ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by முஹைதீன் Today at 9:01 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Yesterday at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Yesterday at 5:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மாமா வந்திருக்கேன்!

View previous topic View next topic Go down

மாமா வந்திருக்கேன்!

Post by சம்சுதீன் on Fri Feb 12, 2010 3:25 am

மாமா வந்திருக்கேன்!



நைஜீரியா நாட்டின் கிராமப் புறங்களில் சொல்லப்படும் பாட்டி கதை இது. அவர்கள் சிலந்தி பூச்சிகளைப் பற்றி நிறைய கதைகள் கூறுவர். ஆப்ரிக்கக் காடுகளில் உள்ள அடர்ந்த குகை ஒன்றிலே ஒரு பெண் புலி வசித்து வந்தது. அதற்கு மூன்று குட்டிகள். தாய் தன் குட்டிகளைக் குகைக்குள் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டுக் காட்டுக்குள் சென்றுவேட்டையாடி மாமிசங்களைக் கொண்டு வந்து குட்டிகளுக்கு இரையாகக் கொடுப்பது வழக்கம்.

ஒரு சமயம் அது இரை தேடிக் கொண்டே காட்டிற்குள் சென்றது. அச்சமயத்தில் அந்தக் குகைக்குள் நுழைந்தது ஒரு பெரிய சிலந்திப் பூச்சி. அது அங்கே இருந்த புலியின் குட்டிகளைப் பார்த்தது. மிகுந்த பசியோடு வந்த அந்தச் சிலந்தி, குட்டிகளைப் பார்த்தவுடன், ""குழந்தைகளே! நன்றாக இருக்கிறீர்களா? நான் தான் உங்கள் மாமா. நீண்ட தூரத்திலிருந்து உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்!'' என்றது. ""அப்படியா?'' என்று ஆச்சர்யப்பட்டன புலிகுட்டிகள். ""மாமா! சாப்பிட்டீர்களா?'' என்று கூறித் தங்களுடைய பங்கிலிருந்து பாதிப் பங்கை அதற்குக் கொடுத்தன. சிலந்திப் பூச்சி அவ்வளவையும் ஒரே மூச்சில் தின்று தீர்த்தது. பின்னர் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி அங்கிருந்த இருளான மூலையில் சென்று படுத்துத் தூங்க ஆரம்பித்தது.

தூங்கும் முன் தன்னை யாரும் எழுப்ப வேண்டாம் என்றும், தன்னைப் பார்க்க அம்மா விரும்பினாலும் விரும்புவாள். ஆகையால் தான் வந்ததைச் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லித் தூங்கச் சென்றது. குட்டிகளுக்கும் மாமாவின் மேல் இரக்கம் பிறந்ததால் தாய் திரும்பி வந்தவுடன் சொல்லவில்லை. அந்த புலி இம்முறையும் இறைச்சியுடன் வந்தது.

"மீதியுள்ள இறைச்சியை வேறு மிருகம் எடுத்துச் செல்வதற்குள் நான் போய் எடுத்து வருகிறேன் என்றும், அதுவரை சாப்பிட்டுக் கொண்டிருங்கள்,'' என்றும் சொல்லியது.
தாய் புலி போனவுடன், ""மாமா, சீக்கிரம் எழுந்திருங்கள். எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்! மத்தியானமாகிவிட்டது. சாப்பிட்டு விட்டுப் படுங்கள்,'' என்று எழுப்பின குட்டிகள்.
சிலந்தி எழுந்து பரபரப்பாகச் சாப்பிட்டது. இவ்வாறு இரண்டொரு தடவை நடந்தது. ஆயினும், சிலந்திப் பூச்சிக்கு ஆகாரத்தைக் கொடுத்த காரணத்தினால் குட்டிகள் பசியோடு காணப்பட்டன.

புலி வந்தவுடன் பசி என்று குட்டிகள் கூறியதும் பெரிதும் ஆச்சர்யத்தை அடைந்தது தாய்ப்புலி. ""இன்று என்ன ஆயிற்று... வழக்கத்தை விட அதிகத் தீனியைக் கேட்கிறீர்களே!'' என்று ஆச்சர்யப்பட்டது அது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சி மெல்ல அங்கிருந்து நழுவியது. அருகில் இருந்த ஒரு செந்நாயின் குகைக்குள் சென்று அதன் வால் பக்கமாக உட்கார்ந்து கொண்டது. அதைக் கவனித்த செந்நாய் சொன்னது.

"நான் என் ஆகாரம் முழுவதும் தீர்த்து விட்டேன். உனக்குத் தர என்னிடம் ஒன்றும் இல்லை!'' "அதனாலென்ன, பரவாயில்லை! நானும் நன்றாகச் சாப்பிட்டு விட்டேன். சிறிது நேரம் ஓய்வெடுக்கவே இங்கே வந்தேன்!'' என்றது சிலந்தி.

"சரி!'' என்ற செந்நாய் படுத்துத் தூங்கிவிட்டது. இதற்குள் புலியிடம் அதன் குட்டிகள், தங்கள் தாய் மாமா வந்திருக்கும் விஷயத்தைக் கூறிவிட்டன. "அது எவன் எனக்குத் தெரியாத என் தம்பி? உங்கள் தாய் மாமன்?'' என்று அது ஆத்திரப்பட்டது. "அந்த மாமனை என்னிடம் காட்டுங்கள்!'' என்றது தாய்ப்புலி. குட்டிகள் சிலந்தியைத் தேடின.""ஒரு வேளை பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கலாமோ என்னவோ!'' என்றது குட்டி ஒன்று. "சரி! நீங்கள் இங்கேயே இருங்கள். போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்,'' என்று கூறிப் பக்கத்துக் குகைக்குச் சென்றது புலி. அங்கே ஹாய்யாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது செந்நாய். புலியைப் பார்த்தவுடன் வெளியே வந்தது சிலந்தி.

"சிலந்திப் பூச்சியே, எவனோ ஒரு கேடு கெட்டவன் நான் குகையில் இல்லாத சமயம் பார்த்து என் குட்டிகளிடம் வந்து தன்னை அவர்களின் தாய் மாமன் என்று கூறி, நான் சம்பாதித்து வந்த இரையை எல்லாம் இஷ்டத்துக்குத் தின்று தீர்த்திருக்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை. உனக்குத் தெரியுமா?'' என்றது. "உஸ்... மெதுவாகப் பேசுங்கள் அக்கா. நான் சிறிது நேரத்துக்கு முன்னால்தான் இங்கே வந்தேன். நான் வரும்போது இந்தச் செந்நாய் அண்ணன் தான் உன் குகைக்குள் இருந்து நாக்கைச் சுழற்றியவாறு வெளியே வந்தான். நினைக்கிறேன். அவன் தான் நீ சம்பாதித்த இறைச்சியை எல்லாம் தின்று தீர்த்திருக்க வேண்டும். நீ வருவதற்குள் சாப்பிட்டு விட்டு ஓடிவந்த களைப்பு அவன் நாக்கைத் தொங்கப் போட வைத்திருக்கிறது. தூங்கவும் வைத்திருக்கிறது!'' "அப்படியா சமாசாரம்!'' என்று ஆத்திரப்பட்ட புலி தூங்கிக் கொண்டிருந்த செந்நாயை ஓங்கி ஓர் உதை விட்டது. விழித்தெழுந்த செந்நாய் கோபத்துடன் புலியைத் தாக்கியது. இரண்டும் மூர்க்கமுடன் சண்டையிட்டன. நீண்ட நேரச் சண்டைக்குப் பின் ஒன்றையொன்று தாக்க முடியாமல் களைப்புத் தோன்ற சண்டையை நிறுத்தி விட்டுத் தங்கள் தங்கள் குகைக்குள் தள்ளாடித் தள்ளாடிச் சென்றன. இவற்றை எல்லாம் கால் மேல் கால் போட்டுப் பார்த்துப் பார்த்து ரசித்தது சிலந்தி. குட்டீஸ்... மற்றவர்களை சண்டையில் மாட்டிவிட்டு தான் மட்டும் தப்பிக்கும் கேடு கெட்ட உலகம் இது. மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: மாமா வந்திருக்கேன்!

Post by சிவா on Fri Feb 12, 2010 7:10 am

///குட்டீஸ்... மற்றவர்களை சண்டையில் மாட்டிவிட்டு தான் மட்டும் தப்பிக்கும்
கேடு கெட்ட உலகம் இது. மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.///

சரிங்க சார்!




பதிவுகள்: 790022 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81921 | புதிய உறுப்பினர்: sluxtpr

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: மாமா வந்திருக்கேன்!

Post by அப்புகுட்டி on Fri Feb 12, 2010 11:19 am

"அப்படியா சமாசாரம்!'' என்று ஆத்திரப்பட்ட புலி தூங்கிக் கொண்டிருந்த செந்நாயை ஓங்கி ஓர் உதை விட்டது. விழித்தெழுந்த செந்நாய் கோபத்துடன் புலியைத் தாக்கியது. இரண்டும் மூர்க்கமுடன் சண்டையிட்டன. நீண்ட நேரச் சண்டைக்குப் பின் ஒன்றையொன்று தாக்க முடியாமல் களைப்புத் தோன்ற சண்டையை நிறுத்தி விட்டுத் தங்கள் தங்கள் குகைக்குள் தள்ளாடித் தள்ளாடிச் சென்றன.

இவை அனைத்திற்க்கும் காரணம் யார்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: மாமா வந்திருக்கேன்!

Post by அன்பு on Fri Feb 12, 2010 11:54 am

மகிழ்ச்சி

அன்பு
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 336
வசிப்பிடம்: canada
சேர்ந்தது: 18/08/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: மாமா வந்திருக்கேன்!

Post by நிலாசகி on Fri Feb 12, 2010 11:57 am


நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: மாமா வந்திருக்கேன்!

Post by Manik on Fri Feb 12, 2010 12:40 pm

சிலந்திக்கே இவ்வளவு மூளையா நம்ம ஊரு வில்லன்கள்ளாம் தோத்துருவாங்கப்பா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum