புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_m10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10 
72 Posts - 53%
heezulia
அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_m10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_m10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_m10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_m10அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2020 8:53 pm

சென்னை: தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரைப் பற்றிய சிறு குறிப்பு:
நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா. தன் சிவில் சர்வீஸ் பணியின் 25-வது ஆண்டில், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றி வந்தவர், அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி. மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தார். சிவில் சர்வீஸ் துறைக்கு வர நினைப்பவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.

இளமைப் பருவமும் ஐ.ஏ.எஸ் ஆர்வமும்...

தனது இளமை பருவம் குறித்து அமுதா கூறுகையில், நான் பிறந்து, வளர்ந்தது மதுரை. பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். எனக்கு ஓர் அண்ணன் மற்றும் ஒரு தங்கை. என் தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் மறைவுக்குப்பிறகு பாட்டிக்குக் கிடைத்த ஓய்வூதியத்தைப் பெற கலெக்டர் அலுவலகத்திற்கு, பாட்டியுடன் போவேன். அங்கே மக்கள் அனைவரும் ஒருவருக்கு வணக்கம் சொல்றதைப் பார்த்து, 'இவர் யார்?'னு பாட்டிகிட்ட கேட்டேன். 'இவர்தான் கலெக்டர். ராஜா மாதிரி, மக்களுக்கு நல்லது பண்ணுறது இவர் வேலை'னு அந்த 13 வயசுல எனக்குப் புரியும்படி பாட்டி சொன்னார். 'நாமும் கலெக்டராகி, மக்களுக்கு நல்லது பண்ணணும்'னு அப்போதான் எனக்குள்ள முதல் ஸ்பார்க் ஏற்பட்டுச்சு.

பள்ளிக் காலங்களில், 'பெண்கள் கபடி விளையாடினா என்ன?'னு, கபடி ப்ளேயர் ஆனேன். தொடர்ந்து 3 வருஷங்கள் அதில் தங்கப்பதக்கம் வாங்கினேன். ஒருமுறை மலையேறும் பயிற்சிக்காக இமயமலைக்குப் சென்றபோது, ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவங்களும் அங்க மலையேறும் பயிற்சிக்காக வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் பேசக் கிடைத்த வாய்ப்புதான் ரெண்டாவது ஸ்பார்க்.

அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Gallerye_14091716_2580618

ரமணியன் 

நன்றி தினமலர் 

தொடர்கிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2020 8:56 pm

----------2

ஐ.பி.எஸ் டு ஐ.ஏ.எஸ்

பள்ளிப்படிப்பில் நான் சராசரி மாணவிதான். மதுரை, வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி, அக்ரியில் சேர்ந்தேன். எல்லாப் பாடங்களிலும் தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடித்தேன்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே வெற்றியுடன், ஐ.பி.எஸ் போஸ்ட்டிங் கிடைச்சது. 'அடுத்த முயற்சியில் உன்னால நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆக முடியும்; அப்போதான் பல துறைகளில் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை செய்ய முடியும்' என அப்பா ஊக்கப்படுத்தினார். இரண்டாவது முயற்சியில், 1994-ம் ஆண்டு தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்வானேன்.

இதற்கிடையில் என்னைப் பார்த்து என் அண்ணனுக்கும் சிவில் சர்வீஸ் ஆர்வம் வந்து, எனக்கு முன்பாகவே எக்ஸாம் எழுதி 1992-ல் செலெக்ட் ஆனார். இப்போ, ஐ.எப்.எஸ் அதிகாரியாக உள்ளார்.

அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Gallerye_140938736_2580618

25 ஆண்டுகளில்...

கடலூர் சப்-கலெக்டராக என் ஐ.ஏ.எஸ் பயணத்தைத் துவங்கினேன். அப்போது தினமலர் நாளிதழில் அரை பக்கம் நாட்டுக்கு வந்த காட்டு நாயக்கர்கள் (களையூர் கௌ.செ.குமார்- செய்தியாளர்) கட்டுரையைப் பார்த்து ரயில்வே கிளர்க் வேலை கிடைத்து சாதி சான்றிதழ் இல்லை என்பதை அறிந்து சாந்தி என்ற காட்டுநாயக்கார் இன பெண்ணிற்கு எஸ்டி சான்றிதழ் முதலில் கொடுத்தேன்.

தொடர்ந்து கூடுதல் கலெக்டர், மாவட்ட ஆட்சியர், யுனிசெப் அதிகாரி, பல துறைகளில் தலைவர், இப்போது உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர்னு இதுவரை 15 பணிமாறுதல்களைச் சந்தித்துள்ளேன்.

இவற்றில், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநராகப் பணியாற்றியது நிறைவான அனுபவம். தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெண் குழந்தைகளுக்கான கல்வி, குழந்தைத் திருமணம் தடுப்பு, மகளிர் சுயஉதவிக் குழு வளர்ச்சி உட்படப் பெண்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காகச் செய்த விஷயங்கள் கண்கூடாகப் பலன் தந்தன.

சென்னையில் பெருவெள்ளம் வந்த போது, வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு என் பொறுப்பை நிறைவுடன் செய்தேன். மத்திய அரசின் உதவித்தொகையுடன் லண்டன்ல நான் படித்த முதுகலை பொருளாதாரம் மற்றும் அரசியல் படிப்பு மற்றும் அங்கே கிடைச்ச அனுபவங்களை என் பணியில் பெரிதும் பயன்படுத்துறேன்.

----------3

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2020 8:58 pm

--------3

அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Gallerye_140953829_2580618

என் சர்வீஸ்ல ரெண்டாவது வருஷம். அப்போது செங்கல்பட்டு சப்-கலெக்டரா இருந்தேன். பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மணல் மாபியா கும்பலைத் தடுக்க முயற்சி செய்த போது எனக்கு மிரட்டல் வந்தன. லஞ்சம் கொடுப்பதாக கூறினார்கள். . எதற்கும் நான் அசைந்து கொடுக்கவில்லை.

ஒருநாள் ஆற்றில் மணலைத் திருடிச்சென்ற லாரிகளைச் சிறைப்பிடித்தேன். அப்போது ஒரு லாரி ஓட்டுநர் என் கார் மீது லாரியை மோதியதில் என் முதுகில் அடிபட்டது. இப்படி நிறைய விஷயங்களைப் பார்த்துட்டேன்.

உயரதிகாரிகளின் பாரபட்சம், ஆண் பெண் பாகுபாடு, நேர்மையாக இருப்பதால் வரும் பணி மாறுதல் மற்றும் அச்சுறுத்தல்கள்னு நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கேன். இன்னும் நிறைய சவால்களை எதிர்கொண்டு பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.

அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Gallerye_141009399_2580618

இரு முதல்வர்கள்...

என் பணிக்காலத்தில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் தலைமையிலான அரசுகளில் பணியாற்றியிருக்கேன். நான் ஈரோடு கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டார். இறுதியாக நன்றியுரையை நான் தமிழில் கவிதையாகப் பேசினேன். 'தமிழில் எல்லாம் ஆர்வம் இருக்கா? கவிதையெல்லாம் எழுதுவீங்களா... நல்லது, தொடருங்க'னு மேடையிலேயே வாழ்த்தினார்.

நான் தருமபுரி கலெக்டராக இருந்தபோது நடுநிலையா இருந்ததால, என்னை மாற்ற அந்த மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பலர் நினைத்தனர். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் அந்தச் செய்தி செல்ல, 'இந்த கலெக்டரை மாத்த முடியாது. அவங்க மூலமா பின்தங்கிய உங்க மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்துக்கோங்க'னு சொல்லியிருக்கார்.

ஜெயலலிதா, அதிகாரிகள் சொல்லும் யோசனை சிறப்பானதாக இருந்தால், உடனே அதைச் செயல்படுத்த உத்தரவிடுவார். என்மீது தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு விஷயத்தை உடனே செய்து முடிக்கத் தேவையான எல்லா ஒத்துழைப்பையும் கொடுப்பார்.

-------------------4

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2020 9:00 pm

-------4

நாங்க ஐ.ஏ.எஸ் தம்பதி!

என் கணவர் ஷம்பு கலோலிகர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்வானவர். தற்போது தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உள்ளார். மீடியாவிலிருந்து விலகியிருக்கவே விரும்புவார். இருந்தாலும், என்னைப் பத்தி வெளியாகும் செய்திகளை ஆர்வத்துடன் என்னிடம் காட்டி, அது பற்றிப் பேசுவார்.

போட்டோகிராபி, சைக்கிளிங், இளையராஜா...
வைல்ட் லைப் போட்டோகிராபி, என் பிரதான ஸ்ட்ரெஸ் பஸ்டர். 8 வருடங்களாக , சில நாள்களை ஒதுக்கி, பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுக்குப் சென்று புகைப்படம் எடுத்துள்ளேன். வாரம்தோறும் விடுமுறை நாட்களில் , 30 கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிளிங் போறேன். இளையராஜாவின் தீவிர ரசிகை. தினமும் அவர் பாடல்களைக் கேட்கவே, தனியாக நேரம் ஒதுக்குவேன். இப்படி, என் பர்சனல் சுவாரஸ்யம் மிக்கவர். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா காலத்தில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் யுனிசெப் பிரதிநிதியாக செயல்பட்டபோது பணியில் காட்டிய ஆர்வம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                              ------------------xx ---------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2020 9:06 pm

வாழ்த்துக்கள் அமுதா  அவர்களே.

உண்மையான உழைப்பு என்றுமே 
உன்னதத்தை தரும்.

மேலும் மேலும் புகழின் உச்சிக்கு போக வாழ்த்துகள்.

தமிழ்நாடு பெருமைப்படுகிறது 

உங்கள் செயல்திறமையை/  மிக முக்கிய நிகழ்ச்சிகளை நடத்திய விதம் டிவி களிள் 
கண்டுள்ளேன்.யார் இவர் என அதிசயித்ததது உண்டு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 21, 2020 11:36 pm

அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை DxPzOmDQXm2MRNrxNR0Q+vikatan_2019-05_15f8a754-96fe-49e5-b275-f93cfb3fb67f_p70c_1540540252
--
வாழ்த்துக்கள் அமுதா  அவர்களே... அன்பு மலர்  அன்பு மலர்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 22, 2020 12:16 am

சூப்பருங்க பெண்.

அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2020 2:14 pm

கருணாநிதி மறைவின் போது சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்து 
ஒவ்வொருவரையும் கவனித்த முறை யாவரையும் யார் இவர் என கேட்கவைத்தது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2020 2:15 pm

விமந்தனி wrote:சூப்பருங்க பெண்.
மேற்கோள் செய்த பதிவு: 1325322

தற்காலத்தில் அநேகர் இவரை போல்.
ஆனால் % தான் குறைவு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2020 3:20 pm

அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை Vikatan%2F2020-07%2Fdde7d53d-1ba1-4740-9923-449e3b10ce7d%2Fss.png?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
அமுதாவுக்கு விருது வழங்கும் ஜோதிகா
----------------------
``தற்போது பயோபிக் திரைப்படங்கள் சினிமாவில் டிரெண்டாகி
விட்டன. அமுதா ஐ.ஏ.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால்,
நீங்க நடிக்க வாய்ப்பிருக்கா?" - 2018-ம் ஆண்டு நடைபெற்ற
`அவள் விகடன்' விருதுகள் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகாவிடம்
இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

புன்னகையுடன் பதிலளித்த ஜோதிகா, ``அமுதா மேடமை யாருமே
மேட்ச் பண்ண முடியாது. ஒரு சீக்ரெட் சொல்றேன்.
மேடமை இதுக்கு முன்னாடியே சந்திச்சிருக்கேன். இவருடைய
பெரிய ரசிகை நான். சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடிவெடுத்ததும்,
இனி எந்த மாதிரியான படங்களில் நடிக்கலாம்னு ரொம்பவே
யோசிச்சேன். அப்போ ஒருமுறை அமுதா மேடத்தைச் சந்திச்சுப்
பேசினேன்.

`மீடியா மிகப்பெரிய சக்தி. அதில் நிறைய நல்ல விஷயத்தை
மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். எனவே, மக்களுக்கு நல்ல
கருத்துகளைச் சொல்லும் வகையிலான படங்களிலும்,
பெண்களை உயர்வாகச் சித்திரிக்கும் வகையிலான ரோல்களிலும்
நடிங்க'ன்னு ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தாங்க.

அதன் பிறகுதான், பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவமுள்ள
படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு மேடம்தான் காரணம்.

எல்லாப் பெண்களுக்கும் சில பெண்கள் இன்ஸ்பிரேஷனாக இ
ருப்பாங்க. என்னோட அம்மா, ஜெயலலிதா மேம், அமுதா மேம்
ஆகியோர்தாம் என்னுடைய இன்ஸ்பிரேஷன்.

இவருக்கு விருது கொடுக்க எனக்குத் தகுதியே இல்லை. இ
ந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" என்றவர், சட்டென அருகிலிருந்த
அமுதாவின் கால்களைத் தொட்டு வணங்கினார்.

ஜோதிகாவின் இந்த அன்பைச் சற்றும் எதிர்பாராத அமுதா,
அவரைக் கட்டித்தழுவினார். ஒட்டுமொத்த அரங்கமும் பலத்த
கைத்தட்டலுடன் ஆரவாரம் செய்தது.

பிறகு, `மாண்புமிகு பெண் அதிகாரி'க்கான அவள் விகடன் விருதை,
அமுதா ஐ.ஏ.எஸ்ஸுக்கு வழங்கினார் ஜோதிகா.

---------------------------
கு.ஆனந்தராஜ்
நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக