புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_m10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10 
127 Posts - 54%
heezulia
சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_m10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_m10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_m10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10 
9 Posts - 4%
prajai
சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_m10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_m10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_m10சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 24, 2020 6:11 pm

சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) Sani_bhagavan

2020-ம் ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி
(மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ஆகிய முதல் நான்கு
ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை தினமணி
ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக கணித்து
வழங்கியுள்ளார்.
---
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
-
சனிபகவான் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் பலிதமாகும். எடுத்த காரியங்களைத் தடையின்றி செய்து முடித்து விடுவீர்கள்.  செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சியையும் ஏற்றங்களையும் காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

இதுவரை, சுணங்கி வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். இதனால் புதிய உறவுகள் உருவாகும். நல்லவர்களின் சகவாசமும் உண்டாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவார்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.

இழந்த பதவி, பொன், பொருள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். பொருளாதார வளமும் உயரத் தொடங்கும். பழைய காலத்தில் மூடி வைத்திருந்த தொழில்களை திரும்ப நடத்தத் தொடங்குவீர்கள். தொழில் மேம்பட பயணங்கள் மேற்கொள்வீர்கள். சமூக, பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் கௌரவம், அந்தஸ்து இரண்டும் உயரும் காலகட்டமாக இது அமைகிறது.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து ஆதரவு கூடும். வீட்டிலும் வெளியிலும் அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். உங்களுக்கு எதிராக நடந்த சதிவேலைகள் அனைத்தும் பொடிப்பொடியாகி விடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். செய்தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்ததற்கும் மேல் இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்கள் வேலைகளைத் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடித்து விடுவீர்கள்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்வதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்க மாட்டீர்கள். நீண்ட கால லட்சியங்கள், கனவுகள் நிறைவேற அடித்தளங்களை அமைத்துக் கொள்வீர்கள். கடினமாக உழைத்தாலும் சரியான நேரத்தில் ஆகாரம் ஓய்வு ஆகியவைகளை எடுத்துக் கொள்வீர்கள். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.   குடும்பத்துக்கு மேலும் நன்மைகளைச் செய்ய முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அறிமுகமில்லாதோரின் ஆதரவும் நன்மைகளைத் தேடித்தரும். செய்தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். சமயோசித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். அதேநேரம் போட்டியாளர்களிடமிருந்து விலகி இருக்கவும். குழந்தைகள் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். மனக்குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவாக இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உடன்பணிபுரிபவர்களிடம் பிரச்னைகளைத் தவிர்த்து கவனமாக நடந்து கொள்வீர்கள். சிறப்பான ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு பழைய சேமிப்புகள் கை கொடுக்கும். போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். புதிய விவசாயிகள் உபகரணங்களை வாங்குவீர்கள். கால்நடைகளால் நல்ல பலனைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் தேடி வரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். எண்ணங்களைச் செயலாக்குவதில் தடைகள் ஏற்படாது. சிறப்பான அங்கீகாரம் பெற்று அதிர்ஷ்டசாலிகளாக வலம் வருவீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உருவாகும். பாராட்டும் பணமும் வந்து சேரும். கோபப்படாமல் காரியங்களைச் செய்வது நல்லது. பெண்மணிகள் மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். திருமணமாகவேண்டியவர்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராகத் திகழ்வீர்கள். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

பரிகாரம்:  "ஜய ஜய துர்க்கா' என்று ஜபித்து துர்க்கையை வழிபட்டு வரவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 24, 2020 6:12 pm

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப்போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் சொல்வாக்கு செல்வாக்காக மாறும். உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். இதனால் குடும்பத்தில் சகஜ நிலை தொடரும்.

செய்தொழிலை கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடத்துவீர்கள். வருமானத்தைப் பெருக்க புதிய முயற்சிகளைச் செய்வீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய துறைகளில் ஈடுபடுவீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் மறையும். பெற்றோரின் ஆரோக்கியமும் சீர்படும். புத்தியைக் கூர்மையாக்கி திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய சொத்து சேர்க்கையும் உண்டாகும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். சிலர் நவீன இல்லத்திற்கு மாறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். புதிய பொறுப்புகளும் ஒப்பந்தங்களும் உங்களைத் தேடி வரும். தொலைந்து போயிருந்த பொருள்கள் மறுபடியும் திரும்பக் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சற்று பாராமுகமாக இருப்பதால் அதற்கேற்றவாறு செயல்முறைகளை மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் மேன்மையடையும். புதிய முதலீடுகளையும் செய்வீர்கள். பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீர்கள். குடும்பத்திற்குச் சற்று கூடுதலாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில் சிறு பிரச்னைகள் தோன்றினாலும் உங்கள் அனுபவ அறிவால் அவற்றை சரிசெய்து விடுவீர்கள். குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உடன்பிறந்தோரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வரும் காலகட்டமிது.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதோருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த வாய்தாக்கள் கிடைக்கும். சுறுசுறுப்பாக உழைத்து காரியமாற்றுவீர்கள். உடலாரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். சிலருக்கு வசதியான வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இடமாற்றங்கள் சாதகமாகவே இருக்கும். சம்பள உயர்வுகள் கிடைத்து சந்தோஷமடைவீர்கள். அலுவலகத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும் நல்லெண்ணங்களுக்கும் ஆளாவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களில் வெற்றி கிடைக்கும்.

வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத்தொழிலில் சில முடிவுகளைத் தனித்தே எடுக்கவும். விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். புதிய குத்தகை தேடாமலேயே கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவீர்கள். விவசாய விளைபொருள்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலைகளைச் சிரமமின்றி முடித்து விடுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் அரவணைப்பும் இருப்பதால் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாக முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகள் வெளியுலகுக்கு வெளிப்படும்.

பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் சிறு சிறு குழப்பங்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களுடன் வம்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். படிப்பில் முழு அக்கறை காட்டினால் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 24, 2020 6:13 pm

மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் அளவான யோக பாக்கியங்கள் உண்டாகும். செய்தொழிலை கவனத்துடன் நடத்துவீர்கள். புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். அனுபவஸ்தர்கள், முதியவர்கள் இவர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்பட்டு சுலபமாக வெற்றி பெறுவீர்கள்.

புதிய முயற்சிகள் புதிய உயரங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும். எதிர்காலத்திற்குச் சீரிய வழியில் முதலீடு செய்வீர்கள். தயக்கங்கள், குழப்பங்களைத் தவிர்த்து செயல்களில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து விடுவீர்கள். பங்காளிகளிடமும் நல்லுறவு வைத்துக் கொள்வீர்கள்.

முக்கிய முடிவு எடுக்கும் நேரத்தில் பொறுமையாக யோசித்து எடுப்பீர்கள். அசையும் அசையாச் சொத்துகளின் சேர்க்கையும் திடீரென்று சிலருக்கு உண்டாகும். சிலர் வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பார்கள். குறைந்த உழைப்பில் கூடுதல் வருமானம் பெறக்கூடிய காலகட்டமாக இது அமைகிறது.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். செய்தொழிலை கவனமாகவும் எச்சரிக்கையுடனும் நடத்துவீர்கள். போட்டியாளர்களிடமும் எதிர்ப்பாளர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். குழந்தைகளை உயர் கல்விக்காக வெளியூர், வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பீர்கள். குடும்பத்தாருடன் சிறிது மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் வீண் பேச்சு வேண்டாம்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதிய திட்டங்களை வகுப்பீர்கள். எதிர்பார்த்த குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பங்கு வர்த்தகத்தின் மூலமும் பரஸ்பர நிதிகள் மூலமும் உபரி வருவாய் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி வந்து உங்களை திக்குமுக்காடச் செய்து விடும்.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கை கூடும். செயல்திறமை கூடும். உங்கள் செயல்களில் தனி முத்திரையை பதிப்பீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். அவர்களின் ஆதரவும் நிரம்ப கிடைக்கும். குடும்பத்திலும் குதூகலம் நிறைந்து காணப்படும். இல்லத்தில் சுப காரியங்கள் இனிதாக நிறைவேறும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அதேநேரம் முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களை கண்டு கொள்ள வேண்டாம். எவரையும் பகைத்துக் கொள்ளவும் வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகள் உதவியாக இருப்பதால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவில் இருக்கும். உழைப்பு வீண் போகாது.

வியாபாரிகள் கவனம் சிதறாமல் வியாபாரத்தைக் கவனிக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகள் தேடி வரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நல்ல பெயர் வாங்குவீர்கள். பணவரவு சரளமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்கும். உயர்ந்தவர்களைச் சந்தித்து வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். புதிய நண்பர்களால் பெருமையடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது துறையில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகள் ஆடம்பரப் பொருள்களை வாங்குவர். பணவரவு சீராக இருக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைக்கும். விளையாட்டில் பரிசுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 24, 2020 6:13 pm

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப் போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் பேச்சுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு அதிகரிக்கும். பேச்சிலும் இனிமை கூடும். நாவன்ûமால் அனைவரையும் கவருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தோல்வி ஏற்பட்டாலும் மறுபடியும் முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள்.

முக்கிய பயணங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். நெடுநாளாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடலுபாதைகளிலிருந்து மீண்டு வந்து புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். உறவினர்கள், புதிய நண்பர்களுடன் இருந்த மனத்தாங்கல்கள் நீங்கி விடும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். புதிய நண்பர்களுடன் சேர்ந்து ஊக்கத்துடன் பணியாற்றுவீர்கள். பழைய மனத்தாங்கல்களை மறக்க முயல்வீர்கள். நெடுநாளாக விற்காத நிலம், வீடு நல்ல விலைக்கு விற்று அதனால் தொடர் வருமானம் வரக்கூடிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் தனித்திறமை வெளிப்பட்டு பரிமளிக்கும். கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். பணிபுரிபவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உங்கள் நல்லெண்ணங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரால் பாராட்டப்படுவீர்கள்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் தொழிலில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடி குறைய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உதவி செய்வார்கள். வேலைகளில் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். பிரச்னைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். குறிக்கோளை நோக்கி செயல்படுவீர்கள். முக்கிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருந்து வாக்கு கொடுக்கவும். ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடு உண்டாகும். குடும்பத்துடன் புனித ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும் காலகட்டமிது.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களும் சீர்பட்டு சாதகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மை அடையும். அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் காலகட்டமாகும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாம். கடினமாக உழைத்தால் உழைப்பு இரட்டிப்பு பலன் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் இணக்கமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு அலுவலக வேலைகளில் சாதகமான திடீர் திருப்பம் ஏற்படும். பணவரவிற்குத் தடை ஏதுமில்லை. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அலுவலக பயணங்கள் செய்யலாம். வியாபாரிகள் போட்டி பொறாமைகளைக் குறைத்து சுமுக நிலையை காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் சிறு சிரமங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. அனைத்து விவசாயப் பணிகளும் தடையுடனே வெற்றி பெறும். காய்கறி, பால் வியாபாரம் லாபம் தரும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகள் குறையும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரும். செயல்களில் வெற்றி காண்பீர்கள். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் காரியங்களைச் செய்வீர்கள். கட்சி மேலிடத்தின் உத்திரவிற்குப் பிறகே மக்களின் முக்கிய பிரச்னைகளில் கருத்து தெரிவிக்கவும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்திற்கு குறைவில்லை. சிலருக்கு விருதுகளும் கிடைக்கும். சக கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறுதடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2020 9:56 pm

மற்றவை எப்போது வரும்?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 07, 2020 11:12 pm

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் சவால்களை சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். தகுதியையும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டு செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்களைச் செய்வீர்கள். நல்ல நண்பர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும்.

செய்தொழிலில் நல்ல முறையில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பு வீண் போகாது. மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். அதன் மூலம் புதிய அனுபவங்களையும் யோகத்தையும் பெறுவீர்கள். நிர்வாகத் திறன் உயரும். சிலர் வெளியூருக்கும் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சமுகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து கடன்கள் கிடைக்கப்பெற்று புதிய அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் பழைய முயற்சிகளுக்கு இந்த காலத்தில் பலன் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது. வெளிநாட்டுத் தொடர்பும் பலப்படும். உடல்நலம் மனவளம் இரண்டும் சீராக இருக்கும். யோகா, பிராணாயாமம் கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி சூழும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீங்களும் அவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வரும் பாக்கியமும் உண்டாகும்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் சிலருக்கு புதிய வீடு கட்டி நூதன கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும். குடும்பத்துடன் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். மதிப்பு மரியாதை தொடர்ந்து சிறப்பாகவே அமையும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி மகிழ்ச்சி நிறையும். எவரின் நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் தனித்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றியடைவீர்கள்.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை விரிவுபடுத்த சாதகமான சந்தர்ப்பங்கள் உண்டாகும். அதிகாரம் செலுத்தக்கூடிய பதவிகளும் தேடிவரும். வருமானம் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும். சட்டப்பிரச்னைகள், வழக்குகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு திருமணம் நடைபெற்று புத்திரபாக்கியமும் உண்டாகும். சில நேரங்களில் எதிர்ப்புகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளில் சிக்கித் தவித்தாலும் உங்கள் அசாத்திய துணிச்சல் வேலைகளில் வெற்றியைத் தேடித்தரும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் உண்டாகலாம். பயணங்கள் மனநிம்மதியைக் கொடுக்கும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு சச்சரவு இன்றி பணியாற்றி உங்கள் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஒழுங்காக நடக்கும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். இடைத்தரகர்களைத் தவிர்த்து பொருள்களை உரிய விலைக்கு விற்பார்கள். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். வருங்காலப் பயனுக்காக வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். அவைகளை முழுமையாக அனுபவிக்க முடியாமல் குறுக்கீடுகளும் அவ்வப்போது ஏற்படும். மனம் தளராமல் அவைகளை எதிர்த்து வெற்றியடைவீர்கள். சமுதாயத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்கள் பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இழுபறியில் இருக்கும். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். பெண்மணிகளுக்கு பெற்றோர் வழியில் பெருமைகள் கூடும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மூத்த உடன்பிறப்புகளால் நன்மையும் அரவணைப்பையும் பெறுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தவர்கள் உற்சாக மனநிலை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் வலுப்பெற சில எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 07, 2020 11:13 pm

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
சனிபகவான் உங்கள் ஜன்ம ராசியான முதலாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தோரால் நலம் ஓங்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மன வளம் இரண்டும் மேலோங்கும். மனக்குழப்பங்களிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.

நேர்முக மறைமுக எதிர்ப்புகள் இராது. கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். போட்டி பந்தயங்களிலும் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கூடும். வீட்டிலும் வெளியிலும் கௌரவம் உயரும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். புதிய தொழில் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்கள் நிர்வாகத் திறமை கூடும் காலகட்டமாக இருப்பதால் தன்னம்பிக்கையுடன் உங்கள் காரியங்களைச் செய்து படிப்படியாக முன்னேறி விடுவீர்கள். திட்டங்களை ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பீர்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் புதிய நுட்பங்களைக் கையாண்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சிந்தனை சக்தியும் கற்பனா சக்தியும் கூடும். மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த லாபத்தையும் அள்ளுவீர்கள். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள், பிரச்னைகள் தீர்ந்து நிம்மதியான சூழ்நிலை உண்டாகத் தொடங்கும். பெயரும் புகழும் உயரத் தொடங்கும். பூமி வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டும் எண்ணத்தை இந்த கால கட்டத்தில் செயல்படுத்த வேண்டாம்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பிரச்னைகள் குறையும். சற்று நிதானத்துடன் பணியாற்றுவீர்கள். டென்ஷன், அலைச்சல் இல்லாமல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். திறமைகள் பளிச்சிடும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எதிரிகளையும் ஒடுக்கும் வல்லமையையும் பெறுவீர்கள்.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் நண்பர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களும் ஆதரவாகத் தொடர்வார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். போட்டிகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வெளியூர், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். உங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த பொய் வழக்குகளிலிருந்து நிரபராதி என்று விடுவிக்கப்படும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலத் தீர்வை காண்பீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாகவே இருக்கும். அவநம்பிக்கைகள் அகலும். பதவி உயர்வு கிட்டும். வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெறத் தாமதமாகும். கூட்டாளிகளுடன் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகலாம். வியாபாரத்தைப் பெருக்க புதிய கடன்கள் வாங்குவீர்கள். விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும் ஊடு பயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். வங்கிக் கடன்கள் பெற தாமதமாகும் என்பதால் பொறுமையுடன் காத்திருக்கவும்.

அரசியல்வாதிகள் பெரும் சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பதவிகள் தேடி வரும். ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிரிகளின் பலம் குறையும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். அரசாங்க அலுவலர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் தங்கள் துறையிலுள்ள நுணுக்கங்களை நன்றாகப் புரிந்து கொண்டு அவற்றை உரிய நேரத்தில் உபயோகித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையுடன் இருப்பீர்கள். மாணவமணிகள் உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரிடலாம். பெற்றோரின் ஆதரவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: பார்வதிதேவியை வழிபட்டு வரவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 07, 2020 11:15 pm

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு அயன ஸ்தானமான
பன்னிரண்டாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை
சஞ்சரிக்க போகிறார்.

20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் கடும் போட்டிகள்
நிலவினாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள்.
ஆவணங்களில் இருந்த வில்லங்கங்களைச் சரிசெய்து
விடுவீர்கள்.

குடும்பப் பிரச்னையுடன் உடன்பிறந்தோர் பிரச்னைகளையும்
சந்தித்து வந்த நீங்கள் இவைகளிலிருந்து விடுபட்டு நிம்மதி
பெருமூச்சு விடுவீர்கள்.

பெற்றோருடன் இருந்த போராட்டங்கள் நீங்கி இணக்கமாக
வாழத் தொடங்குவீர்கள். எதிரிகளை எளிதில் ஜெயித்து
விடுவீர்கள். யார் எதைச் சொன்னாலும் அவைகளை அப்படியே
நம்பாமல் ஆராய்ந்து அறிந்து கொள்வீர்கள்.

பொருளாதார வளம் மேன்மையாக இருக்கும். உழைப்பின்
மூலம் சாதனைகளைப் படைப்பீர்கள். சோம்பலுக்கு விடை
கொடுத்து சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு நிவாரணம் கிடைக்கப்
பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும்
குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.

குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். புதிய நண்பர்களும்
உறவினர்களும் இல்லம் தேடி வருவார்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் க
டுமையாக உழைக்க வேண்டி இருந்தாலும் அதற்கேற்ற பலன்
கிடைப்பதில் தடை இராது. அனைவரிடமும் நட்பாகப் பழகி
உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

மறைமுக எதிர்ப்புகள் அவ்வப்போது தலை தூக்கும். புதிய
நுட்பங்களைப் புகுத்தி செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
தொலைதூரப் பயணமொன்றை இந்த காலத்தில் செய்வீர்கள்.
வழக்கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும். சிலருக்குத்
தீர்ப்புகள் தள்ளிப்போகலாம்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள்
தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். தற்போதுள்ள
மனக்குழப்பங்கள் நீங்கும். எதையும் தீர்க்கமாகச் சிந்தித்து
முடிவெடுப்பீர்கள். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது
முடித்து விடுவீர்கள்.

பிற்போக்கான நிலையிலிருந்து விடுபட்டு முன்னேற்றப்
பாதையில் பயணிப்பீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சமுதாயத்தில் அவமரியாதை
அகன்று மரியாதை மதிப்பு உயரும்.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து
விஷயங்களிலும் கடைசி நேரத்தில் தேவையான உதவி கிடைத்து
காரியங்கள் கைகூடும். வழக்கு விஷயங்கள் சமரசமாக முடியும்.

பொருளாதாரம் சுமாராகவே இருக்கும். முயற்சிகள் பலிதமாகும்.
சுணங்கி வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுமுகமாக
நடந்தேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளின் சுமை சிறிது
அதிகரித்தாலும் அவற்றைத் திட்டமிட்டு மகிழ்ச்சியுடன்
செயல்படுத்தி எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களை
அமைதியான அணுகு முறையில் அரவணைத்துச் செல்வீர்கள்.
சிலருக்கு குறுகிய காலப் பயணமாக வெளிநாடு சென்று வரும்
யோகம் உண்டாகும்.

வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்து வியாபாரத்தைச்
செய்து சிறப்பாக லாபமடைவீர்கள். அனைத்து விஷயங்களையும்
ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுத்தவும்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி
வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல்
நன்றாக இருப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நிலங்களை
வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும்.
சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். தொண்டர்களை
அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி பிரசாரங்களில் முழுமூச்சுடன்
இறங்குவீர்கள். செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள்.
வருமானம் சீராகவும் சிறப்பாகவும் இருந்தாலும் ரசிகர்களுக்காக
சில செலவுகளையும் செய்வீர்கள்.

திறமைகளைப் பயன்படுத்தி புதிய படைப்புகளை
உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படுவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
குடும்பத்தில் வருமானமும் சீராக இருக்கும். உற்றார் உறவினர்கள்
இல்லத்திற்கு வருவார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம்
கவனிக்கப்பட வேண்டும். மாணவமணிகள் கல்வியிலும்
விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவார்கள். ஆசிரியர்களின்
பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மரை வழிபட்டு வரவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 07, 2020 11:16 pm


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை புதிய உயரத்திற்கு உயர்த்துவீர்கள். அனைவரின் பார்வையும் உங்கள் மீது விழும். உயரிய குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொண்டு அதனை நோக்கி பயணப்படுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வெற்றி பெறுவீர்கள்.

உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களைத் தட்டிக் கொடுத்து அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு உடனடியாகத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும். சொல்வன்மையும் பேச்சுத் திறமையும் உண்டாகும். கடினமான காரியங்களையும் துணிச்சலுடன் செய்து முடித்து சாதனையாளர் என்று பெயரெடுப்பீர்கள். குழந்தைகளை நல்வழிப் படுத்துவீர்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள்ஆக்கம் தரும். சிலருக்கு கடல்கடந்து செல்லும் பாக்கியமும் உண்டாகும். நேர்மையை கடைபிடிப்பீர்கள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். மற்றவர்களின் திறமையை தட்டி எழுப்புவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். அனைத்து வேலைகளையும் தனித்து செய்து முடிப்பீர்கள். பழைய வண்டி வாகனங்களை விற்றுவிட்டு புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் காரியங்களை சில தடைகளுக்குப்பிறகு செய்து முடிப்பீர்கள். ஒரு பிரச்னை முடிந்தால் மறுபிரச்னையை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். எதிர்பாராத விதத்தில் வருமானம் கைவந்து சேரும். தொடர்பு விட்டுப்போயிருந்த நண்பர்கள் மறுபடியும் தொடர்பு கொள்வார்கள். சிலருக்கு நூதனமான தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் பாக்கியமும் ஏற்படும். அடமானம் வைத்திருந்த மனை, வீடு ஆகியவைகளை மீட்டுவிடும் காலமிது.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் புதிய தொழில் அமைக்க பணவசதி ஏற்படும். அரசாங்கத்திலிருந்து மானியமும் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் கிடைப்பார்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வெகுநாள்களாகத் தொடர்ந்துவந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.

மனஉறுதியோடும் பொறுமையோடும் இருந்து உடன்பிறந்தோரிடமிருந்த பிரச்னைகளுக்குத்தீர்வு காண்பீர்கள். கடமையே கண் என்கிற வழியில் காரியமாற்றுவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்யும் வாய்ப்புகளும் கூடிவரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் தொய்வு இல்லாமல் நடந்து முடியும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். சிறு தொல்லைகள் கொடுத்து வந்த ஊழியர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவிற்கு குறைவு இல்லை.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் சுமுகமாகப் பழகுவார்கள். வியாபார யுக்திகள் சரியான இலக்குகளை எட்டும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபங்களும் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவீர்கள். கால்நடைகளுக்கும் சிறிது செலவு செய்ய நேரிடும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். தைரியமும் செயல்திறனும் கூடும். கொடுத்தவாக்கை நிறைவேற்றுவீர்கள். கட்சித் தலைமையிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல்களைக் காண்பீர்கள். சமூகத்தில் பெயர் புகழ் கூடும். கலைத்துறையினர் தேவையான வருமானத்தைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு குறையாது. சிறிய தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் நன்றாக உழைத்து படித்து நல்ல மதிப்பெண்களை எளிதாகப் பெறுவார்கள். கல்வி ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபக்த அனுமனை வழிபட்டு வரவும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக