புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
21 Posts - 64%
heezulia
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
148 Posts - 55%
heezulia
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
9 Posts - 3%
prajai
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
 துளசிதாசர் Poll_c10 துளசிதாசர் Poll_m10 துளசிதாசர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசிதாசர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 5:38 am


திரேதாயுகத்தில் வால்மீகி ராமாயணம் எழுதிய ராம பக்தர்,
இக்கலியுகத்தில், ஹரியின் மகிமைகளை பாட்டுக்களாக
எழுதி, பாடி மக்களிடையே பக்தியைப் பரப்புவது ஸ்ரீஹரியின்
விருப்பப்படி ஹஸ்தினாபுரம் என்னும் ஊரில், கநூஜ்,
ஓர் அந்தணர் வீட்டில் மறுபடி பிறந்தார்.

அவரது தந்தை, ஆத்மாராம், ஓர் வேதவித்து. அவர், அக்பரின்
அரண்மனையில் இருந்தார். அவர், தம் குழந்தைக்கு
சாஸ்திரப்படி கிரியை செய்து, துளசிதாஸ் எனப் பெயரிட்டார்.

பின், வேதமுறைப்படி, துளசிதாசருக்கு உபநயனம் செய்து
வேதங்களை கற்பித்தார். துளசிதாசரும் 12 வருடங்கள்
பிரமச்சரிய விரதம் மேற்கொண்டு, வேதங்களை நன்கு படித்தார்.
மற்றும், ஸ்ரீகிருஷ்ண பக்தி நிறைந்தவராகவும் விளங்கினார்.

காலக்ரமத்தில், ஆத்மாரம் தன் புதல்வருக்கும், அழகும், பண்பும்
நிறைந்த மமதா என்னும் பெண்ணுக்கும் திருமணம் செய்வித்தார்.
இருவரும், மனம் ஒத்த தம்பதிகளாய் இருந்தனர்.

ஒருநாள், அக்பர் துளசிதாசரை அழைத்துக்கொண்டு யாத்திரைக்கு
புறப்பட்டார். அவர் சென்றபின், மம்தாவின் தாயார் வீட்டிலிருந்து
வந்த ஒருவர், மம்தாவின் தாயாருக்கு உடல்நலம் இல்லை என்றும்,
உடனே, மமதாவை பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக செய்தி
சொன்னார்.

கணவர் ஊரில் இல்லாத நேரத்தில் அவரிடம் சொல்லாமல் போகத்
தயங்கினாள். பின், துளசிதாசரின் பெற்றோரின் அனுமதி பெற்று
தாய் வீடு சென்றாள். யாத்திரை சென்று வீடு திரும்பிய துளசிதாஸ்,
தன் மனைவியைக் காணாது, பெற்றோரின் மூலம் விவரம் அறிந்து
உடனே தன் மனைவியைக் காணப் புறப்பட்டார்.

கொட்டும் மழையையும், யமுனா நதியின் வெள்ளத்தையும்
பொருட்படுத்தாமல் பத்து கிலோமீட்டர நடந்து, தம் மனைவியின்
வீடு சேர்ந்தார். இரவு நேரம் ஆகி விட்டதால், அவரது வீட்டுக்
கதவுகள் பூட்டி இருந்தன. காவலர்களும் உறங்கிவிட்டனர்.

வழி தெரியாமல் நின்ற துளசிதாசருக்கு, மேல்தளம் இருந்து ஓர்
கயிறு தொங்குவதுப்போல் தெரியே, அவர், அதைப் பற்றிக்
கொண்டு மேல்தளம் சென்றடைந்து மனைவியின் அருகில் சென்று
நின்றார். திடுக்கிட்டு எழுந்த அவர் மனைவி திகிலுடன் தன்
கணவரை நோக்கி, 'எவ்வாறு இந்த நேரம் இங்கு வந்தீர்கள்?' என்று
கேட்க, துளசிதாசர்,

'எனக்காக, நீ மேலே இருந்து போட்ட கயிற்றின் மூலம் ஏறி வந்தேன்.'
என்றார். மேலும், அதிர்ச்சி அடைந்த மம்தா, ஒன்றும் புரியாதவளாக,
அந்தக் கயிறு எங்கே என்று காட்டுமாறு கூறினாள். அவள், தன்
கணவருடனும், மற்ற வேலை ஆட்களை அழைத்துக் கொண்டு தீபம்
ஏற்றிக் கொண்டு கயிறு இருக்கும் இடம் பார்க்கக் சென்றார்.
துளசிதாசர் காட்டிய கயிற்றைக் கண்ட மம்தா திடுக்கிட்டார்.

அது கயிறல்ல, ஓர் நீளமான கொடிய விஷப் பாம்பு தொங்கிக்
கொண்டிருந்தது. எல்லோரும் பயத்தினால் நடுங்கி ஸ்தம்பித்து
நின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 5:42 am

மிகுந்த வேதனையுடன் மமதா தன் கணவனை நோக்கி
'பிரபு நீங்கள் இந்த நள்ளிரவு வேளையில் தாய், தந்தையாரைப்
பற்றி கவலைப்படாது, உங்கள் நலம் பற்றியும் என்னாது
என்மேல் இருக்கும் அன்பினால் வந்துள்ளீர்கள்.

இந்த கொடிய பாம்பு உங்களைத் தீண்டீ இருந்தால்
என்னாவது? பெண்ணாசை மிகவும் கொடியதும், வேதனைப்
படுத்துவதும் ஆகும். ராவணனும், இந்திரனும் கேட்டது பெண்
ஆசையினால்தான். உலக ஆசைகளில் மனதை செலுத்தாமல்,
ஸ்ரீராமநாமத்தில் லயித்து, கானம் செய்து அவன்
புகழ்பாடுவதன்றோ உத்தமம் என்று பலவாறு கூறியதைக்
கேட்டு துளசிதாசருக்கு தன் பிறப்பின் காரணம் புரிந்தது.

அந்தக் கணமே அவர் மனைவியை விட்டு விட்டு, கானகம்
நோக்கி ராம ஸ்மரனையுடன் நடக்கலானார். இவ்வாறாக
நடந்து, நடந்து காசி வந்தடைந்தார். பாகிரதி நதியில் நீராடி,
உதிர்ந்த இலைகளை மட்டும் உணவாகக் கொண்டு வாழ்ந்து
வந்தார். இவ்வாறாக ஒவ்வொரு நதிகளிலும் நீராடி தன்
கமண்டலத்தில் எஞ்சி உள்ள நீரை வழியில் உள்ள
செடிகளுக்கு ஊற்றி ராம கானம் செய்துக் கொண்டு
12 வருடங்கள் கழித்தார்.

ஒரு நாள், துளசிதாசர், ஓர் ஓடையில் நீராடிவிட்டு தன்
கமண்டல நீரை ஓர் மரத்தின் வேரில் ஊற்ற, திடீரென அம்மரம்
பிளந்து ஒரு ராட்ஷசன் அவர் முன் நின்று இரு கைகளையும்
கூப்பியபடி வணங்கி நின்றான்.

மேலும், அவரை நோக்கி, "சுவாமி, நான் மிக்க
மகிழ்வடைந்துள்ளேன், ஏனெனில், எங்களைப் போன்ற
மரங்கள் வேர் எந்த நீர் நிலைகளிலும் தண்ணீர் அருந்தக்கூடாது
என்பது சாபம்.

நான் மிகவும் தாகமாக இருந்த வேலையில், தாங்கள் ஊற்றிய
இந்த நீர் ஏன் தாகத்தை தீர்த்தது. ஆகையால் தங்களுக்கு
வேண்டிய வரத்தைக் கேளுங்கள்" என்றது.

ஆச்சரியம் அடைந்த துளசிதாசர், "அப்பா, நான் ஸ்ரீராமனின்
தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருகிறேன், எனக்கு
வேறொன்றும் தேவையில்லை" என்றார். இதைக் கேட்ட
அந்த பிரம்மா ராட்சஷன், "சுவாமி, நான் அந்தப் பெயரை
சொன்னால் பஸ்மம் ஆகி விடுவேன். ஆதலால், தாங்கள்
ஹனுமனை பிரத்தனை செய்தால் அவர் மூலம் இறை தரிசனம்
கிட்டும். எங்கெல்லாம் புராணங்கள் பாடப்படுமோ
அங்கல்லாம் ஹனுமான் கண்டிப்பாக வருவார்.

அவர் அந்த இடத்திற்கு எல்லோருக்கும் முன்பாக வந்து,
எல்லோரும் சென்றபின் அவ்விடம் விட்டுச் செல்வார். வயதான
அவர் பழைய துணி அணிந்திருப்பார். தலையில் குள்ள
இருக்கும்." என அடையாளங்களைச் சொல்லி அந்த பிரம்மா
ராட்சசன் மறைந்தான.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 5:42 am

மறுநாள் துளசிதாஸ் நீராடி,உபன்யாசம் செய்யும் இடம்
தேடி சென்று அமர்ந்தார். அவ்வேளையில் ஓர் வயதான
உருவம் ராட்சஷன் சொன்ன அடையாளங்களுடன் வந்து
அமர்ந்தது.

அதைக் கண்டதும் துளசிதாசரும், இவர்தான் மாருதி என
அடையாளம் கண்டு கொண்டார். உபன்யாசம் முடிந்தபின்,
எல்லோரும் சென்றபின் மாருதி வேகமாக வெளியேற,
துளசிதாஸ் பின் தொடர்ந்தார்.

நீண்ட நேரம் நடந்த பின், மாருதி நின்று, 'நீ யார், ஏன்
என்னை பின் தொடர்கிறாய்?' எனக்க கேட்க்க, துளசிதாசர்,
மாருதியின் இரு கால்களையும் கெட்டியாகப் பற்றிக்
கொண்டு, கண்ணீர் மல்க தமக்கு 'ராம தரிசனம்' காண
அருள் புரிய வேண்டினார்.

தம் ஞான திருஷ்டி மூலம், துளசிதாசர் வேறு யாரும் இல்லை,
சாட்சாத் வால்மீகியின் மறுபிறப்பே என தெரிந்து கொண்ட
மாருதி, அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவருக்கு
நிச்சயம் ராம தரிசனம் கிட்டும் என அருள் புரிந்தார்.

ஹனுமான் ராமனை பிரார்த்தித்து துளசிதாசருக்கு காட்சி
தருமாறு வேண்டினார். ஸ்ரீ ராமனும் துளசிதாசருக்கு
தரிசனம் தருவதாக சம்மதித்தார்.

மறுநாள் வானரப்படையுடன், ஸ்ரீ ராமர் ஓர் அரசனைப்
போலே முன் செல்ல துளசிதாசரின் குடிலைக் கடந்துக்
சென்றனர். அதைக் கண்ட துளசிதாசர், யாரோ முகமதிய
அரசன் தன் படையுடன் செல்வதாக நினைத்து வணக்கம்
செலுத்தினார்.

மறுநாள் ஆஞ்சநேயர், துளசிதாசரிடம் வந்து உன் விருப்பம்
பூர்த்தி அடைந்ததா என்று கேட்டார். துளசிதாஸ், தான்
காணவில்லை எனக் கூற, நேற்று வானரப்படையுடன்
வந்தவரே ஸ்ரீ ராமன், எனக் கூறினர். ஆனால், துளசிதாசரின்
மனம் திருப்தி அடையாததால், ஸ்ரீ ராமனை வில் தாங்கிய
பீதாம்பரதாரியாக காண வேண்டும் என பிராத்தித்து தனக்கு
மறுபடியும் ராம தரிசனத்திற்கு அருள் புரிய மன்றாடிக்
கேட்டுக்கொண்டார்.

மனம் இறங்கிய ஹனுமான், மறுபடி ராமனைத் துதித்து,
வால்மீகியின் அவதாரமான துளசிதாசருக்கு மறுபடி அவர்
விருப்பப்படி அருள வேண்டினார். ஹனுமானின்
வேண்டுகோளை கேட்ட ஸ்ரீ ராமன்,
'அஞ்சநேய!, உன் பக்தியின் மகிமையும், உன் கருணை
உள்ளமும் என்னை நெகிழச்செய்தாலும், இந்தக்
கலியுகத்திற்கு ஏற்றார்போல்தான் தரிசனம் தர இயலும்.'
என்றார்.

அதற்கு ஹனுமான், 'ராமா உன் ஆணைப்படி வால்மீகி
துளசிதாசராக அவதரித்துள்ளார். உன் பெருமைகளைப்
பரப்புவதே இந்த பிறப்பில் நீ அவருக்கிட்ட கட்டளை.
ஆகவே, நீ துளசிதாசரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய
வேண்டும்.' என வேண்டினார்.

ஸ்ரீ ராமனும் ஹனுமானின் கோரிக்கைப்படி துவாபரயுக
ராமனாக சீதாவுடனும்,லக்ஷ்மனனுடனும் மாருதியுடன்
புறப்பட்டார்.மாருதியும் முன் சென்று துளசிதாசருக்கு
ஸ்ரீ ராமனின் வருகையைக் கூறினார்.

மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தனது குடிலின் முன் வந்த
ஸ்ரீ சீதா ராமனை லக்ஷ்மனனுடன் கண்டு மனமகிழ்ந்து
நமஸ்கரித்தார்.

மாருதியும் துளசிதாசரின் அவதாரப் பணியை இக்கலியில்
பூர்த்தி செய்ய ஸ்ரீராமனை துளசிதாசரின் தலையில்
கை வைத்து ஆசீர்வதிக்க கோரினார். ஸ்ரீ ராமனும்
துளசிதாசரை ஆசீர்வதித்து மறைந்தார்.

அதன்பின் அந்த காசி நகரில் துளசிதாசரின் ராமகானம்
எல்லா திசைகளிலும் பரவி எல்லோரும் ராமபக்தியை
பூரணமாக அனுபவித்தனர். இவாறாக காசி வாசிகள்
துளிசிதாசரின் பக்தர்களாகவும், சீடர்களாகவும் மாறி
அவருடையத் தேவைகளை கவனித்துக் கொண்டனர்.

ஒரு நாள், ராம பஜனை நடந்து முடிந்த பின் பக்தர்கள் வீடு
திரும்பினர். இரவு குடிலின் கதவுகள் திறந்தே இருக்க
துளசிதாசரும் அவரது சிஷ்யர்களும் படுக்கச் சென்றனர்.
இதை கவனித்த இரு திருடர்கள் துளசிதாசரின் குடிலுக்குள்
நுழைந்து தமக்கு வேண்டிய மட்டும் பொருட்களை எடுத்துக்
கொண்டு வாசலுக்கு வர அங்கே அம்பும் வில்லும் ஏந்தி
இரு காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டு பயந்த திருடர்கள் மறுபுறம் உள்ள
வாசல் வழியே வெளியேற முற்பட அங்கேயும் இது
போன்றே வில்லும் அம்பும் ஏந்திய இருவர் காவல் புரிந்து
கொண்டிருந்தனர்.

செய்வதறியாத திருடர்கள் விடியும் வரை அங்கேயே
இருந்து விட்டு வெளிச்சம் வரும் முன் வெளியேறலாம்
என திட்டமிட்டு காத்திருந்தனர். அவ்வாறே விடியும் நேரம்
காவலாளிகள் வீடு சென்றிருப்பார்கள் என எண்ணி,
வெளியேற முயர்ச்சிக்கையில் கையில் அம்புடன்
இவர்களைக் குறி வைத்து காத்திருந்தனர்.

மிகவும் பயந்த அவர்களை வெளியே செல்ல
அனுமதிக்கவில்லை. பொருள்களையும் கீழே போடும்படி
கட்டளை இட்டனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 5:43 am

விடிந்ததும் எல்லோரும் எழுந்து தங்கள் வேலைகளை கவனிக்க சென்றார்கள். அப்போது துளசிதாசரை கண்ட திருடர்கள் அவரது பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். பின் நடந்த விவரங்களையும் சொன்னார்கள். துளசிதாசர் சந்தேகமுற்று தம் சிஷ்யர் களை அழைத்து யார் இவர்களைப் போகவிடாமல் தடுத்தது, என வினவினார். சிஷ்யர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாங்கள் யாரும் அப்படி செய்யவில்லை', என்றனர். அப்போது, அந்த திருடர்கள், இவர்கள் யாரும் இல்லை, கரிய உருவமுடன் தலையில் கிரீடமும், கையில் வில்லும் அம்பும் ஏந்திய இருவரே காவல் செய்ததாக கூறினர். இதைக் கேட்டதும் துளசிதாசருக்கு உண்மை புலப்பட்டது. ஸ்ரீ ராம லக்ஷ்மணரே நம் வாயில் காப்பவராக வந்துள்ளனர், என்பதி புரிந்துக் கொண்டு கண்களில் கண்ணீர் தரையாக வழிய 'ஒ ராம்!. பால் கேட்ட உபமன்யுவிற்கு பால் கடலையே கொடுத்தாயே ! கல்லாய் இருந்த அகல்யாவிற்கு மோட்சம் அளித்தாயே, விபீஷணனுக்கு அவனுடைய அன்புக்கு பரிசாக தங்க நகரமான இலங்கையை அளித்தாயே. இப்போது என குடிலுக்கு காவலை இருந்து என இந்தத் திருடர்களின் ஆசைக்கு தடை செய்தாய்? கருணாமூர்த்தி, இங்கு இருப்பவை எதுவும் எனதென்று ஒன்றும் இல்லை அல்லவா? எல்லாம் உன்னுடயதுதானே? நீயின்றி என்னக்கு வேறு எது சொத்து. ராகவ, உன் அன்பிற்கும் கருணைக்கும் எல்லையே இல்லை', என பலவாறு துதித்தார். சுற்றி இருந்த எல்லோருக்கும் அவரது பக்தியும் ராமனின் பெருமைகளும் புரிந்தன. முக்கியமாக இந்த இரு திருடர்களும் மனம் மாறினார். துளசிதாஸ் அவர்களிடம் வேண்டிய அளவு செல்வங்களை எடுத்துச் செல்ல அனுமதித்தும் அவர்கள் அவரது ஆசிகலையே வேண்டினார்கள். தங்களது அறியாமைஐயும், பாவங்களையும் மன்னித்து அருளுமாறு கூறி, அவரது மகிமையால் தமக்கு ஸ்ரீ ராமலக்ஷ்மண தரிசனம் கிடைத்ததே பெரும் செல்வமாக கருதுவதாக கூறி, தங்களையும் அங்கேயே தங்க அனுமதிக்குமாறு வேண்டினார்கள். துளசிடசரும் மிக்க மகிழ்வுடன் ராமபக்தர்கலாக ஏற்றுக்கொண்டார்.

ஒருநாள் ஆஷ்ரமத்தில் எல்லோரும் உணவு அருந்த உட்கார வாசலில் ராம் ஜெய்சீதாராம் என்ற குரல் கேட்டது. வாசலுக்கு வந்த துளசிதாசரிடம் வாசலில் இருப்பவர் தான் ஒரு பிராமணனைக் கொன்ற கொலையாளி என்றும் தமக்கு உணவு தருமாறு கேட்டார். உடனே துளசிதாசர் அவரை மரியாதையுடன் அழைத்து வந்து தம் அருகில் அமரச் செய்தார். இது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.

சிஷியர்கள், தங்கள் எல்லோருக்கும் சமமாக ஒரு கொலையாளியை எவ்வாறு அமரச் செய்தார் என வினவ, தாசரும் அவர் எபோது ராம்-சீதா என சொன்னாரோ அப்போதே அவர் பாவங்களை எல்லாம் நெருப்பில் இட்ட தூசிபோல் ஆகிவிட்டது. அதனாலேயே அவர் இங்கு உட்கார அருகதை உள்ளவராக எனக் கூறி சமாதனப் படுத்தினர். ஆனால் மற்றவருக்கு இந்த பதில் திருப்தியாக இல்லாததால் தாசரிடம் ஒரு கல்லான எருதுக்கு இந்த ராம் பிரசாதத்தை தங்கள் கொடுத்து உண்ணச் செய்தால் அவரது இந்தச் செயலை தங்கள் ஒப்புக் கொள்வதாகக் கூறினார்கள். உடனே தாசர் அருகில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர் ஆலயத்திற்கு ஒரு தட்டின் நிறைய உணவை எடுத்துக் கொண்டு கிளம்ப எல்லா பிராமணர்களும் அவரை பின் தொடர்தனர்.

கோவினுள் சென்ற துளசிதாசரும் ஸ்ரீ விஸ்வேஸ்வரை பலவாறு துதித்து சிவனின் முன் நின்ற கல் நந்தியிடம் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, கல் நந்தியும் பெருமூச்சு விட்டு எழுந்து வந்து இலையோடு அந்த உணவை உன்றுவிட்டு மறுபடியும் கல் நந்தியாக மாறிவிட்டது. இந்த ஆச்சர்யத்தைக் கண்ட எல்லோரும் ஈசன் புகழ் பாடி வணங்கி துளசிதாசருக்கு வணக்கம் செலுத்தி தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். பக்தியின் முன் சாஸ்திரமோ வேதமோ பிற்பட்டது என்பது துளசிதாசரின் இச்செயலால் எல்லோரும் உணர்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 5:44 am

சில தினங்கள் சென்றன. அந்த ஊரில் ஜெயித்பால் என்ற வணிகன் இறந்துவிட்டான். துக்கம் தாளாத அவனது மனைவியும் அவனுடன் உடன் கல்லாய் ஏற தீர்மானித்தால். ஊருக்கு வெளியே தீ மூட்ட ஏற்பாடாகியது. அவனது மனைவி, அவனுக்கு பிரியமான வஸ்துக்களுடன், தானும் அவனுக்கு பிரியமானவள் ஆகையால் இந்த முடிவு செய்தல். போகும் வழியில் துளசிதாசரின் குடிலைக் கண்ட அவள், உள்ளே சென்று துளசிதாசரை வணங்கினாள். ராம ஸ்மரனையுடன் இருந்த தாசர் '8 குழந்தைகள்ளுக்கு தாய் ஆவாய்', என்று ஆசீர்வாதித்தார். வேதனையுடன் திடுக்கிட்ட அவள் அழுகையோடு தன் நிலையை அவரிடம் கூறினாள். அதைக் கேட்டு துளசிதாசர், 'அம்மா, இது ஸ்ரீராமனின் வாகாக நான் நினைக்கிறேன். நானாக கூறவில்லை. ஆகையால் ஸ்ரீராமனின் வாக்கு பொய்க்காது.' என்றார். அந்தப் பெண் மறுபடியும் அவரை நமஸ்கரித்து விட்டு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டாள். அங்கு அவள் அடைந்ததும் அவள் கண்ட காட்சி, மகனின் வார்த்தைகள் உண்மை நிதர்சனமாகி உள்ளதை அறிந்தாள். அவள் கணவன் உறக்கத்தில் இருந்து எழுந்தது போல் எழுந்திருந்தான். இன்ப அதிர்ச்சியுடன் அவள் தான் கணவனிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஆஷ்ரமம் நோக்கிச் சென்று மறுபடி துளசிதாசருக்கு தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர். தாசரும் அவர்களுக்கு ராம நாமத்தின் மகிமைகளைச் சொல்லி ராம கானம் ஜபம் செயுமாருச் சொல்லி ஆசீர்வதித்தார்.

தில்லியின் அரசராக இருந்த அக்பருக்கு துளசிதாசருடைய இந்த மகிமைகள் தெரிய அவர் உடனே தாசரை தன் அரண்மனைக்கு அழைத்துவர கட்டளை இட்டார். மேலும் அவரை சோதிக்கவும் நினைத்தார். அதன்படி, சகல மரியாதைகளுடன் தாசரை மந்திரி பிரதானிகள் அழைத்து வந்தனர். அவர் வந்ததும் அக்பர் அவரை வரவேற்று சிம்மாசனத்தில் அமரச் செய்து தனக்கு ஸ்ரீ ராம தரிசனம் கிட்ட அருள வேண்டும் என்று வேண்டினார். மேலும் தாசர் அதுவரை இங்கேயே தங்க வேண்டும் என்று கட்டளை இட்டார்.

அரசனின் கட்டளைக் கேட்டு தாசர் செய்வதறியாது மாருதியை தியானம் செய்தார். மாருதியும் அவர் முன் தோன்றி விஷயம் அறிந்தார். உடனே தாசரை வேடனை பட வேண்டாம் என அறுதல் கூறி, ஸ்ரீ ராமனின் பெயரை ஜபிக்க 1000 கணக்கில் குரங்குகள் அரண்மனை உள்ளும் வெளியும் நடமாடத் தொடங்கின. அவைகள் எல்லாவற்றையும் நாசம் செய்தன. ராணிகளின் அறைக்குள்ளும் நுழைந்தன, அவர்களையும் துன்புறுத்தின. இதனால் பயந்த ராணிகள், மன்னனிடம் முறையிட செய்வதறியாது திகைத்தான் அரசன். அப்போது அவர் மந்திகளில் ஒருவர், தாசரின் ராம பக்தியால் இவைகள் நிகழ்வதாகவும் தாங்கள் தாசரிடம் மன்னிப்பு கேட்டு அவரை விடுவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதன்படி அரசன் உடனே துளசிடாசரிடம் சென்று தன்னை மன்னித்தருளுமாறு வேண்ட, தாசரும் மாருதியிடம் விண்ணப்பிக்க உடனே எல்லாக் குரங்குகளும் மறைந்தன. அப்போது தாசர் அக்பரிடம், 'சூரியன் வரும் முன் அதன் கிரணங்கள் பூமியை தொடுவதுப் போலே பல்லாயிர வானரப் படைகள் ராமனுக்கு முன் இங்கு வந்தன. இன்னும் பல்லாயிரம் வானரங்கள் வந்தபின் உனக்கு ராம தரிசனம் கிட்டி இருக்குமே' என்று சொல்ல, அதிர்சியுடன் அக்பர் 'இந்த 1000 கணக்கான வணரன்களே இவ்வளவு அட்டகாசம் செய்து விட்டனவே. இன்னும் பல்லாயிரம் வந்தால் இந்த நகரமே அழிந்து விடுமே' என்று பதட்டத்துடன் 'ராம தரிசனம் போதும் ராம கானத்தின் மகிமையை புரிந்துக் கொண்டேன்.' என்று கூறி தன் அகந்தை அழிந்ததாதாகவும் மேலும் தன்னை மன்னித்துவிடும்படி கூறினார். மேலும் ஒரு வருட காலம் தன் அரண்மனையிலேயே தங்க வைத்து ஸ்ரீராம கானம் செய்து மக்களிடையே ராம பக்தியை பரப்புமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே துளசிதாசர் அக்பரின் அன்புக்கட்டளைக்கு இணங்கி சிறிது காலம் அரண்மனையில் இருந்து கொண்டு மக்களிடையே ராம பக்தியை பரப்பினார்.


பின், துளசிதாசர் அங்கிருது புறப்பட்டு மதுரா நகரம் சென்று யமுனா நதியில் நீராடி பின் கோகுலம் பிருந்தாவனம் முதலிய இடங்கள் சென்று வழிப்பாட்டு, ஒரு மாத காலம் அங்கு தங்கி ஸ்ரீ ஹரியை தரிசனம் செய்துக் கொண்டு மேலும் மற்ற வைஷ்ணவர்களுடன் உரையாடி ஸ்ரீஹரியின் பெருமைகளை பகிரிந்துக் கொண்டார். அங்கு வசித்து வந்த ப்ரியதாஸ் என்ற பக்தர் நான்கு யுகத்திலும் வாழ்ந்த, மேலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹரி பக்தர்களைப் பற்றி ஓர் புத்தகம் எழுதி உள்ளதை அறிந்து அவரிடம் துளசிதாசர் வந்தார். அவரது மகிமையை கூறி அவரது பக்தி தொண்டின் அடையாளமான அப்புத்தகம் தனக்கு வேண்டும் என்று ப்ரியதாசரிடம் விண்ணப்பித்தார். அவற்றைப் பற்றி கூறிக் கொண்டு வந்த ப்ரியதாசர், தான் இன்னும் சிறந்த பக்தரான துளசிதாசரைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதவில்லை என மனக் குறையுடன் கூறினார். அபோது ஓர் அதிசயம் நடந்தது. ஸ்ரீ ராமர் அவர்கள் முன் தோன்றி ஸ்ரீ துளசிதாசரின் மகிமைகளை தன் கைப்பட எழுதி மறைந்தார். இந்த அதிசயத்தை மற்ற பக்தர்களும் கண்டு ஆனந்தம் அடைந்தனர். பக்த வட்சலனான ஸ்ரீஹரியின் பெருமைகளை மக்கள் நான்கு அறிந்து வழிப்பட்டனர்.

ஜெய் ஸ்ரீ துளசிதாஸ்.
-
நன்றி - பக்தவிஜயம்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக