புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_m10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 
64 Posts - 50%
heezulia
 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_m10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_m10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_m10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_m10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_m10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_m10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_m10 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 09, 2022 9:10 am

 நீரிழிவு நோய் கவிதை...(கவிதை கரை -இணையத்திலிருந்து) C4e878b93a7760c92a3d1a383457e8ae_original
உறக்கம் கலைந்த ஒரு
விடுமுறை மதியம்
சோம்பல் மெல்ல
முறித்துவிட்டு,
முகம் கை கால்கழுவி,
மதிய சோறுண்ண,
மந்தமாய் அமர்ந்தேன்..
வெள்ளை சோற்றை
பருப்பில் பிசைந்து
உண்ண முனைகையில்,
"நில்" லென கேட்டது
ஒரு சின்ன குரல்.
சுற்றி பார்த்தேன்
எவருமில்லை..
-
திரும்பவும் முனைகையில்
அதே குரல்
"நில் உண்ணாதே விஷம்!!"
குரல் வந்த திசையை
உற்று பார்த்தேன்..
என் கைப்பிடி சோற்று
பருக்கை ஒன்று
கத்திய சத்தம்
அதுவென்றறிந்தேன்..
-
பருக்கை பேசும்
வியப்பை அடக்கி,
விஷமென கத்திய
காரணம் கேட்டேன்..
அது
சொல்லும் கதைக்கு
காதுகொடுத்தால்,
காரணம் தானே
விளங்கும் என்றது..
சரி சொல்..

வாய்வழி நுழைதலில்
தொடங்குதெங்கள் பயணம்
பின்
உமிழ்நீரில் கலந்து,
உணவுக்குழல் சறுக்கி,
இரைப்பை அடைவோம்..
இரைப்பை அமிலங்கள்
இறங்கிய எங்களை,
சிதைத்து சிறுதுகளாக்கி
கூழாக்கி குழம்பாக்கி,
குற்றமில்லா பொருளாக்கி
பள்ளிக்கு குழந்தையை
பக்குவமாயனுப்பும் தாய்போல
அனுப்பும் மிகஅழகாக
அந்தஇடம் சிறுகுடல்..
சிறுகுடல்..
சிறுமை என்றெண்ணி
சிரித்துவிட வேண்டாம்
இதன் நீளம்
இருபத்தோர் அடியாம்.
-
முன்-இடை-பின் என
மூன்றாக பிரிக்கலாம்,
டியோடினம்-ஜெஜுனம்-இலியம் - எனவும்
ஆங்கிலத்தில் அழைக்கலாம்
சிறுகுடல் நுழையும் எங்களை,
நாள சுரப்பிகளின் ஜீரண சாறு
மால்டேஸ் மாவையும்
ட்ரிப்ஸின் புரதமும்
லைப்பேஸ் கொழுப்பையும்
பிரித்து செரித்து
உயிர்சத்து கொண்டபின்
செத்த உடலாய்
சக்கை உணவு
பெருங்குடல் வழியே,
மலக்குடல் சென்று பின்
மண் தொடும்..
-
இதில்
மாவை செரித்த மால்டேஸ்
மாற்றும் எங்களை குளுக்கோசாய் -பின்
ஏற்றும் அதை ரத்தத்தில்,
சோறாய் பாலாய்,
பழமாய்,
வந்த நாங்கள்,
ஓடையில் மிதக்கும் ஓடம்போல,
ரத்தத்தில் குளுக்கோசாய் இப்போது..
-
ம்ம்ம்....
ஓட ஆட பாட
கண் இமைக்க
கலவி கொள்ள
அத்தனைக்கும்
ஆம் அத்தனைக்கும்
சக்தியது குளுக்கோஸ் தான்
முக்திநிலை எங்களுக்கு
குளுக்கோஸ்தான்...
-
ம்ம்ம்.பிறகு?
பசிக்கழும் செல்களுக்கு
குளுக்கோசை பந்திவைக்க
இன்சுலின் என்றொன்று
இரத்தத்தில் தேவையப்பா -அது
ஊற்றெடுக்கும் உறுப்புக்கு
கணையம் என்று பெயரப்பா..
பசிக்கும் செல்களுக்கு
பாலூட்டல்,
சர்க்கரையின் அளவை
சரிகட்டல் - இவை
இன்சுலினுக்கு
இடப்பட்ட வேலையப்பா..
-
இன்சுலின்தான்
இல்லையென்றால்
என்னாகும் கேளப்பா.
பசிக்கும் செல்கள் -அது
பசித்தே சாகும் ,
செல்வளம் குன்றி
உறுப்புகள் தேயும்..
-
விலைபோகா கடைசரக்காய்,
ரத்தத்தில் குளுக்கோசு,
போகுமிடம் எங்கெங்கும்,
நரம்புகளை சீர்குலைக்கும்-குறு
கண்நரம்பின் வழிசென்று
நன்பார்வை போக்கிடுமே -இதய
மென்நரம்பை தளரவிட்டு
இதயம் காவு கேட்டிடுமே
அளவுஅது மிகும்போது
சிறுநீரில் குடிபுகுந்து
சீரான நரம்புகளை
சிதைத்து விளையாடிடுமே
மொத்தத்தில்,
உயிரோடு இருக்கையிலே,
உறுப்புகள் தானம் செய்யும் ,
உன்னத பிறவியாய்,
உன்னை மாற்றிடுமே
ம்ம்ம்.
-
உடலுழைப்பு
அற்றோர்க்கும்,
வியர்வை அதை சிந்தாமல்
விட்டோர்க்கும்,
கணையத்தின் கருணை அது
கடுகளவும் இல்லையப்பா,
கசக்கியே பிழிந்தாலும்,
கால்சொட்டு சுரக்காதப்பா ..
-
உழைக்காமல் நீ உண்டால்
உய்வில்லை எனக்கப்பா,
மருந்தாகும் உணவப்பா
விஷமாகி போவேனே,
எரிக்காத சக்தியிலே,
எமனாக ஆவேனே,
உயிர் பறித்தான் இவன்என
ஊர்பேச நோவேனே!!!
என விசனகவிதை
பாடியது சோறு..
-
சரி நான் என்ன செய்ய?
மெல்ல கேட்டேன் -சிறுசோறு
அது மேலும்
சொல்ல கேட்டேன்
உழைப்புக்கெற்ற உணவுண்,
பசிக்காமல் உண்ணாதே,
பட்டினியே கிடந்தாலும்,
பழியில்லை நன்றுதான் ..
அளவுக்கு மீறினால் மட்டுமல்ல
உழைக்காமல் உண்டாலும்
அமிர்தம் நஞ்சுதான்..
-
உடல் உழைப்பா,
உடற்பயிற்சியா ,
விளையாட்டா - ஏதோ ஒன்று
உடலை பிழிந்து
வழியும் வியர்வையுடன்
வா என்னிடம்
நான் அமிர்தம்,
உழைக்காத மனிதர் அவர்
அமிர்தமே உண்டாலும்
நான் விஷம்..
-
இதோ உன்கையில்
இருக்கும் நான்
அமிர்தமா விஷமா?
கேட்டது பருக்கை..
விஷம் என்று கூறிவிட்டு
வைத்துவிட்டேன் கைசோற்றை.
அடுத்தமுறை உண்ணும்போது
அமிர்தமாய் இருக்கட்டும் - என
ஆசி வழங்கிவிட்டு,
அதை பசித்திருக்கும்
பாட்டாளி ஒருவனுக்கு
படைத்துவிட கோரியது...
-
சரி..சரி....
செய்கிறேன் ...செய்கிறேன்..
என்னடா சரி சரி!!!
நண்பனின் உலுக்கலில்
கலைந்தது உறக்கம்..
அட கனவு !!!
அதனால் என்ன?
கண் திறந்தால்
கலையும் கனவு,
என்கண் திறந்ததென
உளம் மகிழ்ந்தேன்
உண்ணும் உணவை
அமிர்தமாய்
மாற்றும் வித்தை
கற்று கொண்டேன்
சின்ன சோறு
சொன்ன சொல்லில்
உண்மைஞானம்
விளங்கி கொண்டேன்....
--



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக