ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

புதிய சமயங்கள்
 SK

ஒரு சந்தேகம்??
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by தண்டாயுதபாணி on Sat Jan 16, 2010 3:33 pm

ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?

பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும்
நடக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை
சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை
தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல்
தப்ப வைக்கிறான். வியட்நாம் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெயர் தெரியாத
தீவுக்கு தப்பிச் செல்கிறான் சோழ இளவரசன்.

அவனை
கண்டுபிடித்து தங்களது குலதெய்வ சிலையை மீட்டுவர பாண்டியர்கள் எடுக்கும்
முயற்சிகள் பலனளிக்கவில்லை. சோழ இளவரசன் இருக்கும் இடமே அவர்களுக்கு
தெரியவில்லை. அவன் இருப்பதாக சொல்லும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன்
திரும்பியதில்லை. இந்த தேடுதல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து
கொண்டிருக்கிறது.


இந்த
செய்திகள் அனைத்தும் புகைப்படங்களாக படத்தின் தொடக்கத்தில் சில
நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது. படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.webdunia photo
FILE

சோழன்
சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு செல்லும் ஆராய்ச்சியாளர் (பிரதாப்
போத்தன்) காணாமல் போகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா
சென் தலைமையிலான டீமுக்கு அளிக்கிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின்
மகள் ஆண்ட்ரியாவும் இணைந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு
சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.


சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை அடைய ஆண்ட்ரியாவிடம் ஒரு ஓலைச் சுவடி இருக்கிறது. கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதை மணல், கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும். ஆபத்துகளை சாகசத்துடன் கடந்து சென்றால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

சோழர்கள்
இன்றும் அங்கு தங்கள் பூர்வ நிலத்திலிருந்து அழைப்பு வரும் என
காத்திருக்கிறார்கள். அவர்களது அரசர் பார்த்திபன். இதில் “நான்தான் தூதுவன
்” என்கிறார் ரீமா சென். அரசர் நம்புகிறார். கிளம்பும் போதுதான் தெரிகிறது அவர் பாண்டிய குலத்தின் வாரிசு என்பதும், பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துப் போக வந்தவர் என்பதும்.

அப்படியானால் உண்மையான தூதுவன் யார்? சோழர்கள் தங்களது ஆசைப்படி பூர்வீக நிலத்தைச் சென்றடைந்தார்களா? நெடிய போருடன் பதிலளிக்கிறார் செல்வராகவன்.

ஒளிப்பதிவு, ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் மேனரிஸம், அரசர் பார்த்திபன், பின்னணி இசை, இரம் அலியின் காஸ்ட்யூம், சந்தானத்தின்
கலை இயக்கம் அனைத்தும் ஆச்சரியமான அசத்தல்கள். கண்டிப்பாக பாராட்ட
வேண்டியவர்கள் படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள். நிறத்தை கொடுத்து
உழைத்திருக்கிறார்கள்.
காருக்குள் இருந்து டாப்லெஸ்ஸாக வெளிவரும் அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார் கார்த்தி. ஆண்ட்ரியா, ரீமா
இருவருக்கும் ரூட் விடும் ஏரியாக்கள் கலகல. ஒரு துண்டு கறியை
ஆண்ட்ரியாவிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கோ என்பது போல் தலையசைக்கிறாரே, அசத்தல். ஆனாலும்... கறிவேப்பிலை மாதிரிதான் வருகிறார் கடைசிவரை.

நிஜ
ஹீரோ ரீமா சென்தான். கவர்ச்சியுடன் துவேசத்தையும் கலந்து அவர் காட்டுகிற
ஆவேசம் இதற்குமுன் பார்த்திராதது. ரீமாவின் நிஜ உருவம் தெரிந்ததும்
கண்ணில் நீர் ததும்ப நடக்கும் பார்த்திபன் கவர்கிறார். அவர் பாடும்
நெல்லாடிய நிலமெங்கே உணர்வை அறுக்கும் பேரிசை.


நிழல் சிவதாண்டவமாக விரிவதும், அந்த நிழலில் புதை மணிலில் இருந்து தப்பிக்க ஓடுவதும் ரசிக்க வைக்கும் பிரமாண்டம். அதேபோல் பார்த்திபனின் அறிமுக காட்சி.


webdunia photo
FILE

வகிடெடுத்தது
போன்ற கதையை திரைக்கதை கத்தியால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்
செல்வராகவன். அதுவும் இரண்டாம் பகுதி காட்சிகளில் குழப்பமோ குழப்பம்.
நிகழ்காலத்தில் நடக்கும் கதைக்கு மாயாஜாலம் எல்லாம் தேவைய
ா? சோழர்கால தமிழ் காதுக்கு இனிமை. பாதி புரியவில்லை என்பதுதான் சோகம்.

ஏதோ ஒரு நாட்டில் இந்திய ராணுவம் சர்வ சாதாரணமாக வருவதும், தண்ணியடித்து
பெண்களை மானபங்கப்படுத்துவதும் டூ மச். அதேபோல் சிவப்பு நிற ஆதிவாசிகளை
ஒட்டு மொத்தமாக போட்டுத் தள்ளுகிறார்கள். எப்படிப்பா?

சாகச காட்சிகள் கிங் சாலமன்ஸ் மைன்ஸ், மெக்கனஸ் கோல்டு, கிளாடியேட்டர், 300 மம்மி, க்ரோஞ்சிங் டைகர்... என பல படங்களை நினைவுப்படுத்துகிறது. பெரிய கற்களை பொறித்து அதை எதிரிகள் மீது வீசுவது, அடிமைகளையும்
கைதிகளையும் வீரர்களுடன் மோத விடுவது என சோழர்களுக்கு சம்பந்தமில்லாத ரோம
பேரரசின் போர் கலைகளை படத்தில் காட்டுகிறார்கள். தொ.பரமசிவம்
போன்றவர்களிடம் ஆலோசித்திருக்கலாம்.

ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் உட்பட பலரும் பாண்டிய குல வாரிசு என்பதும், சிலையை மீட்க ராணுவத்தில் சேர்ந்ததாக ஜல்லியடிப்பதும் இன்ஸ்டன்ட் பூ.

ராணுவம்
சோழர்களை கொன்று அவர்களது பெண்களை மானப்பங்கப்படுத்தும் போது ஈழம்
மனக்கண்ணில் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காயம்பட்ட பார்த்திபன்
கடற்கரைக்கு ஊர்ந்து சென்று உதவி வேண்டி பூர்வீக சோழர்களை அழைப்பதும
், உதவி செய்ய கப்பல்கள் அணிவகுத்து வருவது போல் கனவு காண்பதும் ஈழ சித்திரத்தை முழுமையாக்குகிறது.

செல்வராகவனின் முயற்சியும் பிரமாண்ட உழைப்பும், கை நழுவிப்போன திரைக்கதையால் கலகலத்துப் போனது, துரதிர்ஷ்டமின்றி வேறென்ன.
THANKS WEBDUNIA
avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by rikniz on Sat Jan 16, 2010 7:42 pm

பார்க்கலாமா?
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 7:49 pm

குறை சொல்லவில்லையென்றால் அவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்!!! படத்தில் பாராட்டும்படியான காட்சிகளே மிக அதிகம். இதுவரை தமிழ் படங்களில் கண்டிராத காட்சிகள்.

குறை சொல்ல மனம் வரவில்லை!!! காரணம் நிறைகளே அதிகம் என்பதால்!!!

செல்வராகவன், பார்த்திபன் மற்றும் ரீமாசென் - கலக்கியிருக்கிறார்கள்!!!

தமிழில் காதல், நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை, ஹீரோவின் சண்டை இவைகளையே பார்த்து பழகிவிட்ட உங்களை மாற்ற இந்த ஒருபடம் போதாது.

தமிழனின் ரசனை இப்படி இருப்பதால் தான் கமல் தன் மருதநாயகம் படத்தை கைவிட்டுவிட்டார் போலும்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by rikniz on Sat Jan 16, 2010 7:51 pm

@சிவா wrote:குறை சொல்லவில்லையென்றால் அவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்!!! படத்தில் பாராட்டும்படியான காட்சிகளே மிக அதிகம். இதுவரை தமிழ் படங்களில் கண்டிராத காட்சிகள்.

குறை சொல்ல மனம் வரவில்லை!!! காரணம் நிறைகளே அதிகம் என்பதால்!!!

செல்வராகவன், பார்த்திபன் மற்றும் ரீமாசென் - கலக்கியிருக்கிறார்கள்!!!

தமிழில் காதல், நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை, ஹீரோவின் சண்டை இவைகளையே பார்த்து பழகிவிட்ட உங்களை மாற்ற இந்த ஒருபடம் போதாது.

தமிழனின் ரசனை இப்படி இருப்பதால் தான் கமல் தன் மருதநாயகம் படத்தை கைவிட்டுவிட்டார் போலும்!!!

உண்மைதான் நன்பா Hollywoodல இவ்வாறு எடுத்தால் வாய பொலந்து பார்ப்போம் தமிழில் எடுத்தா இப்படி குறைகள் என?
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Tamilzhan on Sat Jan 16, 2010 7:54 pm

மழையே இல்லை. விவசாயமும் இல்லை. மக்கள் பட்டினி. சோழர்கள் நர மாமிசம் சாப்பிட்டுதான் பசியாறுகிறார்கள் என்றெல்லாம் காட்டுகிறார்கள். ஆனால், மன்னர் பார்த்திபன் வரும்போது இருபுறமும் நின்று பூக்கள் தூவி வரவேற்கிறார்கள். அந்த பூக்கள் எந்த நிலத்தில் விளைந்தன ஐயா?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by rikniz on Sat Jan 16, 2010 7:56 pm

அது producerன் பணத்திலிருந்து வாங்கியதென நினைக்கின்றேன் சிவா அண்ணா நீங்க என்ன நினைக்கிறிங்க.
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 7:58 pm

@rikniz wrote:அது producerன் பணத்திலிருந்து வாங்கியதென நினைக்கின்றேன் சிவா அண்ணா நீங்க என்ன நினைக்கிறிங்க.

அதேதான் ரிக்னீஷ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik on Sat Jan 16, 2010 8:01 pm

எல்லாம் சரிதான் தல ஆனால் இரண்டாம் கதைக்கு சம்பந்தமே இல்லை. சோழர் இன்னும் உயிர் வாழுறாங்க ஆனால் பாண்டியர் மட்டும் 4 வாரிசுகளை கடந்து வந்து சண்டை போடுகிறார்கள் நம்ப முடியலையே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 8:13 pm

@Manik wrote:எல்லாம் சரிதான் தல ஆனால் இரண்டாம் கதைக்கு சம்பந்தமே இல்லை. சோழர் இன்னும் உயிர் வாழுறாங்க ஆனால் பாண்டியர் மட்டும் 4 வாரிசுகளை கடந்து வந்து சண்டை போடுகிறார்கள் நம்ப முடியலையே

சோழர்களும் நான்காவது தலைமுறையாகத்தான் வாழ்கிறார்கள்!!! யார் சொன்னது தப்பிச் சென்ற மக்கள்தான் இறக்காமல் அப்படியே வாழ்கிறார்கள் என்று?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik on Sat Jan 16, 2010 8:21 pm

4ம் தலைமுறை என்றாலும் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் வித்தியாசம் நிறைய உள்ளது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 8:25 pm

ஆமாம் மானிக், இவர்கள் மக்களுடன் கலந்து நாகரீகத்துடன் வாழ்பவர்கள், ஆனால் சோழர்கள் எந்த நாகரீகத்தையும் அறியாமல் வாழ்பவர்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik on Sat Jan 16, 2010 8:26 pm

அண்ணா எப்படி உங்களுக்கு தெளிவா தெரியுது எத்தனை தடவை பாத்தீங்க அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by esakkiraja2 on Sat Jan 16, 2010 8:29 pm

Nanum nallaikku padam parrkapokiren

esakkiraja2
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 8:30 pm

நான் ஒருதடவை பார்த்தா நூறு தடவை பார்த்த மாதிரி!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik on Sat Jan 16, 2010 8:32 pm

அது சரி அந்த படத்துல இருந்து 1 கேள்வி கேப்பேன் கரெக்டா சொன்னா ஒத்துக்குறேன் தப்பா சொன்னா எனக்கு ஒரு மொபைல் போன் வாங்கி அனுப்பனும் ஓகே வா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by rikniz on Sat Jan 16, 2010 8:35 pm

சபாஷ் சரியான போட்டி!
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 8:37 pm

@Manik wrote:அது சரி அந்த படத்துல இருந்து 1 கேள்வி கேப்பேன் கரெக்டா சொன்னா ஒத்துக்குறேன் தப்பா சொன்னா எனக்கு ஒரு மொபைல் போன் வாங்கி அனுப்பனும் ஓகே வா

எசக்கிராஜா நாளைக்குதான் படம் பார்க்கப் போகிறாரம், பிறகு அவரிடம் கேளுங்கள்!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik on Sat Jan 16, 2010 8:38 pm

ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 8:47 pm

சரி கேளுங்கள் மானிக்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik on Sat Jan 16, 2010 8:49 pm

புதைமணல் இருக்கும் இடத்தில் கல் நிமிர்ந்து நிற்குமே அந்த இடத்தில் மொத்தம் எத்தனை கல் நின்றது ?
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 8:52 pm

@Manik wrote:புதைமணல் இருக்கும் இடத்தில் கல் நிமிர்ந்து நிற்குமே அந்த இடத்தில் மொத்தம் எத்தனை கல் நின்றது ?

புதைமணலில் எத்தனை இடங்களில் மணல் உளவாங்கியதோ அத்தனை கல்தூண்கள் நின்றது!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik on Sat Jan 16, 2010 8:53 pm

இல்லை தவறான பதில் நீங்க கரெக்டா பதில் சொல்லுங்க இல்லைனா தோத்துட்டேன்னு ஒத்துக்குங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 8:55 pm

நான் சொன்னது சரிதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik on Sat Jan 16, 2010 8:56 pm

இல்லை அண்ணா தவறான பதில் முயற்சி செய்யுங்கள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by சிவா on Sat Jan 16, 2010 8:58 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum