புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
89 Posts - 50%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
29 Posts - 54%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் கேள்வி பதில்கள்


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 11:10 pm

First topic message reminder :

ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?


ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.

எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?


உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 9:17 am

எனக்கு வயது 55. நடக்கும்போது நெஞ்சில் வலியும், மூச்சு வாங்குதலும் இருக்கிறது. ட்ரட் மில் டெஸ்ட் பார்த்ததில் பெரிதாக ஒன்றுமில்லை என்று டாக்டர் கூறுகிறார். இதை குணப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?


நடக்கும்போது நெஞ்சு வலியோ, மூச்சு வாங்குதலோ இருந்தால் அது இருதயத்தின் கோளாறாக இருக்கும் வாய்ப்பு அதிகம். இந்நேரத்தில் ட்ரட்மில் டெஸ்ட் எடுக்கும்போது சில சமயம் பெரிதாக மாறுதல் ஏற்படாது. இருந்தாலும் உங்களுக்கு "ஆஞ்சியோ கிராம்' டெஸ்ட் செய்வது அவசியம். இந்த டெஸ்ட்டில் இருதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால் எந்த இடத்தில், எத்தனை சதவீதம் உள்ளது என கண்டறியலாம். அதற்கேற்றவாறு மருந்து, மாத்திரை சிகிச்சை, பலூன் சிகிச்சை, பைபாஸ் சர்ஜரி தேவைப்படும்.

நான் 7 ஆண்டுகளாக "ஆம்லோபிரஸ்' என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். எனது ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது வேறொரு ஊருக்கு மாற்றலாகி வந்துள்ளேன். இங்குள்ள டாக்டர் "ஆம்லோபிரஸ்' மாத்திரையை நிறுத்திவிட்டு "ஆல்மிஸார்டன்' என்ற மாத்திரை தந்துள்ளார். "ரத்தஅழுத்தத்தை எந்த மாத்திரையை வைத்து குறைப்பது என்பதுதான் முக்கியம்' என்று அவர் கூறுகிறார். நான் எந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்?


இன்றைய மருத்துவ வழிகாட்டுதலின்படி எந்த வயதிலும் ரத்த அழுத்தத்தை 140-90க்கு கீழ் வைத்துக்கொள்வது மிக முக்கியம். இன்னும் கூற வேண்டுமானால் 120-80க்கு அருகில் என்பதே சரியான அளவு. இதில் ரத்தஅழுத்தத்தை குறைப்பதுதான் முக்கியமே தவிர எந்த மாத்திரையை வைத்து ரத்தஅழுத்தத்தை குறைப்பது என்பது முக்கியமல்ல. உதாரணத்திற்கு 7 ரூபாய் மாத்திரையை வைத்து தினமும் ரத்தஅழுத்தத்தை குறைப்பதைவிட 2 ரூபாய் மாத்திரையை வைத்து குறைக்க முடியும் என்றால் அதுவும் சரியானதே. இதில் முக்கிய அம்சம் என்னவெனில், சில வியாதிகளுக்கு உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப சில மாத்திரைகள் நன்கு பொருந்துவதாக இருக்கும். அதனால் சில இடங்களில் சில மாத்திரைகள் மற்ற மாத்திரைகளைவிட சிறந்ததாக அமையும்.

"ஆம்லோபிரஸ்' என்பது நல்ல ரத்தஅழுத்த மாத்திரை. அது உங்கள் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் மாற்ற வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 9:20 am

நான் சில ஆண்டுகளாக "லெனாக்சின்' மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது இந்த மாத்திரை கிடைக்கவில்லை. இதற்கு பதில் வேறு மாத்திரை உள்ளதா?


இருதயத்தின் துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், இருதயத்தின் பம்பிங் திறனை கூட்டவும் "லெனாக்சின்' மாத்திரை உதவுகிறது. இம்மாத்திரை வாரத்தில் 5 நாட்கள் எடுத்துவிட்டு 2 நாட்கள் தவிர்க்க வேண்டும். இந்த மாத்திரைக்கு சில மாதங்களாக நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. சில வாரங்களில் மீண்டும் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைத்துவிடும். அதுவரை நீங்கள் "டிக்ஸின்' என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.


எனக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. எனது ரத்தஅழுத்தம் 140க்கு கீழ் 90 ஆக உள்ளது. இதற்கும் சேர்த்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார். இது சரிதானா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்தஅழுத்தத்தை 130/85க்கு கீழ் வைத்துக்கொள்வது முக்கியம். தற்போது நவீன ரத்தஅழுத்த மாத்திரைகள் ரத்தஅழுத்தத்தை குறைப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரககோளாறு ஏற்படாமலும் பார்த்துக்கொள்கிறது. நீங்கள் ரத்தஅழுத்தத்திற்கும் மாத்திரை எடுத்துக்கொள்வது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 9:28 am

மூலநோய் எப்படி உண்டாகிறது?

மூலநோய் என்பது நமது மலமானது வெளியாகும் பாதையில் உருவாகின்ற ஒரு பாதிப்பாகும். மலப்பாதையை தமிழில் ஆசன வாய் என்று அழைப்பார்கள். இப்பகுதி ஆனல் குஷன்ஸ் எனப்படும் உள்ளுக்குள் காற்றைக் கட்டுப்படுத்தும் பாகமாக உள்ளது. இச்செயலை ஆசன வாய்ப் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களை விரிவடையவும் சுருக்கவும் செய்யும் தன்மையினால் இதனை நிகழ்த்துகிறது. இந்த ஆசன வாய் பகுதியில் இருக்கின்ற ஆனல் குஷன்ஸ் என்கின்ற மூன்று சதைப் பகுதிகள் பெருத்து கட்டியாகி விடுவதைத் தான் நாம் மூலம் என்றழைக்கின்றோம்.

இப்படி பலருக்கு மூல நோய் வருவதற்கு என்ன காரணம்? இந்த நோயின் வேதனையில் இன்று பலர் வெளியே சொல்லாமல் தவிக்கின்றார்களே?

பல சிக்கலுக்கு காரணமாக இருக்கின்ற மலச்சிக்கல்தான் இதற்கு அதாவது இந்த மூலநோய்க்கு காரணமாக இருக்கின்றது. இன்று மக்களிடையே நல்ல நார் சத்து மிகுந்த காய்கனி நிரம்பிய உணவுகளை உண்ணுகின்ற பழக்கம் ஒழிந்து வருவதுதான் இந்த மலச்சிக்கலுக்கு எல்லாம் காரணம். மேலும் நாகரிகம் என்று கருதிக் கொண்டு பொது இடங்களுக்கு செல்லுகின்ற இடங்களில் எல்லாம் கண்டதை எல்லாம் உண்ணுகின்ற பழக்கம், பாஸ்ட் புட் என்கின்ற பெயரால் பல வேஸ்ட் புட்களை உண்ணுகின்ற ஒரு கலாச்சாரம் நம் மிடையே மிகுந்து விட்டது. இது எல்லாம் கூட மலச்சிக்கலுக்கு காரணமாகும். இவ்வாறு பல சமயங்களில் மலசிக்கல் உபாதையால் மலம் கழிக்கின்ற போது இவர்களால் மற்றவர்களைப்போல எளிதாக மலம் கழிக்க முடியாமல் போய்விடுகிறது. இவர்கள் கஷடப்பட்டு மலம் கழிக்க முக்குகின்ற போது ஆனல் குஷன்ஸ் பகுதியிலிருக்கின்ற ரத்த நாளங்கள் வெளி வந்து விடும். இதுவே தொடர்கதையானால் அதுவே மூல நோயாகி விடுகின்றது.

இந்த மூலநோய் பாதிப்பு யார் யாருக்கு எல்லாம் வரும்?

பொதுவாக இந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருக்கின்றவர்களுக்கு, உணவில் அதிகம் நார் சத்து உள்ள காய்கறிகளை மிகமிக குறைந்த அளவு மட்டுமே சேர்த்து கொள்கின்ற நபர்களுக்கு, நிறைய எப்போது பார்த்தாலும் நொறுக்கு தீணி திண்ணுகின்ற பழக்கமுள்ளவர்களுக்கு, நிறைய காரமான உணவுகளை உண்ணு கின்றவர்களுக்கு, அளவிற்கு அதிகமாக அசைவ உணவை எப்போதும் தொடர்ந்து ஒரு பிடி பிடிப்பவர்களுக்கும் மூலநோய் பாதிப்பு வரக்கூடும். ஒரு சில சமயங்களில் பருமனாக உள்ளவர்களுக்கும் மூல நோய் பாதிப்பு வரலாம். சில சமயங்களில் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு, குழந்தையை சுமக்கின்ற தால் பாரம் அழுத்தம் காரணமாக மூல நோய் பாதிப்பு வரலாம்.

எப்படி இது மூலநோய் பாதிப்பு தான் என்று அறிந்துகொள்வது?

ஆசன வாயில் மலம் கழிக்கின்றபோது சிலருக்கு ரத்தக் கசிவு இருக்கும். மலம் கழிக்கின்றபோது ரத்த நாளங்கள் வெளியே வந்துவிடலாம். அதனுடன் சளி போன்ற திரவமும் சேர்ந்து கசியலாம். மலம் கழிக்கின்றபோது வலி இருக்கலாம். ஆசனவாய் பகுதியில் அரிப்புக்கூட சிலருக்கு தோன்றலாம். இவற்றை வைத்தே இவர்களுக்கு வந்திருப்பது மூல நோய் என்று எளிதில் கண்டறிந்து விடலாம்.

மூலநோய் பாதிப்பு ஒருவருக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் எல்லோரும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அடுத்து காரம் அதிகம் உள்ள உணவை அடிக்கடி அதிகம் உண்ணக் கூடாது. தங்கள் உணவில் நார்சத்து உள்ள பழங்கள் காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும். போதுமான அளவிற்கு மட்டுமே அசைவ உணவுகளை உண்ண வேண்டும். தினமும் இரண்டு வேளை மலம் கழிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். மலத்தை அடக்கி வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ள கூடாது. எக்காரணத்தை கொண்டும் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனி பிரியர்கள் இந்த பழக்கத்தை கைவிட்டு விட வேண்டும்.

மூலநோய்க்கு புதிய நவீன மருத்துவ முறையில் என்ன சிகிச்சை உள்ளது?

மூலநோய்க்கு புதிய நவீன மருத்துவ கண்டுபிடிப்பாக வந்திருக்கின்ற லேசர் சிகிச்சையின் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போதைக்கு இதுதான் மிகமிக நவீன சிகிச்சையாகும். இந்த சிகிச்சை செய்து கொண்ட பிறகு மறுபடியும் இவர்களுக்கு மூலநோய் பாதிப்பு வராது என்று உறுதி அளிக்க முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2009 8:38 pm

முளை கட்டிய தானியங்களில் சத்து அதிகம் இருக்குமா?

முளை கட்டிய தானியங்களில் அதிகமான அளவிற்கு வைட்டமின் …பி… காம்ப்ளக்ஸ் இருக்கின்றது. அதனால்தான் டாக்டர்கள் தானியங்களை வெறு மனே சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பிட சொல்கிறார்கள். தானியங் களை முளைக்கட்டி காய வைத்தும் சாப்பிடலாம்.

நமது உடம்பில் மொத்தம் எத்தனை லிட்டர் ரத்தம் இருக்கிறது? இரத்தம் எத்தனை குரூப்பாக பிரிக்கப்பட்டிருக்கின்றன?


நமது உடம்பினில் சராசரியாக ஐந்து முதல் ஐந்தரை லிட்டர் ரத்தம் இருக் கின்றது. மனித ரத்தமானது A, B, AB, O என நான்கு முக்கிய பிரிவுகளாகவும், மேலும் என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றது.

முத்தடுப்பு ஊசி எதற்காக போடப்படுகிறது?

டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ் போன்ற மூன்று நோய்களை தடுக்க போடப்படுவதாகும். முத்தடுப்பு ஊசி என்பது DPT என்று இது அழை க்கப்படுகிறது. D-டிப்தீரியா, P-பெர்டூஸிஸ் T-டெட்னஸ் (வில்வாத ஜன்னி)

சோயாவின் சிறப்பு என்ன?

சோயாவில் நிலக்கடலையை விட, முந்திரிப் பருப்பைவிட, புரதம் அதிகம் இருக்கின்றதால் சிறப்பு பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு 100 கிராம் நிலக் கடலையில் 25.3 கிராம் புரதம் இருந்தால், 100 கிராம் முந்திரி பருப்பில் 21.8 கிராம் புரதம் இருந்தால் 100 கிராம் சோயாவில் 43.2 கிராம் புரதம் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2009 8:40 pm


கர்ப்பக் காலத்தில் ஸ்கேன் செய்வதனால் பாதிப்பு ஏற்படுமா?


இது தவறான கருத்து. ஸ்கேனிங் அல்ட்ரா சவுண்ட் அலைகளால் செய்யப் படுகின்றது. இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கர்ப்ப காலத் தில் எக்ஸ்-ரே மட்டும்தான் எடுக்கக் கூடாது. கருவாகி இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கின்றதா, குழந்தையின் வளர்ச்சி முறைப்படி உள்ளதா என்பதை டாக்டர்களுக்கு தீர்மானிக்க உதவுவதற்குதான் ஸ்கேன் எடுக்கப்படு கின்றது. எனவே ஸ்கேன் எடுப்பதனால் தாய், சேய் இருவருக்கும் எந்தகெடுத லையும் உண்டு பண்ணாது.

சில பேர் வெள்ளை வெளேர் (வெள்ளைக்காரர் போல) என்று தோல் சிவப்பாகி கண் இமை, தலைமுடி எல்லாம் வெள்ளையாகவே இருக் கின்றார்களே இது என்ன நோய்? இதனை குழந்தை பிறப்பதற்கு முன் பாகவே அறிய முடியுமா?

இந்த பாதிப்பிற்கு ஆல்பினிஸம் என்று பெயர். முதல் குழந்தை இவ்வாறு பிறந்தால் அடுத்த குழந்தையும் இவ்வாறே பிறக்க 95Š வாய்ப்பு இருக்கிறது. தோலுக்கு நிறம் கொடுக்கின்ற பிக் மண்டுகள் இல்லாமல் போவதனால்தான் ஆல்பினிஸம் ஏற்படுகின்றது. முதல் குழந்தை இவ்வாறு பிறந்து விட்டால், அடுத்த குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கின்றபோது- கர்ப்பத்தின் மூன்றாவது நான்காவது மாதத்திற்குள் பிறக்க போகின்ற குழந்தைக்கு ஃபீட்டல் பயா ப்ஸி டெஸ்ட் செய்து கண்டுபிடித்து விடலாம். இந்த டெஸ்ட் மிக மிக சில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகின்றது. மிகமிக நெருங்கிய உறவில் (அக்காள் மகளை மணக்கும்) திருமணம் செய்துகொள்கின்றவர்களுக்கு பிறக்கும் குழந்தை களில் சில இப்படி அமைந்து விடலாம்.


பெண் குழந்தைகளுக்கு அப்பாவிடமும், ஆண் குழந்தைகளுக்கு அம்மாவிடமும் அதிக பாசமும், நேசமும் இருக்கின்றதே இது ஏன்?

ஆம் உண்மையில் அடிப்படையில் ஆண் குழந்தைகளுக்கு அம்மாவிடமும், பெண் குழந்தைகளுக்கு அப்பாவிடம் அதிகம் ஒட்டுதல் இருப்பதற்கு அடிப் படையில் உள்ளுணர்வுதான் காரணம். ஆணிற்கு பெண்ணிடமும், பெண்ணி ற்கு ஆணிடமும் உள்ள பால் இன கவர்ச்சிதான் இதற்கு காரணம். எனினும் இதில் காமத்திற்கு சிறிதும் பங்கில்லை. அம்மாவிற்கு மகனை பிடிப்பதற்கு ஈடிப்பஸ் காம்ப்ளக்ஸ் என்றும், அப்பாவிற்கு பெண் குழந்தையை பிடிக்க எலக்ட்ரா காம்ப்ளக்ஸ் என்றும் சைக்கால ஜஜியில் பெயர்.இதில் தப்புமில்லை. பாசம்தானே இருந்துவிட்டு போகட்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2009 2:53 am


திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. விந்துப் பரிசோதனையில் விந்து அணுக்களே இல்லை என வந்திருக்கிறது. எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?


உங்களுக்கு மூன்று முறை விந்துப் பரிசோதனையை மூன்று வார இடை வெளியில் செய்ய வேண்டும். மூன்று முறையும் விந்தணுக்கள் இல்லையென வந்தால், உங்களை முழுவதும் பரிசோதிக்க வேண்டும். தேவையெனில் விந்துப் பைகளில் சிறிது சதை எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். ஹார்மோன்கள் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை முடிவில் உங்களுக்கு விந்துக் குழாயில் அடைப்பு இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கி உங்களுக்கு மகப்பேறு அளிக்க இயலும். இல்லையெனில் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்வது, விந்துதானம் பெறுவது, குழந்தையில்லாமல் இருப்பது, இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். முதல் இரண்டு முறைகள் உலகம் முழுவதும் பரவலாக உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2009 2:53 am

என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். உடலுறவு கொள்ளலாமா? குழந்தை பிறந்த பிறகு எவ்வளவு நாட்களுக்குப் பிறகு உடலுறவு கொள்ளலாம்?


கர்ப்பிணியோடு தாராளமாக உடலுறவு கொள்ளலாம். இதனால் எவ்விதத் தீங்கும் இல்லை. ஏழு, எட்டு, ஒன்பது மாதங்களில்கூட உடலுறவு கொள்ள லாம். ஆனால் வயிற்றின் மீது அழுத்தம் தரக்கூடாது.

தவிர்க்க வேண்டிய நிலைகள்:

மீண்டும் மீண்டும் கருக்கலைதல் மற்றும் வேறு ஏதேனும் சிக்கலால் மனைவி பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவு கொள்ளக்கூடாது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் இரண்டு வாரங்களில் சாதாரணமாக உடலுறவில் படலாம். பெண்ணின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் காயம் ஆறும்வரை உடலுறவில் ஈடுபடக்கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2009 2:54 am

ஆண் எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களிலும், உச்சிவெயில் நேரங்களி லும் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்களே? பகல் பன்னிரண்டு மணி இரவு பன்னிரண்டு மணி அளவிலும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாதாமே! கண்பார்வை தெளிவாக இருந்தால் தான் செக்சில் அதிக நாட்டம் இருக்கும் என்கிறார்களே, கண் பார்வைக்கும் செக்சுக்கும் தொடர்பு உண்டா?


எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதற்கும் உறவு கொள்வதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் ஈடுபடலாம். இதனால் எவ்வித தீமையும் ஏற்படாது. ஒரு நாள் பகல் 12 மணிக்கும், இன்னொரு நாள் இரவு 12 மணிக்கும் ஈடுபட்டுப் பாருங்களேன். ஒரு தீங்கும் இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். வயதான பிறகு கண்பார்வை குறைவதும், செக்சில் நாட்டம் குறைவதும் இயற்கைதானே. மற்றபடி செக்ஸ் ஆசைக்கும் கண் பார்வைக்கும் நேரடியாகத் தொடர்பில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2009 2:55 am

குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டால் ஆண்மை இழந்துவிடும் என சிலர் கூறுகிறார்கள். ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா?


குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையால் ஆண்மை போய்விடும் என்பது தவறான தகவல். ஆண்மைக்கும், வாசக்டமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. விந்தணுவில் உயிரணுக்கள் வரும் சிறு குழாயை மட்டும் தடை செய்துவிடுவதால் குழந்தைப் பேறு தடுக்கப்படுகிறது. உடலுறவின்போது விந்து வரும், ஆனால் அதில் உயிரணுக்கள் இருக்காது. பெண்களை விட ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வது எளிது, பாதுகாப்பானது. பிரச்சினையில்லாதது. அதனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இது போன்ற சந்தேகங்கள் இருந்தால் என் போன்ற மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று தெளிவடையுங்கள். அதற்காகத் தானே நாங்கள் இருக்கிறோம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 21, 2009 9:23 am

ஒல்லியாக இ௫ப்பவர்கள் குண்டாக என்ன செய்ய வேண்டும்?மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 4 838572

Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக