|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்கby மகா பிரபு Today at 21:06
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 21:00
» திருமண அறிவிப்பு
by கேசவன் Today at 20:58
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 20:54
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 20:50
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 20:48
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 20:42
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 20:06
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 19:56
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 19:56
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 19:55
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 19:49
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 19:43
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 19:34
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 18:59
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 18:58
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 18:48
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 18:47
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 18:13
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 17:41
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 17:40
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 17:35
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 17:16
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 17:10
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 17:06
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 17:03
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 16:56
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 16:42
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 16:39
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 16:15
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 15:56
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 15:50
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 15:48
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 15:35
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 15:06
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 14:50
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:14
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 14:05
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 14:05
» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:03
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விண்டோஸ் 7 இற்கான இலவசங்கள் உங்களுக்காக....
Page 1 of 1 • Share •
விண்டோஸ் 7 இற்கான இலவசங்கள் உங்களுக்காக....
விண்டோஸ்
தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக்
காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால்
இங்கு விபரங்கள் தரப்படுகின்றன.
1. ஐகால்சி – iCalcy
உங்களுக்கு
ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன
சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க
வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில்
உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது
வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும்
செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு
மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன்.
இந்த புரோகிராம் http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது.
2. விண்டோஸ் 7 சூப்பர் பார்:
விண்டோஸ்
7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள்
சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார்
விஸ்டாவின் டாஸ்க் பார் போல இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இந்த
விருப்பத்தின் அடிப்படையில் சீன கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் டாஸ்க்
பாரினைச் சற்று மாற்றி விண்டோஸ் 7 சூப்பர் பார் போல அமைத்துத்
தந்துள்ளார். இந்த புரோகிராம் இலவசமாக http://flarejune.deviantart.com/art/TaskbarResizeToolforVista104078306
என்னும் முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து
இயக்கிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரில்
மைக்ரோசாப்ட் விசுவல் சி ப்ளஸ் ப்ளஸ் 2008 இல்லை என்று பொருள். அதனை
இன்ஸ்டால் செய்து பின் இந்த புரோகிராமினை இயக்க வேண்டும். இந்த விசுவல்
சி++ புரோகிராம் கிடைக்க http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=A5C842753B974AB7A40D3802B2AF5FC2&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. கிளாஸ் சி.எம்.டி. (GlassCMD):
“டெஸ்க்டாப்பில்
கிடைக்கும் விண்டோ எல்லாம், சும்மா பளபளன்னு இருக்கணும்; அடுத்த பக்கம்
ஊடுறுவித் தெரியும்படி கண்ணாடியா இருக்கணும்'' என்று என் நண்பர் ஒருவர்
கதை அடித்துக் கொண்டிருப்பார். அவரைப் போன்ற விருப்பம் உள்ள
நபர்களுக்காகவே கிளாஸ் சி.எம்.டி. என்ற புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சின்ன புரோகிராம்; எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்;
இதைக் கம்ப்யூட்டரில் பதிந்து, அதன் மீது டபுள்கிளிக் செய்தால், சிஸ்டம்
ட்ரேயில், கடிகாரம் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.உங்களுடைய கமாண்ட்
ப்ராம்ப்ட் விண்டோவினை, ஊடுறுவிச் செல்லும் கண்ணாடியாக மாற்றுகிறது. இது
உங்கள் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மாற்ற வில்லை. அதனை பின்புறம் உள்ள
பொருட்களைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுகிறது. இந்த புரோகிராமினை
http://komalo.deviantart.com/art/GlassCMDforVista121457868 என்ற
முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இது ராம்
மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் 1 எம்பிக்குக் குறைவாக உள்ளதால்,
தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.
4. பயர்பாக்ஸ் கண்ணாடி (Glassy Firefox):
பயர்பாக்ஸ்
பிரவுசரின் மிகப் பெரிய பலம் அது தரும் பாதுகாப்பு; அதற்கு அடுத்தபடியாக,
அதன் ரசிகர்கள் கூட்டம். பல கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள்
தீம்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என்ற பெயரில் பல அரிய, வேடிக்கையான மற்றும்
கூடுதல் பயன்தரும் புரோகிராம்களை உருவாக்கி அவற்றை ஆட் ஆன் தொகுப்புகளாகத்
தருகிறார்கள். நியோவின் (Neowin) என்பவர் அம்ப்ரூஸ் (Ambroos) என்னும்
கிளாஸி பயர்பாக்ஸ் தீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிந்து இயக்க 64
பிட் விண்டோஸ் இயக்கத் தொகுப்பு இருக்க வேண்டும். ஜிமெயில் செக்கர் இருக்க
வேண்டும்.
இதற்கெல்லாம்
ஒத்துக் கொண்டால், நீங்கள் இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால்
செய்திடலாம். இது பயர்பாக்ஸ் தளத்தில் கிடைக்கவில்லை. கிடைக்கும் முகவரி http://www.neowin.net/forum/index.php?s=ee8053c1716233beb4b6dcb3715500cc&showtopic=746714
5. நோட்பேட் கண்ணாடி (Transparent Notepad):
கிளாஸ்
சிஎம்டி போல இது இருந்தாலும் சற்று வித்தியாசமான ஊடுறுவும் கண்ணாடியில்
இயங்குவது போல நோட்பேடினை இந்த புரோகிராம் அமைக்கிறது. மற்ற புரோகிராம்
போல, ஜஸ்ட் ஒரு கண்ணாடி இன்டர்பேஸ் தராமல், மொத்த நோட்பேட்
புரோகிராமினையும் ஒரு கிளாஸ் தட்டில் அமைக்கிறது. ஒரு விதத்தில்
வேர்ட்பேட் போலவும் செயல்படுகிறது. அனைத்து பைல்களையும் ஆர்.டி.எப்.
(.rtf) பார்மட்டில் சேவ் செய்கிறது. இருப்பினும் டி.எக்ஸ்.டி. (.txt)
அல்லது எச்.டி.எம்.எல். (.html) பார்மட்டில் சேவ் செய்திடும் ஆப்ஷனையும்
தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://sourceforge.net/projects/transnote/
6. கிளாஸ் 2கே (Glass 2K):
மற்ற
புரோகிராம்கள் போல் கண்ணாடி போன்ற எபக்ட் தராமல், சற்று ஒளி ஊடுருவும்
வகையில் இது விண்டோ வினை அமைக்கிறது. ஒவ்வொரு விண்டோவினையும் இவ்வாறு
செயல்படுத்துகிறது. தற்போதைக்கு விண்டோஸ் 2000 மற்றும் எக்ஸ்பியில்
மட்டும் செயல்படுகிறது. இதைச் செயல்படுத்தும்போது ‘Runtime DLL/OCX File
error’ போன்ற எர்ரர் ஏற்பட்டால், இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில்
இதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.

shakthi- பண்பாளர்

- பதிவுகள்: 165
வசிப்பிடம்: Toronto
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








