புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
56 Posts - 50%
heezulia
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
12 Posts - 2%
prajai
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
9 Posts - 2%
jairam
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரண்டாவது வாழ்க்கை! Poll_c10இரண்டாவது வாழ்க்கை! Poll_m10இரண்டாவது வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது வாழ்க்கை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 22, 2009 2:19 am

ஒரு அழகிய பூஞ்சோலை. இருமருங்கிலும் சிகப்பும், மஞ்சளும், வெள்ளையுமாய் பெயர் தெரியாத பூக்களின் சாம்ராஜ்யம்; நடுப்புறத்தில் திருத்தமாய் கத்தரிக்கப்பட்ட போன்சாய் மரங்கள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செடி, கொடிகளின் அணிவகுப்பு. கண்களை மூடி லயிக்கிறாள் வசுந்தரா. மலர்களின் ராஜ்ஜியமும், அங்கு மணம் பரப்பிய சுகந்தமும் நாசிக்குள் சந்தோஷ இம்சை தர, கண்களை மூடித்திறந்தவள் திடுக்கிட்டுப் போகிறாள். அவள் கண்களை மூடிய அரை நொடிக்குள், அங்குள்ள பசுமைக்கலை மறைந்து, பொட்டல் வெளியாய் கண்முன் தெரிகிறது. பிணம் வேகும் சுடுகாடாய், அங்கங்கே தீ பற்றிய கரும்புகை தெரிகிறது. மண்டை ஓடுகளும், எலும்புக் குவியலுமாய் அமானுஷ்ய நடுக்கம் அடிவயிற்றில் பரவ, திடுக்கிட்டு எழுந்து மணி பார்த்தாள். மணி நான்கு.

தான் உயிரோடு இருந்த நாட்களில் இருந்து தலைப்பாடாய் அடித்துக் கொள்வார் சுந்தரேசன், மதிய நேரம் தூங்காதே என்று; ஆனால், அவள் வாழ்நாளில் அவர் பேச்சை கேட்காமல் போனது, இந்தவொரு விஷயத்தில் மட்டும் தான்.

எழுந்து முகம் அலம்பி, நெற்றியில் நீறிட்டு வாசலில் வந்தமர்ந்தாள். இரு கைகளையும் அகல விரித்து அணைத்துக்கொள்ள காத்திருந்தது கல்யாண முருங்கை. அதை சுற்றி கட்டப்பட்டு இருந்த அகலதிட்டில் தெருப்பிள்ளைகள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். காம்பவுண்டை ஒட்டியிருந்த மாமரம் ஆளுயரம் தான் இருந்தது. அதற்குள்ளயே கொப்பும், குலையுமாய்; நுங்கும், நுரையுமாய் பிஞ்சு விட்டிருந்ததை பார்க்கயிலே மனசுக்குள் சந்தோஷ அலையடித்தது.

முப்பது வருஷத்திற்கு முன் இந்த இடம் இன்னொரு பரிணாமத்தில் இருந்தது. அப்போது தான் வசுந்தராவிற்கும், சுந்தரேசனுக்கும் திருமணமான புதிது. கும்பகோணத்தில் இருந்த பூர்விக சொத்துகளை விற்றுவிட்டு அடையாறில் இந்த இடத்தை வாங்கினார் சுந்தரேசனின் அப்பா மணி ஐயர். மொத்தமாய் மூன்று கிரவுண்டு. சுந்தரேசன் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும், அக்காவும்.

உள்பிரகாரம் வைத்து மூன்று பேருக்கும் ஆளுக்கொரு வீடு கட்டிவிட்டார் மணி ஐயர் தன் காலத்திலேயே. இப்போது கல்யாண முருங் கையும், மாமரமுமாய் நிற்கும் இடமெல்லாம் அப்போது பசு மாடு கட்டும் தொழுவமாய் இருந்தது.

டில்லி பசு இரண்டும், சிந்தி மாடு ஒன்றுமாய் தொழுவம் அத்தனை நேர்த்தியாய் இருக்கும். அதுவும் வசுந்தரா வந்த பிறகு வீடே ஊதுவத்தியும், சாம்பிராணியுமாய் தெய்வீக மணம் கமழும் எப்போதும். மூத்தவள் பானுமதிக்கு இதுபோன்ற வேலைகளில் நாட்டமே இல்லை; வாணிஸ்ரீ கொண்டை போட்டுக் கொள்ளவும், சரோஜா தேவி மாதிரி புடவை கட்டிக் கொள்வதிலுமே நேரத்தை செலவழித்தாள் அந்நாளிலிலேயே.

வசுந்தராவிற்கு மாடுகள் என்றால் கொள்ளை பிரியம். ஸ்ரீரங்கத்தில் அவள் வீட்டு புழக் கடையில் மாடுகளைப் பார்த்தே வளர்ந்தவள். பாலும், மோரும் அவள் வீட்டு முற்றத்தில் எப்போதும் நிரம்பிக் கிடக்கும். அப்படிப்பட்டவளை கும்பகோணத்தில் கட்டித் தந்த போது எல்லாருக்கும் லேசாய் கவலை இருந்தது, போகிற வீட்டில் மாடு, கன்று இல்லையே என்று. ஆனால், வந்த கவலைகள் பட்டுப்போக, இவள் போன உடனே வீடு சென்னைக்கு மாறி, அங்கு மாடு, கன்றுகள் வாங்கும் படியாகி விட்டது. அந்த நாட்களை நினைத்தால் இன்னும் கூட கையில் வெண்ணெய் மணக்கும்.

காலையிலும், மாலையிலும் இரண்டு ஆட்கள் வருவர் பால் கறக்க. தொழுவத்தை சுத்தம் பண்ண வேலையாட்கள் நிரந்தரமாய் வீட்டோடு இருப்பர். வீட்டுத் தேவை போக மீதியை வாங்கிப் போக, டீக்கடைக்காரர்கள் வாசலில் வரிசை கட்டி நிற்பர்.

மெல்லிய பெருமூச்சு வரும் வசுந்தராவிற்கு. மாடுகளை தன் குடும்பத்து உறவாய்த் தான் எண்ணிக் கொள்வாள்.

கிட்டதட்ட இருபது வருடங்கள் நின்று, நிலைப்பட்ட மாடுகளை விற்க வசுந்தராவிற்கு துளிகூட மனசு ஒப்புக் கொள்ளவில்லை அந்த நாளில். அதற்கு காரணம், சந்தோஷ்; வசுந்தராவின் மூத்த மகன். அவன் வளர, வளர அவனுக்கு அந்தச் சூழல் துளிகூட பிடிக்கவில்லை. சுந்தரேசனுக்கு மகன் மீது அலாதி பிரியம். அவனுடைய பிடிவாதத்திற்காகவும், நகருக்குள் கால்நடைகளை வளர்க்க கூடாதென்று புதிதாய் வந்த சட்டத்திற்காகவும் மாடுகளை விற்க வேண்டியதாயிற்று. தன் உடம்பிலிருந்து ஒரு உறுப்பை அறுத்தெறிந்து, அங்கஹீனப்படுத்தியது போல் உடம்பு வலித்தது.

அந்த இழப்பையும், வலியையும் ஈடு செய்யவே அங்கே நின்று நிலைப்படும் இன்னொரு உயிராய் மரங்களை வளர்த்தாள். நாளாக, ஆக அவற்றோடு சங்கமிக்க பழகிக் கொண்டாள். தினமும் வேலை முடித்ததும் மரநிழலில் வந்து அமர்ந்து கொள்வாள். மெயின் ரோட்டில் நிகழும் போக்குவரத்து துல்லியமாய் தெரியும். அழுது வடியும் சீரியல்களை விட, மரநிழலில் ஓய்வெடுப்பதும், மரங்களை பற்றியதுமான சிந்தனையுமே அவளுக்கு போதுமாய் இருந்தது.



இரண்டாவது வாழ்க்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 22, 2009 2:19 am

பூக்கள் நிறைய பிடிக்க, கடலை புண்ணாக்கு வாங்கிப் போட்டாள்; பிஞ்சுலே கருகி உதிரும் காய்களைப் பார்த்ததும் யூரியா உரங்களைப் போட்டாள்; வேளாண் அலுவலகத்திற்கு சென்று மரவளர்ப்பு பற்றிய தன் சிந்தனை தாக்கத்தை இன்னுமின்னும் விரிவாக்கி கொண்டாள்.

கல்யாண முருங்கைக்கு பதினெட்டு வயசாகிறது; மாமரத்திற்கு ஆறு வயசு. மாமரம் சுந்தரேசனின் மறைவிற்கு பின் நட்டது. ஆனால், இந்த இரண்டு மரங்களும், உயிரோடு உலவிய இரண்டு மகன்களை காட்டிலும் உதவியாய் இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன் ராஜேஷிடம் இருந்து போன் வந்தது.

"என்னம்மா பண்ற...'

"என்னவோ பண்றேன்டா... அதப்பத்தி நீங்க ரெண்டு பேரும் கவலப்பட்டுக்க வேணாம்டா...'

அவளுடைய பதிலைக் கேட்டு, அவனொன் றும் பெருசாய் அலட்டிக் கொள்ளவில்லை.

"என்னம்மா இப்படி பேசறே... வீட்டு விஷயமா சந்தோஷ் சொன்ன விஷயமெல்லாம் மறந்திடுச்சா? பெரியப்பா பசங்களும், அத்தை பசங்களும், அடிக்கடி போன் செஞ்சு வீட்டு விஷயமா என்ன முடிவு எடுத்திருக்கோம்ன்னு கேள்வி கேட்கறாங்க...'
".....'
"என்னம்மா பேசாது இருக்க...? மொத்தமா கம்பெனிக்காரன் கேட்கறான். குடுத்தா பதினைஞ்சு கோடி வரும். நம்மோட பங்கே அஞ்சு கோடி...'
".....'
"இதான்மா உங்ககிட்ட பிரச்னையே... இதனால தான் சந்தோஷ் உங்ககிட்ட பேசவே பிரியப்பட மாட்டேங்குறான். பெரியப்பா வீட்டுக்கும், அத்தை வீட்டுக்கும் நடுவுல நம்ம வீடு இருக்கு. மொத்தமா தந்தாதான் இடத்தை எடுத்துக்குவேன்னு கம்பெனிக்காரன் சொல்றான். அப்படி இருக்கையிலே வீண் பிடிவாதம் பிடிக்காதீங்க...'
"டொக்'கென்று போனை வைத்து விட்டான்.

சுந்தரேசன் செய்த நல்ல காரியம், வசுந்தரா பேருக்கு வீட்டை எழுதி வைத்தது. ராஜேஷும், வசுந்தரா வுடன் போனில் தான் பிள்ளை பாசத்தை காட்டுகிறான். இருவரும் வெளி மாநிலங்களில் செட்டிலாகி பலவருடமாகிறது. இந்த பெரிய வீட்டில், வசுந்தரா, கல்யாண முருங்கை, மாமரம் தவிர, வேறு யாருமில்லை.

சுவாமி படத்திற்கு விளக்கேற்றி கொஞ்ச நேரம் மனமுருக சஷ்டி கவசம் படித்துவிட்டு வெளியில் வந்தாள். வானம் பேய் இருளாய் இருந்தது. மழை வருவதற்கான அறிகுறி. மரங்கள் கைகளை விரித்து போராட்டம் போட்டுக் கொண் டிருந்தது.

கதவை அடைத்து உள்ளே வந்தாள் வசுந்தரா. சுந்தரேசன் போட்டோவிற்கு பூ மாற்றிக் கொண் டிருந்த நேரம், கதவு தட்டப்படும் சப்தம்.

"யாராக இருக்கும்...?' மெல்லிய குழப்பம் மனதினுள் ஓட, தாள் விலக்கினாள்.

நெற்றியில் கோடிட்ட நீறும், தும்பைப் பூ தலையுமாக கிராமத்து மனுஷி. எங்கேயோ பார்த்த முகம்... முகத்தில் அப்பிய அன்யோன்ய சிரிப்பு, கபடு சூதற்ற அவளுடைய வாழ்க்கையை பேசியது.

""நீங்க?''

""என் பேரு விசாலம்; மூணாவது வீட்டு சரோஜாவோட அம்மா...''

"ஆங், நியாபகம் வருகிறது... சரோஜா மகள் சடங்கின் போது இந்த பெண்மணியை பார்த்திருக்கிறேனே...' என்று நினைத்தபடியே, ""வாங்கம்மா...'' என வரவேற்றாள்.
""தப்பா நினைச்சுக்கிடாத தாயீ... தகவல் தராம ஊர்ல இருந்து சரோஜாவை பார்க்க நான், இங்ஙன வர, அவ மாமியாருக்கு மேலுக்கு நல்லா யில்லைன்னு ஊருக்குப் போயிட்டாளாம். அடுத்த வீட்டுக்காரவுக சொன்னாங்க... நாங்க, தெக்கித்தி பக்கம். அம்புட்டு தொலைவுல இருந்து ஒத்தை மனுஷியா பயணம் செஞ்சு வந்திருக்கேன்; உடனே, கிளம்பி போக இயலல.

""இந்த பட்டணக்கரையில யாருக்கும் ஒத்தாசை செய்யுற பழக்கம் இருக்காதுன்னு ஊர் நாட்ல பேசிக்கிடறாக. அதான், தயங்கி, தயங்கி நின்னேன். உம்ம வீட்டு வாசல்ல தான் நிழல் மரம் நின்னுச்சு. தப்பா நினைக்காட்டி அந்த மரத்தடில ராவுல படுத்திருந்துட்டு காலைல போயிடட்டா...'' அந்த வயசான வெள்ளந்தி பேச்சில் வசுந்தரா மனம் கனிந்தாள்.

"ஏன்மா வெளில படுக்கணும்... உள்ளயே படுத்துக்குகங்க. நீங்க ஒருத்தர் படுக்கவா இந்த வீட்ல எடமில்லை...''

கிழவியின் முகம் மலர்ந்தது. முகம், கை, கால் அலம்பி வந்து, வசுந்தரா தந்த காபியை உறிஞ்சினாள். வெளியில் மழை பெய்யத் துவங்கியது.

""சித்தன் போக்கு சிவன் போக்குன்னு நான் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேன். வெளில மழை அடிக்குது. நீ மட்டும் உதவாட்டி என் பொழப்பு என்னாயிருக்கும்... அது சரி, இத்தாதண்டி வூட்ல நீ தனியாவா இருக்க...''

வசுந்தராவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

""புள்ளைங்க...''

""ரெண்டு பேரூ... ஆளுக் கொரு மாநிலத்துல இருக்காங்க.'' பெருமூச்சு வந்தது. வெளியில் மழை வேகமெடுக்க துவங்கியது.

""என்னமோ போ, இந்த காலத்துல வவுத்துல புள்ளைய தாங்கறதை விட, நிலத்துல ஒருபுடி விதையை தூவச் சொல்லு... அதாவது, பலன் கொடுக்கும்...''

அமைதியாய் அமர்ந்திருந்தாள் வசுந்தரா. நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல சினேகிதியை சந்தித்தது போல் மனசு இதமாய் இருந்தது.

""உங்களுக்கு சரோஜா ஒரே பெண்ணா?'' என்றாள் அன்பாக. இந்தக் கேள்விக்கான பதிலை உடனே சொல்லவில்லை கிழவி. சுவரில் சாய்ந்து, கால்நீட்டி அமர்ந்து, புகையிலை நசுக்கி வாயில் போட்டது.



இரண்டாவது வாழ்க்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 22, 2009 2:20 am

""தாயீ, அதுவொரு பெரிய கதை. எனக்கு எட்டு புள்ளைங்க. என் வூட்டுக்காரூ தான் சொல்லுவாரூ, என் புள்ளைக அஷ்டசக்தி படைச்ச தேவதைகள்ன்னு... பொறுமை, ஒற்றுக்கொள்ளல், பகுத்தறிவு, தீர்மானிப்பு, எதிர்நோக்கல், ஒத்துழைப்பு, புலனடக்கம், விஸ்தாரத்தில் இருந்து விடுபட்ட சக்தின்னு அஷ்ட சக்திகளை சொல்லுவாரூ என் ராசா... அதுக்கெல்லாம் எனக்கு அந்த நாளில் அர்த்தம் தெரியாது. அம்புட்டு வெள்ளந்தியா இருப்பேன். அவுரு போன பிறகு தான் எனக்கு உலகமே புரிஞ்சுது.

""எட்டு புள்ளைக... எட்டும் பொட்டை புள்ளைக... ஊரும், உறவும் உறுதுணை இல்லாம அதுகளை வளர்க்க ஒத்த பொம்பளையா நான் அம்புட்டு கஷ்டபட்டேன். அதுக இஷ்ட பட்டதை படிக்க வச்சு, ஒழுக்கமும், நடத்தையும் துளிகூட மாசு, மருவு இல்லாம அதுகளை கரை சேர்த்துட்டு நான் அக்கடான்னு நிமிர்ந்து பார்த்த நாளிலே, எனக்கு வயசு எழுபதை தொட்டிருந்துச்சு... என் மக்கக எல்லாம் புள்ளை குட்டிகளை ஈத்து, நல்ல நிலையில இருக்காங்க... மிச்சமுள்ள நாட்களுக்கு என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியாமே தவிச்சேன். அதனால தான் மறுபடியும் என் ஜீவிதத்தை அர்த்தப்படுத்திக்க நாலு உழவு மாட்டை வாங்கி வீட்டுல கட்டினேன்.

""இப்ப மூணு போகம் வெலையுது. வீட்டுல... கருவேலன் பட்டில முதியோர் இல்லம் நடக்கறது நம்ம வூட்ல தான். போன வாரம் நடந்த மீட்டிங்குல எங்க மாவட்ட கலெக்டரூ பாராட்டி பேசி, கவுரவம் செஞ்சாரூ... ஆனா, எனக்கெதுக்கு தாயீ அதெல்லாம்... அதுக்காகவா நான் இதெல்லாம் செய்யுறது... நம்மோட பணமும், நேரமும் இன்னொருத்தருக்கு உப யோகமாச்சுன்னா, அத விட உசத்தியான தர்மமேது...'' அசந்து போய் இருந்தாள் வசுந்தரா. வெளியில் வானம் பேயாட்டம் போட்டபடி இருந்தது.
""அம்மா, நீங்க பேசறதை கேட்க, கேட்க மனசுக்குள்ள ஒரே பிரமிப்பா இருக்கு. இந்த வயசுல முதியோர் இல்லம் நடத்தறேன்னு சொல்றீங்க, எட்டு புள்ளைங்களை தனியா நின்னு கல்யாணம் பண்ணித் தந்தேன்னு சொல்றீங்க... உங்களுக்கு எவ்வளவு வயசாச்சு...''

கிழவி, பகபக வென சிரித்தது. வசுந்தரா தந்த தலையணையை தலைக்கு வைத்து, கால்நீட்டி படுத்துக் கொண்டது.


""உடம்புக்கு எழுபத்தாறு வயசு... மனசுக்கு பதினாறு. அம்மாடி, வசுந்தரா... நீ நினைக்கிறாப் போல இதெல்லாம் செய்ய பெரிசா பணபலமும், ஆட்பலமும் தேவையில்ல; மனசிருந்தா, போதும்... அதுசரி, நீயேன் உன் புள்ளைக கேட்குற மாதிரி வூட்டை தரமாட்டேன்னு சொல்ற...?''

வெளியில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த மழை, மெல்ல ஓயத் துவங்கியது. பெருமூச்செறிந்து, மெல்ல பேசினாள் வசுந்தரா. ""எப்படிம்மா அதச்சொல்ல... எனக்கு இந்த வீட்டை விட்டா எந்த நாதியுமில்லை. என் வீட்டுக்காரர் பென்ஷன் பணத்தை வச்சுட்டு இந்த இடத்துல யாருக்கும் துன்பம் தராம வாழ்ந்துட்டு இருக்கேன். இதையும் வித்துட்டா, அனுசரணை இல்லாத மகன்களை நம்பி நான் வாழவே முடியாதும்மா... அது எல்லாத்தையும் விட, வாசல்ல நிக்குதே மரங்கள், அது என்னோட ஜீவதருக்கள்... என் பிள்ளைகளை விட நேர்த் தியா அதுங்களை வளர்த்துண்டு இருக்கேன்.

""என் உயிர் இருக்கச்சயே, அதுகள வெட்டி வீழ்த்திடுவாங்கன்னு நினைக்கயிலே மனசு கலங்குது... துளி கூட விருப்பமில்லாமத்தான் மாடுகளை வித்தேன். மறுபடியும் இன்னும் ரெண்டு அப்பாவி உயிர்கள் நம்மோட சுயநலத்திற்கு வெட்டறதுக்கு உடன்படக் கூடாதுன்னு தான் ஒரே முடிவா இருக்கேன்...''

- சொல்லி முடித்தாள் வசுந்தரா. மழை ஒய்ந்து, வானம் மெல்ல தூவானம் போட்டு கொண் டிருந்தது. வசுந்தரா வார்த்தையை கேட்டதும் படுத்திருந்த கிழவி துள்ளி எழுந்தமர்ந்தது.

""ஆத்தா, மாரியாயீ உனக்கு எந்த மனக்கொறையும் தர மாட்டா. இந்த உலகத்துல நான், என்னோடதுன்னு வாழற இந்த உலகத்துல மரத்து மேலயும், மாடு கன்னு மேலயும் உசிரை வச்சுகிட்டு இருக்கற உம்போல மனுஷியால தான் இந்த உலகத்துல மழை வருது.

""ஏங்கண்ணு, இம்புட்டு கூறுவாரா இருக்கியே... இம்புட்டு எடத்தையும் வச்சுக்கிட்டு எதுக்கு சும்மா உட்காந்திருக்கே. என்னைப் பாரு, அனாக்கு அடியெழுத்து எதுன்னு கூடத் தெரியாது. இந்த வயசுல நான் கழினில முப்பது பொம்பளையாளை வைச்சு வேலை வாங்கறேன். எனக்கு யார் தொணை? என் மக்கக எல்லாம் வேற, வேற ஊர்ல இருக்காங்க. இதெல்லாம் பெருமைக்காக உங்ககிட்ட சொல்லல தாயீ... நீ மனசு விட்டு பேசறதை பாக்கயிலே அடிவயிறு கலங்குச்சு... ஏதாவது செய்யு... ஏன்னா, சாவு வரைக்கும் வாழ்க்கை நிசந்தானே...''



இரண்டாவது வாழ்க்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 22, 2009 2:20 am

""என்ன செய்ய... என்னால என்ன செய்ய முடியும்...?''

""என்ன செய்ய முடியாது... வீட்டை விக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்ட. அதுக்கப்பறம் எதுக்கு இந்த வூட்ல காத்திட்டு நிக்கறவ. என்னைக்கு சாவு வரும்ன்னு எதிர்பார்த்துட்டா... உன்னால தான் கண்ணு எல்லாம் முடியும். இம்புட்டு சொன்னேன். கடைசியா, ஒரு வார்த்தை சொல்லட்டுமா... எனக்கு எட்டு மக்ககன்னு அடிக்கொரு தரம் சொல்றேனே... நான் வலி தாங்கி ஒரு புள்ளையும் பெறல. ஆமாங்கண்ணு, எம் மனசு தான் பெத்து பெருகிச்சேத் தவிர, என் வயிறு ஒத்தை புள்ளையை தாங்குற வலிவு கூட இல்லாத மலட்டு வயிறு...!

""சரோஜா உட்பட அம்புட்டுமே நான் தத்தெடுத்த புள்ளைங்க... அத்தனை புள்ளைகளையும் நான் பெத்தெடுத்த புள்ளைகளை விடவும் பாசமா வளர்த்தோம். அதுகளையும் படிக்க வைச்சு வாழ்க்கை அமைச்சு தந்தோம். அதுகளும் இட்ட உப்புக்கு தீவினை இல்லாம எங்ககிட்ட பிரியமாத்தான் நடந்துக்குது. அதனால தான் தாயீ சொல்றேன், உன்னால முடியும்...''

விக்கித்து போய் அமர்ந்திருந்தாள் வசுந்தரா. அவளால் நம்பக்கூட முடியவில்லை, இந்த நசிந்த பெண் கிழத்திக்குள் எத்தனை, எத்தனை பலமான மனசு... இரும்பு பாலமிட்டயெவ்வன பந்தல்... பெற்ற பிள்ளைகளை வளர்க்கவே தத்தளிக்கும் உலகில், எட்டு பெண்களை வளர்த்து, ஆளாக்கி வாழ்க்கையும் அமைத்து கொடுத்திருப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்லை. இன்னும் கூட செய்கிறாள். முதியோர் இல்லம் அமைத்து, குடும்பத்தை ஆள்கிறாள். அப்படியென்றால், நாமெல்லாம்... சே...

கிழத்தியின் வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டன. வானத்தில் வெட்டிய மின்னலின் வெளிச்சம், இவர்கள் கூடத்தில் வந்து கும்மிருட்டை விலக்கிப் போனது. பேரிடி ஒன்று பத்திரமாய் உருண்டு போய், யாரையும் சேதப்படுத்தாமல் கடலுக்கடியில் பதுங்கிக் கொண்டது. விடிந்ததும் புறப்பட ஆயத்தமானது கிழவி. ""சரோஜா வந்ததும், நான் வந்துபோன தகவலை மட்டும் சொல்லிடுமா... அப்பறம், நான் அடுத்த முறை வரும்போது உன்னை பாக்க வருவேன். நீ நிறைய்ய மாறி இருக்கணும்... இந்த மரத்துக்காக மட்டுமில்லை, நிறைய மனுசாளுக் காகவும் நீ வாழணும்... அதை மனசுல போட்டுக்க...''

ஒரு வனதேவதையாய் மழைநாளில் வந்த அந்த பெரிய மனுஷி, மனசுக்குள் உரம் போட்டு விட்டு விலகிப்போனாள்.

அவள் போட்ட உரம், உள் மனதில் தங்கி நிறைய வேலை செய்யத் துவங்கியது. ராஜேஷுக்கு போன் போட்டு சொன்னாள்...

""நீ இத்தனை நாள் கேட்டே... நான் மவுனமாகவே இருந்துட்டேன். இப்போ, பதில் சொல்ற நேரம் வந்துடுச்சு. எனக்கு வீட்டை கம்பெனிக்காரனுக்கு விக்க இஷ்டமில்லை. மாடில குக்கரி கிளாஸ் வைக்கப் போறேன். ஈவினிங் குழந்தைகளுக்கு,வீணை, வாய்ப்பாட்டு கத்து தரப் போறதா முடிவு பண்ணிருக்கேன். இன்னும் ஒன்றிரண்டு வேலைகளை செய்யற ஐடியாவும் இருக்கு. நான் ரொம்ப பிசிடா...

""போர்டு எழுதணும். தெரிஞ்சவங்க நாலுபேர்ட்ட சொல்லணும்... நாம இன்னொரு நாள் பேசுவோம். நீயே சந்தோஷ்கிட்ட விஷயத்தை சொல்லிடு...'' அவனுடைய பதிலுக்கு காத்திராமல் இணைப்பை துண்டித்தாள். அவளுடைய வாழ்க்கை புதிய பரிமாணத்தை துவங்கி இருந்தது.

***



இரண்டாவது வாழ்க்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக