புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
46 Posts - 47%
heezulia
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
17 Posts - 2%
prajai
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
4 Posts - 1%
jairam
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_m10அணையா நெருப்பு - கமல்ஹாசன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணையா நெருப்பு - கமல்ஹாசன்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2020 1:01 pm

இது படிக்காத கதை. கமலைப் பிடிக்காது. அதனால் கதையையும் படிக்கவில்லை.




அணையா நெருப்பு



கதையாசிரியர்: கமல்ஹாசன்
கதைத்தொகுப்பு: காதல்  


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்…?’’

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, ‘‘How about முன்பு ஒரு காலத்துல?’’

‘‘Why not?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ – எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘Why not?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.

‘‘Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க?

சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’

‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

‘‘Wow! hot gossip?’’

‘‘No, a warm tale’’ என்றேன்.

துவங்கினேன்… ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

தொடரும்........................

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2020 1:02 pm

கதை தொடருகிறது..................


‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.

விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்…’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.
தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…

‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி!

ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.

சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.
அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.

காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.

என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல்.

என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு.
என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.
அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.

அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.
விவாதம் தொடர்ந்தது.

***************************************************************
- வெளியான தேதி: 28 மே 2006



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2020 5:11 pm

14 ஆண்டுகளா? முதல் பதிவு வந்து ........ஒரு வனவாச காலம்.ஆகிவிட்டதே.கேள்விப்படாத ஒன்று. 
நல்லதோர் இரு இதிகாச இணைப்பு.
உண்மை இதுதானோ என்று எண்ணும்படி  நல்லதோர் கற்பனை 
இப்போது படிப்பினும் ரசிக்கமுடிந்தது..

ரமணியன் 
நன்றி ஜிமெயில் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 25, 2020 11:12 am

இதற்கு அவசியம் மறுமொழி இடவேண்டும். பார்த்துவிட்டு அப்படியே போய்விடமுடியவில்லை. பதில் கொஞ்சம் நீளமாய் இருக்கும் போலிருக்கிறது. பிறகு சாவகாசமாய் வந்து reply போடுகிறேன்.



அணையா நெருப்பு - கமல்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅணையா நெருப்பு - கமல்ஹாசன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அணையா நெருப்பு - கமல்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 1:18 am

நல்லவேளை கலவரத்திற்கு பயந்து, அக்னியின் காதலை மனமில்லாமல் பொசுக்கியிருக்கிறார் முடிவில். ஹா... ஹா... அந்த பயம் இருக்கவேண்டும். சமூக கலவரத்திற்கு தான் வித்திட்டுவிடாமல் பிழைத்துக்கொண்டார். சாமர்த்தியம் தான்.

சரி கதைக்கு வருவோம்;

என்ன கதை இது? கற்பனை தான் என்றாலும் ரசிக்கமுடியவில்லையே..... கதையில் வார்த்தைகள் வெகு லாவகமாகவும் அழகாகவும் கையாளப்படிருக்கிறது.

ஆனால், அந்த அழகிற்கு பின்னால் இருக்கும் உள்குத்து... விஷம்!

பொதுவாகவே, ஒரு படைப்பாளியின் என்ன ஓட்டத்தை தான் அவன் படைத்த எழுத்துக்கள் பிரதிபலிக்கும் என்பார்கள். அதுசரி, சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும் என்பதற்கு ஏற்ப அவரிடமிருந்து இந்த கதை வந்தது ஆச்சர்யமில்லை. கதைக்கரு எப்படிப்பட்டதாக இருந்தாலும், தான் கையாளும் வார்த்தை ஜாலங்கள் அவற்றை பின்னுக்கு தள்ளிவிடும் என்ற நினைப்பு போலிருக்கு. இதை தான் வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்களோ.

ஆழிப்பேரலை வந்து அடித்துக்கொண்டு போனால் கூட எதற்கும் உதவாத சில மிச்சங்களை விட்டு செல்லும். ஆனால், அக்னி...? மிச்சமே வைக்காமல் எரிக்க கூடியது. தங்கத்தையே நெருப்பில் தாம் சுத்தப்படுத்துவார்கள். நெருப்பு களங்கத்தை சுத்தப்படுத்தும். அதனால் தான் பெண்ணை நெருப்பாய் பார்த்தார்கள்.

நெருப்பு ... நெருப்புதான்.... அதற்கு இணையாக எதையுமே காட்ட முடியாது. அப்படிப்பட்ட நெருப்பையே களங்கப்படுத்திய பெருமை இந்த கதை எழுதியவரையே சேரும்.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை யாரும் மறுக்க முடியா


என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.


கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல் – போன்ற வரிகள் அழகூட்டினாலும், என்னை பொறுத்த வரை பெருக்குவதுக்கு பட்டு குஞ்சம் கட்டியது போல் தான்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஒரு பெண், தன்னை கணவன் சந்தேகித்து விட்டால் உடனே அதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக வேறு ஒரு கள்ளத்தொடர்பை ஏற்படுத்தி கொண்டுவிடுவாள் என்று எண்ணுகிறாரா...? (இதில், சிருஷ்டியில் ஏற்பட்ட இலக்கண பிழையாக நான் கருதும் சில விதிவிலக்கான பெண்களை கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை.) அல்லது அப்படி செய்வதில் தவறில்லை என்று, இன்று கண்ணை மூடிக்கொண்டு அவர்பால் கொண்ட ஈர்ப்பால் அவர் பின்னே செல்லும் இளைய தலைமுறையினருக்கு போதிக்கிறாரா..?

இந்த கதையை சீதையை வைத்து புனயப்பட்டதே தவறு. இதில் கூடவே அக்னி வேறு.... மனித மனம் சுலபமாய் அடிமை ஆகும் உணர்வுகளை நெருப்புக்கும் தாரை வார்த்து கதாபாத்திரம் அமைத்திருப்பது என்பது.....

உண்மையில் அந்த கலைஞனுக்கு நிகர் அவரே. இதுவே வேறொரு கதையில் இருந்திருந்தால் ரசித்திருக்கலாம்.

நெருப்பின் மீதே வெறுப்பு ஏற்படும் அளவிற்கு இந்த மாறுபட்ட கோணம் “ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி ...” என்று அபூர்வ ராகம் பாடிய இவருக்கு கைவந்த கலை தான்.

சீதையை பற்றி நானும் சில பதிவுகள் இங்கே செய்திருக்கிறேன். நானும் சீதையின் அக்னிப்ரவேசத்தில் உடன்பாடு இல்லாதவள் தான். ஆனால், இந்த கதையில் வரும் சீதையின் மன மாற்றத்தை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

புதுமை, புரட்சி என்ற பெயரில் இது போன்ற கலாசார சீர்கேட்டினை ஊக்குவிக்கும் கதைகளை மேலோட்டமாக கூட படிக்க கூடாது என்பது என் கருத்து.

(கமலை பிடிக்காது. அதனால், படிக்கவில்லை, சரி. ஆனால், இப்போது பதிவேற்றி இருக்கறீர்கள். இப்போது கமல் பிடித்து விட்டதா அல்லது கதை பிடித்திருக்கிறதாலா? காரணம் அறியலாமா...?)





அணையா நெருப்பு - கமல்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅணையா நெருப்பு - கமல்ஹாசன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அணையா நெருப்பு - கமல்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2020 2:24 pm

விமந்தனி wrote:

கமலின் நடிப்பு பிடிக்கும். நடந்து வந்த பாதையில் நடந்த சம்பவங்கள்,இப்போதைய அரசியலும் பிடிக்காது.

எல்லாம் பிடித்தா ராம் சார் பதிவிடுகிறார்கள்?

சமீபத்தில் ராம் சாரின் பதிவொன்றில்............... "சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்" என்பது சொல்லப்பட்ட கருத்து.

கமலிடம் அது இருக்கிறதா? என்ற கேள்வியை கேட்டபோது............................
விடை..................அவரைப் பிடிக்காது.

பிடிக்காது என்பதற்காக மற்றவர்கள் படிக்கக் கூடாதா? அதனால் அந்தப் பதிவு.

இனிமேல் எனக்குப் பிடித்தவையை மட்டும் பதிவிடுகிறேன்.அவற்றுக்கு மட்டும் கருத்திடுகிறேன்.
இப்போது.............சட்டிஸ்பைட்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2020 9:20 pm

கொஞ்சம் personal  ஆக போய்விட்டது போல் இருக்கிறது.
சிலர் தன்மீதே கூடை கூடையாக குறைகளை வைத்துக்கொண்டு ஊராருக்கு உபதேசம் செய்வார்கள்.இதில் கமல் ஒருவர்.அவர் பேசுவது அவருக்கே புரிந்து இருக்குமா  என்பது சந்தேகமே.சில சமயம் .சிலர் சிலரை சில்லறைக்காக அவர் விருப்பத்திற்கிணங்க மகிழ்விக்கும் வ்யாபாரிகள். அந்த விதத்தில் சிறந்த நடிகர்.
ஹிந்துவாக பிறந்த ஹாசன் சந்நியாசி போல் பூணலை அவிழ்த்தெறிந்து வேறு மதம் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என கேள்வி. ஏதோ வெளியே சொல்லமுடியாத தாக்கம் .
இந்த தாக்கம் சிறுவயதில் இருந்தே கூட இருக்கலாம்.
அவர் வாழ்வில் அதை வெறுப்பாக்கி எழுத்தாக நெருப்பாக்கி இருக்கிறார்.
நடிப்பு பிடிக்கும்.நடத்தை பிடிக்காது.அதிகம் பேருக்கு.அவரவர் நடத்தை அவரவருக்கே சொந்தம்..எதற்கு மற்றவர் தலையிடவேண்டும்.என்று நாம் நினைப்பது 
அவரும் நினைத்து இருந்தால் controversial figure ஆகி இருக்கமாட்டார்.
எப்பிடியும் limelight இல் இருக்கவிரும்புபவர்கள் எதிர்மறையாக செய்து 
சமூகத்தில் தங்கள் இருப்பை தெரிவித்துக்கொள்கிறார்கள். 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 11:34 pm

சக்தி18 wrote:
இனிமேல் எனக்குப் பிடித்தவையை மட்டும் பதிவிடுகிறேன்.அவற்றுக்கு மட்டும் கருத்திடுகிறேன்.
இப்போது.............சட்டிஸ்பைட்?
என்னாச்சு...? அதிர்ச்சி

சரி, இனி இதுபோல எதுவும் நான் கேட்கமாட்டேன். நீங்கள் வழக்கம் போல தொடருங்கள். புன்னகை

(ஒரு விஷயம், யாருக்காகவும் உங்களது நியாயமான விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம்)



அணையா நெருப்பு - கமல்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅணையா நெருப்பு - கமல்ஹாசன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அணையா நெருப்பு - கமல்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக