புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
37 Posts - 51%
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 10:43 am

First topic message reminder :


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 366188676016201
ஸ்ரீ நரேந்திர மோடி



பிறப்பு : 17 செப்டம்பர் 1950
ஊர் : வத்நகர், குஜராத்
பெற்றோர் : தாமோதர தாஸ் முல்சந்த் மோடி, ஹீராபென்
பணி : இந்திய பிரதமர், அரசியல்வாதி
கட்சி : பாரதிய ஜனதா கட்சி

நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு

பிறப்பும் இளமையும்

நரேந்திர மோடி 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று பிறந்தார். குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகர் என்ற ஊர் தான் மோடியின் சொந்த ஊர். இவரது தந்தையின் பெயர் தாமோதர தாஸ் முல்சந்த் மோடி, தாயாரின் பெயர் ஹீராபென்.  மோடியின் முழுப்பெயர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி என்பதாகும். மோடிக்கு 6 உடன்பிறந்த சகோதரர்கள் உள்ளனர்.

டீக்கடை, ஆர்.எஸ்.எஸ் ஈடுபாடு

இளம் வயதில் மோடியும், அவரது சகோதரர்களும் வத்நகரில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தனர். பள்ளிக்கல்வியை வத்நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து முடித்தார் மோடி. பள்ளி மாணவனாக இருக்கும் போதே பேச்சுப்போட்டிகள், விவாதங்கள் பலவற்றில் கலந்துகொண்டு தனது பேச்சாற்றலை வளர்த்து சிறந்த பேச்சாளனாக விளங்கினார் அவர். மோடி தனது சகோதரர்களோடு இணைந்து நடத்திய டீக்கடைக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் பலர் அடிக்கடி வருவது வழக்கமாக இருந்தது.

இதனால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோடு நெருங்கிய தொடர்பும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைகளின் மீது ஈர்ப்பும் மோடிக்கு சிறுவயதிலேயே ஏற்பட்டது. இதனால் 1958 ஆம் ஆண்டு  8 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொண்டரானார் நரேந்திர மோடி.

திருமணம்

சிறுவயதிலேயே மோடியின் பெற்றோர் நிர்பந்தித்து யசோதா பென் மோடி என்பவருடன் நரேந்திர மோடிக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் மோடிக்கு திருமண வாழ்க்கையில் கொஞ்சம்கூட நாட்டமில்லை. அவரது எண்ணமெல்லாம் தேசத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்பதிலேயே  இருந்தது. இதனால் மோடி தனது வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு இமயமலை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மோடி பயணித்தார்.

கல்லூரி படிப்பு

1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார் நரேந்திர மோடி. கல்லூரிப்படிப்பை படித்து முடித்த பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார் மோடி.

அரசியல் வாழ்க்கை

பிறகு #சங்பரிவார் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சங்பரிவார் இயக்கத்தின் மாணவர் பிரிவான 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' -ன் குஜராத் மாநில பொருப்பாளராக பதவி வகித்தார் நரேந்திர மோடி. இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இருந்தபோது, அதனை எதிர்த்து மோடி பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். இதன் மூலம் பல  முன்னணி தலைவர்களின் நெருங்கிய தொடர்பு மோடிக்கு கிடைத்தது.

பாரதிய ஜனதா கட்சி

1985 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியோடு இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது. பாரதிய ஜனதாவில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார் மோடி. 1987ஆம் ஆண்டு குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் பல முக்கிய பொறுப்புகள் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் மோடி. இதனால் கட்சியின் பல முக்கியப் பதவிகள் மோடிக்கு வழங்கப்பட்டன. 1998ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பான 'தேசிய செயலாளர்' பொறுப்பு நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

குஜராத் முதல்வர்

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்றார். பிப்ரவரி 7 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட கலவரங்களை அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இதனால் மோடி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் சட்டமன்றத்தையும் கலைத்து புதிய சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்.

அந்தத் தேர்தலில் மோடி பெருவாரியான மக்களின் ஆதரவோடு மீண்டும் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரானார். விவசாயம், மின்சாரம், தொழில் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு என முதல்வராக சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மக்களின் பேராதரவோடு பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் முதல்வரானார் நரேந்திர மோடி.

அப்போதும் சிறப்பாக பல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்று அசைக்க முடியாத ஆளுமையாக மாறினார் மோடி. இதனால் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று குஜராத் முதலமைச்சர் ஆகினார் நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி. பல்வேறு நலத்திட்டங்களை குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பேசப்பட்டார் நரேந்திர மோடி. குறிப்பாக மின்சாரத் துறை, வேளாண்மை துறை உள்ளிட்டவற்றின் வளர்ச்சியில் மோடியின் சாதனைகள் நாடு முழுவதும் பேசப்பட்டன.

இந்தியாவின் பிரதமர்

நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்து அம்மாநிலத்தின் வளர்ச்சியிலும், பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்கிட்டியதை அங்கீகரிக்கும் விதத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாரதத் திருநாட்டின் பிரதமராக 2014 மே 26 அன்று பொறுப்பேற்றார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான நட்புறவை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டினார் மோடி. 5

 ஆண்டுகள் சிறப்பாக மக்கள் பணியாற்றிய பிரதமர் நரேந்திர மோடியை 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெறச் செய்து இந்திய மக்கள் மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆக்கினர். மக்களின் பேராதரவுடன் இந்தியாவின் வளர்ச்சிக்காக தற்போது செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.

நம்பிக்கை நாயகர் மோடி

சாதாரண ஒரு டீக்கடை நடத்தி வந்த நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற ஒருவர் இன்றைக்கு நம் பாரதத் திருநாட்டில் பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது கடின உழைப்பும், தேசத்தின் மீது அவர் கொண்ட பக்தியும், மக்களுக்காக அவர் ஆற்றிய ஆகச்சிறந்த தன்னலமற்ற  தொண்டுகளும் தான் காரணம். பலதரப்பட்ட துறைகளை சார்ந்த பல இந்திய இளைஞர்களுக்கும் நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி நம்பிக்கைக்கும், கடின உழைப்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.





இந்த திரியில் பார் புகழும் எம் பாரத தேசப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் இடம்பெறும்.

2014 - ல் இதே தலைப்பில் ஒரு திரி துவங்கினேன். ஆனால் அது இப்பொழுது எனக்கு கிடைக்கவில்லை.

நான் மோடியின் பக்தன், அவரைப் புகழ்வது ஒன்றே என் மனதிற்கு இன்பமளிக்கும் செயலாக உள்ளது. மோடிஜியை பிடிக்காதவர்கள் இந்த திரியிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கலாம்.

என்னப்போல் அவரை நேசிப்பவர்கள் இங்கு பதிவுகள் எழுதலாம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 6:59 pm


75வது சுதந்திர தினத்தையொட்டி #பிரதமர்_நரேந்திர_மோடி இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். குடியேற்றத்திற்கு முன் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.

அதைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு தொடங்கி நடைபெற்றது. அதனைப் பார்வையிட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை நடத்திய வான்வெளி சாகசங்களினை மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைவர்கள், அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் முப்படை தளபதிகள்,எனப் பலர் கலந்து கொண்டனர். இது தவிர டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர்.

"கொடியேற்றத்திற்கு பின் இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நிகழ்வில் நாட்டினை கட்டமைக்க பாடுபட்ட #மகாத்மா_காந்தி, #நேதாஜி_சுபாஷ்_சந்திரபோஸ், #ஜவகர்லால்_நேரு, சட்டமேதை #அம்பேத்கார் ஆகியோரின் அரும்பணிகளை நாம் நினைவு கூறுவோம். என்று தெரிவித்தார்

பின் விவசாயிகளைப் பற்றி அவர் குறிப்பிட்டு பேசும்போது "இதுநாள்வரையில் நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 1.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தவிர 70க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் விவசாயிகளுக்காக ரயில்கள் இயக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

"இப்படி பிரதமர் மோடி கூறிவரும் நிலையில் இன்று பஞ்சாப், தமிழ்நாடு, ஹரியானா, உத்திரப்பிரதேசம் என பல மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக டெல்லியில் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 75வது சுதந்திர தினத்தை விவசாயத் தொழிலாளர்கள் சுதந்திரப் புரட்சி தினமாக கொண்டாடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 7:41 pm

தேசியக்கொடியை ஏற்றிவைத்த பின்பு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-



* நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

* மகாத்மா_காந்தி, #நேதாஜி_சுபாஷ்_சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் நினைவுகூர்வோம்

* நமது விடுதலை போராட்ட வீரர்களை நினைவு கூர்வதற்கான தினம் இன்று

* ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவருக்கும் #பிரதமர்_மோடி கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் நம் நாட்டு வீரர்கள் திறமையுடன் விளையாடி பெருமை சேர்த்தனர்.

* வருங்கால தலைமுறைகளுக்கு உற்சாகம், விழிப்புணர்வை விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

* ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாற்றை படைத்தது பெரிய விஷயம்

* ஆகஸ்ட் 14-ல் நாடு பிரிவினை அடைந்த போது பொதுமக்கள் கடும் துயரை அனுபவித்தனர்.

* #கொரோனா #தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

* இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் என்பது பெருமைக்குரிய விஷயம்

* கொரோனா காலத்தில் #மருத்துவர்கள், #செவிலியர்கள், தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள்

* உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கத்தொடங்கியதோ அப்போது இந்தியாவிலும் கிடைக்கத்தொடங்கியது.

* கொரோனா பெருந்தொற்று காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கினோம்.

* நகரம், கிராமம் என்று இல்லாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

* நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 7:21 pm


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 YcWjWuv

மகாராஷ்டிரா பூனாவில் உள்ள ஒரு பாஜக தொண்டர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். கோயிலுக்கு உள்ளே பிரதமரின் மார்பளவு உருவச்சிலை உள்ளது.

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிய பிரதமருக்கு தான் செலுத்தும் மரியாதை இந்த கோயில் என்று 37 வயதான மயூர் முண்டே என்ற அந்த நபர் கூறுகிறார். இந்த சிறிய கோவில் புனேவின் ஆந்த் பகுதியில் உள்ளது.

"பிரதமர் ஆன பிறகு, நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள் பல வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 370 வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது. ராமர் கோவில் கட்டுமானம் துவங்கியது. முத்தலாக் நீக்கப்பட்டது. இப்படிப்பட்ட பல நீண்டகால பிரச்சனைகளை பிரதமர் மோடி அவர்கள் வெற்றிகரமாகக் கையாண்டார்" என்று ரியல் எஸ்டேட் முகவரான முண்டே கூறினார்.

"அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிய ஒருவருக்கு ஒரு சன்னதி இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆகையால் இந்த கோவிலை எனது சொந்த வளாகத்தில் கட்ட முடிவு செய்தேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரதமரின் மார்பளவு சிலை மற்றும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் சிவப்பு பளிங்கு கற்கள் ஆகியவை ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டன . இந்த கோயிலுக்கான மொத்த செலவு சுமார் 1.6 லட்சம் என்று அவர் கூறினார்.

இந்திய பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கவிதையும் மோடி உருவச்சிலைக்கு அருகில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2021 4:35 pm

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 K6c0kjC
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்கள் ஆட்டோகிராஃப் போட்ட அங்கவஸ்திரத்துடன் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் !!!



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2021 9:21 pm

நாங்கள் தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் : ரஷ்யா

நாங்கள் தாலிபன்களுடன் நட்பு வைக்கவே விரும்புகிறோம்: சைனா..

தாலிபான்கள் ஆப்கான் கன்ட்ரோலை எடுத்ததற்க்கு முழுக்காரணமும் ஆப்கான் அரசின் கோழைத்தனம் தான் : அமெரிக்கா..

ஆப்கான் நிகழ்வுகளுக்கு முழுக்காரணமும் அமெரிக்க தான் : ஜெர்மனி..

எங்கள் நிலைப்பாடு தாலிபான்களின் செயல்பாட்டை பொருத்தே இருக்கும் : பிரிட்டன்..

ஆப்கானின் அடிமை நிலை மாறியுள்ளது: பாக்கிஸ்தான்

*தீவரவாதிகளால் அமைக்கப்பட்ட சாம்ராஜ்யம் நிரந்தரமானது இல்லை* இந்தியா 🇮🇳 🔥🔥

ஆண்மை என்பது யாதெனில்..
உண்மை மட்டுமே உரக்க பேசுதல் ...

மோடி ஜி 🔥🔥

அந்நாட்டு மக்களின் உணர்வை இதில் யார் சொல்லியிருக்கிறார்கள் என்பதை உலகறியும் ..





பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 17, 2021 3:37 pm

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Km0BFAY

உலகின் மிகத் தொன்மையான தேசமான பாரதத்தில் சறுக்கல் ஏற்படும் பொழுதெல்லாம், பாரதத் தாய் தன் தேசக் குழந்தைகளைக் காக்கத் தகுதியான திறன்மிகுந்த புத்திரர்களைப் பெற்றுக் கொள்கிறாள்.

அறம் சரிந்த பொழுது திரு வள்ளுவன் போன்றோரையும், மறம் சரிந்த பொழுது சத்ரபதி சிவாஜி போன்றோரையும்,
உரிமை சரிந்த பொழுது #நேதாஜி, திலகர், காந்தி, பாரதி போன்றோரையும்,
ஆன்மா தளர்ந்த பொழுது, விவேகானந்தர், ரமணர், போன்றோரையும் ஈன்றெடுத்து சரிவைச் சரிகட்டிக் கொள்வது வழக்கம்.

அது போலவே, ஊழலாலும், அந்நியச் சதியாலும் நாடு நிலை தடுமாறிக் கொண்டிருந்த பொழுது #நரேந்திர_மோடி என்றொரு புதல்வனை ஈன்று ஈடுகட்டிக் கொண்டிருக்கிறாள்.

அமெரிக்காவுக்கொரு ஜார்ஜ் வாசிங்டன், வியட்நாமிற்கொரு ஹோ சி மின், சிங்கப்பூருக்கொரு லீ க்வான் யூ, மலேசியாவுக்கொரு மஹாதீர்...
போல, புதிய பாரதத்திற்கு #நரேந்திர_தாமோதரதாஸ்_மோடி என்று உலக வரலாற்றில் நிலைக்கப் போகும் மனிதர்.

நிஜமாகவே தனக்காகவின்றி முழு மூச்சையும் நம் நாட்டுக்காக அர்ப்பணித்து உழைத்து வரும், நம் பிரதமர் நிறைந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ உங்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:28 pm

One Man Army என்பார்களே அது போல் இவர் தனி ஒரு மனிதராக இருந்து போராடுகிறார்.
பலமான பக்க பலம் இருந்தால் இன்னும் விரைவாக பல விஷயங்களை சாதிக்கலாம்.
மார்க்கெட்டிங் மிகவும் முக்கியம்.எந்த ஒரு விஷயத்தையும் சட்டமாக மாற்றும்போது 
நேரம், காலம், பொது ஜன கவர்ச்சி முதலியவை தேவை.அதற்கு தக்க தானை தலைவர்கள் 
தேவை.ஓரிரு நல்ல விஷயங்களும் போதிய marketting இல்லாததால் அவப்பெயர் சேர்ந்துள்ளது.
அதை பிடித்துக்கொண்டு எதிர் கட்சிகள், தாங்கள்தான் நாட்டுமக்கள் நன்மை விரும்பிகள் 
போல ரீல் காண்பிக்கிறார்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 23, 2021 10:32 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 3jphgFh

உலக அரங்கில் இந்தியாவின் இடம் மிக உயரமான இடத்திற்கு சென்றிருக்கின்றது, வல்லரசுகளுக்கு இடையே அமைதிபேச்சு நடத்தும் அளவுக்கு சக்திமிக்க நாடாக மாறிவிட்டது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டனுடன் பிரான்ஸுக்கு கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நேரத்தில்தான் அமெரிக்காவில் ஐ.நா பொதுகுழு கூட்டமும் நடக்கின்றது

இந்த நேரத்தில் பிரான்ஸை கொஞ்சம் ஆறுதல்படுத்தும் முயற்சிகள் தொடங்கின ஆனால் பிரான்ஸ் அடங்கியதாக தெரியவில்லை ஆனால் உலக வல்லரசுகளுக்கு பொதுவான நாட்டை பிரான்ஸ் தேடியது

இந்த நேரத்தில்தான் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மோடியினை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார், இதில் மோடியடனான பேச்சுவார்த்தைக்கு பின் பிரான்ஸின் நிலைபாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது

குவாட் அமைப்பில் பிரான்ஸ் இல்லை, அதே நேரம் இப்பொழுது அமெரிக்கா செய்யும் மூவர் கூட்டணியிலும் அந்நாடு இல்லை

ஆனால் இந்தியாவோடு சேர்ந்து சீனகடலில் சில திட்டங்களை செய்ய விரும்புகின்றது பிரான்ஸ், இந்தியா இனி
பிரான்ஸ் கூட்டணியிலும் உண்டு அமெரிக்க ஜப்பான் கூட்டணியிலும் உண்டு

மோடியோடு நடந்த பேச்சுவார்த்தை மிகுந்த திருப்தி என்கின்றது பிரான்ஸ், இது ஒரு புரிந்துணர்வுக்கு அந்த நாடு வந்துவிட்டதன் அறிகுறி

பிரான்ஸை இந்தியா சமாதானபடுத்தி அந்த தகவல் அமெரிக்காவினை எட்டிய நிலையில் நேற்று மாலை அமெரிக்காவில் கால்பதித்தார் மோடி

உலகின் வல்லரசுகளுக்கிடையே முக்கிய பேச்சுவார்த்தையினை நடத்திய மோடிக்கு மிகபெரிய வரவேற்பை வழங்கியது அமெரிக்க வல்லரசு

உலகின் மிகபெரிய தலைவராக உயர்ந்து நிற்கின்றார் மோடி, அவரின் ஐநாவின் பேச்சுக்கும் அதை தொடர்ந்த பிடனுன்டனான சந்திப்புக்கும் பெரும் எதிர்பார்ப்பு உலகில் எழுந்துள்ளது

பாரதம் மோடியால் தலைநிமிர்ந்து நிற்கின்றது.





பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக