங்கள் மீறப்போவது இல்லை என்றும், கோவிலுக்கு செல்லமாட்டோம் என்றும் ஏராளமான பெண்கள் அறிவித்து உள்ளனர்.

இதற்கிடையே, பெண்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பெண்களுடன் விரைவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபடப் போவதாக கூறினார். அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்துவது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறிய அவர், சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் வருவதை அவர்கள் வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த பிரச்சினையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும் என்றும் திருப்தி தேசாய் கேட்டுக் கொண்டார்.

இவர், மராட்டிய மாநிலத்தில் சில வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி பிரசாரம் மேற்கொண்டவர் ஆவார்.

சபரிமலை கோவிலுக்கு செல்லப்போவதாக அறிவித்துள்ள திருப்தி தேசாய்க்கு அய்யப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல் பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

திருப்தி தேசாய் ஆட்சேப கரமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் வர்மா, சபரிமலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கேரள அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.

இந்தநிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, சபரிமலையில் பெண்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கேரள அரசு கூறி இருப்பதால், நடை திறக்க இருப்பதையொட்டி அங்கு பெண்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கேரளாவில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொச்சியில் சிவசேனா சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்றும், அய்யப்பன் கோவிலின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் மத்திய-மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

பேரணியின் போது சிவசேனா பிரமுகர் பெரிங்கமலா அஜி கூறுகையில், தங்கள் கட்சியைச் சேர்ந்த தற்கொலைப்படை பெண்கள் 17-ந் தேதியும், 18-ந் தேதியும் பம்பை நதி பகுதியில் கூடுவார்கள் என்றும், இளம்பெண்கள் யாராவது சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றால் அங்கு கூடி இருக்கும் தங்கள் கட்சி பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதற்கிடையே, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கேரளாவில் நடத்தும் நீண்ட தூர பேரணி நேற்று கொல்லம் மாவட்டத்துக்கு வந்தது.

பேரணிக்கு தலைமை தாங்கி வந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், சபரிமலை கோவிலுக்கு செல்லப்போவதாக திருப்தி தேசாய் கூறி இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். எரியும் நெருப்பில் எண்ணெய் விட வேண்டாம் என்றும், சபரிமலையை பதற்றம் நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டாம் என்றும் திருப்தி தேசாயை அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.



சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 14, 2018 6:00 am

சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் 201810140413323076_Resistance-to-permit-women-in-SabarimalaThe-struggle-in_SECVPF



சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun Oct 14, 2018 6:59 am

சிவா wrote:சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல் 201810140413323076_Resistance-to-permit-women-in-SabarimalaThe-struggle-in_SECVPF
மேற்கோள் செய்த பதிவு: 1281684

இந்த மக்கள் கூட்டம் பெட்ரோல் விலையுயர்வுக்க்காகவோ , அல்லது உயர்ந்துவரும்  எரிவாயுவுக்ககவோ போராடினால் நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் பயன் கிடைத்திருக்கும் . கடவுளுக்காக யாராவதும் போராடுவார்களா . கடவுள் தான் பெரியவராச்சே . கடவுளுக்கும் கட்சிக்கொடி இருக்கும் போலிருக்கிறது .இந்த நூற்றாண்டிலும் கல்வியறிவு முதலிடம் என்று மாறு தட்டிக்கொள்ளும் கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் இன்னும் மூட நம்பிக்கை மக்களிடையே இருக்கிரதென்றால் , வட இந்தியாவை என்ன சொல்வது . இந்த போராட்டத்தை தங்கள் கணக்கில் சேர்க்க காங்கிரஸ்சும் , பி ஜே பியும் போராடுகிறது .மத்திய அரசின் மோசமான கொள்கைகளும் விலைவாசி உயர்வும் மக்களிடையே பரவாமல் இருக்க இதை பி ஜே பி ஆயுதமாக்கி கொள்கிறது .

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun Oct 14, 2018 7:14 am

சிவனாசான் wrote:இவ்வாரான செயலை வேடிக்கை பார்க்கத்தானே நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  இது சட்டமல்ல .காலங்காலமாய்  கடைபிடித்துவரும்  ஆன்ம தர்மம். சட்டம்  சொல்கிறது  நாறபது ஆண்டாக புரம்போக்கை பயன்படுத்தி வந்தால்  அவனுக்கே சொந்தமாக்குகிறது. அதே போல் சுமார் ஐம்பது  ஆண்டுக்கு மேலாக வாடகை குடியிருப்பில் இருப்பவனுக்கு  அவ்வீட்டை  உரிமை கொண்டாட க்கூட சட்டம் உதவுகிறது. அதுபோல் உள்ள பாரம்பரிய கட்டுப்பாட்டை ஏதோ ஓர் பெரிய தீர்ப்பு போல் அறிவித்து  கோர்ட்டுக்கும்  வக்கீலுக்கும் வேலை வாங்கிக்கொண்டது எனலாம் .எத்தனையோ  வழக்குகள் நீண்ட காலமாக தீர்ப்பு வழங்காமல்  காலம் கடந்து வருவதை கண்காணித்து திறமையாக செயல்பட்டால்  நீதி மன்ற நீதிபதிகளை பாராட்டலாம்......
மேற்கோள் செய்த பதிவு: 1281319

ஐயா ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நன்றாக அலசி ஆராய்ந்து இரண்டு amicus கூறி என்று கூறப்படும் நீதிமன்றத்தின் நண்பர்களை அமைத்து முழு விசாரணை நடத்தி  ஐயப்பா சேவா சங்கம் , நாயர் சேவை சங்கம் போன்ற சங்கங்களின், வாதங்களையும் கேட்டு முடிவில் தான் இந்த தீர்ப்பு குடுத்திருக்கிறார்கள் நீதிபதி அவ்பர்கள் .அரசியலமைப்புக்கு எதிராக எந்த சட்டமும் நாட்டில் நிலைத்து நிற்க கூடாது என்பது தான் அவர்கள் கருத்து .கேரளா உச்ச நீதிமன்றம் ஒருதடவை ஒரு தீர்ப்பு குடுத்திரிக்கிறது வயது வந்த பெண்கள் அங்கு செல்லக்கூடாது என்று .அந்த தீர்ப்பு அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று கூறி தான் புதிய தீர்ப்பு வழங்கியிரிக்கிரார்கள் .
                            இது போன்ற ஒரு தீர்ப்பு மும்பை உச்ச நீதிமன்றத்தின் மூலம் சனி சிக்னாபூர் என்ற மகாராஷ்ட்ராவில் உள்ள கோவிலுக்கும் இது போன்று பெண்கள் போகலாம் என்று கூறியபோது அதை மட்டும் அங்குள்ள பி ஜே பி அரசு அதை நடைமுறை படுத்தியதல்லவா ? அதை மட்டும் யாரும் ஏன் கேள்வி கேட்கவில்லை .எல்லாம் அரசியல் லாபத்திற்காக மக்களை கேடையமாக பயன் படுத்து கிறார்கள் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 7:21 am

இந்த மாதிரி தீர்ப்பு அதை நடைமுறைப்படுத்த அரசு முனைப்பு
மக்கள் போராட்டம் எதிர்ப்பு இது
தேவையற்றது என்று தோன்றுகிறது.
சில நடைமுறைகள் எப்படி இருந்ததோ
அதை குழப்பி அதில் மீன் பிடிக்க
முயற்சிப்பது நல்லதல்ல.
நன்றி தலைவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக