புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? Poll_c10பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? Poll_m10பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? Poll_c10 
74 Posts - 44%
heezulia

71 Posts - 43%
prajai

6 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

114 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 5%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 19, 2023 8:11 pm

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? A4d3b160-238a-11ee-941e-23d1e9ab75fa

பாம்புகளின் அழிவுக்கு காரணமான மனிதர்களின் பயம்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். உண்மையில், பாம்புகளின் அழிவுக்கு அவற்றின் மீதான இத்தகைய அச்சமும் பயமுமே முக்கியக் காரணமாக இருக்கிறது.

பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 16ஆம் தேதி உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்பு கடிக்கு உள்ளாவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. இதன் காரணமாக ஆண்டொன்றுக்கு 81 ஆயிரம் முதல் 1,38,000 மரணங்கள் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் பாம்பு கடியால் இந்தியாவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்திருப்பதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பது, இயற்கை வைத்தியம் போன்வற்றைப் பாதிக்கப்பட்டவர்கள் நாடிச் செல்வது போன்ற காரணங்களால் பாம்புக் கடி பற்றிய உண்மையான எண்ணிக்கை கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை, பாம்புகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்தியாவில் சுமார் 15, 16 மாவட்டங்களில் ராஜநாகம் உள்ளன. ஆனால், பல ஆண்டுகள் நடத்திய ஆய்வில் அவை 20 மனிதர்களை மட்டுமே தீண்டியதாக தரவுகள் உள்ளன. ராஜநாகமே இப்படி இருக்கும்போது பிற பாம்புகள் குறித்து எண்ணிப் பாருங்கள். மனிதர்களைப் பார்க்கும்போது அவை பயப்படுகின்றன. ஒதுங்கிப் போகவே நினைக்கின்றன. வேறு வழியே இல்லாத சூழலில்தான் அவை மனிதர்களைத் தீண்டுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் வீட்டுக்கு பாம்பு வந்தால் ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து அது வெளியே செல்வதற்கு நேரம் கொடுத்தாலே போதும், அதுவாகவே வெளியே சென்றுவிடும் என்றும் கணேஷ் கூறுகிறார்.

அதைவிடுத்து அறையின் அனைத்து ஜன்னல், கதவுகளையும் மூடிவிட்டு கையில் கம்பு போன்றவற்றுடன் அதை அடிக்க முயலும்போது தன்னை தற்காத்துக்கொள்வதற்கு அதற்கு வேறு வழி கிடையாது என்கிறார் அவர்.

மனிதர்களின் வாழ்விடத்தின் அருகிலேயே இருக்கும் பாம்புகள் அவர்களின் குணாதிசயங்கள் குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சொல்லப்போனால், நாம் பாம்பைப் பார்ப்பதற்கு முன்பே பலமுறை அவை நம்மைப் பார்த்திருக்கும். ஒருசில வீடுகளில் பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்திருக்கும். இதெல்லாம் ஒரே நாளில் நடந்துவிடக்கூடிய விஷயமல்ல. பல நாட்கள் அந்தப் பகுதியிலேயே இருப்பதால் மனித நடமாட்டம் எப்போது இருக்காது போன்றவையெல்லாம் அவை அறிந்திருக்கும்.

பாம்பு அளவுக்கான ரகசியத் தன்மை வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது. பல ஆண்டுகளுக்குக்கூட நமக்குத் தெரியாமலேயே நம் வீட்டுக்கு வந்து செல்லக்கூடும். ஆனால், நம் கண்ணில்படும்போது அவற்றை அடித்துக் கொன்றுவிடுகிறோம். மற்றபடி, நம் கண்ணில் படாமலேயே வீட்டுக்கு வந்து செல்வதை அவை வாடிக்கையாக வைத்திருக்கலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

90% பாதிப்புக்கு காரணமாகும் 4 வகை பாம்புகள்

இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல், இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி பாதிப்புகளில் 90 சதவீதம் குறிப்பிட்ட 4 வகை பாம்புகளால்தான் ஏற்படுகின்றன. அவை,

diamonds: கண்ணாடி விரியன்: கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகம்: இவை வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்களில் இது பொதுவாகக் காணப்படும். மேலும், மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நகர்ப்புறங்களிலும் இதைப் பார்க்க முடியும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 சுருட்டை விரியன்: சுருட்டை விரியன் நீளத்தில் சிறியதாக இருந்தாலும் அதன் தாக்கும் திறன் அபாயகரமானவையாகp பார்க்கப்படுகிறது. இதன் நஞ்சு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 கட்டு விரியன்: கட்டு விரியன் பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாகத் தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.

பல நேரங்களில் நஞ்சில்லாத சாரைப் பாம்பை கொடிய நஞ்சுள்ள இந்திய நாகம் என்று மனிதர்கள் தவறாக எண்ணிக் கொள்கின்றனர். இதனாலும் அவை மனித தாக்குதலுக்கு அதிக இலக்காகின்றன.

வீட்டுக்குள் பாம்புகள் வந்துவிட்டால் என்ன செய்வது?

பாம்பைப் பார்த்து பதற்றப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார் பாம்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் விஸ்வா. ஊர்வனம் என்ற அமைப்பின் மூலம் பாம்புகளைப் பிடிப்பது, அது தொடர்பான பயிற்சிகளை வழங்குவது போன்றவற்றில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

“ஒருசிலர் பாம்பைப் பார்த்ததும் அது வெளியே செல்ல முடியாதபடி அனைத்து வழிகளையும் அடைத்து வைத்து விடுவார்கள். அப்படிச் செய்தால் அது வீட்டுக்குள்ளேயே எங்கேயாவது போய் ஒளிந்துகொள்ளும். அதைப் பிடிப்பது கடினமாகும்," என்று கூறுகிறார் விஸ்வா.

சிறு வயதில் எனக்கு நாகப் பாம்புடன் நேர்ந்த அந்த முதல் அனுபவத்தின்போது இதுவே நடந்தது. அன்று, அதைப் பார்த்த அச்சத்தில் உறைந்திருந்த நான் சுதாரித்து, வீட்டிலிருந்த பெரியவர்களிடம் கூறிய அடுத்த சில நிமிடங்களில் அந்த நாகப் பாம்பை அடித்துக் கொல்ல, தெரு மொத்தமும் கையில் கம்பி, கட்டைகளுடன் கூடிவிட்டது.

அது ஒளிந்திருப்பதாக அறியப்பட்ட இடத்தைச் சுற்றியிருந்த அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. சுற்றியும் மக்கள் கூட்டம். மின் தடை நீங்கியவுடன் அனைத்து விளக்குகளையும் போட்டு, வெளிச்சம் மூலை முடுக்கெல்லாம் பரவும் வகையில் பாம்பை தேடிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் மிக தைரியமாக வெறும் கைகளால் பாம்பைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார். அந்த வயதில் அதைப் பார்க்கும்போது, மிகுந்த தைரியசாலியாக உள்ளாரே என வியப்பாக இருந்தது. ஆனால், அது மிகவும் தவறான செயல் என்று கூறுகிறார் விஸ்வா.

"சிலர் பயிற்சியே இல்லாமல் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். அப்போது பாம்பு அவர்களைத் தீண்டும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, பாம்பைப் பார்த்தால் முடிந்தவரை அதன் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் பாம்புகள் அடிக்கடி வரும். இதுபோன்ற இடங்களில் வசிப்பவர்கள் பாம்பு பிடிப்பவர்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோரின் எண்களை எப்போது வைத்துக்கொள்ள வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

வீட்டுக்குள் பாம்புகள் வராமல் இருக்க என்னென்ன செய்யலாம்?

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 வீடுகளின் அருகில் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குப்பைகள் இருந்தால் எலி வரும். எலி வந்தால் அவற்றைத் தேடி பாம்புகள் வரும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 வீடுகளில் ஓட்டை போன்றவை இருந்தால் அவற்றை அடைத்து வைக்க வேண்டும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 வீட்டின் கழிவு நீர் குழாய்களை வலைபோன்ற அமைப்பின் மூலம் மூடி வைக்கவேண்டும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 இரவு நேரங்களில் வீடுகளைச் சுற்றி வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 27a1 வீடுகளுக்கு வெளியே குளியலறை, கழிவறை இருந்தால் அவற்றை சுத்தமாகவும் வெளிச்சத்தோடு வைத்திருக்க வேண்டும்

பாம்புகள் கடித்துவிட்டால் என்ன செய்வது?

பாம்பு கடித்தப் பின் பதற்றமடைவதால் சூழல் மோசமாவதாக விஸ்வா கூறுகிறார்.

“சிலர் பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி இறுக்கமாகக் கட்டுவது, அந்த இடத்தை வெட்டிவிடுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல், கடித்த பாம்பை மருத்துவர்களுக்குக் காட்ட வேண்டும் எனக் கருதி பாம்பை அடித்துக் கொல்வது போன்றவற்றில் நேரத்தை விரயம் செய்வார்கள். இதையும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

ஒரு சிலரை நஞ்சமற்ற பாம்புதான் கடித்திருக்கும். ஆனால், பாம்பு கடித்துவிட்டது என்பதாலேயே இறந்துவிடுவோம் என்று தேவையற்ற விஷயங்களை நினைக்கும்போது ரத்தக்கொதிப்பு அதிகமாகும். இதன் காரணமாகவும் உயிரிழப்பு நிகழும்.

எனவே, நஞ்சுள்ள பாம்பாக இருந்தாலும் நஞ்சற்ற பாம்பாக இருந்தாலும் கடித்துவிட்டது என்றால் பதற்றமடைவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் அருகில் இருப்பவரை பாம்பு கடித்துவிட்டாலும் அவரை பதற்றமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.

பாம்புகளைத் தவிர்க்க முடியாது, பாம்பு கடியைத்தான் தவிர்க்க வேண்டும்

"அனைத்து இடங்களும் விலங்குகளின் இடங்களாகத்தான் ஒருகாலத்தில் இருந்தது, நாம்தான் அதைப் போய் ஆக்கிரமித்து வீடு கட்டுகிறோம். அப்படியிருக்கும்போது, பாம்புகள் வரத்தான் செய்யும் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், நமது முன்னோர்களுக்கு அத்தகைய புரிதல் இருந்தது."

அதனால்தான், பாம்பைப் பார்த்தாலும் அதை அடித்துக் கொல்லாமல், அவற்றின் இருப்போடு வாழ பழகிக்கொண்டனர் என்கிறார் எஸ்.ஆர். கணேஷ்.

“இந்தியாவில் பல பாம்பு இனங்கள் அழிவின் விளிம்புகளில் உள்ளன. அவற்றின் வாழ்விடங்கள் அழித்தொழிக்கப்பட்டு விட்டன. இதைச் சரி செய்ய வேண்டுமென்றால், பாம்புகள், மக்களுக்கு தீங்குகளை விளைவிக்கும் உயிரினம் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்."

மேலும், "பாம்புகளும், மனிதர்களும் ஒரே இடத்தில் வாழ முடியும். வாகன விபத்துகள் நிகழ்கின்றன என்பதற்காக நாம் வாகனத்தைத் தவிர்க்க முடியுமா?

எப்படி விபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வது என்பதைத்தானே யோசிப்போம். பாம்புகள் விசயத்திலும் அதேதான். பாம்புகளை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் கைவிட்டுவிட வேண்டும். ஏனென்றால், அது முடியாத ஒன்று. பாம்புக் கடியை எப்படி தவிர்ப்பது என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

ஒருவேளை அன்றைய தினம் நான் பார்த்த அந்த நாகப் பாம்புகூட மனிதர்களிடம் இருந்த தப்பிக்க வேண்டும் என்ற அச்சத்தில்கூட தேங்காய்களுக்கு அடியில் சென்று ஒளிந்திருக்கலாம்.

நான் அதைப் பார்த்த அச்சத்தில் உறைந்திருந்த நேரத்தில், எந்த அசைவையோ அமளியையோ ஏற்படுத்தாமல் நின்றிருந்தேன். ஆகவே, என்னால் அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்ற தைரியத்தில் அமைதியாக என்னைக் கடந்து சென்றிருக்கலாம்.

அன்று அந்த நாகப் பாம்பின் மனநிலை என்னவாக இருந்திருக்கும், அது ஏன் அப்படி நடந்துகொண்டது என்பது இறுதி வரை தெரியாமலே போய்விட்டது. ஏனென்றால், ஊர் மக்கள் சுற்றி வளைத்து, அதை அங்கிருந்து தப்பவிடாமல் அடித்துக் கொன்றுவிட்டனர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 19, 2023 8:23 pm

பாம்பு கடித்த பின்பு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

பாம்பு கடித்த பின்பு கடிபட்ட இடத்தில் இருக்கும் தசையை வெட்டி எடுக்க வேண்டும் அல்லது கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கைக்கொண்டு கட்ட வேண்டும் என்றெல்லாம் நீங்கள் இதுவரை எங்காவது படித்து யாராவது சொல்லிக் கேட்டு இருக்க வாய்ப்புண்டு.

பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்கை உண்டு.

உங்கள் மனதுக்கு பிடித்த நடிகர்கள், திரைப்படங்களில் இவற்றைச் செய்வதைக் கூட பார்த்திருப்பீர்கள்.

இயற்கை மருத்துவம் எனும் பெயரில், பாம்பு கடித்த இடத்தின் அருகே கிடைக்கும் பச்சை இலை சாறை ஊற்ற வேண்டும் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இதுவரை இதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணம் எதுவும் இல்லை.

ஆனால், இவை யாவும் அறிவியலுக்குப் பொருந்தாதவை மட்டுமல்ல, உண்மையானவையும் அல்ல. இவற்றால் நேரம் வீணாகி பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு உயிர் போகும் ஆபத்துதான் அதிகமாகும்.

எந்த வகை பாம்பு கடித்தது என்பதை, மருத்துவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அந்தப் பாம்பின் வகையை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும், முடிந்தால் அதை அடித்துக் கொன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் கூட உங்களை அறிவுறுத்தும் சமூக ஊடகப் பதிவுகளும் இணையதளக் காணொளிகளும் ஏராளம்.

இறுக்கமாகக் கட்டுவதால் "ஆபத்து"

"பாம்பு கடித்த இடத்தின் அருகே இறுக்கமான கயிறு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுவதால் எந்த ஒரு பயனும் இருக்காது. ஒருவேளை அப்படி கட்டப்பட்டால், அந்தக் கட்டு அகற்றப்படுவதை நல்ல மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடைய பெரிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் செய்வதே நல்லது. ஏனென்றால், இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கட்டு பிரிக்கப்படும் பொழுது அந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டம் அதிகமாகும். இதன் காரணமாக உடலின் பிற பாகங்களுக்கும் சென்றடைந்து பாதிப்பும் அதிகமாகும். நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இந்த பாதிப்பை குறைப்பதற்கான சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும்," என்று தெரிவிக்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடயவியல் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் முத்துக்குமார்.

கடித்தது எந்த வகை பாம்பு என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்து நேரத்தைக் கடத்துவதை விட, விரைவில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில்தான் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனென்றால், எந்த வகைப் பாம்பு கடித்து இருந்தாலும் பாம்புக் கடிக்கு எதிராக வழங்கப்படும் மருந்து ஒன்றுதான் என்று அவர் தெரிவித்தார்.

"பாம்புக்கடி பட்ட பின்பு கயிறு கட்டுவதால் பலனில்லை என்பதையும் தாண்டி, அந்த நச்சு கடிபட்ட இடத்திலேயே அதிகமாக தேங்கி இருப்பதற்கும் கயிறு கட்டப்படுவது வழிவகுக்கும். இதன் காரணமாக கடிபட்ட இடத்தில் அணுக்கள் பாதிக்கப்பட்டு, சீழ் பிடிக்கும் நிலை கூட உண்டாகலாம்," என்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளராக உள்ள மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

உண்மையில் பாம்பு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை காண்போம்.

பாம்பு கடித்த உடன் என்ன செய்ய வேண்டும்?

நாக பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன். இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் அதிக பாம்புக்கடி மரணத்துக்கு காரணமாக உள்ளன.

ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரியவந்தாலோ அது கடித்து இருப்பது போல உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a5 எந்த இடத்தில் அந்த நபரை பாம்பு கடித்ததோ அங்கிருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a5 பாம்பு கடித்த உடல் பாகத்தின் அருகே மோதிரம், வளையல், காப்பு, பிரேஸ்லெட் உள்ளிட்ட எதையேனும் அணிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a5 பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a5 பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி (Pressure immobilisation technique) நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a5 கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a5 பாரம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூடாது.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a5 மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவரை இடது பக்கமாக ரெக்கவரி பொசிஷன்-இல் படுக்க வைக்கவும்.

ரெக்கவரி பொசிஷன் எப்படி?

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? _117099006_b5b428cc-7d8e-4351-8b0e-ee448d42dfa5

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a0 மூச்சுப்பாதை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய தலையும் கழுத்தும் நேராக இருக்கும் வகையில் படுக்க வைக்க வேண்டும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a0 ஒரு கையை பக்கவாட்டில் மேல்நோக்கியும் இன்னொரு கையை மடித்து கன்னத்தின் அருகிலும் வைக்க வேண்டும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a0 முதலுதவி செய்பவரின் எதிர் திசையில் இருக்கும் பாதிக்கப்பட்டவரின் முழங்காலை 90 டிகிரிக்கு மடிக்க வேண்டும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a0 பாதிக்கப்பட்ட நபர் முதலுதவி செய்யும் நபரை நோக்கி இருக்கும் திசையில், அவரது உடலைத் திருப்ப வேண்டும்.

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1f4a0 மடித்துக் கன்னத்தில் வைக்கப்பட்ட கை தலைக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 19, 2023 8:29 pm

பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி அனுபவங்களை எழுதி வைத்தவர்

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? _104220147_portada-diario-1

1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோவிலுள்ள லிங்கன் உயிரியல் பூங்காவின் இயக்குநர் அந்நகரின் இயற்கை வரலாற்றை அடையாளம் காண்பதற்கான கள அருங்காட்சியகத்திற்கு சிறிய பாம்பு ஒன்றை அனுப்பி வைத்தார்.

76 சென்டிமீட்டர் நீளமுடைய இந்த பாம்பு, அந்த அருங்காட்சியகத்தில் 33 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பிரபல பாம்பு நிபுணர் கார்ல் பாட்டர்சன் ஸ்மிட் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டது.

நிறமுடைய பாம்புகள் பற்றிய சிறப்பு நிபுணரான ஸ்மிட், 1955ம் ஆண்டு அருங்காட்சியகத்தின் விலங்கியல் தலைமை காப்பாளராக பணி ஓய்வு பெற்றபோது, பாம்பு தொடர்பான உலகிலேயே மிக பெரிய ஊர்வனவியல் தொகுப்புகளை உருவாக்கியிருந்தார்.

பாம்புக் கடி

இந்த பாம்பின் தோல் மினுமினுத்தது. பூமஸ்லாங் என்றும் அறியப்பட்ட தென்னாப்பிரிக்க பச்சை நிற மரப்பாம்பு போல அதன் தலையின் வடிவம் இருந்தது என்று ஸ்மிட் எழுதி வைத்துள்ளார்.

ஆனால் அதனுடைய மலவாயில் (பொதுக்கழிவாய் திறப்பை மூடியிருப்பது) பிரிவு எதுவும் இல்லாமல் இருந்தது அவருக்கு பெரும் ஆர்வத்தை தூண்டியது.

அடுத்து ஸ்மிட் செய்ததுதான் அவருடைய உயிருக்கே உலை வைத்தது. மிகவும் அருகில் வைத்து சோதனை செய்ய அவர் அந்த பாம்பை தூக்கிப் பிடித்தார்.

ஸ்மிட் அந்த பாம்பை தூக்கிப் பிடித்தபோது, அது அவருடைய இடது பெருவிரலில் கடித்துவிட்டது. அந்த கைவிரலில் இரண்டு சிறிய ரத்த அடையாளங்கள் ஏற்பட்டிருந்தன.

உடனடியாக மருத்துவ உதவி பெறாமல், தன்னுடைய பெருவிரலில் இருந்து ரத்தத்தை ஸ்மிட் ஊறிஞ்சி எடுக்க தொடங்கினார்.

அவருடைய உடலில் பாம்பு கடித்த விஷத்தால் ஏற்படும் பாதிப்புகளை டைரியில் குறிப்பாக எழுத தொடங்கினார். 24 மணிநேரத்திற்குள் அவர் இறந்தார்.

ஸ்மிட்டின் கடைசி நாள்

மினுமினுக்கும் தோல் கொண்ட அந்த அரிய வகை பாம்புகள் மனிதரை கொல்லக்கூடிய அளவுக்கு விஷம் கொண்டதல்ல என்று சக பாம்பு நிபுணர்களில் பலர் நம்பியதைபோல ஸ்மிட்டும் நம்பியிருக்கலாம்.

எனவே, தனது இறப்புக்கு முன்னால் இருந்த நேரத்தில் வீட்டுக்கு சென்ற அவர், தனது உடலில் ஏறிய விஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பதிவு செய்ய தொடங்கினார்.

அமெரிக்க பொது வானொலியான பிஆர்ஐ-யின் "சையின்ஸ் ஃபிரைடே" நிகழ்ச்சி, ஸ்மிட்டின் டைரியில் எழுதியிருந்த வார்த்தைகளை பயன்படுத்தி அவரது சொற்களாலேயே இறப்புக்கு முந்தைய கடைசி தருணங்களை விவரித்து காணொளி ஒன்றை வெளியிட்டது.

"ரயிலில் புறநகருக்கு பயணம் செய்தபோது மாலை 4.30 முதல் 5.30 மணி வரை வாந்தி இல்லாத வலுவான குமட்டல் ஏற்பட்டது."

"5.30 முதல் 6.30 மணி வரை 101.7 டிகிரி ஃபாரன்ஹீட் (38.7 டிகிரி செல்சியஸ்) காய்ச்சலை தொடர்ந்து கடுங்குளிரும், உடல் நடுக்கமும் ஏற்பட்டது."

"கிருமிகள் காரணமாக 5.30 மணியளவில் வாயில் இருந்து ரத்தம் வர தொடங்கியது. அந்த ரத்தம் பல் ஈறுகளில் இருந்து வந்திருக்கலாம். இரவு 8.30 மணிக்கு இரண்டு துண்டு பால் டோஸ்ட் சாப்பிட்டேன்."

"இரவு 9 முதல் நள்ளிரவு 12.20 மணி வரை நன்றாக தூங்கினேன். நள்ளிரவு 12.20க்கு சிறுநீர் கழித்தேன். சிறிய அளவில் ரத்தம் சிறுநீரில் கலந்து வெளியேறியது. அதிகாலை 4.30 மணிக்கு ஒரு குவளை தண்ணீர் குடித்தேன். அதை தொடர்ந்து வாந்தியோடு கடும் குமட்டலும் ஏற்பட்டது."

"இரவு உணவு செரிக்காமல் வெளிவந்தது. சற்று நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். காலை 6.30 மணி வரை தூங்கினேன்," என்று அவர் டைரியில் எழுதி வைத்துள்ளார்.

மருத்துவ உதவி மறுப்பு

ஸ்மிட் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னால் மருத்துவ உதவி அளிக்க வேண்டுமா என்று கேட்கப்பட்டது. தான் உணர்ந்து வந்த அறிகுறிகளை இந்த சிகிச்சை மாற்றிவிடுவதை தவிர்ப்பதற்காக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

மாறாக, தனது ஆய்வு ஆர்வத்தால் உந்தப்பட்டு, காலை உணவுக்கு பின்னர் மிகவும் உன்னிப்பாக உணர்ந்து எழுதி வந்த குறிப்பை மீண்டும் எழுத தொடங்கியுள்ளார்.

"செப்டம்பர் 26ம் தேதி காலை 6.30 மணிக்கு உடலின் தட்பவெப்பநிலை 98.2 பாரன்ஹீட் (36.7 டிகிரி செல்சியஸ்). தானியங்கள் மற்றும் வேகவைத்த முட்டைகள், ஆப்பிள் சாஸ் மற்றும் காபியை காலை உணவாக சாப்பிட்டேன்.

சிறுநீர் வெளியாகவில்லை. ஒரு அவுன்ஸ் அளவுக்கு ரத்தம் ஒவ்வொரு 3 மணிநேரத்திலும் வெளியேறி கொண்டிருந்தது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிய தொடங்கியது. ஆனால் அதிக ரத்தம் வெளியேறவில்லை.

மதிய உணவுக்கு பிறகு 1.30 மணி அளவில், வாந்தி எடுத்த அவர் மனைவியை அழைத்தார். அவருக்கு உதவி செய்ய தொடங்கியபோது சுயநினைவிழந்தார். அவர் உடல் முழுவதும் வேர்வையால் நனைந்திருந்தது."

ஸ்மிட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, மருத்துவர் ஒருவர் அழைக்கப்பட்டு அவரது உடலின் இயக்கத்தை மீட்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

சுவாச மண்டலம் செயலிழந்ததால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நுரையீரலில் ரத்தம் கசிந்ததால் இந்த சுவாச பிரச்னை ஏற்பட்டதை அவரது உடற்கூறாய்வு அறிக்கை வெளிப்படுத்தியது.

அவருடைய கண்கள், நுரையீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் மூளையில் ரத்தக்கசிவால் அவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதிக விஷம்

ஸ்மிட் இறந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு நடத்திய அறிவியல் ஆய்வுகளில் பூம்ஸ்லாங், ஆப்பிரிக்க பாம்புகளில் அதிக விஷமுள்ள ஒன்று என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பாம்பின் விஷம், உடல் முழுவதும் ஊடுருவி, பல சிறிய ரத்த கட்டுகளை உருவாக்குவதோடு, பின்னர் ரத்தம் உறையும் திறனை இழக்க செய்துவிடுகிறது. இவ்வாறு இந்த பாம்பு கடிப்பட்டோர் ரத்தம் வழிந்து இறந்துவிடுகிறார்கள்.

இந்த மரப்பாம்பு மத்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படுகிறது. வளர்ந்த பாம்பு 100 முதல் 160 சென்டிமீட்டர் நீளமுடையதாக இருக்கும். சில பாம்புகள் 183 சென்டிமீட்டர் வரை இருக்கும்.

சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியால் பின்னர் விவரிக்கப்பட்டதுபோல, ஸ்மிட் அதிக கவனமாக இந்த பாம்பை கையாளும் முயற்சியின் போதுதான் இது அவரை கடித்துள்ளது.

ஸ்மிட்டும், அவரது சகாக்களும் இந்த பாம்பை அதிக விஷமுள்ளதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நம்பப்படுகிறது.

பூம்ஸ்லாங் பாம்பு மிக சிறியதாக இருந்ததும், அது கொத்திய தோலில் 3 மில்லிமீட்டர் ஆழமுடைய காயத்தை மட்டுமே ஏற்படுத்தியதும், பாம்பு கடிப்பட்டவர் நலமாக இருந்ததுமே இதற்கு காரணமாகும்.

ஸ்மிட்டை இந்த பாம்பு கடித்த காலக்கட்டத்தில், அந்த விஷத்தை முறிக்கின்ற மருந்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிட் சிகிச்சை பெற்றிருந்தாலும் அவர் குணமடையலாம் என்ற நம்பிக்கையோடு மட்டுமே இருந்திருக்கலாம்.

இந்த பாம்பு கடித்த பின்னர், மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டு அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எல்லாவற்றையும் ஸ்மிட் தன்னகத்தே வைத்திருக்கவில்லை. மாறாக, அறியாதோருக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளார் என்று 'சையின்ஸ் ஃபிரைடே' தயாரிப்பாளர் தாம்மென்நமாரா கூறியுள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 20, 2023 12:37 pm

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக