புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_m10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10 
32 Posts - 51%
heezulia
"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_m10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_m10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_m10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10 
74 Posts - 57%
heezulia
"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_m10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_m10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_m10"அகத்தி எனும் அற்புத மூலிகை !" Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அகத்தி எனும் அற்புத மூலிகை !"


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Mar 08, 2024 4:14 pm

இப்போது நாம் அகத்தி எனும் அதி அற்புத மூலிகைப்பற்றி அறிய இருக்கிறோம் .
அதை கீரை என்று எண்ணி சில நாட்கள் சாபிட்டிருப்போம் ,ஆனால் அதில் பொதிந்திருக்கும்
இன்னம் பல மூலிகை அற்புதங்கள் , அதிகம் அறியாதது .
மேலும் அகத்தி எனும் மூலிகைக்கும் ,
சித்தர்களில் சிறந்த அகத்தியருக்கும் உள்ளத் தொடர்பை அறிவீர்களா ?


"அகத்தி எனும் அற்புத மூலிகை !" YZfvHCS


அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

அகத்தியில் கீரையும் பூவம் தான்,உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும்.  அதில் எவ்வளவு தான் காய் காய்தலும்,
உணவுக்கு பயன் படாததால் வீட்டினுள் எடுத்து செல்வதில்லை.  தேவை இல்லாத,ஒன்று எவ்வளவு தான் இருந்தாலும் அதனை யாரும் மதிக்க மாட்டார்கள்
என்பது தான் இந்த பழமொழியின் பொருள்.

அகத்தியை வெற்றிலைக் கொடிக்கால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர்.
அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்தி என பெயர் வந்ததுவோ என்னமோ..

அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில்  செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும்.
இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா,
(Sesbania grandiflora) என்பதாகும்

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது.
இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப்பயன்படுகின்றன.

அகத்திக் கீரையில் ,8.4 விழுக்காடு புரதமும் ,1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் ,இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
மேலும் அகத்திக்கீரையில் ,மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மருந்திடுதல் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது; மனைவியின் அன்பு தொடரக் கணவனும், கணவனின் அன்பு தொடர மனைவியும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலைப் பயன் படுத்தியதாகக் கூறப்படுகிறது.

உள்ளுக்கு ஒரு சில கூட்டு  மருந்துகளைச் சேர்த்துக் கொடுத்துவிட்டால் ,அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பாராம்.  இது உண்மையா எனத் தெரியாது. ஆனாலும் ஆராயத்தக்கது;
எனவே இதைப் பதிவு செய்கிறேன். அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை அகத்தி நீக்குமாம்.
--
”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு.”

–   குணபாடம்
(no voice this one )

அகத்தியை உண்ணில் இடுமருந்து என்னும் மருந்திடுதல் எனும் தோஷத்தில் இருந்து விடுதலையும்,  பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்;  
ஆகாரம் எளிதில் ஜீரணமாகும்.
வாயு உண்டாகும் என்கிறது குணபாடம்

இதன் பொதுவான குணங்கள்
இலகு மலகாரி,
சமனகாரி ,

( மூன்று தோஷங்களையும்  சமன்செய்யும்),

விஷ நாசகாரி.

அகத்தி இடுமருந்தை முறிப்பது போல் எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறித்துவிடும் .

எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது  இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் .

அதே சமயம் தொடர்ந்து ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டு அதன் பக்க விளைவுகளை எண்ணி பயந்து வருபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து.
ஆனால் வாரம்  ஒருமுறை மட்டுமே அகத்தியை உபயோகிக்கவேண்டும்.
அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்.

வாரம் ஒருமுறை அகத்தியை உபயோகித்தால் தேகத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்;
கண்கள் குளிர்ச்சியாகும்;
மலம் இலகுவாகப்  போகும்;
சிறுநீர் தடையில்லாது தாராளமாகப் போகும்;
நீரடைப்பு, பித்தமயக்கம் இவை நீங்கும் .
அடிபட்டு ரத்தம் கசியும் ரணங்களுக்கு ,
அகத்தியை அரைத்து வைத்து, ரணத்தில் கட்டினால்  விரைவில் ஆறும்;  
சீழ்   பிடிக்காது.
அகத்தியைக் கீரை என்பார்கள்.

நம் பண்டைய தமிழர்கள் தாவரங்களை பெயர்  வகைகளைப் பிரிப்பதில் இருந்தே தங்களது   தாவரவியல் அறிவை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அத்தி, மா, பலா, வாழை, ஆல், அரசு, வேம்பு, பூவரச்சு  போன்ற மரங்களின் ,இலைகளுக்கு மட்டும் ’இலை’ என்று பெயர் ;  ,

அகத்தி, பசலை வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலைகள்  இலையாகாமல் ‘கீரை’ ஆகின்றது; ,
மண்ணில் படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது; ,

அறுகு, கோரை முதலியவற்றின் இலைகள் ‘புல்’ எனப்படுகின்றன;  

மலையில் விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’;  ,

நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும்;
சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ’மடல்’; ,
கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ’தோகை’ ; ,
தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்லாது, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது.

ஆனால் இவை எல்லாம் பார்க்கும்போது இத்தனை அறிவையும், நம் பண்டைத்தமிழர்கள் எங்கே ?தொலைத்தனர்,  ஏன்  தொலைத்தனர்?  என்னும் ஆதங்கம்தான் எஞ்சுகிறது.

அகத்திக் கீரை வயிற்றுப் புண் என்னும் பெப்டிக் அல்சர் நோயைக் குணப்படுத்துகிறது.
இதற்கு அகத்திக் கீரையை நன்றாகச் சுத்தம் செய்து நான்குபங்கு சின்ன வெங்காயம் சேர்த்து சூப் தயாரித்து தினசரி ஒரு  வேளை குடிக்கலாம்.

வேறு  மொழியில் அகத்தியின் பெயர்கள்    

•Hindi: गाछ मूंगा Gaach-munga, Hathya, अगस्ति Agasti
•Manipuri: হৌৱাঈমাল Houwaimal
•Marathi:शेवरी Shevari, हतगा Hatga
•Malayalam: Akatti
•Telugu: Ettagise, Sukanasamu
•Kannada: Agasi
•Bengali: Buko, Bak
•Urdu: Agst
•Gujarati: Agathio
•Sanskrit: Varnari, Munipriya, Agasti, Drigapalaka
தாவரப்பெயர் : Sesbania grandiflora
குடும்பம் : Fabaceae (Pea family)

அகத்தியின் வேறு பெயர்கள்:
அச்சம், முனி, கரீரம்;
வகைகள் : சாழை, அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி
இதிலும் அகத்தி – செவ்வகத்தி என இரு  பிரிவு உள்ளது.
இரண்டுக்குமே மருத்துவ குணங்கள் ஒன்றே.
வெள்ளைப் பூவுடையது அகத்தி எனவும்,
சிவப்பு நிறம் கொண்டது செவ்வகத்தி, எனவும் அறியலாம்.
மேலும் மூன்றாவதான சீமை அகத்தி என்பது வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தாவரம் .எனவே அது சீமை அகத்தி என்று அழைக்கப்பட்டிருக்கிறது .

இதற்க்கு மேலும் " அகத்தியம் ", " முனி விருட்சம்"  எனவும் பெயர் உண்டு .
காரணம்  கனோபஸ், என்கிற  விண்மீன் ,வானத்தில் தோன்றுகின்ற காலத்தில் தான்  அகத்திபூ ,பூக்கத்தொடங்குமாம் .
எனவே அகத்தி, " அகத்தியம்"  , "முனி விருட்சம்" என்று பெயர் பெற்றதாம் .

ஏனெனில் இந்த விண்மீன் கனோபஸ் , தமிழில் அகத்திய நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கிறது.

இந்த நட்சத்திரம் வானத்தின் தென்பகுதியில் பிரகாசிக்கும் .
இது 700  ஒளிஆண்டு தொலைவில் உள்ளது .

இது தொல் தமிழர்கள் பெற்றிருந்த வானவியல் அறிவையும் காட்டுகிறது .    அத்தோடு  சித்தர்களில் முதல்வரான அகத்தியருக்கும் , இந்த நட்சத்திரத்திற்கும் இருக்கும் தொடர்பையும் காட்டுகிறது .
அகத்தியர் பெயரால் ஓர் நட்சத்திரம் வானத்தில் இருப்பதுவும் , அவரது பெயரால் ஒரு மூலிகை இருப்பதும் ஒரு புதிய செய்தி அல்லவா ?

இனி சற்று, இதன் மருத்துவ குணங்கள் குறித்தும் பார்ப்போம் .

அகத்திக் கீரைச்சாறு ஒரு பங்கும், தேன் ஐந்து பங்கும் சேர்த்து கலந்து  தலை உச்சியில் விரல்களால் தடவி வந்தால் குழந்தைகளுக்கு நீர்க்கோவையும், மூக்கில் சிறிது விட்டால் தலைவலியும் நீங்கும்.

இதன் பட்டையைக்  கொதிக்கவைத்து ,குடிநீர் செய்து அம்மைக் காய்ச்சல், விஷக் காய்ச்சல் ,போன்றவற்றுக்குக் கொடுத்து வரலாம்.
தண்டின் சாறு, பெரியம்மையைக் குணப்படுத்தும்.

பீடி, சிகரெட், சுருட்டு, மது  போன்றவற்றைப் பயன்படுத்துவதால்  ஏற்படுகின்ற விஷச் சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் , அகத்தி நீக்கும்.

அகத்தியை ஏகாதசி அன்று விரதமிருந்த பின் துவாதசியன்று உணவில் சேர்க்கும் வழக்கம் தமிழகத்தில் உண்டு;

அதோடு நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வர். எதையும் அர்த்தத்துடன்,தான்நம்முன்னோர்கள்,
வகைப்படுத்தியுள்ளனர்.

நாம்தான் முதுசொம்களை மதிக்கத் தவறிவிட்டோம்.
மரண விகிதம் அப்போதை விட இப்போது குறைந்திருக்கலாம் வாழும் காலமும் இப்போது நமக்கு நீண்டிருக்கலாம்.

ஆனால் நாம் உணவுடன் சேர்த்து உண்ணும் ரசாயனங்கள் இருக்கிறதே! எண்ணிப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.

நீண்ட  காலம் வாழ ,நாம் கொடுக்கும் விலையும், இழக்கும் இன்பமும் மிக மிக அதிகம்.

ஆனால் அகத்தி உடலில் இருக்கும் தேவையற்ற ரசாயன நஞ்சை நீக்கும் நல்ல மருந்து.

பசுவுக்கு  அகத்திக் கீரை தருவதால்,
முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  
கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி ,முதலிய தோஷங்கள் விலகி விடும்.
நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.
பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.,
என்பது இங்கு வாழும் பெரும்பாலோர் நம்பிக்கை !
இவைகளை , நம்புவதும் நம்பாததும் உங்க விருப்பம் !

ஆனால்அகத்தி கீரையை  அளவோடு சாப்பிடுங்க  !
வளமுடன் வாழ்க  !

அண்ணாமலை சுகுமாரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக